TAMIL
MIXER EDUCATION.ன்
TET
செய்திகள்
TET தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து பயிற்சி
– ஆசிரியர் தேர்வு வாரியம்
தமிழ்நாடு
ஆசிரியர் தகுதித் தேர்வு
2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர்
தேர்வு வாரியத்தின் அறிவிக்கை
எண் .01/2022, நாள்
07.03.2022 அன்று வெளியிடப்பட்டது.
இணையவழி
வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 14.03.2022 முதல்
பதிவேற்றம் செய்திடலாம் என
தெரிவிக்கப்பட்டது.
மேலும்
, விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 26.04.2022 வரை
கால் அவகாசம் வழங்கப்பட்டது. அதில் தேர்வுக்கான தேதி
பின்னர் அறிவிக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டது.
தற்பொழுது
ஆகஸ்டு மாதம் 25 முதல்
31 வரை உள்ள தேதிகளில்
தாள்
–
1 ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினி வழியில்
மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம்
தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி
கணினி வழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித்
தேர்வு ( Practice Test ) மேற்கொள்ள
விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர்
தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு
வழங்கப்படும்.
அனைத்து
பணிநாடுநர்களும் இந்த
வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி
மேற்கொள்ளலாம். இது
குறித்த அறிவிக்கை, தேர்வு
கால அட்டவணை மற்றும்
அனுமதிச்சீட்டு (Admit card) வழங்கும்
விவரம் ஆகஸ்ட் இரண்டாம்
வாரத்தில் அறிவிக்கப்படும்.
TET TODAY PRESS NEWS (06.07.2022: CLICK HERE
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


