TAMIL MIXER EDUCATION.ன்
கடன்
செய்திகள்
புதிய தொழில்
முனைவோருக்கு 35 சதவீத
மானியத்துடன் கடன்
ஈரோடு
மாவட்டத்தில் புதிய
தொழில் முனைவோருக்கு, 35 சதவீத
மானியத்துடன் கடன்
வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
புதிய
தொழில் முனைவோர் மற்றும்
தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் தொழில் துவங்கும்
பட்டியல் இனம், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி தொழில்
முனைவோருக்கு, திட்ட
மதிப்பீட்டில், 25 சதவீதமும்,
கூடுதல் மானியம், 30
சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 75 லட்சம் ரூபாய் வரை
மானியம் வழங்கப்படுகிறது.
மதிப்பு
கூட்டப்பட்ட விவசாய உற்பத்தி
தொழிலகங்கள், உணவு சார்ந்த
உற்பத்தி, சேவை நிறுவனங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பால்
சார்ந்த உற்பத்தி நிறுவனம்,
ஜவுளி தொழிலான ஆட்டோலுாம், ஏர்ஜெட் லுாம், நுாற்பாலை,
பிராசசிங், பேக்கேஜிங் பொருட்கள்
தயாரிப்பு, கயிறு சார்ந்த
மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், அரிசி ஆலை,
எண்ணெய் தயாரிப்பு, ஆட்டோ
மொபைல் தயாரிப்பு, எலக்ட்ரிக்கல் பொருள் உற்பத்தி, மருத்துவ
உபகரணங்கள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி நிலையம், ஆட்டோமொபைல் பழுது நீக்கும் நிறுவனங்களை இத்திட்டத்தில் துவங்கலாம்.
www.msmeonline.tn.gov.in/needs
என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, அதன் இரு நகலை,
பொது மேலாளர், மாவட்ட
தொழில் மையம், ஈரோடு
– 638 001 என்ற அலுவலக முகவரியில் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


