Thursday, August 14, 2025
HomeBlogவங்கி பணியாளா் தேர்வுக்கான குறுகிய கால பயிற்சி

வங்கி பணியாளா் தேர்வுக்கான குறுகிய கால பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன்
வங்கி தேர்வு பற்றிய
செய்திகள்

வங்கி பணியாளா்
தேர்வுக்கான
குறுகிய கால பயிற்சி

தஞ்சாவூா்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
வங்கி பணியாளா் தேர்வுக்கான குறுகிய கால பயிற்சி
வகுப்பு ஆகஸ்ட் 2ம்
தேதி தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்திருப்பது:

வங்கி
பணியாளா் தேர்வாணையத்தால் (IBPS)
வங்கி துறையில் காலியாக
உள்ள 6,035 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான முதல்நிலை தேர்வு ஆகஸ்ட்
28
மற்றும் செப்டம்பா் 3, 4 ஆகிய
தேதிகளில் நடைபெறவுள்ளது.

தஞ்சாவூா்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்
தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக இந்த வங்கி
பணியாளா் தேர்வுக்கான குறுகிய
கால பயிற்சி வகுப்பு
ஆகஸ்ட் 2 ஆம் தேதி
காலை 10.30 மணிக்கு தொடங்கி
நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு அனுபவமிக்க சிறப்பு
வல்லுநா்களைக் கொண்டு
நடத்தப்படுவதுடன், பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித்
தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது.

தஞ்சாவூா்
மாவட்டத்தைச் சோந்த
வங்கி பணிக்குத் தயாராகும்
இளைஞா்கள் தங்களது பெயா்
மற்றும் கல்வித் தகுதியைக்
குறிப்பிட்டு 8110919990
என்ற Whatsapp எண்ணில்
தகவல் அனுப்பி தங்களது
பெயரை பதிவு செய்து
கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே,
போட்டித் தேர்வெழுதும் இளைஞா்கள்
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று
பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 04362 237037 என்ற எண்ணில்
தொடா்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments