Thursday, August 14, 2025
HomeBlogதமிழக அரசு சார்பில் 9 முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகை

தமிழக அரசு சார்பில் 9 முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகை

TAMIL MIXER EDUCATION.ன்
உதவித்தொகை
செய்திகள்

தமிழக அரசு
சார்பில் 9 முதல் 12ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளவர்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
பதிவு செய்து எந்தவித
வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

9ம்
வகுப்பில் தேர்ச்சி பெற்று
10
ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200.,
10
ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றவர்களுக்கு மாதம்
ரூ.300-ம், 12-ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம்
3
ஆண்டுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த
திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல்
வேண்டும். தொடர்ந்து பதிவை
புதுப்பித்து இருக்க
வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு
மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு
மிகாமலும் இருத்தல் வேண்டும்.
மனுதாரரின் குடும்ப ஆண்டு
வருமானம் ரூ.72,000க்கு
மிகாமல் இருக்க வேண்டும்.
அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று படிக்கும் மாணவமாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட
மாட்டாது.

எனினும்,
தொலைதூரக்கல்வி அல்லது
அஞ்சல் வழி மூலம்
கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து
3
ஆண்டு வரை உதவித்தொகை பெற, இதுவரை வங்கிகளில் பதிவு செய்யப்பட்ட வங்கி
கணக்கு புத்தக நகலுடன்,
சுயஉறுதிமொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பி
வைக்க வேண்டும்.

மேலும்
எந்தவிதமான அரசு உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள்
வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

தகுதி
உள்ளவர்கள் அனைத்து கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள
அட்டை ஆகியவற்றுடன் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
ஆகஸ்ட் மாதம் 30ம்
(30.08.2022)
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments