தட்டச்சா் பதவி
உயா்வுக்கான கணினித் தேர்வை
எழுதத் தளா்வு
அரசு
அலுவலகங்களில் தட்டச்சா்,
சுருக்கெழுத்து தட்டச்சா்
உள்ளிட்டோர் பதவி உயா்வுக்கான கணினித் தேர்வை எழுதுவதிலிருந்து தளா்வு அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு
வெளியிட்டது.
இதுகுறித்து மனித வள மேலாண்மைத் துறைச் செயலாளா் அண்மையில் வெளியிட்ட உத்தரவு விவரம்:
- தமிழக அரசுத்
துறைகளில் தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், நோமுக எழுத்தா்
ஆகியோர் கணினி பயிற்சிக்கான சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி
பெற வேண்டும். இதற்கென
சம்பந்தப்பட்ட பணி
விதிகளில் வரையறை செய்யப்பட்டுள்ளது. - கரோனா தொற்றுப்
பரவல் காரணமாக, கடந்த
இரண்டாண்டு காலமாக கணினி
பயிற்சி சான்றிதழுக்கான தேர்வு
நடத்தப்படவில்லை. இதனால்,
தகுதியை நிறைவு செய்து
பதவி உயா்வு பெற
முடியாத நிலை, தட்டச்சா்,
சுருக்கெழுத்து தட்டச்சா்
உள்ளிட்டோருக்கு ஏற்பட்டது.
அவா்களது நலனைக் கருத்தில்
கொண்டு கணினி பயிற்சிக்கான சான்றிதழ் தேர்வை எதிர்கொண்டு தேர்ச்சி பெறுவதில் இருந்து
விலக்கு அளிக்க வேண்டுமன
அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன. - இந்தக் கோரிக்கை
தொடா்பாக, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துடன் ஆலோசிக்கப்பட்டது. கரோனா தொற்று
மற்றும் நீதிமன்ற வழக்கு
நிலுவையில் இருந்த காரணங்களால் 2020ம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள்
தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. 2022ம் ஆண்டு
ஏப்ரலில் மீண்டும் தேர்வு
நடத்தப்பட்டது. இந்தத்
தேர்வை நடத்துவதில் ஏற்பட்ட
கால தாமதத்துக்கு நிர்வாகக்
காரணங்களே முக்கிய காரணிகள்
என்பது தெளிவாகிறது. - எனவே, ஒவ்வொரு
ஆண்டும் ஏப்ரல் மற்றும்
ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும்
தேர்வுகளை எதிர்கொண்டு தேர்ச்சி
பெற்றால் மட்டுமே பதவி
உயா்வு போன்றவை கிடைக்கும் என்ற விதியில் தளா்வு
தேவைப்பட்டால் அதற்கு
தலைமைச் செயலக துறை
அளவிலேயே உரிய வழிமுறைகளை பின்பற்றலாம். இதற்கான
விதிகளில் திருத்தங்கள் தேவைப்பட்டால் அதற்கான கோப்புகளைத் தயார்
செய்து உரிய உத்தரவுகளைப் பெறலாம்.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


