TAMIL MIXER EDUCATION.ன்
இலவச பயிற்சி செய்திகள்
கிராமிய சேவை
திட்டத்தில் இலவச யோகா,
தையல் பயிற்சி
ஆனைமலை,
சோமந்துறைசித்துார் கிராமத்தில், ஆழியாறு அறிவுத்திருக்கோவில் சார்பில்,
இலவச யோகா மற்றும்
மகளிருக்கு தையல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பொள்ளாச்சி, ஆழியாறு அறிவுத்திருக்கோவில் சார்பில்,
மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வை
ஏற்படுத்த, கிராமிய சேவைத்திட்டத்தில் ஆண்டுதோறும் ஒரு
கிராமம் தேர்வு செய்யப்படுகிறது.
அங்குள்ள
மக்களுக்கு பயிற்சி பெற்ற
பேராசிரியர்கள் மற்றும்
பயிற்சியாளர்களைக் கொண்டு
இலவசமாக, தியான பயிற்சிகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்துக்காக, தையல் பயிற்சி
அளிக்கப்படுகிறது.
நடப்பாண்டு, ஆனைமலை, சோமந்துறைசித்துார் கிராமம்
தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சோமந்துறை
ஊராட்சி அலுவலகம் அருகிலுள்ள சேவை மையம் மற்றும்
அண்ணா நகரில் உள்ள
அருட்பெருஞ்ஜோதி மையத்தில்,
தினமும் காலை, 5 மணி
முதல் 6.30 மணி வரையிலும்,
மாலை, 5.30 முதல் 7 மணி
வரையில், தவப்பயிற்சிகள், காயகல்பம்,
எளிய உடற்பயிற்சி மற்றும்
அகத்தாய்வு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
எட்டு
முதல் 80 வயது வரையுள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம். பெண்களுக்கு சேவை மையத்தில் காலை,
9.30 முதல் மாலை, 5 மணி
வரையில் இரண்டு பிரிவுகளாக, தியானப்பயிற்சிகள் மற்றும்
தையல் பயிற்சியளிக்கப்படுகின்றன.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here