TAMIL MIXER EDUCATION.ன்
விழுப்புரம்
செய்திகள்
கூட்டுறவு மேலாண்மை
பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
விழுப்புரம், கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கூட்டுறவு, கணினி மேலாண்மை
மற்றும் நகை மதிப்பீடுதல் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலாண்மை நிலைய இணைப் பதிவாளர் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2022-2023ம் ஆண்டிற்கான முழு நேர கூட்டுறவு
மேலாண்மை பட்டய பயிற்சிகளான, கூட்டுறவு மேலாண்மை, கணினி
மேலாண்மை மற்றும் நகை
மதிப்பீடும் அதன் தொழில்
நுட்பங்கள் என 3 சான்றிதழ்களுடன் கூடிய பட்டய பயிற்சி
மாணவர்கள் சேர்க்கை நடந்து
வருகிறது.
இந்த
ஆண்டிற்கான பயிற்சி விண்ணப்பங்கள் பெறுவதற்கு கடந்த மாதம்
28ம் தேதியுடன் முடிந்த
நிலையில், தற்போது வரும்
18ம் தேதி வரை
கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே,
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை
நிலைய அலுவலகத்தில் 100 ரூபாய்
செலுத்தி நேரில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி
செய்ய விண்ணப்பங்கள் வரும்
22ம் தேதி மாலை
5.30 மணிக்குள் கிடைக்குமாறு கூரியர்
மற்றும் பதிவு தபால்
மூலம் மட்டுமே அனுப்பி
வைக்க வேண்டும். பிளஸ்
2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த
இருபாலரும் சேரலம்.பயிற்சி
காலம் 1 ஆண்டு.
பயிற்சி
கட்டணம் 18,850 ரூபாய். மேலும்
விபரங்களுக்கு விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம்,
திருச்சி ரோடு, வழுதரெட்டி, விழுப்புரம் என்ற முகவரியில் அல்லது 04146 259467 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


