TAMIL MIXER EDUCATION.ன்
தமிழக செய்திகள்
அரசு பள்ளி
மாணவிகளுக்கு மாதம்
ரூ.1000 நிதியுதவி – வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது தமிழக
அரசு
இது குறித்து சமூக நலத்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில்:
இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வடிவமைப்பு, வங்கிக்கணக்கில் பணம்
செலுத்துதல், பயனாளிகளின் தகுதி,
தொகை, திட்ட மேலாண்மை,
மாநில, மாவட்ட அளவிலான
குழுக்கள், ஒற்றைச்சாளர சேவை
உள்ளிட்டவை குறித்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி சமூக
நலத்துறை இயக்குநர் அரசுக்கு
கோரிக்கை விடுத்தார். அதை
ஏற்றுக் கொண்ட அரசு,
இயக்குநரின் கருத்துரு தொடர்பான
உத்தரவை வெளியிட்டுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அதன்
படி, 6ம் வகுப்பு
முதல் 12ம் வகுப்பு
வரை அரசுப்பள்ளியில் படித்து,
தமிழ்நாடு அரசு, மத்திய
அரசு மற்றும் யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள உயயர்கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தும். அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று,
8, 9 மற்றும் 10ம் முடித்து
டிப்ளமோ, ஐடிஐ படிப்புகளில் சேர்ந்தவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
மேலும்,
வேறு மாநிலத்தில் இருந்து
எல்லை தாண்டி வந்து
படிக்கும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. உயர்கல்வி என்றால்
கலை மற்றும் அறிவியல்,
தொழிற்கல்வி படிப்புகள், பாராமெடிக்கல், பட்டயம், ஐடிஐ, ஒருங்கிணைந்த முதுநிலைக்கல்வி என
அனைத்துக்கும் பொருந்தும். பாலிடெக்னிக் படிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள், ஐடிஐ
சான்றிதழ் படிப்புகளுக்கு குறைந்தபட்சம் ஒரு ஆண்டு, கலை
அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு 3 ஆண்டுகள்,
பொறியியல் – 4 ஆண்டுகள், வேளாண்படிப்புகள் – 4 ஆண்டுகள், மருத்துவம் – 5 ஆண்டுகள், சட்டம் மற்றும்
பாராமெடிக்கல் படிப்புகள் – 3 முதல் 5 ஆண்டுகள் வரை
உதவித்தொகை பெறமுடியும்.
முதல்
உயர்கல்விக்கு மட்டுமே
உதவித்தொகை பெற முடியும்.
ஒருங்கிணைந்த முதுநிலைக்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு முதல்
3 ஆண்டுகளுக்கு மட்டுமே
உதவித்தொகை வழங்கப்படும். தொலைநிலைக்கல்வியில் உயர்கல்வி, அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயின்றால் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.
அரசுப்பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவிகளில் யார் உயர்கல்வி
பயில்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும். இந்த
உதவித்தொகையை பெற
ஆதார் எண் கட்டாயம்.
பயன்பெற
விரும்பும் தகுதியான மாணவிகள்,
தாங்களாகவே ஆன்லைனில் பதிவு
செய்யலாம் அல்லது கல்லூரி
வாயிலாகப் பதிவு செய்யலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


