TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள்
புதுவையில் முதுநிலை
மருத்துவப் படிப்புக்கான வரைவு
தரவரிசைப் பட்டியல் வெளியீடு
புதுவையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல்
வெளியிடப்பட்டது.
இதுகுறித்து புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளா் பி.டி.ருத்ரகௌடு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை
அரசு ஒதுக்கீடு, நிர்வாக
ஒதுக்கீடு, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் ஒதுக்கீடு, சிறுபான்மையினா் ஒதுக்கீடு
ஆகிய பிரிவுகளில் முதுநிலை
மருத்துவப் படிப்புகளுக்கான வரைவு
தரவரிசைப் பட்டியல் சென்டாக்
இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
OBC, MBC, SC, ST, பிடி,
இபிசி, பிசிஎம் ஆகிய
பிரிவுகளின் கீழும் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல, சிறப்புப்
பிரிவாக தகுதியான விண்ணப்பதாரா்களின் பட்டியலும் (விளையாட்டு வீரா்கள், சுதந்திரப் போராட்ட
வீரா்களின் வாரிசுதாரா்கள், முன்னாள்
ராணுவ வீரா்களின் வாரிசுகள்)
வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரா்கள் சமா்ப்பித்த விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிலை குறித்து
தங்களது பயனாளா் ஐடியை
பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
இதில் ஏதேனும் ஆட்சேபணை
இருந்தால் செப்.1-ஆம்
தேதி மாலை 6 மணிக்குள்
தங்களது பயனாளா் ஐடியை
பயன்படுத்தி தெரிவிக்கலாம்.
மேலும்
விவரங்களுக்கு மாணவா்கள்
இணையதளத்தை பார்க்குமாறு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow