TAMIL MIXER EDUCATION.ன்
பெங்களூரு செய்திகள்
வீட்டில் இருந்தபடியே இணைய வழியில் தமிழ்
கற்க வாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை
கடைசி
நாள்
இது குறித்து, தமிழ் அறக்கட்டளை பெங்களூரு வெளியிட்டுள்ள அறிக்கை:
உலகின்
பல நாடுகள், இந்தியாவின் பல மாநிலங்களில் வசித்து
வரும் தமிழர்கள், தங்கள்
குழந்தைகளுக்கு பள்ளிகளில் தமிழ் கற்பிப்பதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர்.
வீட்டில்
இருந்த படியே இணையவழியில் தமிழ் கற்பதற்கான வாய்ப்பை
தமிழ் அறக்கட்டளை பெங்களூரு
வழங்குகிறது.எழுத்துகள், சொற்கள்,
வார்த்தைகள், உரையாடல்கள், இலக்கணம்
என ஐந்து படி
நிலைகளை கொண்ட அடிப்படைத் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் ஐந்து மாதம் நடத்தப்படும். ஒவ்வொரு படி நிலையும்
ஒரு மாதம் நடத்தப்படும். தற்போது, நான்கு படி
நிலைகளுக்கான வகுப்புகள் நடக்கின்றன.
ஒவ்வொரு
மாதமும் 1ம் தேதி
முதல் வகுப்புகள் துவங்குகின்றன. இந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான வகுப்புகள் செப்., 1-ம் தேதி
முதல் நடக்கவிருக்கின்றன.
இதில்
சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களிடம் இருந்து
இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. https://docs.google.com/forms/d/e/1FAIpQLScNNC9slnW-aXWKa48BuOWjYGwYe4iSWQRVaEYCU9bKNzEAEA/viewform
என்ற கூகுள் பார்ம்
இணையப்படிவத்தில் விண்ணப்பங்களை நிரப்பி, செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்களை நாளை,
31ம் தேதிக்குள் அனுப்ப
வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட
அனைவரும் வகுப்புகளில் சேரலாம்.
பாடங்கள் தமிழ் வழியில்
கற்பிக்கப்படும்.திங்கள்
முதல் வெள்ளிக்கிழமை வரை
வகுப்புகள் நடக்கும். சனி,
ஞாயிறு விடுமுறை.
கூடுதல்
விபரங்களுக்கு 94837 55974, 98202
81623 என்ற மொபைல் எண்கள்,
tamilfoundationblr@gmail.com என்ற
மின்னஞ்சலில் தொடர்பு
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow