TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்
காய்கறிகள் சாகுபடிக்கு மானியம் – கோவை
கோவை
மாவட்டத்தில் காய்கறி
உற்பத்தியை அதிகரிக்கும் வகையில்
காய்கறி உற்பத்தியாளா்களுக்கு மானியம்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் உழவா்
சந்தைகளில் காய்கறிகள் வரத்தை
அதிகரிக்கும் வகையில்
சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 8 உழவா் சந்தைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி
உற்பத்தியை அதிகரிக்கும் வகையில்
ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்
மதிப்பிலான இடுபொருள்கள் மானியமாக
வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுக்கு உழவா்
சந்தையில் காய்கறி விற்பனை
செய்வதற்கான அடையாள அட்டை
வழங்கப்படும்.
இத்திட்டம் உள்ளிட்ட தோட்டக்கலைத் துறையின்
அனைத்து திட்டங்களிலும் பயன்பெறுவதற்கு இணையதளத்தில் பதிவு
செய்துகொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow