TAMIL
MIXER EDUCATION.ன்
உதவித்தொகை செய்திகள்
மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர் சுய தொழில்
தொடங்க பயனடையகடனுதவி
மாற்றுத்
திறனாளிகளின் பெற்றோர்
சுய தொழில் தொடங்கி
பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக
அரசு ஆா்வமுள்ள இளைஞா்கள்
புதிதாக தொழில் தொடங்க
ஆவன செய்யும் வகையில்
படித்த வேலையற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை மாவட்ட தொழில்
மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் வியாபார தொழில்களுக்கு ரூ. 5 லட்சம் வரை
வங்கிகளின் மூலம் கடனுதவி
பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்
8ம் வகுப்பு தோச்சிபெற்ற 18 முதல் 35 வயது வரை
உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். சிறப்புப்
பிரிவினருக்கு அதிகபட்ச
வயது வரம்பு 45 ஆகும்.
மேலும் விண்ணப்பதாரா்களின் குடும்ப
ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 5 லட்சமாகும்.
இத்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், ஆட்டிசம்
பாதிப்பு, அறிவுசார் இயலாமை
பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பினை
55 ஆக உயா்த்தியும், கல்வித்
தகுதி தேவையில்லை எனவும்
அரசாணை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி
பயன்பெற விரும்புவோர் என்ற
இணையதளத்தின் மூலம்
இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
எனவே,
சேலம் மாவட்டத்தில் உள்ள
ஆா்வமுள்ள மாற்றுத் திறனாளிகள், ஆட்டிசம் பாதிப்பு மற்றும்
அறிவுசார் இயலாமை பாதிப்புள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் புதிய சலுகைகளுடன் கூடிய
இத்திட்டத்தின்கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெற்று
சுய தொழில் தொடங்கி
பயனடையலாம்.மேலும் விவரங்களுக்கு, சேலம் ஐந்து சாலையில்
உள்ள மாவட்ட தொழில்
மையத்தையும், 0427 – 2448505, 2447878 என்ற
தொலைபேசி எண்ணிலும் தொடா்பு
கொள்ளலாம்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


