TAMIL MIXER EDUCATION.ன்
உதவித்தொகை
செய்திகள்
மத்திய அரசு சார்பில் திறன் அடிப்படையிலான
கல்வி
உதவித்தொகை
பெற
விண்ணப்பிக்கலாம்
மத்தியக் கல்வி அமைச்சகத்தின்
உயர்கல்வித்துறை
‘Central Sector Scheme of Scholarship for College and University Students’ என்ற திறன் அடிப்படையிலான
கல்வி
உதவித்
தொகை
திட்டத்தை
ஒவ்வொரு
ஆண்டும்
செயல்படுத்தி
வருகிறது.
இந்த
உதவித்தொகை
பெற
மாணவர்கள்
12ம்
வகுப்பு
மதிப்பெண்
அடிப்படையில்
விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆண்டிற்கான திறன் அடிப்படையிலான
கல்வி
உதவித்
தொகை
பெற
மாணவர்கள்
விண்ணப்பிக்க
அக்.
31ம்
(31.10.2022)
தேதி
கடைசி
நாள்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உதவித்தொகை பெற அடிப்படை தகுதியாக 12ம் வகுப்பில் 80%க்கும் மேல் மதிப்பெண் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல்
உதவித்தொகை
பெற
விருப்பமுள்ள
மாணவர்களின்
பெற்றோரின்
ஆண்டு
வருமான
ரூ.
4.5 லட்சத்துக்கும்
குறைவாக
இருக்க
வேண்டும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
உதவித்தொகை
பெற
நினைப்பவர்கள்
வேறு
எந்தவித
உதவித்தொகையும்
பெற்றுக்
கொண்டிருக்க
கூடாது.
திறன் அடிப்படையிலான
கல்வி
உதவித்
தொகை
திட்டத்தில்
முழு
நேர
கல்லூரிகளில்
படிக்கும்
மாணவர்கள்
மட்டுமே
விண்ணப்பிக்க
வேண்டும்.
பகுதி
நேர
கல்லூரிகளில்
படிக்கும்
மாணவர்களோ
அல்லது
டிப்ளமோ
படிக்கும்
மாணவர்களோ
விண்ணப்பிக்க
கூடாது
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டிற்கான உதவித்தொகை பெற www.scholarships.gov.in என்ற இணையதளத்தில்
அக்.31
வரை
விண்ணப்பிக்கலாம்
என
உயர்கல்வித்துறை
அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
மேலும்
மாதிரி
விண்ணப்பப்
படிவம்,
விண்ணப்பித்தலுக்கான
தகுதி
ஆகியவற்றை
www.tndce.in இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
மேலும் இந்த திட்டம் மூலமாக இளங்கலை படிப்புகளில்
பயிலும்
மாணவ
மாணவிகளுக்கு
ஒவ்வொரு
ஆண்டும்
ரூ.12,000
வழங்கப்படும்.
பி.இ., பி.டெக் போன்ற தொழில்நுட்ப படிப்புகளுக்கு
முதல்
மூன்று
ஆண்டுகளுக்கு
தலா
12,000/- ரூபாயும்,
நான்காவது
ஆண்டில்
ரூ.20,000ம் வழங்கப்படும்.
முதுநிலை படிப்புகளுக்கு
ஒவ்வொரு
ஆண்டும்
தலா
20,000 ரூபாய்
வழங்கப்படும்.
இந்த
தொகையானது
நேரடி
மானிய
பரிமாற்றம்
திட்டத்தின்
கீழ்
விண்ணப்பதாரரின்
வங்கிக்
கணக்குகளில்
நேரடியாக
செலுத்தப்படும்.