இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அக்டோபர் 3.ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அந்த எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கும் என்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தில் கீழ் செயல்படும் கல்லூரிகளில் கால்நடை ஐந்தரை ஆண்டுகள் கொண்ட மருத்துவ மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி – ஏ.ஹச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழிலில் நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய வீட்டை படிப்புகள் உள்ளன.
பி.வி.எஸ்.சி. – ஏ.ஹச் மற்றும் பிடெக் படிப்புகளுக்கு 2022 – 23 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்று இணையதளத்தில் கடந்த 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.
பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் இந்த படிப்புகளுக்கு மாணவ மாணவிகள் ஆர்வமாக ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர்.
வரும் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 3.ம் தேதி மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வால் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல் நாட்டினருக்கு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு அக்டோபர் 14ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களையும் இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என்று கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


