Saturday, September 27, 2025
HomeBlogமழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடைபெறும்

மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடைபெறும்

TAMIL MIXER EDUCATION.ன்
மருத்துவ செய்திகள்

மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடைபெறும்

தமிழகத்தில் மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு
விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மழைக்காலம்
முடியும்
வரை
காய்ச்சல்
முகாம்
தொடர்ந்து
நடைபெறும்.
பள்ளிகளிலும்
தொடர்ந்து
காய்ச்சல்
முகாம்
நடைபெற்று
வருகிறது.
இதுவரை
18
லட்சம்
பேர்
முகாம்களில்
பயனடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில்
3
குழந்தைகள்,
கெட்டுபோன
உணவை
சாப்பிட்டதால்
உயிரிழந்தது
குறித்து
சுகாதாரத்
துறை
அதிகாரிகள்
விசாரித்து
வருகின்றனர்.
சம்பந்தப்பட்டவர்கள்
மீது
நடவடிக்கை
எடுக்கப்படும்.
புதிதாக
தொடங்கப்பட்டுள்ள
மருத்துவ
கல்லூரிகளில்
கூடுதலாக
200
இடங்கள்
கிடைப்பதற்கு
விண்ணப்பித்துள்ளோம்.

வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரியில் இருந்து கூடுதலாக 50 இடங்கள் அரசுக்கு கிடைத்துள்ளன.

சுகாதாரத்துறை செயலர் .செந்தில்குமார் கூறும்போது:

மால்டா நாட்டு பல்கலை. மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யுடன் புரிந்துணர்வு
ஒப்பந்தம்
விரைவில்
போடப்படும்.
மால்டா
நாட்டு
மருத்துவத்
துறையில்
பல்வேறு
வேலை
வாய்ப்புகள்
உள்ளன.
ஒப்பந்தம்
போடப்பட்ட
பிறகு,
இங்குள்ள
செவிலியர்கள்,
மருத்துவ
பணியாளர்களுக்கு
அதிகளவில்
வேலைவாய்ப்பு
கிடைக்க
வாய்ப்புள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments