TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
பன்னாட்டு பொருளாதார சூழல்களை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை கடந்த மாதம் 30ம் தேதி உயர்த்தியது. 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதன் மூலம் தற்போது நாட்டின் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக, வங்கிகளளில் ஏற்கனவே கல்விக்கடன் பெற்ற மாணவர்களும்,புதிதாக கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த மாணவர்களும் பொருளாதார இன்னல்களை சந்திக்க உள்ளனர்.
உயர்கல்வி மாணவர்கள் ரெப்போ விகிதத்தை ஏன் கண்காணிக்க வேண்டும்?
பொதுவாக, நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக ரெப்போ வட்டி விகிதத்தை ஆர்பிஐ உயர்த்தி வருகிறது. இந்தியாவில் செயல்படும், வணிக வங்கிகள் (Scheduled Commercial banks) தங்களது நிதிப் பற்றாக்குறையை போக்கிட ரிசர்வ் வங்கியிடம் குறுகிய கால கடன்களைப் பெருகின்றன. இந்த கடன் தொகைக்கான வட்டி விகிதமே ரெப்போ விகிதம் எனப்படுகிறது.
ரெப்போ விகிதம் குறைந்தால், ஆர்பிஐ-யிடம் இருந்து கடன் வாங்குவதற்கான செலவு வங்கிகளுக்கு குறையும். இதன், காரணமாக, தொழில் நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் குறைந்த வட்டியில் கூடுதலாக கடன் வழங்கும். அதே சமயம் ரெப்போ விகிதம் அதிகரித்தால், வங்கியின் கடன் வழங்கும் சக்தி குறையத் தொடங்கும். இந்த பற்றாக்குறையை போக்க,வங்கிகள் கடனுக்கான வட்டியை அதிகரிக்கத் தொடங்குகின்றன.
சர்வதேச அளவில் பொருளாதார மூலப்பொருட்களின் விலை, அடிப்படை பொருளாதார கட்டமைப்பு, பருவ மழை, விநியோகச் சங்கிலி பணிகளில் உள்ள இடர்பாடுகள், வேலைவாய்ப்பின்மை, ஏற்றத் தாழ்வு, வேளாண் உற்பத்தி போன்ற பல்வேறு காரணங்கள் ஒரு நாட்டின் பணவீக்கத்தை தீர்மானித்து வருகின்றன. இந்தியாவின் தற்போதைய பணவீக்கச் சுமைகள் எதிர்காலங்களிலும் தொடர வாய்ப்புள்ளதாக பொருளியில் ஆய்வாளர்கள் கணித்து வருகின்றனர்.
நேரடியான பாதிப்பு உண்டு: உயர்கல்வி கடன் பெற்ற/ பெற விரும்பும் மாணவர்கள் ரெப்போ விகிதம் தொடர்பாக வரும் செய்திகளை எதையும் புறந்தள்ளாமல் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், அநேக கல்விக்கடன்கள் மிதக்கும் வட்டி விகிதத்தின் கீழ் கொடுக்கப்படுகிறது. மிதக்கும் வட்டி என்பது அவ்வப்போது மாறும் சந்தை நிலைமைகள் அடிப்படையில் (ரெப்போ விகிதம், அரசு கடன் பத்திரம், கடன் அபாயங்கள்) தீர்மானிக்கப்படும். உதாரணமாக, பாரத் ஸ்டேட் வங்கி Effective interest rate அடிப்படையில் கல்விக்கடன் வழங்குகிறது. இதில், 8.55% EBR(சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப மாறும் Effective Benchmark rate), 2.00 (கடன் அபாயங்களை கணக்கில் கொள்ளும் Credit Risk Premium) ஆகும்.
எனவே, ரெப்போ விகிதம் அதிகரித்தால், உங்கள் கல்விக்கடனுக்கான மாதாந்திர சம தவணைகள் (EMI.) அதிகரிக்கலாம்,அல்லது கடனை திருப்பச் செலுத்துவதற்கான காலம் அதிகரிக்கலாம். எனவே, நீங்கள் அவ்வப்போது உங்கள் வங்கி அதிகாரியைத் தொடர்பு கொண்டு தெளிவு படுத்தி கொள்ளுங்கள்.
மாதிரி கல்விக் கடன் திட்டத்தின் கீழ், மத்திய அரசு வட்டி மானியத் திட்டத்தை (CENTRAL SECTOR INTEREST SUBSIDY SCHEME) செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மூன்றாம் நபர் பிணை, அடமானம் போன்ற எவ்வித நிர்பந்தனைகள் இல்லாமல் ரூ.7.5 லட்சம் வரை கடன் தொகை வழங்கப்படும். தவணை காலம் (Moratorium period course period + 1 year) படிப்பு முடித்த ஓராண்டிற்கு பிறகு தொடங்கும். அதுவரை, வட்டித் தொகையை மானியமாக அரசு செலுத்தும். தவணை காலத்திற்குப் பிறகு நிலுவையில் உள்ள கடன் தொகைக்கு ஏற்ப வட்டி செலுத்தினால் போதுமானது. எனவே, இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் பலனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram



