TAMIL MIXER EDUCATION.ன் ராமநாதபுர செய்திகள்
முன்னாள் படை வீரர்கள்
தொகுப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் – ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவரை சார்ந்தவர்கள், தங்களது பிள்ளைகளை ராணுவ பணிக்கு அனுப்பிய இருந்தால் தொகுப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
முன்னாள் படைவீரர்கள், விதவைகள் தங்களது பிள்ளைகள் ராணுவ பணிக்கு தேர்வாகி பயிற்சி பெற்றால் அதற்கு தொகுப்பு மானியம் வழங்கப்படுகிறது.
இதன்படி, பயிற்சி காலத்தில் படை அலுவலருக்கு ரூ.1லட்சம், குறுகியகால படைத்துறை அலுவலருக்கு ரூ.50 ஆயிரம், இளநிலை படைஅலுவலர், இதர பிரிவுகளுக்கு ரூ.25 ஆயிரம் தொகுப்பு மானியமாக ஒருமுறை மட்டும் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.