Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

BEL கோட்த்வார் Trainee Engineer–I வேலைவாய்ப்பு 2026 | நவம்பர் 26 கடைசி

BHARANI DARAN· 3 min readபகிர ↗
மின்னணுச் சுற்றுப் பலகையை ஆய்வகத்தில் பரிசோதிக்கும் பொறியாளரின் மாதிரிப் படம்
கல்வித் தகுதி
தொடர்புடைய நான்கு ஆண்டு முழுநேர B.E./B.Tech./B.Sc. Engineering; அனுபவம் தேவையில்லை
சம்பளம்
முதல் ஆண்டு ₹40,000 · இரண்டாம் ஆண்டு ₹45,000 · நீட்டிக்கப்பட்டால் மூன்றாம் ஆண்டு ₹50,000 மாதம்
பணியிடம்
கோட்த்வார், உத்தராகண்ட் / All-India eligible
கடைசி தேதி
26.11.2026

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

இந்தப் பதிவில்
  1. பிரிவு வாரியான இடங்கள் மற்றும் தகுதி
  2. தேர்வு முறை மற்றும் கட்டணம்
  3. முன்பதிவு செய்வது எப்படி?

Bharat Electronics Limited நிறுவனத்தின் கோட்த்வார் அலகு, Trainee Engineer–I பதவிக்கு 23 தற்காலிக இடங்களை அறிவித்துள்ளது. தகுதியுள்ள இந்தியக் குடிமக்கள் 26 நவம்பர் 2026 இரவு 11:59க்குள் இணையத்தில் முன்பதிவு செய்யலாம். அனுபவம் தேவையில்லை. எழுத்துத் தேர்வுக்கு உத்தராகண்ட் கோட்த்வார் செல்ல வேண்டும்.

நிறுவனம்Bharat Electronics Limited (BEL) · மத்திய பொதுத்துறை நிறுவனம்
அறிவிப்பு21001/HR/KOT/REC/02 · 12 நவம்பர் 2026
பதவிTrainee Engineer–I · 23 இடங்கள்
பணியிடம்கோட்த்வார் அலகு அல்லது தேவைக்கேற்ப இந்தியாவின் பிற திட்டப் பணியிடங்கள்
தகுதிதொடர்புடைய நான்கு ஆண்டு முழுநேர B.E./B.Tech./B.Sc. Engineering · Pass Class
முன் அனுபவம்தேவையில்லை
ஊதியம்முதல் ஆண்டு ₹40,000 · இரண்டாம் ஆண்டு ₹45,000 · நீட்டிக்கப்பட்டால் மூன்றாம் ஆண்டு ₹50,000 மாதம்
முன்பதிவு கடைசி26 நவம்பர் 2026 இரவு 11:59
எழுத்துத் தேர்வு13 டிசம்பர் 2026 · காலை 8 மணிக்கு வருகை · BEL கோட்த்வார், உத்தராகண்ட்

பிரிவு வாரியான இடங்கள் மற்றும் தகுதி

Electronics பிரிவில் 16, Mechanical பிரிவில் 5, Computer Science பிரிவில் 2 இடங்கள். அறிவிப்பில் ஏற்கப்படும் தொடர்புடைய பிரிவில், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் நான்கு ஆண்டு முழுநேர B.E./B.Tech./B.Sc. Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கோட்த்வார் அலகுக்கான தற்காலிக நியமனம் தொடக்கத்தில் இரண்டு ஆண்டுகள். மேலும் ஓராண்டு வரை நீட்டிக்கப்படலாம்.

01.11.2026 நிலவரப்படி General மற்றும் EWS பிரிவுகளுக்கு அதிகபட்ச வயது 28. SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டு, OBC-NCL பிரிவுக்கு 3 ஆண்டு, குறைந்தது 40% மாற்றுத்திறன் கொண்ட PwBD விண்ணப்பதாரர்களுக்கு பொருந்தும் பிரிவுத் தளர்வுடன் கூடுதலாக 10 ஆண்டு தளர்வு.

தேர்வு முறை மற்றும் கட்டணம்

90 நிமிட எழுத்துத் தேர்வில் தொழில்நுட்பம் மற்றும் பொதுத் திறன் தொடர்பான 100 கேள்விகள் இடம்பெறும். சரியான விடைக்கு 1 மதிப்பெண், தவறான விடைக்கு 0.25 மதிப்பெண் கழிக்கப்படும். குறைந்தபட்சத் தேர்ச்சி General/EWS/OBC-NCL பிரிவுகளுக்கு 35%, SC/ST/PwBD பிரிவுகளுக்கு 30%. பிரிவு மற்றும் துறை வாரியாக எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். அடுத்தகட்ட ஆவணச் சரிபார்ப்புக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.

UR, EWS, OBC-NCL பிரிவுகளுக்கு ₹177 (GST உட்பட). SC, ST மற்றும் PwBD பிரிவுகளுக்குக் கட்டண விலக்கு.

முன்பதிவு செய்வது எப்படி?

  1. அறிவிப்பு எண் 21001/HR/KOT/REC/02 என்பதை உறுதிசெய்து, இணைக்கப்பட்ட முன்பதிவு தளத்தில் விண்ணப்பத்தை நிரப்பவும்.
  2. புகைப்படம், கையொப்பம், பிறந்த தேதி மற்றும் கல்விச் சான்றுகள், பொருந்தும் இடஒதுக்கீட்டுச் சான்றுகளை அறிவிப்பின்படி பதிவேற்றவும். கட்டணம் பொருந்தினால் SBI Collect மூலம் செலுத்தி, ரசீது எண்ணை விண்ணப்பத்தில் சேர்க்கவும்.
  3. 26 நவம்பர் இரவு 11:59க்குள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, அச்சு நகலை வைத்துக்கொள்ளவும். தனியாக அழைப்புக் கடிதம் வழங்கப்படாது என்று அறிவிப்பு கூறுகிறது. 13 டிசம்பர் காலை 8 மணிக்கு விண்ணப்ப அச்சு மற்றும் அரசு அடையாள அட்டையுடன் BEL Kotdwar, Pauri Garhwal, Uttarakhand – 246149 முகவரிக்குச் செல்லவும்.

BEL அதிகாரப்பூர்வ அறிவிப்பு (PDF) · BEL இணைத்த முன்பதிவு தளம் · BEL வேலைவாய்ப்புப் பட்டியல்

மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்புகள் · தகுதி மற்றும் கடைசி தேதி வாரியான வேலைவாய்ப்பு அடைவு

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here