TAMIL MIXER
EDUCATION.ன்
தேர்வு செய்திகள்
15 வகை நுழைவு தேர்வுக்கு தலைமை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்துவதோடு தேவையான உதவிகளையும் செய்து தர அறிவுறுத்தப்பட்டு உள்ளது
நீட் உட்பட, 15 வகையான நுழைவு தேர்வுகளுக்கு,
எவ்வாறு
விண்ணப்பிப்பது
என்பது
குறித்து,
மாணவர்களுக்கு
தலைமை
ஆசிரியர்கள்
விளக்க
வேண்டும்
என,
ஒருங்கிணைந்த
பள்ளிக்
கல்வி
மாநில
திட்ட
இயக்ககம்
அறிவுறுத்தியுள்ளது.
நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகள், ஜனவரி முதல் தொடர்ச்சியாக
நடத்தப்பட
உள்ளன.
இந்த தேர்வுக்கு, அரசு பள்ளி மாணவர்களும் விண்ணப்பிக்க
வேண்டும்
என்பதை
கருத்தில்
வைத்து,
ஒருங்கிணைந்த
பள்ளிக்
கல்வி
மாநில
திட்ட
இயக்ககம்
சார்பில்,
மாவட்ட
முதன்மை
கல்வி
அலுவலர்களுக்கு
சுற்றறிக்கை
அனுப்பப்பட்டு
உள்ளது.
அதன்படி, 2023 ஜனவரி முதல், ஜூலை மாதத்துக்குள்
நடத்தப்பட
உள்ள
நீட்
– ஜே.இ.இ., – என்.ஐ.எப்.டி., – ஐ.சி.ஏ.ஆர்.,- என்.டி.ஏ., உட்பட, 15 வகையான நுழைவுத் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவ – மாணவியருக்கு
அதன்
விபரங்களை,
பள்ளி
தலைமை
ஆசிரியர்கள்
தெரியப்படுத்த
வேண்டும்.
மேலும், எந்தெந்த தேர்வுகளுக்கு
விண்ணப்ப
பதிவு
எப்போது
துவங்கும்;
அதற்கான
விண்ணப்பக்
கட்டணம்
எவ்வளவு;
கல்வித்
தகுதி
என்ன;
எந்த
இணையதளத்தில்
விண்ணப்பிக்க
வேண்டும்
என்பது
போன்ற
விபரங்களையும்,
ஒருங்கிணைந்த
பள்ளிக்
கல்வி
மாநில
திட்ட
இயக்ககம்
அளித்துள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள், விருப்பம் உள்ள மாணவ – மாணவியரை விண்ணப்பிக்க
ஊக்கப்படுத்துவதோடு,
அவர்களுக்கு
தேவையான
உதவிகளையும்
செய்து
தர
அறிவுறுத்தப்பட்டு
உள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


