Karur DHS Recruitment 2026: கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் மருத்துவம், செவிலியர், ஆய்வகம் மற்றும் உதவிப் பணிகள் உட்பட 53 ஒப்பந்தப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Health Inspector பணிக்கு மட்டும் 22 இடங்கள் உள்ளன. விண்ணப்பங்கள் 26.09.2026 மாலை 5 மணிக்குள் நேரில் அல்லது விரைவுத் தபால் மூலம் சென்றடைய வேண்டும்.
Karur DHS Recruitment 2026 — பணியிடங்கள்
| பதவி / பிரிவு | இடங்கள் |
| Health Inspector Grade II (MTM) | 22 |
| UHN | 5 |
| Staff Nurse | 4 |
| Radiographer: MCH/GH – 4; NTEP – 2; Mobile X-ray – 1 | 7 |
| Dispenser: Siddha – 2; Homeopathy – 1 | 3 |
| Multipurpose Hospital Worker | 2 |
| Lab Technician: ICTC – 1; Grade III – 1 | 2 |
| Ayush Medical Officer, Female Therapeutic Assistant, Audiologist, Occupational Therapist, Counselor, Security, Social Worker, Medical Officer | தலா 1 — மொத்தம் 8 |
யார் விண்ணப்பிக்கலாம்?
Health Inspector: Biology அல்லது Botany/Zoology உடன் 12ம் வகுப்பு, SSLC-ல் தமிழ் பாடத் தேர்ச்சி, அறிவிப்பில் கூறிய அங்கீகரிக்கப்பட்ட 2 ஆண்டு சுகாதாரப் பயிற்சி அவசியம். Staff Nurse: DGNM/B.Sc Nursing; UHN: அங்கீகரிக்கப்பட்ட ANM மற்றும் தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் பதிவு; Lab Technician: DMLT/MLT Diploma தேவை.
Security: 8ம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சியின்மை; Hospital Worker: தமிழில் நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிற பதவிகளுக்கு தொடர்புடைய மருத்துவம், மருந்தியல், சிகிச்சை அல்லது சமூக அறிவியல் தகுதிகள் தேவை. பதவிவாரியான முழுத் தகுதியை கீழேயுள்ள PDF-ல் ஒப்பிட்டுப் பார்க்கவும்.
வயது மற்றும் ஊதியம்
Ayush Medical Officer, Dispenser, Female Therapeutic Assistant மற்றும் Hospital Worker பணிகளுக்கு 59 வயது வரை; Audiologist/Radiographer பணிகளுக்கு 20–35; மற்ற அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு 40 வயதிற்குக் கீழ் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Health Inspector/UHN: ₹17,500; Staff Nurse/Counselor: ₹21,000; Lab Technician: ₹17,000; Security: ₹11,000; Medical Officer: ₹63,000 மாத ஊதியம். மற்ற பதவிகளின் ஊதியமும் NTEP Radiographer தினக்கூலி விதிகளும் அதிகாரப்பூர்வ அட்டவணையில் உள்ளன. ₹63,000 அனைத்து பதவிகளுக்கும் பொருந்தாது.
விண்ணப்பிக்கும் முறை
- அறிவிப்பின் கடைசிப் பக்கத்திலுள்ள விண்ணப்பத்தை அச்சிட்டு, பதவி பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை நிரப்பி அசல் கையொப்பமிடவும்.
- வயது, கல்வி, இருப்பிடம், சாதி, வேலைவாய்ப்புப் பதிவு தொடர்பான சான்றுகளின் நகல்களை இணைக்கவும்.
- கீழ்க்கண்ட முகவரியில் நேரில் அல்லது Speed Post மூலம் சமர்ப்பிக்கவும்.
முகவரி: நிர்வாகச் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் – 639007.
இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானவை; பணி நிரந்தரம் செய்யப்படாது. பணியில் சேர சுயவிருப்பக் கடிதம் அளிக்க வேண்டும். காலியிட எண்ணிக்கை மாறக்கூடும்.
அறிவிப்பு மற்றும் விண்ணப்ப PDF
அதிகாரப்பூர்வ அறிவிப்பு + விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் | கரூர் மாவட்ட இணையதளம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாள்: 08.09.2026. விவரங்கள் சரிபார்த்த நாள்: 14.09.2026. விண்ணப்பிக்கும் முன் பதவிக்கான முழு நிபந்தனைகளையும் படிக்கவும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

