TAMIL MIXER
EDUCATION.ன்
UGC செய்திகள்
வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் நேரடி வகுப்புகளை மட்டுமே நடத்த வேண்டும் – UGC
வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை தொடங்கினால், நேரடி வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும்
சுமார்
600க்கும்
மேற்பட்ட
பல்கலைக்
கழகங்கள்
உள்ளன.
அரசு
பல்கலைக்
கழகங்கள்
தவிர
தனியார்
சுயநிதி
நிகர்நிலை
பல்கலை
பல்கலைக்கழகங்களும்
யுஜிசி
அனுமதி
பெற
வேண்டும்.
பாடத்திட்டங்களுக்கும்
யுஜிசியின்
அனுமதி
தேவை.
அனுமதி
இல்லாமல்
நடத்தும்
பாடங்கள்
செல்லாது.
மேலும்,
இந்தியாவில்
செயல்பட்டு
வரும்
பல்கலைக்
கழகங்களில்
அனைத்து
மாவட்டங்களிலும்
யுஜிசி
நடத்திய
ஆய்வுகளின்
படி
40 க்கும்
மேற்பட்ட
தனியார்
சுயநிதி
பல்கலைக்
கழகங்கள்
யுஜிசி
அனுமதியின்றி
செயல்படுகிறது.
இந்நிலையில், வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை தொடங்கினால் யுஜிசியின் முன் அனுமதி பெறுவதுடன், நேரடி வகுப்புகளை மட்டுமே நடத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.
இது குறித்து யுஜிசியின் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
வெளிநாடுகளை சேர்ந்த பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை தொடங்கும் போது இந்திய பல்கலைக் கழக மானியக் குழுவிடம் முன் அனுமதி பெற வேண்டும். வெளிநாடுகளை சேர்ந்து உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் உயர்கல்விக்கான
முகாம்களை
நடத்தும்
போதும்
யுஜிசியின்
முன்அனுமதி
பெற்றே
நடத்த
வேண்டும்.
தொடக்க அனுமதி 10 ஆண்டுகளுக்கு
வழங்கப்படும்.
அதற்கு
பிறகு
அவை
நீட்டிக்கப்படலாம்.
அப்படி
தொடங்கப்படும்
நிறுவனங்கள்
ஆன்லைன்
மூலம்
வகுப்புகள்
நடத்தக்
கூடாது.
வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இங்கு முழு நேர நேரடி வகுப்புகளை மட்டுமே நடத்த வேண்டும். மாணவர்கள் சேர்க்கையை தங்கள் விருப்பப்படி
நடத்திக்
கொள்ளலாம்.
இந்தியாவில்
வகுப்புகள்
நடத்தும்
போது
தரமான
கல்விக்கான
உத்தரவாதம்
வழங்க
வேண்டும்.
நிதிபரிமாற்றம்
நடக்கும்
போது
எந்த
குழப்பமும்
இருக்காது
என்பதை
உறுதி
செய்ய
வேண்டும்.
முன்அனுமதியை
மீண்டும்
புதுப்பிக்கும்
போது,
9வது
ஆண்டில்
விண்ணப்பிக்க
வேண்டும்.
இது
தொடர்பான
கூடுதல்
விவரங்கள்
இந்தமாத
இறுதியில்
யுஜிசி
வெளியிடும்.