TAMIL MIXER
EDUCATION.ன் சென்னை செய்திகள்
சென்னை மாநகராட்சிக்கு
உட்பட்ட
பகுதிகளில்
தெருநாய்
தொல்லைக்கு
இலவச உதவி எண்
தெருநாய்களின்
தொல்லைகள்
குறித்து
1913 என்ற
இலவச
உதவி
எண்ணில்
தொடர்புகொள்ளலாம்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள
செய்தி
குறிப்பில்:
சென்னை மாநகராட்சிக்கு
உட்பட்ட
பகுதிகளில்
பெருகி
வரும்
தெரு
நாய்களின்
எண்ணிக்கையைக்
கட்டுப்படுத்த
அவை
பிடிக்கப்பட்டு,
வாகனங்கள்
மூலம்
திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட
பேசின்
பாலம்
நாய்
இனக்கட்டுப்பாடு
மையம்
மற்றும்
கண்ணாம்மாப்பேட்டை
நாய்
இனக்கட்டுப்பாடு
மையம்
ஆகிய
இனக்கட்டுப்பாடு
மையங்களுக்கு
கொண்டு
செல்லப்படுகிறது.
அங்கு கால்நடை மருத்துவர்களின்
பரிந்துரைகளின்
அடிப்படையில்,
இனக்கட்டுப்பாடு
அறுவை
சிகிச்சை
மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
அதன்படி
பொதுசுகாதாரத்துறையின்
சார்பில்
கடந்த
டிசம்பர்
மாதம்
21 முதல்
27ம்
தேதி
வரை
இரண்டு
வார
காலத்தில்
450 தெருநாய்கள்
பிடிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 325 தெருநாய்களுக்கு,
நாய்கள்
இனக்கட்டுப்பாடு
மையத்தில்
கால்நடை
மருத்துவக்
குழுவினரால்
இனக்கட்டுப்பாடு
அறுவை
சிகிச்சை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் நாய்க்கடி மூலம் மனிதர்களுக்கு
ஏற்படக்கூடிய
வெறிநாய்க்கடி
நோய்
வராமல்
தடுக்க
அவைகளுக்கு
வெறிநாய்க்கடி
நோய்
தடுப்பூசியும்
போடப்பட்டு,
பிறகு
பிடித்த
இடத்திலேயே
விடப்பட்டுள்ளது.
மேலும்,
பொதுமக்கள்
பெருநகர
சென்னை
மாநகராட்சிக்குட்பட்ட
பகுதிகளில்
தெருநாய்களின்
தொல்லைகள்
குறித்து
1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.