இந்தியாவில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் சேர தேசிய தேர்வு முகாமையானது (NTA) JEE எனும் நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வானது JEE மெயின்ஸ் மற்றும் JEE அட்வான்ஸ் என இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. 2023ம் ஆண்டுக்கான JEE நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பபதிவு நடைமுறை கடந்த 2022 ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.
மாணவர்கள் https://nta.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தனர். இந்த JEE முதல் கட்ட தேர்வானது (session 1) ஜனவரி 24 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று (ஜன. 21) JEE (season 1) தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது.
மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவெண்ணை உள்ளிட்ட நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தேர்வு தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Download Notice: Click Here
Download Admit Card: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


