கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு அளிக்கப்படும் இலவச பயிற்சி வகுப்புகளை கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு அளிக்கப்படும் இலவச பயிற்சி வகுப்புகளை தேர்வா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னாா்வ பயிலும் வட்டம் அனைத்துவித போட்டித்தேர்வுகளுக்கான 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த தன்னாா்வ பயிலும் வட்டத்தில் மத்திய, மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. குரூப் -2 முதன்மை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10.30 முதல் மாலை 4.30 மணி வரையிலும், மாதிரி தேர்வுகள் செவ்வாய்கிழமை காலை 10 முதல் நண்பகல் 1 மணி வரையிலும் நடைபெறுகின்றன. மத்திய அரசின் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 முதல் மாலை 4.30 மணி வரையிலும், பொள்ளாச்சி என்ஜிஎம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4 முதல் 5 மணி வரையும், சனிக்கிழமையன்று காலை 10 முதல் நண்பகல் 1 மணி வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
போட்டித் தேர்வுகளை எதிா்கொள்வதற்கு ஏதுவாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளும் தேர்வா்கள் மத்திய மற்றும் மாநில அரசு பாடப்புத்தகங்கள், மாதிரி வினாக்கள், மாதாந்திர நடப்பு நிகழ்வுகளின் தொகுப்புகள், பொது அறிவு புத்தகங்கள், எஸ்.எஸ்.சி. மற்றும் வங்கி உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நேரடி பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க முடியாத மாணவா்களுக்காக கல்வி தொலைக்காட்சி மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 முதல் 9 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதன் மறு ஒளிபரப்பு இரவு 7 முதல் 9 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனவே, தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மத்திய, மாநில அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விரும்பும் தேர்வா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.