தேனி தாலுகா அலுவலகம் எதிரில் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் உள்ளது. இங்கு எம்ப்ராய்டரி பயிற்சி ஜனவரி 30 முதல் மார்ச் 4 வரை 30 நாட்கள் நடக்கிறது. 18 வயது நிரம்பிய வேலை இல்லா கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி, உணவு இலவசம். தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி நடைபெறும்.
தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்க வங்கிக்கடன் ஆலோசனை அளிக்கப்படும். பயிற்சி பெற விரும்புவோர் போட்டோ ஆதார் நகல் ஆகியவற்றோடு ஜனவரி 30க்கு முன் நேரில் வந்து முன்பதிவு செய்து பயன் பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என, பயிற்சி மைய இயக்குனர் தனசேகரப்பெருமாள் தெரிவித்துள்ளார்.