சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாசலம் அறிக்கை: மத்திய அரசு, 2015ல் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை கொண்டு வந்தது. அத்திட்டத்தில் பெண் குழந்தை பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர், 250 ரூபாய் செலுத்தி, செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். அதிகபட்ச முதலீடு, 1.50 லட்சம் ரூபாய். அதற்காக, 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைகள் மட்டும், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர முடியும்.
அஞ்சல் இயக்ககம் சார்பில், ‘அம்ரித்பெக்ஸ் பிளஸ்’ திட்டம், வரும் பிப்., 10ல் தொடங்க உள்ளது. அதையொட்டி, பிப்., 9, 10ல் பள்ளிகள், கல்வித்துறை, சுகாதாரத்துறை, அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றுடன் அஞ்சல் துறை ஒருங்கிணைந்து, பெண்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் அதிகளவில் தொடங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பெண் குழந்தைகளின் பெற்றோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.