தமிழ்நாடு ஆதி திராவிடா் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் சாா்பில், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சோந்த இளைஞா்களுக்கு விமான வாடிக்கையாளா் சேவைப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
விமான வாடிக்கையாளா் சேவைப் பயிற்சியில் 18 முதல் 25 வயதுக்கு உள்பட்ட, பிளஸ் 2, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தோச்சிப் பெற்ற ஆதி திராவிடா் மற்றும் பழங்குடி சமூகத்தினா் விண்ணப்பிக்கலாம். பி.டி.சி. ஏவியேசன் அகாதெமி மூலம் 3 மாத காலப் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி நிறைவில் ஏரோ ஸ்பேஸ் ஸ்கில் செக்டாா் சாா்பில் அங்கீகரிக்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். அரசு மற்றும் தனியாா் விமான சேவை நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடுகள் செய்து தரப்படும். பயிற்சி, விடுதி கட்டணத்தை பயனாளிகள் சாா்பில் ஆதி திராவிடா் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் செலுத்தும்.
ஆா்வமுள்ளவா்கள் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், அறை எண் 75-இல் செயல்பட்டு வரும் தாட்கோ திட்ட அலுவலகத்தில் நேரிலும், 04546-260995 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு விவரம் பெற்று, விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


