TAMIL MIXER
EDUCATION.ன்
காஞ்சிபுரம்
செய்திகள்
தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு
உதவித்தொகை – காஞ்சிபுரம்
தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு
அரசு
சார்பில்
உதவித்தொகை
வழங்கப்பட்டு
வருகிறது.
அந்த
வகையில்
காஞ்சிபுரம்
மாவட்டத்தில்
வேலை
வாய்ப்பற்ற
இளைஞர்களுக்கு
உதவி
தொகை
வழங்கும்
திட்டம்
குறித்து
அறிவிப்பு
வெளியாகி
உள்ளது.
இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
அதன்
பிறகு
இந்த
திட்டத்தின்
கீழ்
10ம்
வகுப்பு
தேர்ச்சி
பெறாதவர்களுக்கு
மாதந்தோறும்
200 ரூபாயும்,
தேர்ச்சி
பெற்றவர்களுக்கு
மாதந்தோறும்
300 ரூபாயும்
வழங்கப்படும்.
அதன்
பிறகு
பட்டயப்
படிப்பு
மற்றும்
12ம்
வகுப்பு
முடித்தவர்களுக்கு
மாதந்தோறும்
400 ரூபாய்
வழங்கப்படும்.
இதேபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கு
1 முதல்
10ம்
வகுப்பு
வரை
முடித்தவர்களுக்கு
600 ரூபாயும்,
12ம்
வகுப்பு
மற்றும்
பட்டய
படிப்பு
முடித்தவர்களுக்கு
750 ரூபாயும்
வழங்கப்படும்.
இதைப்போன்ற பட்டப்படிப்பு
முடித்தவர்களுக்கு
மாதம்
600 ரூபாயும்
மாற்றுத்திறனாளிகளில்
பட்டப்படிப்பு
முடித்தவர்களுக்கு
மாதம்
1000 ரூபாயும்
வழங்கப்படும்.
இந்த
திட்டத்தில்
பயன்பெற
விரும்புவர்களின்
குடும்ப
வருமானம்
72 ஆயிரம்
ரூபாய்க்கு
மிகாமல்
இருக்க
வேண்டும்.
ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கு
வருமான
உச்ச
வரம்பு
கிடையாது.
மேலும்
இந்த
திட்டத்தில்
விண்ணப்பிக்க
விரும்புபவர்கள்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
மைய
அலுவலகத்தில்
விண்ணப்ப
படிவம்
பெற்று
நிரப்பி
கொடுக்கலாம்.
அல்லது https://tnvelaivaaippu.gov.in/Empower/
என்ற
இணையதளத்தில்
சென்று
விண்ணப்ப
படிவத்தை
பதிவிறக்கம்
செய்தும்
நிரப்பி
கொடுக்கலாம்.