📢 பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக தமிழக அரசின் புதிய திட்டம்!
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை அதிகரிப்பதே மாநில அரசின் முக்கிய இலக்கு. அதற்காகவே அரசு தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் (TN Women Entrepreneur Scheme) என்ற புதிய மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் + 25% மானியம் (அதிகபட்சம் ரூ.2 லட்சம்) வழங்கப்படுகிறது. மானியம் மட்டுமல்ல – தொழில் தொடங்கவும் வளர்க்கவும் தேவையான தொழில் நுட்பம், பயிற்சி மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவும் வழங்கப்படும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இத்திட்டத்தில் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
👩 யார் யார் விண்ணப்பிக்கலாம்?
- பெண்கள்
- வயது: 18 முதல் 55 வயது வரை
- உற்பத்தி / வியாபாரம் / சேவை துறையில் தொழில் செய்ய விரும்புபவர்கள்
- புதிய தொழில் தொடங்குபவர்களும் விண்ணப்பிக்கலாம்
🧵 எந்த தொழில்களுக்கு முன்னுரிமை? – அரசு பட்டியல்
பெண்கள் மேற்கொள்ளக்கூடிய பல வகை தொழில்களுக்கு மானியம் வழங்கப்படும். அவை:
- மக்கும் பொருட்கள் தயாரிப்பு
- விவசாய கழிவுகளில் இருந்து பொருட்கள் (தவுடு, வைக்கோல்)
- தென்னை நார் செடி தொட்டிகள்
- காகித கழிவுகளில் இருந்து பென்சில் தயாரிப்பு
- ஆடை வடிவமைப்பு, பட்டுங்கைப்பணி
- கண்ணாடி ஓவியம் & கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு
- அலங்கார அணிகலன்கள்
- குழந்தைகள் பராமரிப்பு மையம்
- வீட்டுச் சமையல் உணவுப்பொருட்கள்
- யோகா நிலையம்
- சலவை நிலையம்
- அழகு நிலையம், மெகந்தி, டாட்டூ
- சத்துமாவு உருண்டை & பேக்கரி பொருட்கள்
- தானிய ஐஸ்கிரீம் தயாரிப்பு
- எலுமிச்சை எண்ணெய், வெட்டிவேர் எண்ணெய் தயாரிப்பு
📝 எப்படி விண்ணப்பிப்பது? (Online Method)
👉 பெண்கள் இந்த அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:
தேவையான ஆவணங்கள்:
- புகைப்படம்
- ஆதார் அட்டை
- குடும்ப அட்டை
- ஜாதிச் சான்றிதழ்
- விலைப்புள்ளி பட்டியல் (Quotation)
👉 Online Apply Link:
https://msmeonline.tn.gov.in/
🏢 District Office Contact Details
ஆன்லைனுடன் சேர்த்து, மாவட்ட தொழில் மையத்திலும் விண்ணப்பிக்கலாம்.
கரூர் – மாவட்ட தொழில் மையம்
📌 தாந்தோணிமலை, கரூர்
📞 04234-255177, 89255 33960
கள்ளக்குறிச்சி – மாவட்ட தொழில் மையம்
📌 95/2A2, ராஜா நகர்
📞 04151-294057, 7760037120, 8248878219, 8825883896
பிற மாவட்டத்தினர் தங்கள் மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
👗 ரூ.3 லட்சம் நிதியுதவி – 10 நபர் தையல் குழுவுக்கு சிறப்பு அறிவிப்பு
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:
பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த
தையல் தொழில் தெரிந்த 10 பேர் கொண்ட குழுவிற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி கிடைக்கும்.
தகுதி:
- குழு உறுப்பினர்கள் அனைவரும் BCA/MBC/DNC சமூகத்தைச் சார்ந்தவர்கள்
- வயது: குறைந்தபட்சம் 20
- ஆண்டு வருமானம்: ரூ.1 லட்சத்திற்கு கீழ்
- 10 பேரும் தையல் தொழில் தெரிந்திருக்க வேண்டும்
- MSME பயிற்சி பெற்ற குழுக்களுக்கு முன்னுரிமை
- விதவை / ஆதரவற்ற பெண்கள் குழுக்களுக்கு கூடுதல் முன்னுரிமை
👉 விண்ணப்பிக்க:
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பிரபுத்துறையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

