HomeBlogஆதார் இணைக்க மறுத்தால் மின் கட்டணம் செலுத்த முடியாது

ஆதார் இணைக்க மறுத்தால் மின் கட்டணம் செலுத்த முடியாது

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

ஆதார் இணைக்க மறுத்தால் மின் கட்டணம் செலுத்த முடியாது

மின் இணைப்பு எண்ணுடன், ‘ஆதார்இணைக்க வழங்கப்பட்ட அவகாசத்திற்கு,
இன்னும்
ஐந்து
நாட்கள்
மட்டுமே
உள்ளன.

பிப்ரவரி முதல் ஆதார் இணைத்தால் மட்டுமே, மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழக மின் வாரியம் 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், அவர்களின் ஆதார் எண் இணைக்கும் பணியை, 2022 நவ., 15ல் துவக்கியது. பலர், ஆதார் இணைக்க ஆர்வம் காட்டவில்லை. ஆதார் இணைத்தால் தான் மின் கட்டணத்தை செலுத்தும் நிலை ஏற்பட்டது.

இதனால், ஆதாரை இணைக்காததால்
கட்டணம்
செலுத்த
முடியாமல்
சிரமப்பட்டனர்.

இதையடுத்து, ஆதார் இணைக்காமல் கட்டணம்செலுத்த
வாய்ப்பு
வழங்கப்பட்டது.
ஆதார்
இணைக்க,
2022
டிச.,
31
ம்
தேதி
வரை
அவகாசம்
அளிக்கப்பட்டது.

இதற்காக, 2,811 பிரிவு அலுவலகங்களிலும்
சிறப்பு
முகாம்கள்
நடத்தப்பட்டன.
பின்,
அவகாசம்
இம்மாதம்
31
ம்
தேதி
வரை
நீட்டிக்கப்பட்டது.

நேற்று வரை, 2.20 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர்.

ஆதார் இணைக்காதவர்களின்
வீடுகளுக்கு
சென்று,
மின்
ஊழியர்கள்
அறிவுறுத்தி
வருகின்றனர்.

மின் வாரியம் வழங்கிய அவகாசம் முடிவடைய, ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்கு மேல் அவகாசம் நீட்டிக்கப்படாது
என,
ஏற்கனவே
தெரிவிக்கப்பட்டது.

இதனால் இம்மாதம் 31க்குள் ஆதார் இணைக்காமல் இருப்போர், பிப்ரவரி முதல் ஆதார் இணைத்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular