பக்தி இலக்கியங்கள் (Bhakti Ilakkiyam) தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான பகுதியாகும். குறிப்பாக TNPSC, TRB, TET போன்ற போட்டித் தேர்வுகளில், பக்தி இலக்கியங்கள் தொடர்பான கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு, 100க்கும் மேற்பட்ட பக்தி இலக்கியங்களை உள்ளடக்கிய முக்கிய வினா விடைகள் தொகுப்பு PDF இங்கு வழங்கப்பட்டுள்ளது.
👉 நமது இணையதளத்தில் நீங்கள் இலவசமாக படித்துக்கொள்ளலாம். PDF தேவை என்றால் கீழே உள்ள லிங்க்-ல் Download செய்து கொள்ளலாம்.
📘 அணைத்து PDF தொகுப்புகளும் இணையதளத்தில் இலவசமாக கிடைத்தது. அதை உங்களுக்கு நான் பகிர்கிறேன்.
📩 உங்களுக்கு ஏதும் ஆட்சியப்பனை இருந்தால், தயவுசெய்து மெயில் பண்ணவும்.
👉 இந்த தொகுப்பில், ஆழ்வார், நாயன்மார், சித்தர்கள், மற்றும் பக்தி பாடல்கள் தொடர்பான முக்கியமான கேள்விகள் தொகுக்கப்பட்டுள்ளன. இது தமிழ்த் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
பக்தி இலக்கியங்கள்
1) வேடுவர் தலைவன் _______
அ) குகன்
ஆ) ராமன்
இ) சடாயு
ஈ) சுக்ரீவன்
2) பொருத்துக
1) அமலன் – துன்பம்
2) இளவல் – இராமன்
3) துன்பு – தம்பி
4) உன்னேல் – எண்ணாதே
அ) 1432
ஆ) 2143
இ) 2314
ஈ) 4213
3) ‘அன்பு உள இனிநாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்” – யார் யாரிடம் கூறியது?
அ) குகன்; ராமனிடம் கூறியது
ஆ) ராமன் குகனிடம் கூறியது
இ) சடாயுவிடம் ராமன் கூறியது
ஈ) சுக்ரீவனிடம் குகன் கூறியது
4) கழுகு வேந்தன் சடாயுவிற்கு இறுதிச் சடங்கினை செய்தவர்
அ) குகன்
ஆ) ராமர்
இ) சுக்ரீவன்
ஈ)இராவணன்
5) “என் பொய்யான உலகப்புற்று அழிந்தது அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது; என் பிறவி ஒழிந்தது” – என்று யார் யாரிடம் கூறினாள்?
அ) குகன் ராமனிடம் கூறியது
ஆ) சுக்ரீவன் ராமனிடம் கூறியது
இ) சவரி ராமனிடம் கூறியது
ஈ) சடாயு ராமனிடம் கூறியது
6) ‘உவா’ என்ற சொல்லின் பொருள்
அ) அமாவாசை
ஆ) நண்பன்
இ) அன்பு
ஈ) காலம்
7) பொருத்துக
1. அனகன் – பகைவர்
2. உடுபதி – சந்திரன்
3. செற்றார் – இராமன்
4. கிளை – உறவினர்
அ) 1432
ஆ) 3214
இ) 2314
ஈ) 4231
8) கம்பரது காலம் _____ம் நூற்றாண்டு
அ) 10
ஆ) 11
இ) 12
ஈ) 15
9) பொருத்துக
1) கலி விழா – ஆரவார விழா
2) ஒலி விழா – எழுச்சி தரும் விழா
3) பலி விழா – திசைதோறும் பூசையிடும் உத்திர விழா
அ) 123
ஆ) 213
இ) 312
ஈ) 321
10) கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க
1) மடநல்லார் என்பது இளமை பொருந்திய பெண்கள்
2) பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருநாவுக்கரசர் பாடிய பாடல்களின் தொகுப்பு
3) தேவாரப் பாடல்கள் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளன.
அ) 1 மட்டும் சரி
ஆ) 1ம் 2ம் சரி
இ) 1ம் 3ம் சரி
ஈ) அனைத்தும் சரி
11) மயிலைப் பதிகத்தில் காணப் பெறும் விழாவினைப் பொருத்துக
1) ஐப்பசி – ஓண விழா
2) கார்த்திகை – விளக்குத் திருவிழா
3) மார்கழி – திருவாதிரை விழா
4) மாசி – கடலாட்டு விழா
அ) 1423
ஆ) 1234
இ) 4213
ஈ) 3124
12) ‘ஓர்மின்’ என்ற சொல்லின் பொருள்
அ) ஆராய்ந்து பாருங்கள்
ஆ) எண்ணாதீர்கள்
இ) கட்டியமை
ஈ) கூறவில்லை
13) பொருத்துக
1) பாதகர் – ஒன்றுகூடி
2) குழுமி – கொடியவர்
3) ஏதமில் – குற்றமில்லாத
4) ஊன்ற – அழுந்த
அ) 1234
ஆ) 2134
இ) 3214
ஈ) 4123
14) ‘கூவல்’ – என்ற சொல்லின் பொருள்
அ) தண்டனை
ஆ) உறுதி
இ) கிணறு
ஈ) கடல்
15) ‘உததி’ – என்ற சொல்லின் பொருள்
அ) தண்டனை
ஆ) உறுதி
இ) கிணறு
ஈ) கடல்
16) பொருத்துக
1) ஆக்கினை – தலையில்
2) சிரத்து – தண்டனை
3) கண்டகர் – கொடியவர்கள்
4) வாரிதி – கடல்
அ) 1234
ஆ) 2134
இ) 3214
ஈ) 4132
17) ‘நிந்தை’ – என்ற சொல்லின் பொருள்
அ) கெடுதல்
ஆ) தண்டனை
இ) பழி
ஈ) திட்டினார்
18) பின்வரும் கூற்றினை ஆராய்க
1) திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மிக மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது.
2)இரட்சணிய யாத்திரிகம் 1814ம் ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.
3) இரட்சணிய யாத்திரிகம் 3766 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் உருவகக் காப்பியம்
அ) 1 மட்டும் தவறு
ஆ) 2 மட்டும் தவறு
இ) 3 மட்டும் தவறு
ஈ) அனைத்தும் தவறு
19( ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவலாக படைக்கப்பட்ட நூல்
அ) இரட்சண்ய யாத்திரிகம்
ஆ) சீறாப் புராணம்
இ) பெரிய புராணம்
ஈ) சிறுபாணாற்றுப் படை
20) கிறிஸ்துவக் கம்பர் என அழைக்கப்படுபவர்
அ) உமறுப்புலவர்
ஆ) பனு அகமது மரைக்காயர்
இ) எச்.ஏ.கிருட்டிணனார்
ஈ) வீரமாமுனிவர்
21) “உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்” – இத்தொடரைக் கூறியவர்
அ) இளங்கோவடிகள்
ஆ) சீத்தலை சாத்தனார்
இ) கம்பர்
ஈ) வால்மீகி
22) வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல்
அ) முதுமொழி மாலை
ஆ) செந்தமிழ் இலக்கணம்
இ) கொடுந்தமிழ் இலக்கணம்
ஈ) தொன்னூல் விளக்கம்
23) சீறாப்புராணத்தில் தீர்க்க தரிசனத்தைக் கூறுவது
அ) நுபுவத்துக் காண்டம்
ஆ) விலாதத்துக் காண்டம்
இ) ஹிஜ்ரத்துக் காண்டம்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
24) “மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்” என்ற உயிரியியல் தொழில் நுட்பத்தை அறிவுறுத்தும் நூல்
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) திருக்கோவையார்
ஈ) திருப்பள்ளியெழுச்சி
25) பொருந்தாத இணையைக் கண்டறிக
அ) வீரமாமுனிவர் – பரமார்த்த குருகதை
ஆ) தேவநேயப் பாவாணார் – தமிழர் திருமணம்
இ) திரு.வி.க – சைவத்திறவு
ஈ) பெருஞ்சித்திரனார் – தமிழ்ச்சோலை
26) ‘அழுது அடியடைந்த அன்பர்’ – என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?
அ) அருணகிரியார்
ஆ) சம்பந்தர்
இ) சுந்தரர்
ஈ) மாணிக்கவாசகர்
27) ‘என்றுமுள தென்தமிழ்’ – என்னும் தொடரை இயம்பியவர் யார்?
அ) கம்பர்
ஆ) பாரதியார்
இ) பாரதிதாசன்
ஈ) வள்ளலார்
28) ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ – எனப் பாடியவர்
அ) அரிசில்கிழார்
ஆ) மோசிகீரனார்
இ) ஔவையார்
ஈ) பரணர்
29) சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் அருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேற்றிய நூல் எது?
அ) பெரியபுராயம்
ஆ) திருவிளையாடற் புராணம்
இ) கந்த புராணம்
ஈ) காரைக்கால் அம்மையார்
30) பெரிய புராணத்தழல் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது
அ) திருநாவுக்கரசர்
ஆ) திருஞானசம்பந்தர்
இ) சுந்தரர்
ஈ) காரைக்கால் அம்மையார்
31) சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது?
அ) திருச்செங்குன்றம்
ஆ) திருவெண்ணெய் நல்லூர்
இ) திருச்செந்தூர்
ஈ) திருவாரூர்
32) ‘தேம்பாவளி’ நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை
அ) 39 படலங்கள்
ஆ) 30 படலங்கள்
இ) 32 படலங்கள்
ஈ) 36 படலங்கள்
33) தம்மை நாயகியாகத் கற்பனை செய்து நாரையைத் தூது விட்ட ஆழ்வார் யார்?
அ) பொய்கையாழ்வார்
ஆ) நம்மாழ்வார்
இ) குலசேகர ஆழ்வார்
ஈ) பெரியாழ்வார்
34) உமர்க்கய்யாம் ‘ரூபாயத்’ என்ற பெயரில் எழுதிய நூலைக் கவிமணி மொழி பெயர்த்தார். அடிகோடிட்ட சொல்லின் பொருளை எழுதுக
அ) எட்டடிச் செய்யுள்
ஆ) இரண்டடிச் செய்யுள்
இ) நான்கடிச் செய்யுள்
ஈ) இவை எல்லாம் தவறானவை
35) பொருந்தா இணையைக் கண்டறிக
வழிப்பாட்டுப் பாடல்கள் – ஆசிரியர்
அ) இயேசு பெருமான் – எச்.ஏ.கிருஷ்ணப் பிள்ளை
ஆ) சிவபெருமான் – சுந்தரர்
இ) புத்தபிரான் – நீலகேசி
ஈ) நபிகள் நாயகம் – உமறுப்புலவர்
36) பின்வரும் கூற்றுகளை ஆராய்க
1) “சிந்தாமணியாம் சிலப்பதிகாரம் படைத்தான் கந்தா மணியே கலை புனைந்தான்” – திருத்தணிகையுலா
2) காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் உறையூர் மற்றும் திருவரங்கம் வழியாகச் கொடும்பாளுPர் என்னும் இடத்தை அடைந்தார்.
3) மதுரையில் கணவனை இழந்த கண்ணகி மதுரையிலிருந்து வைகையின் தென்கரை வழியாக வேங்கைக்கானல் என்னுமிடத்தை அடைந்தாள்
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) 3 மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி
37) கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெர்வு செய்க
அ) சமரச சன்மார்க்கம் எனும் விரிந்த நோக்கினைக் கொண்டவர் தாயுமானவர்.
ஆ) தமிழ்மொழியின் உபநிடதம் எனப் போற்றப்படுவது தாயுமானவரது பாடல்கள்
இ) ஆன்மநேய ஒருமைப்பாட்டை வள்ளலாரிடம் இருச்து கற்றறிந்தவர் தாயுமானவர்
ஈ) பராபரக் கண்ணிகள் தாயுமானவரால் இயற்றப்பட்டவை
38) ‘தொண்டர்சீர் பரவுவார்’ என்று அழைக்கப்பட்டவர்
அ) சுந்தரர்
ஆ) கம்பர்
இ) சேக்கிழார்
ஈ) மாணிக்கவாசகர்
39) திருக்கோட்டியூர் நம்பியால் ‘எம்பெருமானார்’ என்று அழைக்கப்பட்டார்
அ) நாதமுனிகள்
ஆ) இராமாநுசர்
இ) திருவரங்கத்தமுனிவர்
ஈ) மணவாள மாமுனிகள்
40) ;விற்பெருந்தடந்தோள் வீர?” இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
அ) இலக்குவன்
ஆ) இராமன்
இ) குகன்
ஈ) அனுமன்
41) திருவேங்கடத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்
அ) நம்மாழ்வார்
ஆ) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
இ) குலசேகராழ்வார்
ஈ) திருமங்கையாழ்வார்
42) ‘சமரச சன்மார்க்க சங்கத்தை’ தோற்றுவித்தவர்
அ) சுத்தானந்த பாரதியார்
ஆ) ராமகிருஷ்ண பரமஹம்சர்
இ) மறைமலையடிகள்
ஈ) ராமலிங்க அடிகள்
43) ‘நன்று நன்றெனப் போற்றியே நடந்தது வேங்கை’ – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்
அ) தேவாரம்
ஆ) கம்பராமாயணம்
இ) பெரிய புராணம்
ஈ) சீறாப்புராணம்
44) பெரியபுராணத்தை அருளிய சேக்கிழார் பிறந்த தற்போதைய மாவட்டம் எது?
அ) சென்னை
ஆ) கடலூர்
இ) விழுப்புரம்
ஈ) காஞ்சிபுரம்
45) ஒன்றுகொலாம் என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?
அ) சுந்தரர்
ஆ) திருஞானசம்பந்தர்
இ) திருநாவுக்கரசர்
ஈ) மாணிக்கவாசகர்
46) “மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒருவாளி” இவ்வரி இடம் பெற்றுள்ள நூல்?
அ) மகாபாரதம்
ஆ) கலிங்கத்துப்பரணி
இ) பெரியபுராணம்
ஈ) இராமாயணம்
47) உத்தரகாண்டம் என்னும் பகுதியை இயற்றியவர்
அ) ஒட்டக்கூத்தர்
ஆ) வான்மீகி
இ) புகழேந்திப்புலவர்
ஈ) கம்பர்
48) “கம்பன் சொன்ன வண்ணங்கள் எத்தனை?
அ) 96
ஆ) 95
இ) 94
ஈ) 97
49) “பெருஞ் சூலையினால் ஆட்கொள்ள, அடைந்துய்ந்த தெருளும் உணர்வில்லாத சிறுமையேன் யான் என்றார்” – இவ்வடிகள் யாரைக் குறிப்பிடுகிறது
அ) பேராசிரியர்
ஆ) நாவுக்கரசர்
இ) நச்சினார்க்கினியார்
ஈ) ந.மு. வேங்கடசாமி
50) குருசு என்பதன் பொருள்
அ) ஏளனம்
ஆ) சிலுவை
இ) சினம்
ஈ) அடியார்
51) கடிகை முத்துப் புலவரின் மாணவர் யார்?
அ) அப்துல் காதர்
ஆ) உமறுப்புலவர்
இ) அகமது மரைக்காயர்
ஈ) நீலகேசி
52) தேவநேயப் பாவணர் எத்தனை நூல்களைப் படைத்துள்ளார்?
அ) 40
ஆ) 70
இ) 43
ஈ) 52
53) ‘ஞானக் கண்ணாடி’ என்ற சமய நூலை எழுதியவர்?
அ) வீரமாமுனிவர்
ஆ) கால்டுவெல்
இ) ஜி.யு.போப.
ஈ) வேதநாயகம் பிள்ளை
54) உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் எது?
அ) பெரியபுராணம்
ஆ) கம்பராமாயணம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) மணிமேகலை
55) சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் யார்?
விடை: அ) திருத்தக்கத் தேவர் – வளையாபதி
56. திருவிளையாடல் புராணம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
அ) கம்பர்
ஆ) நக்கீரர்
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
57) திருநாவுக்கரசர் பிறந்த ஊர்?
அ) திங்களுர்
ஆ) திருவாமூர்
இ) திருவழுந்தூர்
ஈ) திருவாதவு+ர்
58) இராமலிங்க அடிகளாரின் சிறப்புப் பெயர்
அ) திருவருட்பிரகாச வள்ளலார்
ஆ) திருஞான சம்பந்தர்
இ) அடியார்க்கு நல்லார்
ஈ) சிவஞான முனிவர்
59) “அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல் தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்திவன்றே” – இவ்வடிகள் இடம்பெறும் நூல்?
அ) பெரியபுராணம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) கம்பராமாயணம்
ஈ) தேவாரம்
60) ‘கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்’ எனத் தமிழ் மொழியைப் போற்றும் நூல்
அ) சிலப்பதிகாரம்
ஆ) புறநானூறு
இ) பரிபாடல்
ஈ) திருவாசகம்
61) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர்?
அ) நம்பியாண்டார் நம்பி
ஆ) வேதமுனி
இ) பெரியவாச்சான் பிள்ளை
ஈ) நாதமுனி
62) ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விருப்பினுடன் வாசம் நிறை திருநீற்றுக் காப்பேந்தி மனந்தழைப்ப – இப்பாடலடிகள் இடம்பெறும் நூல்
அ) பெரியபுராணம்
ஆ) கந்தபுராணம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) மணிமேகலை
63) “சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன்” – எனக் கூறியவர்
அ) காந்தியடிகள்
ஆ) இராமானுஜர்
இ) பெரியார்
ஈ) வள்ளலார்
64) நாலாயிரந் திவ்வியப் பிரபந்தத்தின் மூன்றாம் திருவந்தாதியை இயற்றியவர்
அ) பொய்கையாழ்வார்
ஆ) பூதத்தாழ்வார்
இ) நம்மாழ்வார்
ஈ) பேயாழ்வார்
65) ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ எனப் பாடியவர்
அ) வள்ளலார்
ஆ) தாயுமானவர்
இ) திருமூலர்
ஈ) அப்பர்
66) நம்மாழ்வாரையே தெய்வமாகக் கருதிப் பாசுரங்களைப் பாடியவர்
அ) மகரகவியாழ்வார்
ஆ) திருமழிசையாழ்வார்
இ) திருமங்கையாழ்வார்
ஈ) தொண்டரடிப் பொய்கையாழ்வார்
67) சரசுவதி அந்நாதி என்னும் நூலை எழுதியவர்?
அ) புகழேந்தி
ஆ) கம்பர்
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) ஔவையார்
68) பொருத்துக
நூல் – ஆசிரியர்
1) போற்றித் திருவகவல் – உமறுப்புலவர்
2) பரமார்த்த குருகதை – எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை
3) முதுமொழி மாலை – வேதநாயகம் பிள்ளை
4) பெண்மதி மாலை – வீரமாமுனிவர்
அ) 2413
ஆ) 1423
இ) 3412
ஈ) 3421
69) “தாதுகு சோலை தோறும் சண்பகக் காடுதோறும் போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்” என்று பாடிய கவிஞர்
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) கம்பர்
ஈ) இளங்கோவடிகள்
70) “என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்” – என்ற வரிகளைப் பாடியவர்
அ) திருப்பாணாழ்வார்
ஆ) குலசேகராழ்வார்
இ) பேயாழ்வார்
ஈ) ஆண்டாள்
71) நூல்-நூலாசிரியர் அறிதல்
1) செயங்கொண்டார் – சடகோபரந்தாதி
2) காரியாசான் – புறநானூறு
3) கம்பர் – கலிங்கத்துப்பரணி
4) கண்ணகனார் – சிறுபஞ்சமூலம்
அ) 3412
ஆ) 1243
இ) 2134
ஈ) 3241
72) கம்பரைப் புரந்தவர்?
அ) ஒட்டக்கூத்தர்
ஆ) சடையப்ப வள்ளல்
இ) சீதக்காதி
ஈ) சந்திரன் சுவர்க்கி
73) ______ நெடு நீர்வாய்க் கடிதனில் அன்னக் கதியது செலநின்றார்” இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்
அ) பெரிய புராணம்
ஆ) மணிமேகலை
இ) கம்பராமாயணம்
ஈ) சீவகசிந்தாமணி
74) “கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்”
அ) சுந்தர காண்டம்
ஆ) அயோத்திய காண்டம்
இ) ஆரண்ய காண்டம்
ஈ) யுத்த காண்டம்
75) ‘கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம்’ – எனப் போற்றப்படும் நூல்
அ) இரட்சண்ய மனோகரம்
ஆ) இரட்சண்ய யாத்திரிகம்
இ) போற்றி திருவகல்
ஈ) தேம்பாவணி
76) கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்த போது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறியவர்
அ) பெரியாழ்வார்
ஆ) அப்பூதியடிகள்
இ) மாணிக்கவாசகர்
ஈ) அப்பர்
77) “வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக”- என்ற அடிகளை இயற்றியவர்
அ) பொய்கையாழ்வார்
ஆ) பூதத்தாழ்வார்
இ) பேயாழ்வார்
ஈ) பெரியாழ்வார்
78) பொருத்துக
1) வையம் – துன்பக்கடல்
2) இடர் ஆழி – உலகம்
3) வெய்ய – வெப்பக்கதிர் வீசும்
அ) 123
ஆ) 213
இ) 312
ஈ) 321
79) பின்வரும் கூற்றை ஆராய்க
1)பெய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தார்.
2) நாலாயிரந் திவ்யபிரபந்தத்தில் உள்ள இரண்டாம் திருவந்தாதி இலர் இயற்றினார்
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
80) “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா'”- என்ற அடிகளை இயற்றியவர்
அ) பொய்கையாழ்வார்
ஆ) பேயாழ்வார்
இ) பூதத்தாழ்வார்
ஈ) திருமழிசையாழ்வார்
81) பூதத்தாழ்வர் பிறந்த இடம்
அ) காஞ்சிபுரம்
ஆ) மாமல்லபுரம்
இ) திருவண்ணாமலை
ஈ) திருநெல்வேலி
82) முதலாழ்வார்கள் – அல்லாதவரைத் தேர்ந்தெடு
அ) பொய்கையாழ்வார்
ஆ) பூதத்தாழ்வார்
இ) பேயாழ்வார்
ஈ) நம்மாழ்வார்
83) பின்வரும் கூற்றினை ஆராய்க
1) சிவபெருமானைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்
2) பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரந் திவ்விய பிரபந்தம் ஆகும்
3) நாலாயிரந் திவ்விய பிரபந்தத்தை தொகுத்தவர் நாதமுனி
அ) 1 மட்டும் தவறு
ஆ) 2 மட்டும் தவறு
இ) 3 மட்டும் தவறு
ஈ) அனைத்தும் தவறு
84) “இடர் ஆழிநீங்குகவே” – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) துன்பம்
ஆ) மகிழ்ச்சி
இ) ஆர்வம்
ஈ) இன்பம்
85) “பண்ணின் தமிழ் இசை பாடலின் பழவெய் முழவு அதிரக் கண்ணின் ஒளி கனகச் சுனை வயிரம் அவை சொரிய” – என்ற அடிகளை இயற்றியவர்
அ) சுந்தரர்
ஆ) திருநாவுக்கரசர்
இ) திருஞானசம்பந்தர்
ஈ) மதுரகவியாழ்வார்
86) பொருத்துக
1. பண் – இசை
2. கனகச்சுனை – பொன்வண்ண நீர்நிலை
3. மதவேழங்கள் – முதிர்ந்த மூங்கில்
4. பழவெய் – மதயானைகள்
அ) 1234
ஆ) 1243
இ) 2143
ஈ) 4213
87) ‘நம்பியாரூரர்’ என அழைக்கப்படுபவர்
அ) சுந்தரர்
ஆ) திருஞானசம்பந்தர்
இ) திருநாவுக்கரசர்
ஈ) மாணிக்கவாசகர்
88) தேவாரத்தைத் தொகுத்தவர்
அ) நாதமுனி
ஆ) நம்பியாண்டார் நம்பி
இ) ஆண்டாள்
ஈ) மதுரகவியாழ்வார்
89) கீழ்க்காணும் கூற்றை ஆராய்க
1) தம்பிரான் தோழர் என அப்பர் அழைக்கப்படுகிறார்.
2) தேவாரப் பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன
3) பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) 3 மட்டும் சரி
ஈ) 2ம் 3ம் சரி
90) இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை எவ்வாறு பிரிக்கப்படுகிறது
அ) தே+வாரம்
ஆ) தே+ஆரம்
இ) தேவா+ரம்
ஈ) தேஆ+ரம்
91) திருத்தொண்டத் தொகையை இயற்றியவர்
அ) திருஞானசம்பந்தர்
ஆ) சேக்கிழார்
இ) திருநாவுக்கரசர்
ஈ) சுந்தரர்
92) ‘நமன்’ – என்ற சொல்லின் பொருள்
அ) எமன்
ஆ) அடியார்
இ) அர்ச்சகர்
ஈ) கடவுள்
93) ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே’- என்ற அடிகளை இயற்றியவர்
அ) கடுவெளிச்சித்தர்
ஆ) திருமூலர்
இ) பத்ரகிரியார்
ஈ) குதம்பைச் சித்தர்
94) பொருத்துக
1) நம்பர் – அடியார்
2) நாணாமே – வழங்கினால்
3) உய்ம்மின் – கூசாமல்
4) ஈயில் – ஈடேறுங்கள்
அ) 1234
ஆ) 1342
இ) 2134
ஈ) 3412
95) அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும், பதிணென் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர்
அ) கடுவெளிசித்தர்
ஆ) திருமூலர்
இ) பத்ரகிரியார்
ஈ) குதம்பைச் சித்தர்
96) ‘தமிழ் மூவாயிரம்;’ என அழைக்கப்படும் நூல், பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ள நூல் ______
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) திருமந்திரம்
ஈ) பெரியபுராணம்
97) அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ______க் கண்டு அஞ்ச மாட்டார்கள்
அ) புலனை
ஆ) அறனை
இ) நமனை
ஈ) பலனை
98) பொருத்துக
1) மப – வண்டு
2) மது – தேன்
3) வாவி – முத்து
4) தரளம் – பொய்கை
அ) 1324
ஆ) 2134
இ) 1243
ஈ) 3142
99) ‘பணிலம்’ என்ற சொல்லின் பொருள்
அ) வட்டம்
ஆ) சங்கு
இ) முத்து
ஈ) மரகதம்
100) பொருத்துக
1) கழை – கரும்பு
2) கா – குளக்கரை
3) மாடு – பக்கம்
4) கோடு – சோலை
அ) 1342
ஆ) 1432
இ) 2134
ஈ) 3124
101) பொருத்துக
1) சூடு – நெல் அரிக்கட்டு
2) சுரிவளை – எருமைக்கிடா
3) வேரி – தேன்
4) பகடு – சங்கு
அ)1342
ஆ) 1432
இ) 2134
ஈ) 3124
102) பொருத்துக
1) நாளிநேரம் – தென்னை
2) நரந்தம் – நாரத்தை
3) கோளி – அரசமரம்
4) சாலம் – பச்சிலை மரம்
5) தமாலம் – ஆச்சாமரம்
அ) 12345
ஆ) 12354
இ) 21435
ஈ) 41235
103) இரண்டாம் குலோத்துங்கன் அவையில் முதலமைச்சராக இருந்தவர்
அ) தாயுமானவர்
ஆ) சுந்தரர்
இ) சேக்கிழார்
ஈ) மாணிக்கவாசகர்
104) “பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” என்று யார் யாரைப் பாராட்டினார்?
அ) சேக்கிழாரை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பாராட்டினார்.
ஆ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரை சேக்கிழார் பாராட்டினார்.
இ) சுந்தரரை சேக்கிழார் பாராட்டினார்.
ஈ) சேக்கிழாரை மாணிக்கவாசகர் பாரட்டினார்.
105) கீழ்க்காணும் கூற்றினை ஆராய்க
1) சுந்தரரின் திருத்தொண்டத் தொகை அடியவர் பெருமையை ஓர் அடியில் கூறுகிறது.
2) அடியார்களின் சிறப்பை ஒவ்வொரு பாடலிலும் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் கூறுகிறது.
3) சேக்கிழார் கிபி. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
அ) 1 மட்டும் தவறு
ஆ) 2 மட்டும் தவறு
இ) 3 மட்டும் தவறு
ஈ) அனைத்தும் தவறு
106) பொருத்துக
1) சுதிர் – மாலை
2) தாமம் – நடனம்
3) தீபம் – விளக்கு
அ) 123
ஆ) 213
இ) 312
ஈ) 321
107) “மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்”- என்ற பாடலடிகள் இடம் பெற்றுள்ள நூல்
அ) திருமந்திரம்
ஆ) திருப்பாவை
இ) நாச்சியார் திருமொழி
ஈ) திருவெம்பாவை
108) பின்வரும் கூற்றுகளை ஆராய்க
1) ஆண்டாள் “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப்பெற்றார்.
2) ஆண்டாள் நம்மாழ்வாரின் வளர்ப்பு மகள் ஆவார்.
3) ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு ‘நாலாயிர திவ்வியப் பிரபந்தம்’ ஆகும்.
4) திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றை ஆண்டாள் பாடினார்.
அ) 1,2,3 சரி
ஆ) 1,3,4 சரி
இ) 2,3,4 சரி
ஈ) அனைத்தும் சரி
109) நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணி;க்கை ______
அ) 123
ஆ) 143
இ) 153
ஈ) 183
110) பெருமாள் திருமொழியை இயற்றியவர்
அ) குலசேகராழ்வார்
ஆ) பெரியாழ்வார்
இ) நம்மாழ்வார்
ஈ) பொய்கையாழ்வார்
111) பின்வருவனவற்றை ஆராய்க
1) வித்துவக்கோடு என்னும் ஊர் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது.
2) பெருமாள் திருமொழி நாலாயிரந் திவ்யப் பிரபந்தத்தில் ஆறாம் திருமுறையாக உள்ளது.
3) பெருமாள் திருமொழியில் 108 பாடல்கள் உள்ளன.
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) 3 மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி
112) குலசேகராழ்வாரின் காலம் ______ம் நூற்றாண்டு
அ) 5
ஆ) 8
இ) 10
ஈ) 12
113) ‘கேண்மையினான்’ – என்ற சொல்லின் பொருள்
அ) நூல் வல்லான்
ஆ) பகைவன்
இ) நட்பினன்
ஈ) உறவினர்
114) பொருத்துக
1) தார் – சினம்
2) முனிவு – கடம்பவனம்
3) தமர் – உறவினர்
4) நீபவனம் – மாலை
அ) 1324
ஆ) 2143
இ) 3412
ஈ) 4132
115) இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ______, இடைக்காடனாரிடம் அன்பு வைத்தார் ______
அ) அமைச்சர், மன்னன்
ஆ) அமைச்சர், இறைவன்
இ) இறைவன், மன்னன்
ஈ) மன்னன், இறைவன்
116) பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல் அல்லாததைத் தேர்ந்தெடு:
அ) வேதாரண்யப் புராணம்
ஆ) திருவிளையாடல் போற்றக் கலிவெண்பா
இ) திருவானைக்கா உலா
ஈ) மதுரை பதிற்றுப்பத்தந்தாதி
117) கீழ்க்காணும் கூற்றைக் கவனி
1) திருவிளையாடற் புராணம் 3 காண்டங்களும் 64 படலங்களும் உடையது.
2) பரஞ்சோதி முனிவர் திருமுறைக்காட்டில் பிறந்தார்.
3) பரஞ்சோதி முனிவர் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) 3 மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி
118) கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
ஈ) அங்கு வறுமை இல்லாததால்
119) கிறித்துவிற்கு முன் தோன்றியவர்
அ) திரு முழுக்கு யோவான்
ஆ) அருளப்பன்
இ) கருணையன்
ஈ) அ,ஆ,இ மூன்றும் சரி
120) பொருத்துக
1) சேக்கை – காடு
2) யாக்கை – படுக்கை
3) புழை – உடல்
4) கான் – துளை
அ) 1342
ஆ) 2341
இ) 3124
ஈ) 4312
121) பொருத்துக
1) அசும்பு – மலர்கள்
2) துணர் – நிலம்
3) படலை – மணமலர்
4) உவமணி – மாலை
5) ஓர்ந்து – நினைத்து
அ) 12345
ஆ) 21435
இ) 34125
ஈ) 51243
122) திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக் கொண்டவர் ______
அ) ஜியு போப்
ஆ) உமறுப்புலவர்
இ) வீரமாமுனிவர்
ஈ) எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை
123) ‘இஸ்மத் சன்னியாசி’ என்ற பாரசீகச் சொல்லின் பொருள்
அ) தூய துறவி
ஆ) வீர துறவி
இ) எளிய துறவி
ஈ) இனிய துறவி
124) தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன்;
அ) சூசையப்பர்
ஆ) வளன்
இ) அ ரூ ஆ இரண்டும்
ஈ) இயேசு கிறிஸ்து
125) கீழ்க்காணும் கூற்றைச் சரிபார்
1) தேம்பாவணி 3 காண்டங்களையும், 36 படலங்களையும், 3615 பாடலங்களையும் கொண்டது.
2) தேம்பா அணி- எனப் பிரிந்து தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு எனப் பொருள்படுகிறது.
3) தேன் பா அணி எனப் பிரிந்து வாடாத மாலை எனப் பொருள்படுகிறது.
4) தேம்பாவணி 17ம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது
அ) 1ம் 2ம் சரி
ஆ) 1ம் 3ம் சரி
இ) 2ம் 3ம் சரி
ஈ) 1ம் 4ம் சரி
126) பொருள் கூறுக
1) புடவி – திருமணம்
2) வதுவை – உலகம்
3) துன்ன – நெருங்கிய
4) தீன் – மார்க்கம்
அ) 2134
ஆ) 4312
இ) 1324
ஈ) 4231
127) சீறாப்புராணத்தை பாடி முடித்தவர்
அ) பனு அகமது மரைக்காயர்
ஆ) உமறுப்புலவர்
இ) சீதக்காதி
ஈ) அப்துல் காசிம் மரைக்காயர்
128) கீழ்க்காணும் கூற்றை ஆராய்க
1) இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையாக சீறாப் புராணம் விளங்குகிறது.
2) வள்ளல் சீதக்காதியின் வாழ்க்கை வரலாற்றினை சீறாப்புராணம் கூறுகிறது.
3) சீறாப் புராணம் விலாதத்துக் காண்டம், நுபுவத்துக் காண்டம், ஹிஜிறத்துக் காண்டம் என்று 3 காண்டங்களையும் 92 படலங்களையும், 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது.
அ) 1 மட்டும் தவறு
ஆ) 2 மட்டும் தவறு
இ) 3 மட்டும் தவறு
ஈ) அனைத்தும் தவறு
129) எட்டையபுரத்தின் அரசவைப் புலவராகவும், கடிகை முத்துப் புலவரின் மாணவராகவும் திகழ்ந்தவர்
அ) உமறுப்புலவர்
ஆ) வள்ளல் சீதக்காதி
இ) அபுல் காசிம் மரைக்காயர்
ஈ) நபிகள் நாயகம்
130) பொருத்துக
1) காயில் – வெகுண்டால்
2) அயன் – விஷ்ணு
3) மால் – பிரமன்
4) ஆலாலம் – நஞ்சு
அ) 1324
ஆ) 2143
இ) 3421
ஈ) 4312
131) பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று
அ) சாழல்
ஆ) சிற்றில்
இ) சிறுதேர்
ஈ) சிறு பறை
132) கீழ்க்காணும் கூற்றினை ஆராய்க
1) திருவாசகம் என்பது சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.
2) சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையாக உள்ளது.
3) திருவாசகத்தில் 38 திருப்பதிகங்கள் உள்ளன.
4) திருவாசகத்தில் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன.
அ) 1ம் 2ம் சரி
ஆ) 2ம் 3ம் சரி
இ) 1ம் 4ம் சரி
ஈ) 3ம் 4ம் சரி
133) அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர்
அ) கம்பர்
ஆ) திருஞானசம்பந்தர்
இ) சுந்தரர்
ஈ) மாணிக்கவாசகர்
134) பின்வரும் கூற்றினை கவனி
1) மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் திருவாசகம், திருக்கோவையார்.
2) உமறுப்புலவர் சீறாப்புராணம், முதுமொழி மாலை என்னும் நூலை இயற்றினார்
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
135) பொருத்துக
1) தரங்கம் – கடல்
2) துரகதம் – அருச்சுனன்
3) விசயன் – அரக்கன்
4) அவுணன் – குதிரை
அ) 1423
ஆ) 2143
இ) 3124
ஈ) 4312
136) ‘உற்பவம்’ – என்ற சொல்லின் பொருள்
அ) வேகம்
ஆ) வளமை
இ) பிறவி
ஈ) உள்ளங்கை
137) 1) இந்தியாவில் வடமொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள் – கம்பராமாயணம் வில்லிபாரதம்.
2) கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள் ஹோமரின் இலியட், ஒடிசி.
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
138) பின்வரும் கூற்றுகளை ஆராய்க
1) வில்லிபுத்தூரார், வடமொழியில் வியாசர் எழுதிய மகாபாரதத்தைத் தழுவித் தமிழில் வில்லிபாரதம் இயற்றினார்.
2) வில்லிபுத்தூரார் வக்கபாகை என்னுமிடத்தை ஆண்ட மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவரால் ஆதரிக்கப் பெற்றார்
3) வில்லிபாரதம் ஆதி பருவம் முதல் சௌப்திக பருவம் வரை பத்துப் பருவங்களைக் கொண்டது.
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) 3 மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி
🔔 மேலும் வேலைவாய்ப்பு & குறிப்புகள் அப்டேட்களுக்கு:
👉 Join WhatsApp Group: https://www.tamilmixereducation.com/tamil-mixer-education-whats-app-group/
👉 Join Telegram: https://t.me/jobs_and_notes
👉 Follow on Instagram: https://www.instagram.com/tamil_mixer_education/
❤️ நன்கொடை வழங்க விரும்பினால்:
👉 https://superprofile.bio/vp/donate-us-395