🌱 தமிழக வேளாண் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை குறித்து புதிய விளக்கம்!
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் CUET (Common University Entrance Test) தேர்வின் அடிப்படையில் சேர்க்கை பெறுவார்கள் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
🎓 CUET தேர்வின் பங்கு:
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் அவர்கள் கடந்த வாரம் அறிவித்திருந்தபடி, நாடு முழுவதும் உள்ள மாநில வேளாண் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலைப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் CUET தேர்வு மூலம் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ICAR) வழியாக நிரப்பப்படும்.
🏫 தமிழகத்தில் நடைமுறை:
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் அவர் கூறியதாவது:
“தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 18 உறுப்புக் கல்லூரிகளில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ICAR) அங்கீகரித்த கல்லூரிகளில் உள்ள இடங்களில், 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 5% மாற்றுத்திறனாளிகளுக்கு, மேலும் 5% தொழில்கல்வி, விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.
📊 சேர்க்கை விபரங்கள்:
- மொத்தம் 1,361 இடங்கள் உள்ளன.
- அதில் 20% (272 இடங்கள்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ICARக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
- இந்த 20% இடங்களுக்கு மட்டும் CUET தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
- மீதமுள்ள 5,250 இடங்கள் வழக்கம்போல பிளஸ் 2 மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் நிரப்பப்படும்.
📢 அமைச்சர் விளக்கம்:
“CUET தேர்வு மூலம் நிரப்பப்படும் 20 சதவீத இடங்கள் தவிர, மாநில அளவிலான 5,250 இடங்கள் வழக்கம்போல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும்.
எனவே, தமிழக மாணவர்களின் சேர்க்கை நடைமுறையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது,”
என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
👥 கூட்டத்தில் பங்கேற்றவர்கள்:
- வேளாண்மை உற்பத்தி ஆணையர் & அரசு செயலர் வ. தட்சிணாமூர்த்தி
- தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை இயக்குநர் பெ. குமாரவேல் பாண்டியன்
மற்றும் பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
🔔 மேலும் கல்வி & அரசு அறிவிப்புகளுக்காக:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்