தமிழ்நாடு அரசு நலத்திட்டங்கள் போட்டித் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் முக்கியமான பகுதி ஆகும். குறிப்பாக TNPSC, TRB, TET, RRB போன்ற தேர்வுகளில், நலத்திட்டங்கள் தொடர்பான கேள்விகள் தவறாமல் இடம் பெறுகின்றன. இதை கருத்தில் கொண்டு, உங்களுக்கு தேர்வில் உதவும் வகையில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய முக்கிய நலத்திட்டங்கள் அனைத்தும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
👉 நமது இணையதளத்தில் நீங்கள் இலவசமாக படித்துக்கொள்ளலாம். PDF தேவை என்றால் கீழே உள்ள லிங்க்-ல் Download செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு நலத்திட்டங்கள்
1) மக்களைத் தேடி மருத்துவ திட்டம்
- நாள் : 57/08/2021
- துவக்கம் : மு க ஸ்டாலின்
- பயனாளர் : 45 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள்
- உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு போன்ற நோய்கள்
2) இல்லம் தேடி கல்வித் திட்டம்
- நாள் : 27/10 / 2021
- இடம் : மரக்காணம் அருகே முதலியார் குப்பம்
- துவக்கம் : மு.க ஸ்டாலின்
- பயனாளி : 1-8 ம் வகுப்பு மாணவர்கள்
- நோக்கம் : கற்றல் இடைவெளி குறைப்பு
3) மகளிர் உரிமைத் தொகை திட்டம்
- நாள் : 15 / 09 / 2023 ( அண்ணா பிறந்த தினம் )
- துவக்கம் : மு. க ஸ்டாலின்
- இடம் : காஞ்சிபுரம்
- பயனாளி : குடும்பத் தலைவி – மாதம் ஆயிரம் ரூபாய்
4) புதுமைப் பெண் திட்டம்
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி புதுமைப்பெண் திட்டம்
- நாள் :5/09/2022 :8/02/2023
- துவக்கம் : மு.க ஸ்டாலின்
- நோக்கம் : உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை
5) முதலமைச்சர் காலை உணவு திட்டம்
- நாள் : 15 / 09 / 2022 ( அண்ணா பிறந்த தினம் )
- இடம் : மதுரை
- துவக்கம் : மு.க ஸ்டாலின்
- பயனாளி : 1 – 5 ம் வகுப்பு மாணவர்கள்
- இது போன்ற திட்டம் கொண்டு வந்த முதல் மாநிலம் தமிழ்நாடு
6)இன்னுயிர் காப்போம் திட்டம்
- நாள் : 18/12 / 2021
- இடம் : செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம்
- நோக்கம் : சாலை விபத்தை குறைத்திட
- முதல் 48 மணி நேர கட்டணம் இல்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சை
7) முதமைச்சரின் தாயுமானவர் திட்டம்
- நோக்கம் : வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை மீட்டெடுக்க
- இலக்கு : அடுத்த இரண்டு ஆண்டுகளில் 5 லட்சம் குடும்பங்களை மீட்டெடுப்பு
- தமிழக பட்ஜெட் 2024 – 25 : நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்
8) குட்டிக் காவலன் திட்டம்
- நாள் : 12/10/2022
- இடம் : கோவை
- துவக்கம் : மு.க ஸ்டாலின்
- நோக்கம் : சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
- மூன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை தெரியப்படுத்தி அவர்களை குட்டி தூதுவர்களாக மாற்றம் செய்வதே நோக்கம்
9) தொல்குடி திட்டம்
- தமிழக பட்ஜெட் 2024 – 25 : நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
- நாள் : 19/02 / 2024
- பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
- அடுத்த நான்கு ஆண்டுகளில் சாலை குடிநீர் தெருவிளக்கு நிரந்தர வீடு போன்றவை மேம்படுத்தப்படும்
10) நீலகிரி வரையாடு திட்டம்
- தமிழ்நாடு பட்ஜெட் 2024 – 25 : 25 கோடி மதிப்பில் பாதுகாப்பு திட்டம்
- (அழிந்து வரும் இனம் )
- அக்டோபர் 07 : நீலகிரி வரையாடு தினம்
- தென்னிந்தியாவின் வெப்ப மண்டல மலைப்பகுதியில் காணப்படும் ஓர் வெள்ளாட்டினம்
11) விடியல் பயணத் திட்டம்
- நாள் : 08 மே 2021
- நோக்கம் : பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டம்
- இதுவரை மகளிர் 445 கோடி முறை பயணித்து மாதம் 888 வரை சேமிக்கின்றனர் .
- பெயர் மாற்றம் : இலவச பேருந்து பயணம் – விடியல் பயணத் திட்டம் 15 ஆகஸ்ட் 2023
- தெலுங்கானா – மகாலட்சுமி திட்டம்
- கர்நாடகா – சக்தி திட்டம்
12) இமைகள் திட்டம்
- நாள் : ஜூன் 2023
- துவக்கம் : சைலேந்திரபாபு ( முன்னாள் டிஜிபி)
- நோக்கம் : பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை காக்கும் திட்டம்
- சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, வேலூர்
13) பசுமை தமிழகம் திட்டம்
- நாள் : 24 செப்டம்பர் 2022
- துவக்கம் : மு.க ஸ்டாலின்
- நோக்கம் : அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் தமிழகத்தின்
- வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட தொடங்கப்பட்டது. [2.80 கோடி மரக்கன்றுகள்]
14) கள ஆய்வில் முதல்வர் திட்டம்
- நாள் : 01 பிப்ரவரி 2023
- இடம் : வேலூர்
- துவக்கம் : மு.க ஸ்டாலின்
- நோக்கம் : துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைவது குறித்தும் முதல்வர் ஆய்வு செய்ய
15) நீயே உனக்கு ராஜா திட்டம்
- நாள் : 01 டிசம்பர் 2023
- இடம் : சென்னை
- துவக்கம் : உதயநிதி ஸ்டாலின்
- நோக்கம் : தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை காக்கவும் , அழிந்து வரும் மரபுசார் கைவினைகளுக்கு புத்துயிர் அளிக்கவும் , கலை ஆர்வம் கொண்ட இளைஞர்களை கலை தொழில் முனைவோராக உருவாக்கவும்
16) நீங்கள் நலமா திட்டம்
- நாள் : 06 மார்ச் 2024
- இடம் : சென்னை
- துவக்கம் : மு.க ஸ்டாலின்
- நோக்கம் : அரசுத் திட்டங்களின் பயன்கள் உடனுக்குடன் மக்களுக்கு சென்று சேருவதை பயனாளிகளிடம் கேட்டு அறிந்து கொள்ள
17) புன்னகை திட்டம்
- நாள் : 09 மார்ச் 2023
- இடம் : சென்னை
- துவக்கம் : மா சுப்பிரமணியன்
- நோக்கம் : பள்ளி மாணவர்களுக்கு பல் பாதுகாப்புக்கான திட்டம்
18) மக்களுடன் முதல்வர் திட்டம்
- நாள் : 18 டிசம்பர் 2023
- இடம் : கோவை
- துவக்கம் : மு.க ஸ்டாலின்
- நோக்கம் : அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும்
19) ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம்
- நாள் : 21 மே 2022
- இடம் : நீலகிரி
- துவக்கம் : மு.க ஸ்டாலின்
- நோக்கம் : ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு ஊட்டச்சத்து திட்டம்.
- இதன் மூலம் இதுவரை 9.3 இலட்சம் குழந்தைகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
20) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
- நாள் : 31 ஜனவரி 2024 (23 நவம்பர் 2023)
- நோக்கம் : மக்கள் குறை கேட்கும் திட்டம் மாவட்ட ஆட்சியர் )
21) எண்ணும் எழுதும் திட்டம்
- நாள் : 13 ஜூன் 2022
- இடம் : திருவள்ளுர்
- துவக்கம் : மு.க ஸ்டாலின்
- நோக்கம் : 2025 ஆம் ஆண்டிற்குள் 08 வயது உள்ள குழந்தைகளை எழுதுதல் மற்றும் வாசித்தலில் திறன் உடையவர்களாக மாற்ற
- 2023 -24 : 45 வகுப்புகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது
22) முதல்வரின் முகவரி திட்டம்
- நாள் : 14 நவம்பர் 2021
- இடம் : சென்னை
- துவக்கம் : மு க ஸ்டாலின்
- நோக்கம் : பொதுமக்களின் மனுக்களுக்கும் கோரிக்கைகளுக்கும் விரைவில் தீர்வு காண
- 19.69 லட்சம் பேர் பயனடையும் வகையில் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது
23) எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம்
- நாள் : 01 செப்டம்பர் 2023
- இடம் : மதுரை
- துவக்கம் : முதன்மை கல்வி அலுவலர்
- நோக்கம் : பள்ளிக்கல்வித்துறை சார்பில் தூய்மையான பள்ளி வளாகங்களை கட்டமைக்கும் வகையில் தொடங்கப்பட்ட திட்டம்
24) விழுதுகள் திட்டம்
- நாள் : 9 ஜனவரி 2024
- இடம் : சென்னை
- துவக்கம் : உதயநிதி ஸ்டாலின்
- நோக்கம் : தமிழக அரசு பள்ளிகளை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் ஓரணியில் திரண்டு அரசு பள்ளிகளை வலுப்படுத்தும் திட்டம்
25) பள்ளி இல்ல நூலகத் திட்டம்
- நாள் : 2022 ஆகஸ்ட்
- இடம் : சென்னை
- நோக்கம் : 4 – 12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி நூலகங்களில் இருந்து புத்தகங்களை பற்றி விட்டில் வாசிக்க
26) மனம் திட்டம்
- நாள் : 22 டிசம்பர் 2022
- துவக்கம் : மு.க ஸ்டாலின்
- நோக்கம் : மாணவர்களின் மன நலனை மேம்படுத்த
- மனம் தொலைபேசி எண் 14416
27) நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம்
- நாள் : 19 டிசம்பர் 2022
- இடம் : சென்னை
- துவக்கம் : மு க ஸ்டாலின்
- நோக்கம் : பொதுமக்கள் முன்னாள் மாணவர்கள் தொழிலதிபர்கள் தன்னார்வ அமைப்புகளிடம் நிதி உதவி பெற்று அரசு பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம்
- திட்டத்தின் தூதுவர் : விஸ்வநாதன் ஆனந்த்
28) நான் முதல்வன் திட்டம்
- நாள் : 01 மார்ச் 2022
- இடம் : சென்னை
- துவக்கம் : மு க ஸ்டாலின்
- நோக்கம் : மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு திறன் பயிற்சிகள் அளிக்க இரண்டு ஆண்டுகளில் 28 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்
29) வானவில் மன்றம்
- நாள் : 28 நவம்பர் 2022
- இடம் : திருச்சி
- துவக்கம் : மு.க. ஸ்டாலின்
- நோக்கம் : ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அறிவியல் சிந்தனையை மேம்படுத்துவதற்காக 13,210 பள்ளிகளில் தொடங்கப்பட்டது
30) சிற்பி திட்டம்
- நாள் : 14 செப்பம்பர் 2022
- இடம் : சென்னை
- துவக்கம் : மு.க ஸ்டாலின்
- நோக்கம் : சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காணவும் அவர்களை நல்வழி படுத்தவும்
31) தகை சால் பள்ளிகள் திட்டம்
- நாள் : 5 செப்டம்பர் 2022
- துவக்கியர் : மு.க ஸ்டாலின் & அரவிந்த் கெஜ்ரிவால்
- இடம் : சென்னை
- நோக்கம் : அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துகின்ற வகையில் 26 தகைசால் பள்ளிகளும் 15 மாதிரி பள்ளிகளும் புதிதாக தொடங்கப்பட்டது.
32) பேராசியர் அன்பழன் பள்ளி மேம்பாட்டு திட்டம்
- நாள் : பிப்ரவரி 1, 2023
- இடம் : வேலூர்
- துவங்கியவர் : மு.க ஸ்டாலின்
- நோக்கம் : 784 கோடி செலவில் 2381 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5351 புதிய வகுப்பறைகள் கட்டப்படும்
33) வளர் 4.0 திட்டம்
- நாள்: 15 ஜூன் 2022
- நோக்கம் : தொழில் முனைவோரின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக
- துவக்கம் : தமிழ்நாடு மின் ஆளுமை முகமை + தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
34) முதல்வரின் புத்தாய்வு திட்டம்
- நாள்: செப்டம்பர் 29, 2022
- இடம் : சென்னை
- துவக்கியவர் : மு.க ஸ்டாலின்
- நோக்கம் : திறன்மிகு இளைஞர்களின் ஆற்றல் திறமையை பயன்படுத்தி நிர்வாக செயல்முறைகளின் செயல் திறனை மேம்படுத்துவது 30 இளம் வல்லுனர்களுக்கு 30 நாட்கள் வகுப்பறை பயிற்சி
35) சமாதான் திட்டம்
- நாள் : அக்டோபர் 2023
- நோக்கம் : வணிகர்கள் நிறுவனங்கள் வணிகவரி நிலுவைத் தொகையை செலுத்த
36) நடப்போம் நலம் பெறுவோம்
- நாள் : நவம்பர் 4, 2023
- இடம் : சென்னை
- துவங்கியவர் : உதயநிதி ஸ்டாலின் ( தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் )
- நோக்கம் : எட்டு கிலோமீட்டர் நடைபயிற்சி
37) கனவு இல்லம்
- நாள் : ஜூன் 3, 2022
- துவங்கியவர் : மு.க ஸ்டாலின்
- நோக்கம் : ஆறு எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை தமிழக முதல்வர் வழங்கினார்
38) சிங்கார சென்னை 2.0 திட்டம்
- நாள் : செப்டம்பர் 2021, சென்னை
- நோக்கம் : சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த
39) அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்
- நாள் : செப்டம்பர் , 2023
- நோக்கம் : நகர்புற பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து முழுமையான சமூகப் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்த
40) ஸ்டார்ட்அப் தமிழா இணையதளம்
- துவங்கியவர் : அமைச்சர் தாமு அன்பரசன்
- இடம் : சென்னை ஐஐடி
- நோக்கம் : தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலும் தொழில் முனைவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தொடங்கப்பட்டது.
41) தமிழ் புதல்வன் திட்டம்
- நாள் : ஆகஸ்ட் 9, 2024
- இடம் : கோவை அரசு கலைக் கல்லூரி
- துவங்கியது : மு.க ஸ்டாலின்
- நோக்கம் : உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் வழங்கும் தீட்டம் ( தமிழ் வழி )
- 3.28 லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர்
42) டால்பின் திட்டம்
- நாள் : நவம்பர் , 2023
- நோக்கம் : மீனவர்கள் மற்றும் கடல் சார்ந்த பிற மக்களுடன் இணைந்து நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டால் ஃபின்கள் மற்றும் அவற்றின் நீர் வாழ்விடங்களை பாதுகாப்பது
43) கலைஞரின் கனவு இல்லம்
- நாள் : 2024 – 25 தமிழக பட்ஜெட்
- நோக்கம் : 2030 – க்குள் குடிசை இல்லா தமிழ்நாடு
- தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் ஆறு ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்
- 2024 – 25 ஒரு லட்சம் வீடுகள்
- ஒரு விட்டின் மதிப்பீடு 3.5 லட்சம்
44) அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
- நாள் : மே 2023
- துவக்கம் : தமிழக அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை
- நோக்கம் : பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களை தொழில் முனைவராக மாற்றும் திட்டம் மொத்த திட்ட தொகையில் 35% மானியம் முன்கூட்டியே வழங்கப்படும்
45) காவல் கரங்கள் திட்டம்
- நாள் : ஏப்ரல் 2021
- இடம் : சென்னை
- துவக்கம் : பெருநகர காவல் துறை ஆணையர்
- நோக்கம் : ஆதரவு இல்லாமலும் மனநிலை பாதிக்கப்பட்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டும் சாலைகளில் சுற்றித் திரியும் முதியோர்கள் , பெண்கள் மற்றும் குழந்தைகளை உரிய பாதுகாப்புடன் மீட்டு தேவைப்படுவோருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது
46) ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம்
- நாள் : 2024 – 25 தமிழக வேளாண் பட்ஜெட்
- நோக்கம் : தமிழகத்தில் உள்ள 15 ஆயிரத்து 280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்த
47) மீண்டும் மஞ்சப்பை திட்டம்
- நாள் : டிசம்பர் 21, 2023
- நோக்கம் : பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து மஞ்சப்பைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க
- துவக்கம் : மீண்டும் மஞ்சப்பை இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு சுற்றுச்சுழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் தொடங்கி வைத்தார்
48) வீரா மீட்பு வாகனம்
- நாள் : செப்டம்பர் 2023
- இடம் : சென்னை
- துவக்கம் : மு க ஸ்டாலின்
- விரா (VEERA – VEHICLE FOR EXTRICATION IN EMERGENCY RESCUE ACCIDENTS)
- நோக்கம்: அவசரகால மீட்பு மற்றும் விபத்துகளில் இருந்து மீட்கும் வாகனம் சாலை விபத்தில் சிக்கிய / பாதிக்கப்பட்ட நபர்களை மீட்பதற்கான திட்டம்
49) இ முன்னேற்றம்
- நாள் : அக்போபர் 2021
- இடம் : சென்னை
- துவக்கம் : மு.க ஸ்டாலின்
- நோக்கம் : தமிழக தலைமை செயலர் தலைமையில் உயர்நிலைக் குழு முக்கிய உட் கட்டமைப்பு திட்டங்களை கண்காணித்து வருகிறது . இந்தத் திட்டங்களின் வளர்ச்சிகளை கண்காணிக்க
50) மணற்கேணி செயலி
- நாள் : ஜூலை 25, 2023
- நோக்கம் : பள்ளி மாணவர்களுக்கான பாடங்களை காணொளி வடிவில் வழங்கும் செயல் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் ஒன்று முதல் +2 வகுப்பு வரையிலான மாணவர்கள் இதில் பயன் பெறலாம்
51) குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்
- நாள் : 2022
- நோக்கம் : காவிரி நதி நீரை திறம்பட பயன்படுத்தி நெல் உற்பத்தியை உயர்த்தும் நோக்கில் 75.95 கோடி இந்த திட்டத்தின் கீழ் 2.5 லட்சம் ஏக்கருக்கு தேவையான ரசாயன உரங்கள் முழு மானியத்தில் வழங்கப்படும் .
52) தகவல் தொழில்நுட்ப நண்பன்
- நாள் : அக்டோபர் 2021
- இடம் : சென்னை
- துவக்கம் : மு.க ஸ்டாலின் தகவல் தொழில் நுட்பவியல் துறை)
- நோக்கம் : தொழில்நுட்பம் சார்ந்த குடும்பங்கள் இதில் இணைந்து தகவல் தொழில் நுட்பவியல் தொழில்கள் குறித்த கொள்கைகளை உருவாக்க.
🔔 மேலும் வேலைவாய்ப்பு & குறிப்புகள் அப்டேட்களுக்கு:
👉 Join WhatsApp Group: https://www.tamilmixereducation.com/tamil-mixer-education-whats-app-group/
👉 Join Telegram: https://t.me/jobs_and_notes
👉 Follow on Instagram: https://www.instagram.com/tamil_mixer_education/
❤️ நன்கொடை வழங்க விரும்பினால்:
👉 https://superprofile.bio/vp/donate-us-395