TNPSC Group II & IIA தேர்வு முடிந்ததையடுத்து, மாணவர்கள் அதிகம் தேடும் விஷயம் Answer Key ஆகும். இங்கு வழங்கப்பட்டுள்ள Tamil Answer Key PDF, தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான சரியான விடைகளை உள்ளடக்கியது.
👉 இந்த Answer Key மூலம், நீங்கள் உங்கள் மதிப்பெண்களை கணக்கிட்டு, தேர்வில் எதிர்பார்க்கக்கூடிய முடிவை முன்கூட்டியே அறிந்துகொள்ளலாம்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
1) பொருத்துக :
அடி தாவரம்
(a) தட்டு 1. வேம்பு
b) கழி 2. மூங்கில்
(c) கழை 3. சோளம்
d) அடி 4. கரும்பு
a b c d
A) 3 4 2 1
B) 3 2 4 1
C) 4 3 1 2
D) 2 3 4 1
E) விடை தெரியவில்லை
விடை: A) 3 4 2 1
2) யானையின் ஒலி மரபைக் கண்டறிக.
(A) அலப்பும்
(B) பிளிறும்
(C) எக்காளமிடும்
(D) கதறும்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) பிளிறும்
3) மானின் ‘ தொகை மரபுச் சொல்லைக் கண்டறிக.
(A) மந்தை
(B) நிரை
(C) கணம்
D) கூட்டம்
(E) விடை தெரியவில்லை
விடை: D) கூட்டம்
4) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
(A) செற்றார்
(B) உற்றார்
(C) நண்ணார்
(D) ஒன்னார்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) உற்றார்
5) அகரவரிசைப்படி சொற்களை அமைக்க :
(A) கருவூலம், களத்துமேடு, கவரிமான் , கலம்பூச்சு
(B) கவரிமான் , கருவூலம் , களத்துமேடு, கலம்பூச்சு
(C) கருவூலம் , கலம்பூச்சு, கவரிமான் , களத்துமேடு
(D) கலம்பூச்சு, கவரிமான் , கருவூலம் , களத்துமேடு
(E) விடை தெரியவில்லை
விடை: (C) கருவூலம் , கலம்பூச்சு, கவரிமான் , களத்துமேடு
6) வெற்றி, வீரம் , வலி ஆகிய பொருள்களைத் தரும் சொல்
(A விறல்
(B) வென்றி
(C) விரல்
(D) வறம்
(E) விடை தெரியவில்லை
விடை: (A விறல்
7) பிரித்து எழுதுக :
“வேணன்மை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
(A வேணன் + மை
(B) வேண் * அன்மை
(C) வேண் + நன்மை
(D) வேள் + நன்மை
(E) விடை தெரியவில்லை
விடை: (D) வேள் + நன்மை
8) சேர்த்து எழுதுக : .
“அது + அன்று” என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.
(A) அதுவன்று
(B) அதுஅன்று
(C) அதினன்று
(D) அதான்று
(E) விடை தெரியவில்லை
விடை: (A) அதுவன்று
9) சேர்த்து எழுதுக :
உள் + மனம்
(A) உன்மனம்
(B) உண்மனம்
(C) உள்மனம்
(D) உம்மனம்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) உண்மனம்
10) கூற்று : ஏது? யாது? என்னும் சொற்கள் சுட்டுச் சொற்களாகும் .
காரணம் : ஏ, யா, என்ற சுட்டெழுத்தை அடிப்படையாகக் கொண்டு
சொற்கள் அமைந்துள்ளன.
A) கூற்று சரி; காரணம் தவறு
(B) கூற்று சரி; காரணம் சரி
(C) கூற்று தவறு; காரணம் சரி
D) கூற்று தவறு; காரணம் தவறு
E) விடை தெரியவில்லை
விடை: D) கூற்று தவறு; காரணம் தவறு
11) பொருத்துக
சொற்கள் இலக்கணம்
(a) அது, நாய் 1.அஃறிணை பன்மை
(b)அவர் , அவர்கள் 2.உயர்திணைப் பெண்பால் ஒருமை
(c) அவை, நாய்கள் 3.அஃறிணை ஒருமை
(d) தங்கை 4.உயர்திணைப் பன்மை
(a) (b) (b) (c)
A) 3 4 1 2
B) 3 1 2 4
C) 2 3 4 1
D) 4 2 3 1
(E) விடை தெரியவில்லை
விடை: A) 3 4 1 2
12) ஒற்றுப்பிழையைச் சரி செய்க :
வள்ளலார் அருளிய வழிகளை கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும் ,
[A] வள்ளலார் அருளிய வழிகளை கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்
(B) வள்ளலாரருளிய வழிகளைக் கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும் ,
(C) வள்ளலார் அருளிய வழிக்களைக் கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்
D) வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப் பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும் .
(E) விடை தெரியவில்லை
விடை: D) வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப் பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும் .
13) பிழையற்ற தொடரைத் தேர்க :
(A) அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவிந்தன. தொண்டர்கள் பரிசுப் பொருட்களைக் குவித்தனர் .
(B) அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் ம ஞ்ற்றட தொண்டர்கள் பரிசுப் பொருட்களைக் குவித்தனர் .
(C) அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவித்தனர் . தொண்டர்கள் பரிசுப் பொருட்களைக் குவிந்தனர் .
D) அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவிந்தனர் . தொண்டர்கள் பரிசுப் பொருட்களைக் குவிந்தனர் .
(E) விடை தெரியவில்லை
விடை: (A) அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவிந்தன. தொண்டர்கள் பரிசுப் பொருட்களைக் குவித்தனர் .
14) மோந்து பார்த்தால் வாடிவிடும் அனிச்சம் மலர் . என்ன செய்தால் வாடுவர்
விருந்தினர் ?
(A) வரவேற்கவில்லையானால்
(B) இனியமொழி பேசவில்லையானால்
(C) கடுஞ்சொற்கள் பேசினால்
D) முகம் திரிந்து நோக்கினால்
(E) விடை தெரியவில்லை
விடை: D) முகம் திரிந்து நோக்கினால்
15) உ.வே. சாமிநாதரின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர்
(A) மனவாசம்
(B) சுய சரிதம்
(C) என் சரிதம்
D) என்கதை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) என் சரிதம்
16) பெருஞ்சித்திரனாரால் நடத்தப்படாத இதழைத் தெரிவு செய்க
(A தென்மொழி
(B) தமிழ்சசிட்டு
(D) தமிழ் நிலம்
(C) தேசபக்தன்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) தேசபக்தன்
17) “கனலி” என்ற சொல்லைக் குறிக்காத சொல்லைத் தேர்க.
(A) சூரியன்
(B) நெருப்பு
(C) பன்றி
(D) கரும்பு
(E) விடை தெரியவில்லை
விடை: (D) கரும்பு
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடு :
நேற்றைப் போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை என்கிற நியதியை அறிந்து நாளும் கற்கிற கட்டாயம் வருகிறபொழுது நாம் மீளவும் இளையோராகி
பயிலத் தொடங்குகிறோம் . புறத் தேவைகளுக்கான அறிவுசார் நூல்களும் அகத்தேவைகளுக்கான அறம்சார் நூல்களும் நம் முன் பக்கங்களாய் விரிந்து கிடக்கின்றன. மனிதன் இரு கால்களை ஊன்றி நடக்கப்பழகியதில் இருந்து பெற்ற வளர்ச்சிக்கு இன்னும் முடிவில்லை. நடை ஒன்று தான் நம் உடல் நலம் பேணும் பயிற்சிகளில் முதன்மையான ஒன்று என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள் . அது புறநடை. அதுபோல் இளமையில் கற்கத் தொடங்கிய அகநடைப் பயிற்சி காலம் முழுவதும் தொடர வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இளமையில் கற்றல் என்பது இளமையாகவே இருக்க உதவும் கலையாக கல்வி மலர்கிறது என்பதை உணர்த்துகிறது.
18) உள்ளத்தேவைகளுக்காக நம் முன் இருப்பவை எவை?
(A) கல்வி
(B) அறிவுசார் நூல்கள்
(C) அற நூல்கள்
(D) கலைக்கூடங்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) அற நூல்கள்
19) இளமையாக இருக்க உதவும் கலை எது?
(A) அகநடைப் பயிற்சி
(B) புறநடைப்பயிற்சி
(C) மருத்துவம்
(D) கல்வி
(E) விடை தெரியவில்லை
விடை: (D) கல்வி
20) மருத்துவர்கள் வலியுறுத்தும் பயிற்சிகளில் முதன்மையானது எது?
(A) புறநடைப்பயிற்சி
(B) அகநடைப்பயிற்சி
(C) மூச்சுப்பயிற்சி
(D) வாசிப்புப்பயிற்சி
(E) விடை தெரியவில்லை
விடை: (A) புறநடைப்பயிற்சி
21) வாழ்நாள் காலம் முடியும் வரை பின்பற்றவேண்டிய ஒன்று எது ?
(A) புறநடைப்பயிற்சி
(B) அகநடைப்பயிற்சி
(C) வாசிப்புப்பயிற்சி
(D) ஒழுக்க நெறிகள்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) அகநடைப்பயிற்சி
22) கற்க வேண்டும் என்ற அவசியம் வருகின்ற போது நாம் எவ்வாறு மாறுகிறோம்?
(A) படிப்பாளிகளாக
(B) அறிஞர்களாக
(C) ஆரோக்கியமாக
(D) இளமையாக
(D) விடை தெரியவில்லை
விடை: (D) இளமையாக
23) ‘இடியோசை கேட்ட நாகம்போல’-என்ற உவ்மைத்தொடர் உணர்த்தும் பொருளைத்
தேர்ந்தெடுக்க :
(A) வன்மம்
(B) ஏக்கம்
(C) மிரட்சி
(D) திரட்சி
(E) விலை தெரியவில்லை
விடை: (C) மிரட்சி
24) நீறு பூத்த நெருப்புப்போல
– நீறு என்பதன் பொருள் என்ன?
(A) சாம்பல்
(B) மண்
(C) நீர்
(D) கலவை
(E) விலை தெரியவில்லை
விடை: (A) சாம்பல்
25) ‘மீதூன் விரும்பேல்’- என்ற ஆத்திச்சூடிக்கு தொடர்புடைய பழமொழியை
கண்டறிக.
(A) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
(B) நீரடித்து நீர் விலகாது
(C) உப்பிட்டவரை உள்ளளவும் நினை
(D) நொறுங்கத் தின்றால் நூறு வயது
(E) விடை தெரியவில்லை
விடை: (A) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
26) புவியியல் மற்றும் சுரங்க ஆணையர் அலுவலகத்தில் உள்ள வேதியியல் ஆய்வகம் ரூபாய் 2 கோடி செலவில் மேம்படுத்தி புதுப்பிக்கப்படும் என்னும் அறிவிப்பு எத்துறைச் சார்ந்ததென்று கண்டறிக?
(A) இயற்கை வளங்கள் துறை
(B) உயர்கல்வித் துறை
(C) சுற்றுச்சூழல் துறை
(D) வனத்துறை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) இயற்கை வளங்கள் துறை
27) “Assailant” – என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல் .
(A) தாக்குபவர்
(B) முன் மரபினர்
(C) உறவினர்
(D) புனைவு நபர்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) தாக்குபவர்
28) பொருத்துக :
a) Arete 1. களிமண் பாறை
b) Arenaceous rock 2. கத்திமுனைக் குன்று
c) Argillaceous rock 3. இடையாழ கிரானைட்டு பாறை
d) Aplite 4. மணற் பாறை
a b c d
(A) 3 4 2 1
(B) 3 1 4 2
(C) 2 1 4 3
(D) 2 4 1 3
(E) விடை தெரியவில்லை
விடை: (D) 2 4 1 3
29) சரியான தொடரைக் கண்டறிக,
(A) கிளைகள் முறிந்து விழுந்தது.
(B) மரம் வேகமாக வளர்ந்தன.
(C) குரங்குகள் மரத்திற்கு மரம் தாவின.
(D) யானைகள் குட்டிகளுடன் சென்றது.
(E) விடை தெரியவில்லை
விடை: (C) குரங்குகள் மரத்திற்கு மரம் தாவின.
30) பொருத்தமான காலத்தைச் சுட்டுக :
“கோவலன் மதுரை மாநகருக்குள் செல்கிறான் ”
(A) இறந்தகாலம்
(B) நிகழ்காலம்
(C) எதிர்காலம்
(D) கூதிர்காலம்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) நிகழ்காலம்
31) புல்வாய் , நவ்வி, உழை ஆகியவற்றின் . பெண்ணைக் குறிக்கும் சொல்லக் கண்டறிக
(A) பினை
(B) நாகு
(C) அளகு
(D) பெட்டை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) பினை
32) ‘அடவி’ என்ற சொல்லின் பொருள்
(A) ஆறு
(B) பக்கம்
(C) காடு
(D) நிலம்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) காடு
33) பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின் . (குறள் -559)
இக்குறட்பாவில் “மிகுதி” என்னும் பொருளை உணர்த்தும் சொல்லைக் கண்டறிக
(A) பரியது
(B) கூர்
(C) கோட்ட
D) யானை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) பரியது
34) உதகை – என்ற மரூஉ சொல்லின் ஊர்ப் பெயரைக் கண்டறிக.
(A) ஒரு கை மண்டலம் .
(B) உதக மண்டலம்
(C) ஊத்துக் கோட்டை
(D) மலைநாடு
(E) விடை தெரியவில்லை
விடை: (B) உதக மண்டலம்
35)பிழை திருத்துக.
மனிதன் மொழியின் வளர்ச்சி கண்டு, அது எவ்வளவு அருமையான கருவி என்பதை உணர்ந்தான்.
(A) அது
(B) அஃது
(C) இது
(D) இஃது
(E) விடை தெரியவில்லை
விடை: (B) அஃது
36) இவனுக்கு வீடு ஒன்று _____ இரண்டு இருக்கிறது
(A) மற்றும்
(B) இல்லை
(C) அல்லது
(D) தான்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) அல்லது
37) _______ நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை – அந்நாடு
வேற்றுநாடு ஆகா தமவேஆம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல்
(பழமொழி நானூறு – 4)
இப்பாடலில் இன எழுத்து இடம்பெற்ற சொல் எது?
(A) நாடு இல்லை
(B) தமவே ஆம்
(C) ஆற்றுணா
(D) வேண்டுவது
(E) விடை தெரியவில்லை
விடை: (D) வேண்டுவது
38) உறுதிக் கூற்று : சுட்டெழுத்துகளை இடச்சுட்டுக்கள் என்றும் குறிக்கலாம் .
காரணம் : அகம் , புறம் எனச் சுட்டெழுத்துகள் நிற்கும் இடத்தைப்
பொறுத்துப் பெயர் குறிப்பிடப்படுகின்றது.
(A) உறுதிக்கூற்று சரி காரணம் தவறு
(B) இரண்டும் தவறு
(C) உறுதிக்கூற்று தவறு காரணம் சரி
(D) இரண்டும் சரி
(E) விடை தெரியவில்லை
விடை: (D) இரண்டும் சரி
39) தொல்காப்பியர் குறிப்பிடும் உவன் , உவள் , உவர் , உது, உவை என்பன _____
(A) அண்மைச் சுட்டு
(B) இடைநிலைச் சுட்டு
(C) சேய்மைச் சுட்டு
(D) கட்டுத் திரிபு
(E) விடை தெரியவில்லை
விடை: (B) இடைநிலைச் சுட்டு
40) எதிர்ச்சொற்களைப் பொருத்துக :
a) அணுகு – 1. தெளிவு
b) ஐயம் 2. சோர்வு
c) ஊக்கம் 3. பொய்மை
d) உண்மை 4. விலகு
a b c d
(A) 4 1 2 3
(B) 4 3 1 2
(C) 3 4 2 1
(D) 2 3 4 1
(E) விடை தெரியவில்லை
விடை: (A) 4 1 2 3
41) எதிர்ச்சொல்லைக் கண்டறிக :
எந்தை
(A) நுந்தை
(B) தந்தை
(C) நொந்தை
(D) எந்தாய்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) நுந்தை
42) பிழையான தொடரைக் கண்டறிக.
(A) போர்க்களத்தில் வீரர்கள் கலத்தில் நீர் அருந்தினர் .
(B) அரசாணையைக் கண்டதும் ஆனைகள் காட்டிற்குள் விடப்பட்டன.
(C) குறைவில்லாமல் ண்ட நாய் குரைத்தது. .
(D) பெருமலையைக் கண்டதும் மக்கள் மழைத்து போய்விட்டனர் .
(E) விடை தெரியவில்லை
விடை: (D) பெருமலையைக் கண்டதும் மக்கள் மழைத்து போய்விட்டனர் .
43) ௯ற்று [A]: திருப்புகழில் அருணகிரிநாதர் தப்பாட்ட இசை குறித்துப் பதிவு செய்துள்ளார்
காரணம் [R] : புலியைப் போன்று கருப்பும் மஞ்சளுமான வண்ணக் கோடுகளிட்டு, வீரத்தைக் காட்டி தப்பு இசைக்கேற்பத் தப்பாட்டத்தை ஆடுவர் ,
(A) கூற்று [A] சரி; காரணம் [R] தவறு, [R] என்பது [A] இன் சரியான விளக்கம் அல்ல
(B) கூற்று [A] சரி ; காரணம் [R] சரி, [R] என்பது [A] இன் சரியான விளக்கம்
(C) கற்று [A] தவறு ; காரணம் [R] தவறு
(D) கூற்று [A] தவறு ; காரணம் [R] சரி
(E) விடை தெரியவில்லை
விடை: (A) கூற்று [A] சரி; காரணம் [R] தவறு, [R] என்பது [A] இன் சரியான விளக்கம் அல்ல
44) கீழக்கண்டவற்றுள் சரியானவற்றைத் தேர்வு செய்க.
தென் திராவிட மொழிகள்
(1) தமிழ் , கன்னடம் , தெலுங்கு, கல்யானம்
(2) தமிழ் , கன்னடம், மலையாளம் குடகு
(3) தமிழ் ,மலையாளம் , குடகு, கூயி
(4) தமிழ் , குடகு, கூயி, குரூக்
(A) (1) மட்டும்
(B) (2) மட்டும்
(C) (3) மட்டும்
(D) (4) மட்டும்
(E) விடை தெரியவில்லை
விடை: (2) தமிழ் , கன்னடம், மலையாளம் குடகு
45. “EVILDOER” என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ்ச்சொல் கண்டறிக.
(A) அளவை
(B) அறிவாளர்
(C) கெடுப்பவர்
(D) நெஞ்சுகலப்பவர்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) கெடுப்பவர்
46. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சொல்லை அறிந்து எழுதுக.
‘Omniscient’
(A) திடுக்கிட்ட நிலை
(B) குழப்ப நிலை
(C) எதுவும் அறியாத நிலை
(D) எல்லாம் அறிந்த நிலை
(E) விடை தெரியவில்லை
விடை: (D) எல்லாம் அறிந்த நிலை
47. மறு ஆய்வு மனு என்பதை ஆங்கிலத்தில் _______ என்றழைப்பர்
(A) Writ Petition
(B) Habeas Corpus
(C) Review Petition
(D) Revision Petition
(E) விடை தெரியவில்லை
விடை: (C) Review Petition
48. மரபுத் தொடர்களைப் பொருளோடு பொருத்துக :
(a கானல் நீர் 1. விட்டுவிடுதல்
(b) கரையேறும் 2. உறுதியாகப்பற்றுதல்
(c) கைகழுவுதல் 3. கிடைக்காத ஒன்று
(d) குரங்குப்பிடி 4. துன்பத்திலிருந்து மீளுதல்
a b c d
(A) 3 4 1 2
(B) 4 1 3 2
(C) 1 4 2 3
(D) 2 1 3 4
(E) விடை தெரியவில்லை
விடை: (A) 3 4 1 2
49) ‘கடுக்காய்க் கொடுத்தல் ‘ என்னும் மரபுத்தொடரின் சரியான பொருளைக் கண்டறிக.
(A) மாற்றிப் பேசுதல்
(B) ஏமாற்றுதல்
(C) குறுக்கிடுதல்
(D) பிடிவாதம் காட்டுதல்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) ஏமாற்றுதல்
50) போர்டு, அரசினர் இவர்களிடமிருந்து வரும் முக்கிய கடிதக் குறிப்புக்களின்
தனிப்பதிவேடு :
விதிகள் மற்றும் விதிமுறைகள் :
அரசினரிடமிருந்து வரும் முக்கியமான நேர்முகக் கடிதங்கள் , கடிதக் குறிப்புகள்
இவற்றிற்குத் தயக்கமில்லாமல் விடைகள் அனுப்புவதைக் கவனிப்பதற்கு இது ஏற்பட்டது. இது இணைப்பு ‘ஆ’ – XVI எண் படிவத்தில் வைக்கப்பட வேண்டும். இதனை நேர்முக உதவியாளர் வைத்துவருவார் , உடனுக்குடன் தயக்கமில்லாமல்
இத்தகைய கடிதக் குறிப்புகளுக்கும் நினைவூட்டுகளுக்கும் விடை செல்வதை அவர் நேர்முகமாகக் கவளித்து வருவார் . மாவட்ட ஆட்சியர் தலைமை. இடத்தில் இருக்கும்போது அன்றாடம் அவருடைய பார்வைக்கு இது அனுப்பப்படவேண்டும்.
மாவட்ட ஆட்சித் தலைவரின் அன்றாடப் பார்வைக்கு அனுப்ப வேண்டிய பதிவேட்டைக் கண்டறிக.
(A) வருகைப் பதிவேடு
(B) தாமத வருகைப் பதிவேடு
(C) கடிதக் குறிப்புக்களின் தனிப்பதிவேடு
(D) சுத்த நகல் பதிவேடு
(E) விடை தெரியவில்லை
விடை: (C) கடிதக் குறிப்புக்களின் தனிப்பதிவேடு
51) உயிரியியலில் “Abulomania® என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையான
கலைச்சொல் தருக.
(A) படுகுழி
(B) மிகுதியான கட்டுப்பாடுகள்
(C) உண்ணிபோன்ற
(D) மனநோய்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) மனநோய்
52) ‘Presbyoesophagus’ எனும் கலைச்சொல்லுக்கு இணையான சொல்லைக் கண்டறிக.
(A) முதியோரின் கேளா நிலை
(B) உணவுக்குழல் தளர்ச்சி அடைதல்
(C) வெள்ளெழுத்து முதிர்வு அடைதல்
(D) மார்சளிக் காய்ச்சல்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) உணவுக்குழல் தளர்ச்சி அடைதல்
53) வணிக மேலாண்மை குறித்த ஆங்கிலச் சொற்களைத் தமிழ்க் கலைச்சொற்களோடு பொருத்துக :
a) Barter 1. வாராக் கடன்
(b) Bargaining 2. பண்டமாற்று
(c) Bad debt 3. கைப்பற்றப்பட்ட நிறுவனம்
(d) Acquiree 4. பேரம் பேசுதல்
a b c d
(A) 3 4 1 2
(B) 3 1 2 4
(C) 2 4 1 3
(D) 2 1 4 3
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 2 4 1 3
54) பிழையற்ற அஃறிணைப் பன்மைத் தொடரைக் கண்டறிக.
(A) அவள் அல்லள்
(B) மரம் அன்று
(C) அவை அல்ல
(D) அவன் அல்ல
(E) விடை தெரியவில்லை
விடை: (C) அவை அல்ல
55) சரியான தொடரைத் தேர்வு செய்க.
(A) மாடுகள் மேய்ந்தது
(B) பறவைகள் பறந்தது
(C) மரம் வளர்ந்தன
(D) செடி கொடிகள் காற்றில் அசைந்தன
(E) விடை தெரியவில்லை
விடை: (D) செடி கொடிகள் காற்றில் அசைந்தன
56. பிழையற்ற தொடரைக் கண்டறிக.
(A) ஆடூஉ வந்தாள்
(B) மகடூ வந்தான்
(C) மகடூ வந்தாள்
(D) சாத்தி வந்தான்
(D) விடை தெரியவில்லை
விடை: (C) மகடூ வந்தாள்
57) யாதும் ஊரே யாவரும் கேளிர் _ இப்பாடல் வரியில் “கேளிர்” என்னும் சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக
(A) சகோதரி
(B) நன்பர்
(C) உறவினர்
(D) பகைவர்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) பகைவர்
58) ஓரெழுத்து ஒரு மொழியைப் பொருத்துக :
A) க 1.உறுதி
(B) கா 2. கொள்ளுகை
(C) தே 3. பறவை
(D) நி 4. தராசு
a b c d
(A) 4 3 2 1
(B) 4 1 3 2
(C) 3 4 1 2
(D) 3 4 2 1
(E) விடை தெரியவில்லை
விடை: (D) 3 4 2 1
59) வேர்க்குரு என்னும் சொல்லின் பேச்சுவழக்கு
(A) வேர்குறு
(B) வேர்க்குறு
(C) வேர்வை
(D) வியர்வை
(E) விடை தெரியவில்லை
விடை: (B) வேர்க்குறு
60) காகத்திற்கு உரிய மற்றொரு பெயர்
(A) புட்டில
(B) புட்டி
C) புட்டம்
(D) புட்டகம்
(E) விடை தெரியவில்லை
விடை: C) புட்டம்
61) அன்புக்குரியவரின் துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் _______ என்றழைப்பர்
(A) புண்கணீர்
(B) புங்கணீர்
(C) Loy
(D) புன்கணீர்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) புன்கணீர்
62) பொருத்துக :
(a) அநுராகம் 1. பாவம்
(B) அனுராகம் 2. மான்
(C) ஏணம் 3. ஒத்தகாதல்
(D) ஏனம் 4. மிக்க ஆசை
a b c d
(A) 4 3 2 1
(B) 4 1 2 3
(C) 4 2 3 1
(D) 4 1 3 2
(E) விடை தெரியவில்லை
விடை: (A) 4 3 2 1
63) “அப்பாவி” எனும் சொல் பிழை எனில் , அச்சொல்லின் திருத்தச் சொல்லைக் காண்க.
(A) அடப்பாவி
(B) அற்பாவி
(C) அற்ப பாவி
(D) அற்ப ஆவி
(E) விடை தெரியவில்லை
விடை: (D) அற்ப ஆவி
64) ‘இலஞ்சி’ என்ற சொல் எம்மொழிச் சொல்லென்று கண்டறிக.
(A) டச்சு
(B) பிராஞ்சு
(C) போர்ச்சுகீசியம்
(D) தமிழ்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) தமிழ்
65) சுருக்கக் குறியீட்டு விளக்கம்
உத்தமம்
(A) உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
(B) உலகத் தமிழ் மன்றம்
(C) உலகத் தமிழாராய்ச்சி மன்றம் !
(D) உலகத்தமிழ்ச் சங்கம்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
66) தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
(A) சாவி
(B) பொத்தான்
(C) சோப்பு
(D) பிண்டம்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) பொத்தான்
67) “மனைக்கு விளக்கம் மடவார் ; மடவார்
தனக்குத் தகைசால் புதல்வர் ;
– என்ற அடிகள் இடம்பெறும் நீதி நூலைக் கண்டறிக.
(A) நாலடியார்
(B) திருக்குறள்
(C) இன்ன நாற்பது
(D) நான்மணிக்கடிகை
(E) விடை தெரியவில்லை
விடை: (D) நான்மணிக்கடிகை
68) “ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை’ என்ற அடி இடம்பெற்றுள்ள நூல்
(A) நாலடியார்
(C) பழமொழி நானுறு
(D) இன்னா நாற்பது
(E) விடை தெரியவில்லை
விடை: (B) முதுமொழிக்காஞ்சி
69) ஏலாதியில் கூறப்பட்டுள்ள சமணத்திற்கே உரிய அறக்கருத்து
(A) தீண்டாமை
(B) ஒழுக்கமுடைமை
(C) கொல்லாமை
(D) அறிவுடைமை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) கொல்லாமை
70) “இரவில் மாட்டிய இலங்குசுடர் நெகிழி –
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை…,” – இச்சங்கச் செய்யுளை இயற்றிய
ஆசிரியரைக் கண்டறிக. .
(A) உறையூர் முதுகொற்றனார்
(B) உறையூர் முதுகற்றனார்
(C) உருத்திரங்கண்ணனார்
(D) உறையூர் .இளம்பொன் வாணிகனார்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) உருத்திரங்கண்ணனார்
71) BLOGGER பொருத்தமான தமிழ்ச் சொல்ல்லத் தேர்க.
(A) வலையொளி
(B) வலைப்பதிவர்
(C) காணொளி படைப்பாளர்
(D) தள வமைப்பாளர்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) வலைப்பதிவர்
72) பிறமொழிச் சொல்லைத் தேர்ந்தெடு
(A) நிறைவு
(B) வெளியீடு
(C) வாடகை
(D) ஒழுங்கு
(D) விடை தெரியவில்லை
விடை: (C) வாடகை
73) பொருளறிந்து பொருத்துக :
(a) ஓதல் 1. திருத்தமாகச் சொல்லுதல்
(b) மொழிதல் 2. பலர் அறியச் சொல்லுதல்
(c விளம்புதல் 3. காதில் மெல்லச் சொல்லுதல்
d) உளறுதல் 4. ஒன்றுக்கொன்று சொல்லுதல்
a b c d
(A) 1 2 3 4
(B) 4 3 2 1
(C) 3 4 1 2
(D) 3 1 2 4
(E) விடை தெரியவில்லை
விடை: (D) 3 1 2 4
74) பழமொழியினை நிறைவு செய்க :
மாலைசற்றிப் பிறந்த பிள்ளை
(A) அம்மாவுக்கு
(B) தாத்தாவுக்கு
(C) தங்கைக்கு
(D) மாமனுக்கு
(D) விடை தெரியவில்லை
விடை: (D) மாமனுக்கு
75) பொருத்துக :
(a) Bracings 1. பைஞ்சுதை
(b) Briquette 2. மெல்லுறை
(c) Cement 3. கட்டுச்சட்டங்கள்
(d) Veneer 4. கட்டி
a b c d
(A) 3 4 1 2
(B) 4 3 1 2
(C) 2 4 1 3
(D) 3 1 4 2
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 2 4 1 3
76) சரி யான திருக்குறளைக் கண்டறிக.
(A) சொல்லுக சொல்லில் சொல்லற்க பயனுடைய சொல்லில் பயன் இலாச் சொல்
(B) சொல்லில் சொல்லுக சொல்லற்க பயனுடைய சொல்லில் பயன் இலாச் சொல்
(C) சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லில் சொல்லற்க பயன் இலாச் சொல்
(D) சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன் இலாச் சொல்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன் இலாச் சொல்
77) செயப்பாட்டுவினைத் தொடரைக் கண்டறிக.
(A) குமரன் பாடம் பயின்றான்
(B) இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றினார்
(C) கபிலர் குறிஞ்சிப்பாட்டு இயற்றினார்
(D) த கொண்டாடப் பெற்றது
(E) விடை தெரியவில்லை
விடை: (D) தை கொண்டாடப் பெற்றது
78) குமணன் நடந்தான் – இத்தொடர் உணர்த்தும் வினையைக் கண்டறிக.
(A) தன்வினை
(B) பிறவினை
(C) பொதுவினை
(D) எதிர்மறை வினை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) தன்வினை
79) உறுதிக் கூற்று: ஆ, ஓ, ௭, @ wr ஆகிய ர்ழுத்துன் சொற்களோடு சேர்ந்து
வரும் இடங்களில் வினாக்குறி இட வேண்டும் .
காரணம்: ஏனெனில் இவை வினாச்சொற்கள் .
(A) உறுதிக்கூற்று சரி காரணம் சரி
(B) உறுதிக்கூற்று சரியன்று காரணம் சரி
(C) உறுதிக்கூற்று சரி காரணம் சரியன்று
(D) உறுதிக்கூற்று, காரணம் இரண்டும் சரியன்று
(E) விடை தெரியவில்லை
விடை: (C) உறுதிக்கூற்று சரி காரணம் சரியன்று
80) பிறைக் குறியை உள்ளடக்கப் பயன்படும் நிறுத்தற்குறியீடு எது?
(A) விடுகுறி
(B) உடுக்குறி
(C) மேற்கோள் குறி
(D) பகர அடைப்புக் குறி
(E) விடை தெரியவில்லை
விடை: (D) பகர அடைப்புக் குறி
81) தேவநேயப்பாவாணர் ‘கூட்டுக்கிளவியப் புணர் . வாக்கியம் ” என்று எதனைக்
கூறுகிறார் ?
(A) மாறுபட்ட நிலைகளை
(B) ஒரு எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிதலை
(C) சொற்பொருள் கூறுமிடத்து
(D) ஒபபுமைப்படுத்துதலை
(E) விடை தெரியவில்லை
விடை: (B) ஒரு எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிதலை
82) திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கின்றது – இத்தொடரின் ஒருபொருட்
பன்மொழி.
(A) திருமால் குன்றம்
(B) உயர்ந்து ஓங்கிய
(C) ஓங்கி நிற்கும்
(D) குன்றம் உயர்ந்து
(E) விடை தெரியவில்லை
விடை: (B) உயர்ந்து ஓங்கிய
83) இருபொருள் குறிக்கும் சொற்களை பொருத்துக :
A) கறுத்து 1. கொல்லல் , கோளிழைத்தல்
B) கிராய் 2. கோபித்து, சினந்து
C) கோறல் 3. பிணக்கு, மாறுபாடு
(D) உறையல் 4. கருஞ்சேற்று நிலம் , புற்கரடு
a b c d
(A) 3 1 2 4
(B) 3 4 1 2
(C) 2 1 4 3
(D) 2 4 1 3
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 2 1 4 3
84)பொருத்துக :
A) லை கடற்கரைச் சாலை 1.ஏழாம் வேற்றுமைத்தொகை மூன்றாம்
வேற்றுமை உருபும்
(b) புதுமனைப் புகுவிழா 2. பயனும் உடன்தொக்க தொகை
C) உரிமைக் குரல் 3. ஏழாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன்தொக்க தொகை
D) பருத்தித் துணி 4. நான்காம் வேற்றுமை உருபும் பயனும்
உடன்தொக்க தொகை
a b c d
(A) 3 2 4 1
(B) 3 4 1 2
(C) 3 1 4 2
(D) 4 3 1 2
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 3 1 4 2
85) பொருள் கண்டறிக :
ம, மா
(A) வண்டு, ஆகாயம்
(B) இயமன் , இளமை
(C) மண் , மான்
(D) இயமன் , வண்டு.
(E) விடை தெரியவில்லை
விடை: (D) இயமன் , வண்டு.
86) னகர ணகர நகர வேறுபாட்டில் – பொருத்துக.
(a அன்னாள் 1. முற்காலத்தில்
(b) உன்னல் 2. என்று சொல்லாள்
(c முன்னாள் 3. நினைத்தல்
(d) என்னாள் 4. அவள்
a b c d
(A) 3 2 4 1
(B) 3 4 1 2
(C) 4 1 3 2
(D) 4 3 1 2
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 4 1 3 2
87) ‘சொல்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
(A) சொல்லாமை
(B) சொல்லா
(C) சொல்லிய
(D) சொல்லுகின்ற
(E) விடை தெரியவில்லை
விடை: (A) சொல்லாமை
88) “அறியாத பையன் ” – என்பது எவ்வகை பெயரெச்சத்தைக் குறிக்கிறது?
(A) இறந்தகாலப் பெயரெச்சம்
(B) எதிர்காலப் பெயரெச்சம்
(C) குறிப்புப் பெயரெச்சம்
(D) தெரிநிலைப் பெயரெச்சம்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) தெரிநிலைப் பெயரெச்சம்
89) திறிய கடிதம் ‘ – இத்தொடரின் எச்ச வகை கண்டறிக.
(A) இறந்தகாலப் பெயரெச்சம்
(B) நிகழ்கால பெயரெச்சம்
(C) குறிப்புப் பெயரெச்சம்
(D) எதிர்காலப் பெயரெச்சம்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) குறிப்புப் பெயரெச்சம்
90) ஆங்கிலச் சொல்லைக் கண்டறிக.
(A) அலமாரி
(B) துட்டு
(C) லாந்தர்
(D) உயில்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) லாந்தர்
91) கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும் .
1) அன்பு இருப்பது தான் உயிருள்ள உடல்
2) அன்பு இல்லாதது உயிரறற உடல்
3) அன்பு உடையவர்கள் தம் உடலும் பிறர்க்கே என்பர்
4) அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கே என்பர்
(A) (1) மட்டும்
(B) (2) மட்டும்
(C) (3) மட்டும்
(D) (4) மட்டும்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) (2) மட்டும்
92) “அன்றே யொழிய விடல் ” என வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்?
(A) அன்றறிவாம் என்னா தறம் .
(B) வினை பகை யென்றிரண்டின் எச்சம்
(C) நடுநிலை கடந்து உண்டாகும் செல்வம்
(D) முடிவும் இடையூறும் அறிந்த செயல்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) நடுநிலை கடந்து உண்டாகும் செல்வம்
93) கிளைஞரை அளக்கும் கோல் எது?
(A) நமக்கு வரும் துன்பம்.
(B) இடுக்கண் களையும் நட்பு
(C) நட்பாங் கிழமை
(D) கீழ்ந்திடா நட்பு
(E) விடை தெரியவில்லை
விடை: (A) நமக்கு வரும் துன்பம்.
94) கண்ணதாசன் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடு :
i) 1949 ஆம் ஆண்டு கலங்காதிரு மனமே என்ற பாடலை எழுதித் திரைப்படப் பாடலாசிரியரானார் .
ii) இயேசு காவியம் ன்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்,
iii) இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார் .
(A) i) மற்றும் (ii) மட்டும்
(B) (iii) மட்டும்
(C) (i) மற்றும் (ii) மட்டும்
(D) (i) மற்றும் (iii) மட்டும்
(E) விடை தெரியவில்லை
விடை: iii) இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார் .
95) வேலுநாச்சியார் கற்றறிந்த மொழிகளைக் கண்டறிக :
(A) தமிழ் , ஆங்கிலம் , உருது, பிரெஞ்சு
(B) தமிழ் , ஆங்கிலம் , இந்தி, கிரேக்கம்
(C) தமிழ் , ஆங்கிலம் , உருது, சீனம்
(D) தமிழ் , ஆங்கிலம் , உருது, மலையாளம்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) தமிழ் , ஆங்கிலம் , உருது, பிரெஞ்சு
96) தொழில்நுட்பச் சொற்களைப் பொருத்துக
(a Nautical mile 1. மணல் தொடுவரை
(b) Natric horizon 2. நெப்டியூனின் துணைக்கோள்
(c Narbonnaise 3. 1852 மீ
(d) Nalad 4. மழை புயற்காற்று
a b c d
(A) 3 1 4 2
(B) 3 4 1 2
(C) 4 3 2 1
(D) 4 1 2 3
(E) விடை தெரியவில்லை
விடை: (A) 3 1 4 2
97) கீழ்க்காணும் கலைச்சொற்களைப் பொருத்துக
(a Nanotechnology 1. அறிவாளர்
(b) Biotechnology 2. விண்வெளித் தொழில்நுட்பம்
(c Spacetechnology 3. உயிர்த் தொழில்நுட்பம்
(d) Intellectual 4. மீநுண் தொழில்நுட்பம்
a b c d
(A) 4 3 2 1
(B) 3 2 1 4
(C) 4 2 1 3
(D) 1 2 4 3
(E) விடை தெரியவில்லை
விடை: (A) 4 3 2 1
98) உவமைத் தொடர்களுக்கு ஏற்ற சரியான பொருளைப் பொருத்துக :
(a ஆண்டிகள் மடம் கட்டியது போல 1. போலி
(b) ஆற்றில் கரைத்த புளி போல 2. மிக அரிது
(c) கரடி பிறை கண்டது போல 3. பயனற்ற செயல்
(d உள்ளீடற்ற புதர் போல 4, உருவாகாத் திட்டம்
(A) 4 3 2 1
(B) 4 1 3 2
(C) 3 1 4 2
(D) 3 4 2 1
(E) விடை தெரியவில்லை
விடை: (A) 4 3 2 1
99) “நீர்மேல் எழுத்துப்போல” என்ற உவமைத்தொடரின் சரியான பொருளைத் தேர்க :
(A) இயலாமை
(B) நிலைத்தன்மை
(C) உறுதித்தன்மை
(D) நிலையற்ற தன்மை
(E) விடை தெரியவில்லை
விடை: (D) நிலையற்ற தன்மை
100) பின்வரும் பழமொழி உணர்த்திடும் ளியானவற்றைக் குறிப்பிடுக
“எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய் , இளம்பிள்ளை
தாய்க்கும் எட்டே கடுக்காய் ”,
(a) இப்பழமொழி வேளாண்மை சார்ந்தது.
(b) எரு கெட்டார் என்பது மலச்சிக்கல் கொண்டவர்களை குறிக்கிறது.
(c) கடுக்காய் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து
(d) பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும் .
(A) (b), (c), (d) சரி
(B) (a), (b), (c) சரி
(C) அனைத்தும் சரி
(D) அனைத்தும் தவறு
(E) விடை தெரியவில்லை
விடை: (a) இப்பழமொழி வேளாண்மை சார்ந்தது.
🔔 மேலும் வேலைவாய்ப்பு & குறிப்புகள் அப்டேட்களுக்கு:
👉 Join WhatsApp Group: https://www.tamilmixereducation.com/tamil-mixer-education-whats-app-group/
👉 Join Telegram: https://t.me/jobs_and_notes
👉 Follow on Instagram: https://www.instagram.com/tamil_mixer_education/
❤️ நன்கொடை வழங்க விரும்பினால்:
👉 https://superprofile.bio/vp/donate-us-395

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

