HomeNotesAll Exam NotesTNPSC Group II, IIA – GS Answer Key 2025

TNPSC Group II, IIA – GS Answer Key 2025

TNPSC Group II & IIA 2025 தேர்வில் General Studies (GS) பகுதி மிக முக்கியமானதாகும். தேர்வு முடிந்தவுடன், மாணவர்கள் அதிகம் எதிர்பார்க்கும் விஷயம் GS Answer Key ஆகும். இங்கு வழங்கப்பட்டுள்ள GS Answer Key PDF, Group 2 மற்றும் 2A தேர்வில் கேட்கப்பட்ட அனைத்து GS கேள்விகளுக்கான சரியான விடைகளை கொண்டுள்ளது.

👉 இந்த Answer Key மூலம், நீங்கள் உங்கள் பதில்களை சரிபார்த்து, மதிப்பெண்களை கணக்கிட்டு, தேர்வில் பெறக்கூடிய நிலையை முன்கூட்டியே மதிப்பிடலாம்.

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

101. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை சரியாகப்‌ பொருத்தி குறியீடுகள்‌ மூலம்‌ சரியான விடையினைத்‌ தேர்வு செய்க :

(a) குளோரோபார்ம்‌ – 1. CCl3 NO2
(b) பாஸ்ஜீன்‌ – 2. CIC2H4-S-C2H4CI
(c) கண்ணீர்ப்‌ புகை – 3. CHCL3
(d) கடுகு வாயு – 4. COCL2

விடை: C) 3 4 1 2

102. நார்டிக்ஸ் குறித்து பின்வரும் கூற்றுகளில் உண்மையான கூற்று எது?

(i) இந்தோ ஆரியர்கள் இந்தியாவில் கடைசியாக குடியேறியவர்கள்
(ii) நெக்ரிட்டோகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்த குழு இந்தக் குழு.
(iii) இந்தக் குழு 2000 மற்றும் 1500 BC க்கு இடையில் இந்தியாவிற்கு வந்தனர்

விடை: D) (ii) மற்றும் (iii) மட்டும்

103. கீழே கொடுக்கப்பட்ட கூற்று/கூற்றுகளில்‌ எது/எவை சரியானவை?

(i) சதகர்ணி சாதவாகன மன்னர்களில்‌ முதல்‌ அரசர்‌ மற்றும்‌ முதல்‌ சக்தி வாய்ந்த சாதவாகன ஆட்சியாளர்‌ அல்ல.
(ii) அவருடைய சாதனைகள்‌ மனாகாட்‌ கல்வெட்டில்‌ குறிப்பிடப்படவில்லை.
(iii) சாஞ்சி ஸ்தூபியின்‌ நுழைவாயில்கள்‌ ஒன்றில்‌ அவரது பெயர்‌ பொறிக்கப்பட்டுள்ளது மற்றும்‌ “தட்சிணபாதத்தின்‌ இறைவன்‌” என்று குறிப்பிடப்படுகிறது.

விடை: A) (iii) மட்டும்

104. பின்வருவனவற்றுள்‌ இந்திய தேசியக்‌ காங்கிரஸ்‌ கூற்றுகளைத்‌ பற்றிய சரியான கூற்று தேர்வு செய்க :

(i) இந்திய தேசியக்‌ காங்கிரஸின்‌ கந்தை A.O. ஹியூம்‌ ஆவார்
(ii) இந்திய தேசியக்‌ காங்கிரஸின்‌ முதல்‌ தலைவர்‌ S.N. பானர்ஜி ஆவார்‌.
(iii) S.N. பானர்ஜி இந்திய தேசிய விடுதலை அமைப்பை நிறுவினார்.

விடை: D) (ii) மற்றும் (iii) மட்டும்

105. இந்த சட்டத்திருத்தத்தின்‌ மூலம்‌ அடிப்படைக்‌ கடமைகளானது இந்திய
அரசமைப்பில்‌ சேர்க்கப்பட்டது.

விடை: A) 42வது அரசியலமைப்புத் திருத்தம் 1976

106. கீழ்க்கண்ட தமிழ்நாடு பஞ்சாயத்துகள்‌ சட்டம் 1994 தொடர்பானவற்றுள்‌ சரியானது எவை?

(i) இச்சட்டத்தின் இரண்டாம் அத்தியாயம் கிராம சபை தொடர்பானது ஆகும்.
(ii) இதன் ஏழாம் அத்தியாயம் வரி விதிப்பு மற்றும் நிதி தொடர்பானது ஆகும்.
(iii) இதன் பன்னிரண்டாவது அத்தியாயம் அபராதங்கள் தொடர்பானது ஆகும்.

விடை: C) (i) மற்றும் (ii) மட்டும்

107. தவறான இணையை கண்டுபிடி :

அணையம்‌/அமைப்பு – ஏற்படுத்தப்பட்ட ஆண்‌டு

(1) தேசிய மனித உரிமைகள்‌ ஆணையம்‌ – 1993
(2) மத்திய தகவல்‌ ஆணையம்‌ – 2005
(3) மத்தியக்‌ கண்காணிப்பு ஆணையம்‌ – 1963
(4) மத்தியப்‌ புலனாய்வு அமைப்பு – 1969

விடை: B) (1) மற்றும் (2) மட்டும்

108. தமிழக அரசு ஏப்ரல்‌ 29 முதல்‌ மே 5 ஆம்‌ தேதி வரை இவருடைய பிறந்த நாளை
கொண்டாடியது

(A) பாவேந்தர்‌ பாரதிதாசன்‌
(B) பெருந்தலைவர்‌ காமராஜர்‌
(C) பசும்பொன்‌ முத்துராமலிங்கனார்‌
D) பேரறிஞர்‌ அண்ணா
(E) விடை தெரியவில்லை

விடை: (A) பாவேந்தர்‌ பாரதிதாசன்‌

109. செப்டம்பர்‌ 20, 2023 அன்று மக்களவையில்‌ நிறைவேற்றப்பட்ட மகளிர்‌ இட ஒதுக்கீடு மசோதாவின்‌ முக்கிய அம்சங்கள்‌ எவை?

(i) இந்த மசோதா மக்களவை மற்றும்‌ மாநில சட்டமன்றங்களில்‌ உள்ள அனைத்து இடங்களிலும்‌ பெண்களுக்கு 33% ஒதுக்குகிறது.
(ii) லோக்‌ சபா மற்றும்‌ மாநில சட்டமன்றங்களில்‌ SC/ST க்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு இது பொருந்தாது.
(iii) 25 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்‌.
(iv) தொகுதி மறுவரையறைப்‌ பயிற்சிக்குப்‌ பிறகு நடைமுறைக்கு வரும்‌.

விடை: B) (i) மற்றும் (iv) மட்டும்

110. சரியான பொருத்தங்களைத்‌ தேர்வு செய்யவும்‌ :

(1) NHS – தேசிய சுகாதார சேவை
(2) CBHI – சுகாதாரக்‌ காப்பீட்டுக்கான மத்தியப்‌ பணியகம்‌
(3) PHC – ஆரம்ப சுகாதார நிலையம்‌
(4) NRHM – தேசிய சுகாதார சேவை மையம்

விடை: A) 1 மற்றும் 3 சரியானவை

‌111. கூற்று [4] : தமிழ்நாட்டின்‌ கிராமப்புறங்களில்‌ வாழும்‌ மக்களின்‌
வாழ்க்கைத்‌ தரம்‌ மேம்பட்டுள்ளது.

காரணம்‌ [R] : தமிழ்நாடு அரசு தமிழ்நாடு கிராம வாழ்விட மேம்பாட்டுத்‌ திட்டம்‌ என்ற முதன்மைத்‌ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

விடை: (A) மற்றும் (R) இரண்டுமே சரி மற்றும் (R) என்பது (A) க்கு சரியான விளக்கம்

112. பின்வருவனவற்றை அவற்றின்‌ திட்டங்களுடன்‌ பொருத்தவும்‌ :

(a) மதி பஜார்‌ – 1. சுத்தமான எரிசக்தி
(b) பசுமை வீடுகள்‌ திட்டம்‌ – 2. திறன்‌ மேம்பாடு
(c) நான்‌ முதல்வன்‌ – 3. வறுமை ஒழிப்பு
(d) அஜீவிகா – 4. சுய உதலிக்குழு

விடை: A) 3 1 2 4

113. தமிழ்நாட்டில்‌ உள்ள குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ (MSME கள்‌) பற்றி பின்வரும்‌ கூற்றுகளில்‌ எது சரியானவை?

(i) உத்யம் பதிவுகளில் தமிழ்நாடு இந்தியாவில்‌ மூன்றாவது இடத்தில்‌ உள்ளது.
(ii) மாநிலத்தின்‌ 30% தொழில்முனைவோர்‌ பெண்கள்‌.
(iii) கோயம்புத்தூரில்‌ தான்‌ மாநிலத்திலேயே அதிக குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ உள்ளன.

விடை: (i) மற்றும் (ii) மட்டுமே

114. கில்ஜிகளின் கட்டிடம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/ எவை உண்மை?

(i) அலாவுதின் கில்ஜி அரியணை எரியபின் இந்து முஸ்லீம் பாணி கட்டிடக் கலையில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கப்பட்டதாக கே.எஸ் லால் கூறுகிறார்.
(ii) ஹவுஸ் – இ – காஸ் இஸ்லாமிய கட்டிடக் கலையின் மிகவும் பொக்கிஷமான ரத்தினங்களில் ஒன்று என்று மார்ஷல் குறிப்பிடுகிறார்.
(iii) “அலாவுதின் கில்ஜியின் மசூதியின் நுழைவு வாயில் இந்தியாவில் இஸ்லாமிய கட்டிடக் கலையின் பரிமாண வளர்ச்சியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று பெர்சி பிரவுன் கூறுகிறார்”

விடை: (ii) மற்றும் (iii) மட்டுமே

115. பின்வரும்‌ நிகழ்வுகளைக்‌ கால வரிசைப்படி முறைப்படுத்துக.

(1) சட்ட மறுப்பு இயக்கம்‌
(2) சிப்பாய்‌ கலகம்‌
(3) வேலூர்‌ கலகம்‌
(4) தென்னிந்தியப்‌ புரட்சி

விடை: D) 4 3 2 1

116. புத்தகங்களையும்‌ ஆசிரியரின்‌ பெயரையும்‌ சியான்‌ பொருத்தவும்‌ :

(a) திருக்குறள்‌ உரைவளம்‌ – 1. வ.செ. குழந்தை சாமி
(b) திருக்குறள்‌ நுண்பொருள் மாலை – 2. கி.வா. ஜெகந்நாதன்‌
(c) திருக்குறள்‌ ஆராய்ச்சிப்‌ பதிப்பு – 3. காரிரத்தினக்‌ கவிராயர்‌
(d) வாழும்‌ வள்ளுவம்‌ – 4. தண்டபாணி தேசிகர்

விடை: A) 4 3 2 1

‌117. காலவரிசைப்படி பல்லவ மன்னர்களை வரிசைப்படுத்து :

  1. சிம்மவிஷ்ணு – 555 லிருந்து 590 CE
  2. மகேந்திரவர்மன்‌ I – 590 லிருந்து 630 CE
  3. நரசிம்மவர்மன்‌ I – 630 லிருந்து 668 CE
  4. ராஜசிம்மா – 695 லிருந்து 728 CE

விடை: A) 1 2 3 4

118. சங்ககால தமிழ்ச்‌ சமூகத்தில்‌ ‘தோன்றுவன்‌ மாதோ போர்க்களத்தானே-. என வீரத்திற்கு முக்கியத்துவம்‌ கொடுத்து பாடிய பெண்பால்‌ புலவர்‌ யார்‌?

விடை: A) ஒக்கூர் மாசாத்தியார்

125. உயிரினங்களில்‌ கார்பன்‌ கீழ்கண்ட எந்த பணி/பணிகளைச்‌ செய்கிறது?

(1) இது கரிம மூலக்கூறுகளின்‌ கட்டமைப்பு கூறாக செயல்படுகிறது.
(2) இது மற்ற அணுக்களுடன்‌ எளிதில்‌ பிணைப்புகளை ஏற்படுத்துகிறது.
(3) இது உயிர்‌ மூலக்கூறுகள்‌ (DNA, RNA) எடுக்கக்கூடிய வடிவம்‌ மற்றும்‌ செயல்பாட்டிற்கு நெகிழ்வு தன்மையை அளிக்கிறது.

விடை: (1), (2), மற்றும் (3)

126. சரியான கூற்றுகளைத்‌ தேர்ந்தெடு :

மின்காந்தங்கள்‌ தயாரிக்கப்‌ பயன்படும்‌ காந்தப்‌ பொருட்கள் பெற்றிருக்க வேண்டிய பண்புகள்:

I. குறுகலான காந்தத்தயக்க கண்ணி
II. மிகு ஊடுருவுதிறன்‌
III. மிகு காந்த நீக்குத்திறன்‌
IV. குறை தக்கவைப்புத்‌ திறன்

விடை: I, II, மற்றும் IV சரி

‌127. மண்‌ பற்றிய கூற்றில்‌ சரியானவற்றை தேர்ந்தெடு :

(1) வட இந்திய சமவெளியின்‌ மண்‌: பெரும்பாலும்‌ இமயமலை ஆறுகளால்‌:
படியவைக்கப்படுகிறது.
(2) கருப்பு மண்‌ என்று பிரபலமாக அறியப்படும்‌ மண்ணில்‌ இரும்பு ஆக்சைடு
அதிகம்‌ உள்ளது.
(3) தக்காணப்‌ பீடபூமியிலிருந்து உருவாகும்‌ மண்‌ வளமான மற்றும்‌ அதிக
ஈரப்பதத்தை தாங்கும்‌ திறனுடையது.

விடை: (1) மற்றும் (3) சரியானது

128. சரியாகப்‌ பொருந்தியுள்ளதைத்‌ தேர்ந்திடுக :

1) நிரந்தர நிலவரித்‌ திட்டம்‌ – கர்சன்‌ பிரபு
2) வங்கப்‌ பிரிவினை – காரன்வாலிஸ்‌
3) இரயத்துவாரி முறை – மன்றோ
4) இருப்புப்பாதை இணைப்பு – டல்ஹெளசி

விடை: (3) மற்றும் (4) சரி

129. சரியான காலவரிசையில்‌ அமைத்திடுக :

1) இந்திய தேசிய இராணுவம்‌ மீதான விசாரணை
2) இந்திய தேசிய இராணுவம்‌ தோற்றுவிக்கப்படுதல்‌
3) இராயல்‌ இந்திய விமானப்படை தோற்றுலிக்கப்படுதல்‌
4)சி. இராஜகோபால ஆச்சாரி திட்டம்‌

விடை: (3), (2), (4), (1)

130. அடிப்படைக்‌ கடமைகள்‌ பற்றிய சரியானக்‌ கூற்றினை/கூற்றுகளைத்‌ தேர்ந்தெடு:

1) இந்தியாவின்‌ இறையாண்மை, ஒற்றுமை மற்றும்‌ ஒருமைப்பாட்டைப்‌ பாதுகாப்பது.
2) இயற்கைச்‌ சூழலை பாதுகாப்பது மற்றும்‌ மேம்படுத்துவது.
3) நம்முடைய பாரம்பரியங்களையும்‌, பன்முகப்‌ பண்பாட்டையும்‌ பாதுகாப்பது.
4) தனியார்‌ உடைமைகளைப்‌ பாதுகாப்பது.

விடை: (1), (2) மற்றும் (3) மட்டும்

131. முன்னுரிமை அட்டவணை வரிசையின்படி சரியான வரிசை ஒழுங்கினைக்‌
கண்டறிக

A) மத்திய அரசாங்கத்தின்‌ இணை அமைச்சர்கள்‌, மாநில முதலமைச்சர்கள்‌,
மக்களவை சபாநாயகர்‌, துணை ஜனாதிபதி
B) துணை ஜனாதிபதி, மக்களவை சபாநாயகர்‌, மாநில முதலமைச்சர்கள்‌, மத்திய அரசாங்கத்தின்‌ இணை அமைச்சர்கள்‌
C) துணை ஜனாதிபதி, மக்களவை சபாநாயகர்‌, மத்திய அரசாங்கத்தின்‌ இணை அமைச்சர்கள்‌, மாநில முதலமைச்சர்கள்‌.

விடை: B) துணை ஜனாதிபதி, மக்களவை சபாநாயகர்‌, மாநில முதலமைச்சர்கள்‌, மத்திய அரசாங்கத்தின்‌ இணை அமைச்சர்கள்‌

132. கீழ்கண்ட பத்தியினை வாசித்து, பின்வருவனவற்றிற்கு விடையளிக்கவும் உங்கள் விடை இப்பகுதியை அடிப்படையாகக் கொண்ட அமைய வேண்டும்.

பெண்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு நாடே அல்லது ஒரு சமூகமோ முன்னேற்றம் அடைய முடியாது. பாலின் வேறுபாட்டினை நாம் களைந்தால் குடும்பம், நாடு மற்றும் இந்த உலகம் வளர்ச்சி அடைவதற்கான திறமை மற்றும் அறிவினை பெண்கள் வெளிப்படுத்துவர், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொது செயலாளர் கோஃபி அன்னான் அவர்கள் பாலின சமத்துவம் என்பது குறிக்கோள் விடவும் மேலானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் வறுமையைக் குறைக்க, நீடித்த சீரான வளர்ச்சி மற்றும் சிறந்த ஆளுமைக் கட்டமைப்பிற்கு இது முன் நிபந்தனை என கூறியுள்ளார்.

A) பெண் கல்வியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
B) பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்
C) பெண்களின் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
D) பெண்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களுக்கான தேவை

விடை: B) பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்

133) தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம்‌ (NCDC) பற்றிய கூற்றுகளில்‌ சரியான விடையைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌

1) இது ஓர்‌ சட்டப்பூர்வ கழகம்‌

2) இது ஓர்‌ தன்னாட்சி நிறுவனமாகும்‌

3) இன்று இதுவோர்‌ பொது. நிதி நிறுவனமாக இருக்கிறது

4) இது வ்ளான்‌ மற்றும்‌ விவசாயிகள்‌ நல  அமைச்சகத்தின்‌ நிர்வாக கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ இயங்குகிறது

A) 2) மற்றும்‌ 3) மட்டும்‌

B) 1) மற்றும்‌ 3) மட்டும்‌

C) 1) மற்றும்‌ 4) மட்டும்‌

D) 2) மற்றும்‌ 4) மட்டும்‌

விடை: B) 1) மற்றும்‌ 3) மட்டும்‌

134)  பின்வரும்‌ திட்டங்கள்‌மற்றும்‌ கருத்துகளை அது தொடர்புடைய பெயர்களுடன்‌ சரியாக பொருத்துக :

a) ரயத்வாரி திட்ட அறிக்கை – 1. தந்தை பெரியார்‌

b) பஞ்சமர்‌ பள்ளிகளை ஆதிதிராவிடர்‌ – 2. தாமஸ்‌ மன்றோ

பள்ளிகள்‌ என அழைப்பது                         மற்றும்‌ ப்ரான்சிஸ்‌

எலிஸ்‌

c) ஆணாதிக்க பேரினவாதத்தை

எதிர்த்த தலைவர்‌                      – 3. ஜான்‌ ரால்ஸ்‌

d) நீதிக்‌ கோட்பாடு                    -4.அயோதிதாசர்‌ மற்றும்‌

சிங்காரவேலர்‌

    a b c d

A) 2 4 3 1

B) 2 3 1 4

C) 2 1 4 3

D) 2 4 1 3

E) விடை தெரியவில்லை

விடை: D) 2 4 1 3

135) இந்தியாவில்‌ திறந்தவெளி மலம்‌ கழிப்பதை ஒழிப்பதற்கும்‌, “ஸ்வச்‌ பாரத்‌ மிஷன்‌” மூலம்‌ திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கும்‌ மேற்கொள்ளப்படும்‌ முயற்சிகள்‌

A) வறுமை விகிதங்களைக்‌ குறைத்தல்

B) வேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல்‌

C) பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல்‌ மற்றும்‌ தூய்மைக்‌ கலாச்சாரத்தை வளர்ப்பது

D) போதுமான உள்கட்டமைப்பு இல்லாமை

E) விடை தெரியவில்லை

விடை: C) பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல்‌ மற்றும்‌ தூய்மைக்‌ கலாச்சாரத்தை வளர்ப்பது

136) பின்வருவனவற்றுள்‌ கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம்‌ பெயர்வு குறித்த தவறான பொருத்தத்தைக்‌ கண்டறிக.

1) கிராமத்திலிருந்து கிராமத்திற்கு

இடம்‌ பெயர்வு                             – தலைகீழ்‌ எதிர்‌ நகர்வு

2) கிராமத்திலிருந்து நகரத்திற்கு – நெருக்குதல்‌

இடம்‌ பெயர்வு                                       வெளியேறுதல்‌ செயல்பாடு

3) நகரத்திலிருந்து நகரத்திற்கு

இடம்‌ பெயர்வு                                       – நகர்புற மறுசுழற்சி

4) நகரத்திலிருந்து கிராமத்திற்கு

இடம்பெயர்வு                                        கிராமப்புற மறுசுழற்சி

A) (1) மற்றும்‌ (4)

B) (2) மற்றும்‌ (2)

C) (2) மற்றும்‌ (3)

D) (3) மற்றும்‌ (4)

E) விடை தெரியவில்லை

விடை: A) (1) மற்றும்‌ (4)

137) கூற்று [A] : இடப்பெயர்வு என்பது பிராந்தியங்கள்‌ மற்றும்‌ பிரதேசங்களுக்கு இடையே மக்கள்‌ இடம்பெயர்தல்‌ ஆகும்‌.

காரணம்‌ [R] : இடப்பெயர்வு வெளிப்புறமாகவோ அல்லது சர்வதேசமாகவோ இருக்கலாம்‌

A)கூற்று [A] சரி ஆனால்‌ காரணம்‌ [R] தவறு

B)கூற்று [A] தவறு ஆனால்‌ காரணம்‌ [R] சரி

C)கூற்று [A] மற்றும்‌ காரணம்‌ [R] சரி

D) கூற்று [A] மற்றும்‌ காரணம்‌ [R] தவறு

E)விடை தெரியவில்லை

விடை: C)கூற்று [A] மற்றும்‌ காரணம்‌ [R] சரி

138) பின்வருவனவற்றுள்‌ எவை சரியாகப்‌ பொருந்தியுள்ளன?

1. குறிஞ்சி – கிளி

2. முல்லை – காட்டுக்‌ கோழி

3. மருதம்‌ – வானம்பாடி

4. நெய்தல்‌ – ஆந்தை

5. பாலை – புறா

A) (1), (2), (3), (4), (5)

B) (2), (3), (4)

C) (3), (4), (5)

D) (1), (2), (5)

E) விடை தெரியவில்லை

விடை: D) (1), (2), (5)

139) பின்வரும்‌ கூற்று மற்றும்‌ காரணத்தைப்‌ படித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌.

கூற்று [A] : 1801ம்‌ ஆண்டில்‌, கீழே ஆங்கிலேயர்கள்‌ ஓர்‌ சக்திவாய்ந்த படையுடன்‌ சிவகங்கையைத்‌ தாக்கினர்‌.

காரணம்‌ [R] : 1801ம்‌ ஆண்டில்‌ மருது சகோதரர்‌ சின்ன மருது ஊமைதுரைக்கு அடைக்கலம்‌ கொடுத்தார்‌.

A)கூற்று [A] சரி ஆனால்‌ காரணம்‌ [R] தவறு

B)கூற்று [A] தவறு ஆனால்‌ காரணம்‌ [R] சரி

C) கூற்று [A] மற்றும்‌ காரணம்‌ [R] இரண்டும்‌ சரி  மற்றும்‌ காரணம்‌ [R] என்பது கூற்று [A] இன்‌ சரியான விளக்கம்‌

D) கூற்று [A] மற்றும்‌ காரணம்‌ [R] இரண்டும்‌ சரி  ஆனால்‌ காரணம்‌ [R] என்பது கூற்று [A] இன்‌ சரியான விளக்கம்‌ அல்ல

E)விடை தெரியவில்லை

விடை: B)கூற்று [A] தவறு ஆனால்‌ காரணம்‌ [R] சரி

140) உன்னதமான, தூய்மையான மனிதச்‌ சிந்தனையின்‌ தொகுதியே திருக்குறள்‌ – என்னும்‌ எம்‌. ஏரியலின்‌ கருத்தை அடியொற்றி திருக்குறளை ‘தமிழர்‌ வேதம்‌’ எனக்‌ குறிப்பிட்டவர்‌

A) மகாத்மா காந்தியடிகள்‌.

B) அறிஞர்‌ அண்ணா

C) மு. வரதராசன்‌

D) ஜி.யு. போப்‌

E) விடை தெரியவில்லை

விடை: D) ஜி.யு. போப்‌

141) சான்றாண்மையின்‌ இலக்கணம்‌ குறித்து வள்ளுவர்‌ கூறுவனவற்றை நிரல்படுத்துக.

1)நாணம்‌

2)வாய்மை

3)அன்பு

4)ஒப்புரவு

5)கண்ணோட்டம்‌

A) (4), (3), (2), (5), (1)

B) (5), (4), (3), (2), (1)

C) (1), (2), (3), (4), (5)

D) (3), (1), (4), (5), (2)

E) விடை தெரியவில்லை

விடை: B) (5), (4), (3), (2), (1)

142) “இருப்பு முகம்‌ செறித்த ஏந்தெழில் ‌மருப்பின்‌” இப்பாடலில்‌ பயின்று வந்துள்ள அணி

A) உவமை அணி

B) உருவக அணி

C) தற்குறிப்பேற்ற அணி

D) வேற்றுமை அணி

E) விடை தெரியவில்லை

விடை: A) உவமை அணி

இதற்கு கீழே உள்ள கேள்விகளுக்கு விடை கமெண்ட் செய்யவும்

150) புவியியல்‌ கால அட்டவணையில்‌ நவீன மனிதன்‌ எந்த பருவம்‌ மற்றும்‌ சிறு காலத்தில்‌ தோன்றினான்‌ :

பருவம்‌                        திறுகாலம்‌

(i) டெர்ஷியரி –         பேலியோசீன்‌

(ii) டெர்ஷியரி –        பிளியோசீன்‌

(iii) டெர்ஷியரி –        ஆலிகோசீன்‌

(iv) டெர்ஷியரி –        மையோசீன்‌

A) (i) சரியானவை

B) (ii) சரியானவை

C) (iii) சரியானவை

D) (iv) சரியானவை

E) விடை தெரியவில்லை

விடை:

151) கார்பன்‌ மோனாக்ஸைடு உமிழ்வுகளைப்‌ பற்றி கீழ்க்காணும்‌ எந்தக்‌ கூற்றுகள்‌ சரி?

1) சரிவர எரிக்காத எரிபொருளால்‌ வரக்கூடியது.

2) பெட்ரோல்‌ எரிபொருள்‌ வாகனங்களால்‌ வருவது.

3) நீண்ட நேர உமிழ்வினால்‌ குமட்டல்‌ ஏற்படுத்தும்‌.

A) (1) மற்றும்‌ (2) மட்டும்‌

B) (2) மற்றும்‌ (3) மட்டும்‌

C) (1), (2) மற்றும்‌ (2) மட்டும்‌

D) (1) மற்றும்‌ (3) மட்டும்‌

E) விடை தெரியவில்லை

152) மால்வா பீடபூமி பற்றிய சரியான கூற்றினை/கூற்றுகளைத்‌ தேர்வு செய்க :

1) சராசரியாக 600 மீட்டர்‌ உயரத்துடன்‌ கிழக்கு நோக்கி சரிந்துள்ளது.

2) பீடபூமியின்‌ பெரும்பாலான பகுதிகளில்‌ சம்பல்‌ மற்றும்‌ அதன்‌ துணை ஆறுகள்‌ பாய்கின்றது.

3) மால்வா பீடபூமி அமைந்துள்ளது.

(A) (1) மட்டும்‌ சரியானது

B) (1) மற்றும்‌ (3) சரியானவை

C) (2) மற்றும்‌ (3) சரியானவை

D) (1) மற்றும்‌ (2) சரியானவை

E) விடை தெரியவில்லை

விடை:

153) காரணம்‌ மற்றும்‌ கூற்று :

கூற்று [A]: அரசியல்‌ தலைவர்‌ என்பதை தவிர, கோபால கிருஷ்ண கோகலே ஒரு சிறந்த சமூகச்‌ சீர்திருத்தவாதி

காரணம்‌ [R]: இவர்‌ ‘இந்திய சமூதாயத்தின்‌ சேவகர்கள்’‌ என்னும் தனித்தன்மை வாய்ந்த அமைப்பை நிறுவியவர்‌.

A)கூற்று [A] சரி ஆனால்‌ காரணம்‌ [R] தவறு

B)கூற்று [A] தவறு ஆனால்‌ காரணம்‌ [R] சரி

C)இரண்டும்‌ கூற்று [A] மற்றும்‌ காரணம்‌ [R] சரி

D)இரண்டும்‌ கூற்று [A] மற்றும்‌ காரணம்‌ [R] தவறு

E)விடை தெரியவில்லை

விடை:

154) பின்வரும்‌ நிகழ்வுகளை காலவரிசைப்படி அடுக்குக :

(1) வகுப்புவாதத்‌ தீர்வு

(2) காந்தி – இர்வின்‌ உடன்படிக்கை

(3) சிட்டகாங்க்‌ வெடிப்பு

(4) பூனா ஒப்பந்தம்‌

A) (1), (2), (3), (4)

B) (2), (3), (4), (1)

C) (3), (2), (1), (4)

D) (4), (3), (2), (1)

E)விடை தெரியவில்லை

விடை:

155) கீழ்க்கண்டவற்றைச்‌ சரியாகப்‌ பொருத்துக :

புகழ்பெற்ற இடம்‌             பகுதி

புத்தகயா         –                  பகல்கண்ட்‌

கஜுராகோ     –                  பண்டல்கண்ட்‌

ஷீர்டி                 –                  விதர்பா

நாசிக்‌                –                  மால்வா

திருப்பதி          –                  இராயலசீமா

A)(1), (2) மற்றும்‌ (4) மட்டும்‌ சரி

B) (2), (3), (4) மற்றும்‌ (5) மட்டும்‌ சரி

C) (2) மற்றும்‌ (5) மட்டும்‌ சரி

D) (1), (3), (4) மற்றும்‌ (5) மட்டும்‌ சரி

E) விடை தெரியவில்லை

விடை:

156) இந்தியக்‌ குடியரசுத்‌ தலைவர்‌ தொடர்பான பின்வரும்‌ கூற்றுகளில்‌ தவறான கூற்றை அடையாளம்‌ காண்க.

A) குடியரசுத்‌ தலைவர்‌ பதவியில்‌ இருக்கும்‌ போது எப்பொழுது வேண்டுமென்றாலும்‌ அவர்‌ பதவி விலகலாம்‌

B) ஐந்தாண்டுகள்‌ கடந்த பிறகும்‌, குடியரசுத்‌ போது தலைவர் பதவியில்‌ நீடிக்க ‌ இயலாது

C) குற்றச்சாட்டு (Impeachment) வாயிலாகக்‌ குடியரசுத்‌ தலைவரைப்‌ பதவி நீக்கம்‌ செய்யலாம்‌

D) இது வரை எந்த ஒரு குடியரசுத்‌ தலைவரும்‌ பதவி நீக்கம்‌ செய்யப்படவில்லை

E) விடை தெரியவில்லை

விடை:

157) கீழேகொடுக்கப்பட்டுள்ள பட்டியல்‌ I மற்றும்‌ II -இல்‌ உள்ளவற்றை சரியாகப்‌ பொருத்துக :

பட்டியல்‌ I                             பட்டியல்‌ II

சரத்துகள்‌                            குழுக்கள்‌

சட்டப்பிரிவு 280       1. மாநிலங்களுக்கிடையிலான குழு

சட்டப்பிரிவு 263       2. மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்‌

தகராறு தீர்ப்பாயம்‌

சட்டப்பிரிவு 262       3. பொருட்கள்‌ மற்றும்‌ சேவை வரிக்‌ குழு

சட்டப்பிரிவு279A      4. நிதிக்குழு

    a b c d

A) 4 3 2 1

B) 4 1 2 3

C) 3 4 1 2

D) 1 4 3 2

E) விடை தெரியவில்லை

விடை:

158) சரியான விடையை பொருத்துக :

சட்டங்கள்‌                                                                 ஆண்டு

1)தமிழ்நாடு நுகர்வோர்‌ பாதுகாப்புச்‌

சட்டம்‌                                                                         1.1969

2)நுகர்வோர்‌ இயக்கம்‌                                          2.1988

3)தமிழ்நாடு நுகர்வோர்‌ பாதுகாப்பு                

விதிகள்‌                                                                      3.1986

4)ஏகபோக மற்றும்‌ கட்டுப்பாட்டு வர்த்தக    

நடைமுறைகள்‌ சட்டம்‌                                          4.1974

    a b c d

A) 3 4 2 1

B) 4 3 1 2

C) 2 1 3 4

D) 3 1 2 4

E) விடை தெரியவில்லை

விடை:

159) நிதி ஆயோக்கின்‌ SDG இந்தியக்‌ குறியீடு 2023-24 தரவரிசைப்படி பின்வரும்‌ மாநிலங்களை வரிசைப்படுத்துக.

A) தமிழ்நாடு

B) உத்திரகண்ட்‌

C) கேரளா

D) கோவா

A) (1), (3), (2), (4)

B) (1), (2), (4), (3)

C) (2), (3), (1), (4)

D) (2), (1), (3), (4)

E)விடை தெரியவில்லை

விடை:

160) பெண்களின்‌ நலனுக்காக தமிழக அரசு கலைஞர்‌ மகளிர் உரிமைத்‌ தொகைத்‌ திட்டத்தை செயல்படுத்தியது. பின்வருவனவற்றில்‌ எந்த காரணம்‌ இந்தத்‌திட்டத்திற்கான நியாயமான விளக்கம்‌.

i) உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2023 இன் படி ஆண்டு வருமானத்தில்‌ பாலின வேறுபாடு

ii) பெண்களின்‌ ஏழ்மையான சமூக நிலையை மாற்ற

iii) கிராமப்புறப்‌ பெண்களின்‌ மேம்பாடு

iv) பெண்களின்‌ எண்ணற்ற மணிநேர அமைதியான உழைப்பை-அங்கீகரித்தல்‌

A) i)  மற்றும்‌ iii) மட்டும்‌

B) ii) மற்றும்‌ (iv) மட்டும்‌

C) i) மற்றும்‌ (ii) மட்டும்‌

D) i) மற்றும்‌ (iv) மட்டும்‌

E) விடை தெரியவில்லை

விடை:

161) தேசிய விவசாயச்‌ சந்தை (e-NAM) இணைய முகப்பின்‌ நோக்கம்‌.

i) விவசாயப்‌ பொருட்களுக்கு, ஒரு ஒருங்கிணைந்த தேசிய மெய்நிகர்‌ சந்தையை உருவாக்குவது

ii) சிறந்த விலையைப்‌ பெறுவதற்கு விவசாயிகளுக்கு உதவுதல்‌

iii) விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல்‌ வழிகளை வழங்குதல்‌

A) i)  மற்றும்‌ ii) மட்டும்‌

B) ii) மற்றும்‌ (iii) மட்டும்‌

C) i) மற்றும்‌ (iii) மட்டும்‌

D) i), ii) மற்றும்‌ (iii) மட்டும்‌

E) விடை தெரியவில்லை

விடை:

162) தேசிய திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகத்தின்‌ குறிக்கோள்‌ அல்லது குறிக்கோள்கள்‌

i) பொருளாதாரச்‌ சுதந்திரம்‌ மூலமாக மகளிர்‌ மேம்பாடு அடையச்‌ செய்வது

ii) நாடு முழுவதும்‌ உள்ள இளைஞர்களைத்‌ திறன்‌ மேம்பாடு அடையப்‌பயிற்சித்‌ திட்டங்களை அளிப்பது

iii) திறன்‌ மேம்பாட்டுச்‌ சான்றிதழ்‌ பெற்றவர்களுக்கு பண விருதுகள்‌ வழங்கி வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல்‌

iv) நாட்டின்‌ உழைப்பாளர்களின்‌ உற்பத்தித்‌ திறனை அதிகப்படுத்துதல்‌

A) i), ii)  மற்றும்‌ iii)

B) ii), (iii) மற்றும்‌ (iv)

C) i) மற்றும்‌ (ii) மட்டும்‌

D) i) மட்டும்‌

E) விடை தெரியவில்லை

விடை:

163) நம்மைக்‌ காக்கும்‌-48 (திட்டத்தின்‌ கீழ்‌, விபத்து நடைபெற்ற முதல்‌ 48 மணி நேரத்திற்குள்‌ பணமில்லா சிகிச்சைக்கான உச்சவரம்பு ஒரு நபருக்கு ரூ.______

A) 1.00 லட்சம்‌

B) 2.00 லட்சம்‌

C) 2.50 லட்சம்‌

D) 2.00 லட்சம்‌

E) விடை தெரியவில்லை

விடை:

164)  செம்மொழித் ‌தமிழாய்வு மத்திய நிறுவனம்‌ 2099ஆம்‌ வருடம்‌ முதல்‌ அதன்‌ சொந்த புதிய பிரத்யேக வளாகத்‌தில் செயல்பட்டு வரும்‌ இடம்‌

A) சேப்பாக்கம்‌

B) மைசூர்‌

C) கிளாம்பாக்கம்‌

D) பெரும்பாக்கம்‌

E) விடை தெரியவில்லை

விடை:

165) பொருத்துக

a) ஆதரவு தேடுதலின்‌ சின்னம்‌                – 1. குறுந்தொகை

b) அன்பின்‌ சின்னம்‌                                     – 2. அசோக மரத்தின்‌

இலை

c) காகம்‌ ஒரு நல்ல முன்னறிவிப்பான்‌   – 3. நற்றிணை

d) பண்டில்‌ விளையாட்டு       

   குறிப்பிடப்பட்டுள்ளது                              – 4. வெள்ளை அல்லி

மலர்‌

    a b c d

A) 3 4 1 2

B) 2 4 1 3

C) 4 2 1 3

D) 1 4 3 2

E) விடை தெரியவில்லை

விடை:

166) பின்வருவனவற்றுள்‌ எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?

i) கோபால நாயக்‌             – திண்டுக்கல்‌

ii) தூண்டாஜி வாக்‌            – மதுரை

iii) மருதுபாண்டியர்கள்‌  – எட்டயபுரம்‌

iv) புலித்தேவன்‌                 – நெற்கட்டாஞ்செவல்‌

A) i)  மற்றும்‌ ii) மட்டும்‌

B) ii) மற்றும்‌ (iii) மட்டும்‌

C) iii) மற்றும்‌ (iv) மட்டும்‌

D) (iv) மட்டும்‌

E) விடை தெரியவில்லை

விடை:

167) திருக்குறளில்‌ யாருடைய கடளம்கள்‌ மறைமுகமாகக்‌ கற்பிக்கப்படுகின்றன?

A) ஆடவர்‌

B) மகளிர்‌

C) குடிமக்கள்‌

D) அரசன்‌

E) விடை தெரியவில்லை

விடை:

168) உடையவர்கள்‌ என்போர்‌ எதை யவர்‌ என்று வள்ளுவர்‌ கூறுகிறார்‌?

A) ஊக்கம்‌ உடையோர்‌

B) வீரம்‌ உடையோர்‌

C) செல்வம்‌ உடையோர்

D) கல்வி உடையோர்‌

E) விடை தெரியவில்லை

விடை:

169) பொருத்துக

a) தலைச்‌ சங்கப்‌ புலவனார்‌ தம்முள்‌     – 1. கம்பர்‌

b) அகன்‌ பொதியில்‌ திருமுனிவன்‌

தமிழ்ச்‌ சங்கம்‌                                                – 2. சேக்கிழார்‌

c) கூடலினாய்ந்த ஒண்டீந்‌ தமிழ்‌              – 3. திருஞானசம்பந்தர்‌

d) மதுரைத்‌ தொகையாக்கினான்           – 4. மாணிக்கவாசகர்‌

    a b c d

A) 3 4 1 2

B) 2 4 1 3

C) 4 2 1 3

D) 1 4 3 2

E) விடை தெரியவில்லை

விடை:

170) 8 செ.மீ விட்டமுள்ள கோளமானது உருக்கப்பட்டு 3 மி.மீ விட்டமுள்ள கம்பியாக உருவாக்கப்பட்டால்‌, அக்கம்பியின்‌ நீளம்‌ _______

A) 36.9 மீ

(B) 37.9 மீ

C) 38.9 மீ

(D) 39.9 மீ

E) விடை தெரியவில்லை

விடை:

177) இவற்றில்‌ ஒன்று தவறாக பொருத்தப்பட்டுள்ளது :

1) டவுனின்‌ குறைபாட்டு நோய்‌       – 21 வது. குரோமோசோமில்‌

ஏற்படும்‌ ஆட்டோசோமல்‌

டிரைசோமி

2) ஹீமோபிலியா    – பால்‌ இணைந்த தலைமுறை

3) கிளின்‌ஃபெல்டர்‌ குறைபாட்டு நோய்‌ – XO நிலை

4) டர்னரின்‌ குறைபாட்டு நோய்‌ – வளர்ச்சி பின்னடைந்த

மகளிர்‌

A) 3) மட்டும்‌

B) 1) மற்றும் ‌3) மட்டும்‌

C) 2) மட்டும்‌

D) 1) மற்றும் ‌2) மட்டும்‌

E) விடை தெரியவில்லை

விடை:

178) கீழ்க்காணும்‌ நிலையான வளர்ச்சி இலக்குகளைப்‌ பட்டியல்‌ I யை பட்டியல்‌ II உடன்‌ பொருத்துக :

பட்டியல்‌ I                                      பட்டியல்‌ II

a) நிலையான வளர்ச்சி

இலக்கு – 6                                              1.நிலத்தில்‌ வாழும்‌ உயிரிகள்‌

b) நிலையான வளர்ச்சி                     2. தண்ணீருக்கு உள்ளே

இலக்கு – 11                                             வாழும்‌ உயிரிகள்‌                     

c) நிலையான வளர்ச்சி                      3. சுத்தமான நீர்‌ மற்றும்‌

இலக்கு – 14                                            சுகாதாரம்‌                                   

d) நிலையான வளர்ச்சி                     4. நிலையான நகர்புறங்கள்‌

இலக்கு – 15                                             மற்றும்‌ சமூகங்கள்‌ ‌                 

    a b c d

A) 3 4 1 2

B) 4 3 2 1

C) 1 3 4 2

D) 3 4 2 1

E) விடை தெரியவில்லை

விடை:

179) கீழ்காண்பனவற்றுள்‌ தீன்‌-இலாஹி பற்றிய உண்மையான கூற்று/கூற்றுகள்‌ எவை?

A) தீன்‌இலாஹியை பின்பற்றியவர்கள்‌ அதிகம்‌

B) இது ஒரு அரசு மதம்‌

C) முஸ்லீம்கள்‌ மற்றும்‌ இந்துக்கள்‌ ஏற்றுக்கொள்ள கூடிய தேசிய மதமாக நிறுவ வேண்டும்‌

D) பிரதேசங்களை விரிவுபடுத்துவதற்கும்‌ சுதந்திர  மீத கட்டுப்பாட்டைப்‌ பெறுவதற்கும்‌

E) விடை தெரியவில்லை

விடை:

180) சோழ அரசி வாணமாதேவி சதி மேற்கொண்டார்‌ என்பதை வெளிப்படுத்தும்‌ பட்டயம்‌________

A) அன்பில்‌ பட்டயம்‌

B) திருவாலங்காடு பட்டயம்‌

C) பாகூர்‌ பட்டயம்‌

D) வேள்விக்குடி பட்டயம்‌

E) விடை தெரியவில்லை

விடை:

181) பொருத்துக :

a) பாரதியார்‌                                          1. பாண்டியன்‌ பரிசு

b) கவிமணி தேசிக விநாயகம்‌        2. தமிழன்‌ இதயம்‌

பிள்ளை                                                                     

c) பாரதிதாசன்‌                                      3. கண்ணன்‌ பாட்டு

d) இராமலிங்கம்‌ பிள்ளை                 4. ஆசிய ஜோதி

              a b c d

A) 3 2 1 4

B) 4 3 1 2

C) 3 4 1 2

D) 2 3 4 1

E) விடை தெரியவில்லை

விடை:

182) பொருத்துக :

வரிசை (A)                                              வரிசை (B)

கருப்பொருள்‌                                       ஆண்டு

a) நீதித்துறை செயற்பாடு                1. 1976

b) ஆளுமையில்‌ அறநெறி (SARC)     2. 1977                                             

c) நீதித்துறை வாழ்வின்‌

மாண்புகளின்‌ மறு அறிக்கை         3. 1947      

d) நிர்வாகத்‌ தீர்ப்பாயம்‌                    4. 2007

              a b c d

A) 2 1 4 3

B) 3 4 2 1

C) 1 2 3 4

D) 4 3 1 2

E) விடை தெரியவில்லை

விடை:

183) பின்வரும்‌ கூற்று மற்றும்‌ காரணத்தைப்‌ படித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌.

கூற்று [A] : இந்திய அரசமைப்புச்‌ சட்டம்‌ மிகவும்‌ குறிப்பாக நீதிப்புனராய்வு அதிகாரத்தைக்‌ குறிப்பிடுகிறது.

காரணம்‌ [R] : நீதித்துறையானது. தனது நீதிப்புனராய்வு அதிகாரத்தை அடுத்தடுத்தாண்டுகளில்‌ விரிவாக்கிக்‌ கொண்டது.

A)கூற்று [A] சரி ஆனால்‌ காரணம்‌ [R] தவறு

B) கூற்று [A] மற்றும்‌ காரணம்‌ [R] இரண்டும்‌ சரி  மற்றும்‌ காரணம்‌ [R] என்பது கூற்று [A] இன்‌ சரியான விளக்கம்‌

C) கூற்று [A] தவறு ஆனால்‌ காரணம்‌ [R] சரி

D) கூற்று [A] மற்றும்‌ காரணம்‌ [R] இரண்டும்‌ சரி  ஆனால்‌ காரணம்‌ [R] என்பது கூற்று [A] இன்‌ சரியான விளக்கம்‌ அல்ல

E)விடை தெரியவில்லை

விடை:

184) கீழ்க்காண்பவற்றுள்‌ பொருத்தமற்றது எது ?

(A) பொம்மை வழக்கு (1994) – குடியரசுத்‌ தலைவர்‌ ஆட்சி

(B) உன்னிகிருஷ்ணன்‌ வழக்கு (1993) –  கல்வியுரிமை

C) பிரகாஷ்சிங்‌ வழக்கு (2006) – நீதித்துறைச்‌ சீர்திருத்தம்‌

D) M. நாகராஜ்‌ வழக்கு (2006) – இட ஒதுக்கீடு

E)விடை தெரியவில்லை

விடை:

185) “நாட்டின்‌ அடிப்படைச்‌ சட்டத்தின்படியே ன்றி எந்த ஒரு மனிதனும்‌ கைது செய்யப்படவோ, சிறைப்படுத்தப்படவோ, நாடுகடத்தப்படுவதோ, வரின்‌ சொத்துக்களைக்‌ கைப்பற்றவோ” வேறு எந்த வகையிலோ அழிக்கப்பட முடியாது.

A) இந்த புகழ்பெற்ற வாசகம்‌ அமைந்துள்ள ஆவணம்‌…

B) உரிமைகள்‌ சட்டம்‌

C) உலகளாவிய மனித உரிமைப்‌ பிரகடனம்‌

D) மகாசாசனம்‌ மனித உரிமைகள்‌ பாதுகாப்புச்‌ சட்டம்‌ 1993

E) விடை தெரியவில்லை

விடை:

186) கூற்று [A] : எச்‌.ஐ.வி தொற்று பெரும்பாலும்‌ உணர்வுள்ள நடத்தை முறை காரணமாக பரவுகிறது.

காரணம்‌ [R] :  இரத்தமாற்ற நோயாளிகளுக்கு எய்ட்ஸ்‌ தொற்று மோசமான கண்காணிப்பு காரணமாக ஏற்படலாம்‌.

A)கூற்று [A] மற்றும்‌ காரணம்‌ [R] இரண்டும்‌ சரியானதல்ல

B) கூற்று [A] மற்றும்‌ காரணம்‌ [R] இரண்டும்‌ சரி  மற்றும்‌ காரணம்‌ [R] என்பது கூற்று [A] இன்‌ சரியான விளக்கம்‌

C) கூற்று [A] மற்றும்‌ காரணம்‌ [R] இரண்டும்‌ சரி  ஆனால்‌ காரணம்‌ [R] என்பது கூற்று [A] இன்‌ சரியான விளக்கம்‌ அல்ல

D) கூற்று [A] சரி ஆனால்‌ காரணம்‌ [R] தவறு

E)விடை தெரியவில்லை

விடை:

187) கூற்று [A] : பெண்களுக்கு திகாரமளித்தல்‌ என்பது சமூக நீதியின்‌ ஒரு மூலக்கல்லாகும்‌ பணிபுரியும்‌ பெண்கள்‌ விடுதிகள்‌, குழந்தைப்‌ பராமரிப்பு மையங்கள்‌ மற்றும்‌ பெண்கள்‌ முயற்சிகள்‌ பணித்‌ தொகுதியில்‌ பெண்களின்‌ பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக்‌ கொண்டுள்ளன.

காரணம்‌ [R] :  பொருளாதாரத்தில்‌ பெண்கள்‌ பங்கேற்பதற்கான தடைகளை நீக்கி, அரசாங்கம்‌ மிகவும்‌ உள்ளடக்கிய மற்றும்‌ துடிப்பான தொழிலாளர்களை வளர்த்து வருகிறது.

A) கூற்று [A] சரி ஆனால்‌ காரணம்‌ [R] தவறு

B) கூற்று [A] தவறு ஆனால்‌ காரணம்‌ [R] சரி

C) கூற்று [A] மற்றும்‌ காரணம்‌ [R] இரண்டும்‌ சரி  மற்றும்‌ காரணம்‌ [R] என்பது கூற்று [A] இன்‌ சரியான விளக்கம்‌

D) கூற்று [A] மற்றும்‌ காரணம்‌ [R] இரண்டும்‌ சரி  ஆனால்‌ காரணம்‌ [R] என்பது கூற்று [A] இன்‌ சரியான விளக்கம்‌ அல்ல

E)விடை தெரியவில்லை

விடை:

188) புதிதாகத்‌ தொடங்கப்படும்‌ நிறுவனங்களுக்கு வரிச்சலுகை மூன்று வருடங்களுக்கு வழங்குவது என்று தொடங்கப்பட்டது நிதி சட்டம்‌?

A) நிதிச்‌ சட்டம்‌, 2016

B) செப்டம்பர்‌ 25, 2014

C) நவம்பர்‌ 4, 2011

D) நிதிச்‌ சட்டம்‌, 2014

E)விடை தெரியவில்லை

விடை:

189) தமிழ்நாட்டில்‌ உள்ள முக்கிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரம்‌

A) காற்றாலை

B) நிலக்கரி

B) எண்ணெய்‌ மற்றும்‌ எரிவாயு

D) அணுசக்தி

E) விடை தெரியவில்லை

விடை:

190) பின்வருவனவற்றில்‌ எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?

1. கோயம்புத்தூர்‌ – தென்னிந்தியாவின்’ மான்செஸ்டர்‌

2. மதுரை – தமிழ்நாட்டின்‌ பண்பாட்டுத்‌ தலைநகரம்‌

3. நாமக்கல்‌- தமிழகத்தின்‌ நெற்களஞ்சியம்‌

4. தஞ்சாவூர்‌ – முட்டை நகரம்‌

A) (1), மற்றும்‌ (4)

B) (1) மற்றும்‌ (2)

C) (2) மற்றும்‌ (3)

D) (3) மற்றும்‌ (4)

E)விடை தெரியவில்லை

விடை:

191) சரியான பொருத்தங்களை தேர்ந்தெடுக்கவும்‌.

1. காவேரிப்பாக்கம்‌ கல்வெட்டு- வரகுணா

2. திருமுக்கூடல்‌ கல்வெட்டு – வீரராஜேந்திரா

3. திருவாலங்காடு செப்பேடு – முதலாம்‌ ராஜேந்திரா

4. உத்திரமேரூர்‌ கல்வெட்டு – முதலாம்‌ பராந்தகா

A) (1) மற்றும்‌ (2) சரி

B) (3) மற்றும்‌ (4) சரி

C) (2), (3) மற்றும்‌ (4) சரி

D) (1), (2) மற்றும்‌ (3) சரி

E)விடை தெரியவில்லை

விடை:

192) மதராஸ்‌ மாகாணத்தில்‌ ஒத்துழையாமை இயக்க எதிர்ப்பு சங்கத்தை தொடங்கிய கட்சியை அடையாளம்‌ காண்க.

A) சுதந்திரா கட்சி

B) நீதிக்கட்சி

B) கம்யூனிஸ்ட்‌ கட்சி

D) இந்திய தேசிய காங்கிரஸ்‌

E) விடை தெரியவில்லை

விடை:

193) சரியான கூற்றினைக்‌ கண்டறிக.

1. திருக்குறளை இந்தியில்‌ மொழிபெயர்த்தவர்‌ – அப்பாதீட்சிதர்‌

2. திருக்குறளை ஜெர்மனில்‌ மொழிபெயர்த்தவர்‌ – ஏரியல்‌

3. திருக்குறள்‌ “அகரத்தில்‌ தொடங்கி ‘ன’கரத்தில்‌ முடிகிறது

4. நட்பியல்‌ 13 அதிகாரங்களைக்‌ கொண்டுள்ளது

A) (1) மட்டும்‌

B) (1),(3) மட்டும்‌

B) (1),(4) மட்டும்‌

D) (2),(4) மட்டும்‌

E) விடை தெரியவில்லை

விடை:

194) கூற்று [A] : “எல்லாப்‌ பொருளும்‌ இதன்பா லுள,

இதன்பால்‌ இல்லாத எப்பொருளு மில்லை”

காரணம்‌ [R] : திருவள்ளுவரின்‌ கருத்துகளில்‌ பல அவர் காலத்தில்‌ நிலவிய கொள்கைகளோடு ஒப்பிடும்‌ போது புதுமையானவை, புரட்சிகரமானவை. ‌

A)கூற்று [A] சரி ஆனால்‌ காரணம்‌ [R] தவறு

B)கூற்று [A] தவறு ஆனால்‌ காரணம்‌ [R] சரி

C)இரண்டும்‌ கூற்று [A] மற்றும்‌ காரணம்‌ [R] சரி மற்றும்‌ காரணம்‌ [R] என்பது கூற்று [A] இன்‌ சரியான விளக்கம்‌

D) இரண்டும்‌ கூற்று [A] மற்றும்‌ காரணம்‌ [R] சரி மற்றும்‌ காரணம்‌ [R] என்பது கூற்று [A] இன்‌ சரியான விளக்கமல்ல

E)விடை தெரியவில்லை

விடை:

195) சரியான இணையைத்‌ தேர்ந்தெடுக்க.

தமிழகத்தில்‌ சங்ககால காசுகள்‌ கிடைத்த இடங்கள்‌.

1. தர்மபுரி – தொப்பூர்‌

2. சேலம்‌- கன்னியன்‌ குட்டை

3. ஈரோடு- முக்கொம்பு

4. திருச்சி- வெம்பாவூர்‌

A) (1) மற்றும்‌ (2) சரி

B) (2) மற்றும்‌ (3) சரி

C) (3) மற்றும்‌ (4) சரி

D) (2) மற்றும்‌ (4) சரி

E) விடை தெரியவில்லை

🔔 மேலும் வேலைவாய்ப்பு & குறிப்புகள் அப்டேட்களுக்கு:

👉 Join WhatsApp Group: https://www.tamilmixereducation.com/tamil-mixer-education-whats-app-group/
👉 Join Telegram: https://t.me/jobs_and_notes
👉 Follow on Instagram: https://www.instagram.com/tamil_mixer_education/

❤️ நன்கொடை வழங்க விரும்பினால்:
👉 https://superprofile.bio/vp/donate-us-395

Online Printout
Online Printout

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!