🥛 8, 10, 12 தகுதி போதும்! ஆவின் வழங்கும் 3 இலவச பால் தொழில் பயிற்சிகள் + வேலைவாய்ப்பு!
📰 ஆவின் இலவச பயிற்சிகள் & வேலைவாய்ப்பு வாய்ப்பு
தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், ஆவின் மூலம் பால் தொழில் சார்ந்த 3 இலவச சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சிகள், 8, 10, 12ஆம் வகுப்பு தகுதியுடன் அனைவரும் சேர்ந்து பயனடையக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பயிற்சிகளை முடித்தவர்களுக்கு தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் நேரடி வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். மேலும், பயிற்சி பெறும் காலத்தில் ₹12,000 வரை உதவித்தொகை கிடைக்கும்.
📌 வழங்கப்படும் 3 இலவச சான்றிதழ் படிப்புகள்
1️⃣ பால் சேகரிப்பு மற்றும் கணக்கியல் கூட்டாளர் (Milk Collection and Accounting Associate)
- காலம்: 20 நாட்கள் (162 மணி நேரம்)
- தகுதி: 12ஆம் வகுப்பு
- உள்ளடக்கம்: பால் சேகரிப்பு, அளவு பதிவு, கணக்கியல், உறுப்பினர் விவரங்கள், கிராம நிர்வாகம் போன்றவை.
- பயிற்சி மாவட்டங்கள்: கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் உள்ளிட்ட 29 மாவட்டங்கள்.
👉 விண்ணப்பிக்க: https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4400
2️⃣ செயற்கை கருவூட்டல் மற்றும் முதலுதவி (Artificial Insemination and First Aid)
- காலம்: 56 நாட்கள்
- தகுதி: 10ஆம் வகுப்பு
- உள்ளடக்கம்: மாடுகளுக்கான செயற்கை கருவூட்டல், முதலுதவி, தொழில்நுட்ப முறைகள்.
- பயிற்சி மாவட்டங்கள்: சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம்.
👉 விண்ணப்பிக்க: https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4399
3️⃣ பால் தொழில்முனைவோர் பயிற்சி (Dairy Entrepreneur)
- காலம்: 30 நாட்கள்
- தகுதி: 8ஆம் வகுப்பு / அதற்க்கு மேல்
- உள்ளடக்கம்: கால்நடை பராமரிப்பு, மருத்துவம், பால் உற்பத்தி, தர பாதுகாப்பு, பால் சார்ந்த பொருட்கள் உற்பத்தி.
- பயிற்சி மாவட்டங்கள்: பால் சேகரிப்பு பயிற்சி வழங்கப்படும் அதே 29 மாவட்டங்கள்.
👉 விண்ணப்பிக்க: https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4401
💼 வேலைவாய்ப்பு வாய்ப்பு
இந்த பயிற்சிகள் அனைத்தும் நேரடி (Offline) முறையில் வழங்கப்படும். பயிற்சியை முழுமையாக முடித்தவர்களுக்கு தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
📢 எனவே, கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பால் தொழில் ஆர்வமுள்ளவர்கள் இந்த இலவச வாய்ப்பை தவறவிடாமல் விண்ணப்பிக்கலாம்!
🔔 தினசரி வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group Join: https://www.tamilmixereducation.com/tamil-mixer-education-whats-app-group/
👉 Telegram Follow: https://t.me/jobs_and_notes
👉 Instagram Updates: https://www.instagram.com/tamil_mixer_education/
❤️ நன்கொடை வழங்கி ஆதரிக்க:
👉 https://superprofile.bio/vp/donate-us-395
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

