HomeNotesAll Exam Notesதிருக்குறள் (6th to 12th தமிழ் புதிய சமச்சீர்) Important PDF

திருக்குறள் (6th to 12th தமிழ் புதிய சமச்சீர்) Important PDF

📘 திருக்குறள் (6th to 12th புதிய சமச்சீர்) – முக்கிய PDF

புதிய சமச்சீர் பாடத்திட்டத்தில் (6th–12th) இடம்பெற்றுள்ள திருக்குறள் செய்யுட்கள், அவற்றின் பொருள், கேள்விகள், விடைகள் அனைத்தும் ஒரே இடத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த PDF தொகுப்பு மாணவர்களுக்கான பரீட்சை தயாரிப்புக்கும், போட்டித் தேர்வுகளுக்கும் (TNPSC, TRB, TET) மிகவும் உதவியாக இருக்கும்.


📌 இந்த PDF-ல் உள்ளவை

  • Class-wise திருக்குறள் தொகுப்பு (6th to 12th)
  • ஒவ்வொரு செய்யுளுக்கும் விளக்கம் + பொருள்
  • Book Back Questions & Answers
  • 2 Marks & 5 Marks expected questions
  • TNPSC/TRB-ல் repeated ஆன கேள்விகள்

பகுதி – ஆ இலக்கியம்‌

1.திருக்குறள்‌ தொடர்பான செய்திகள்‌, மேற்கோள்கள்‌, தொடரை நிரப்புதல்‌ (இருபத்தைந்து அதிகாரம்‌

மட்டும்‌) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம்‌, ஒழுக்கம்‌, பொறை, நட்பு, வாய்மை, காலம்‌, வலி, ஒப்புரவறிதல்‌, செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்‌ துணைக்‌ கோடல்‌, பொருள்செயல்வகை, வினைத்திட்பம்‌, இனியவை கூறல்‌, ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.

பகுதி – ஆ இலக்கியம்‌ (திருக்குறள்‌)
2013 G22015 G22016 622017 G22018 G2
42526
பகுதி – ஆ இலக்கியம்‌ (திருக்குறள்‌) 
09-01-201930-01-20192019 EO32019 EO42019 6426-12-2019
444433

12th Tamil Book

பாடம்‌ 3.6 திருக்குறள்‌

நூல்‌ வெளி

  • திரு * குறள்‌ = திருக்குறள்‌. சிறந்த குறள்‌ வெண்பாக்களால்‌ ஆகிய நூல்‌ ஆதலால்‌ இப்பெயர்‌ பெற்றது.
  • இது பதினெண்கீழ்க்‌ கணக்கு நூல்களில்‌ ஒன்று.
  • குறள்‌ – இரண்டடி வெண்பா, திரு – சிறப்பு அடைமொழி.
  • திருக்குறள்‌ என்பது அடையடுத்த கருவி ஆகுபெயர்‌ ஆகும்‌.
  • குறள்‌, உலகப்பொது மறை; அறவிலக்கியம்‌; தமிழர்‌ திருமறை;
  • மனித நாகரிகம்‌ பிற நாடுகளில்‌ தோன்றும்‌ முன்னரே மனித வாழ்வின்‌ மேன்மைகளையும்‌ வாழ்வியல்‌ நெறிகளையும்‌ வகுத்துக்‌ காட்டிய நூல்‌.
  • ஆங்கிலம்‌, இலத்தீன்‌, கிரேக்கம்‌ முதலிய உலக மொழிகள்‌ பலவற்றிலும்‌ இந்நூல்‌ மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
  • ஆலும்‌ வேலும்‌ பல்லுக்குறுதி, நாலும்‌ இரண்டும்‌ சொல்லுக்குறுதி, பழகுதமிழ்ச்‌ சொல்லருமை நாலிரண்டில்‌ என்னும்‌ பழமொழிகள்‌ இந்நூலின்‌ பெருமையை விளக்குகின்றன.
  • இவற்றுள்‌ ‘நால்‌’ என்பது நாலடியாரையும்‌ ‘இரண்டு’ என்பது திருக்குறளையும்‌ குறிக்கும்‌.
தருமர்‌ மணக்குடவர்‌ தாமத்தர்‌ நச்சர்‌ பரிதி பரிமேலழகர்‌ திருமலையார்‌ மல்லர்‌ பரிப்பெருமாள்‌ காளிங்கர்‌ வள்ளுவர்‌ நூற்கு எல்லையுரை செய்தார்‌ இவர்‌.என்று ஒரு பழம்பாடல்‌ திருக்குறளுக்கு உரை எழுதியவர்களின்‌ பட்டியலொன்றைத்‌ தருகிறது. ஏட்டுச்‌ சுவடியிலிருந்து திருக்குறள்‌ முதன்முதலில்‌ அச்சிடப்பட்ட ஆண்டு 1812.
“வள்ளுவன்‌ தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்‌ கொண்ட தமிழ்நாடு” எனப்‌ பாரதியாரும்‌, “வள்ளுவனைப்‌ பெற்றதால்‌ பெற்றதே புகழ்‌ வையகமே”எனப்‌ பாரதிதாசனும்‌ புகழ்ந்து பாடியுள்ளனர்‌. தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர்‌ சிலையினை, கன்னியாகுமரியில்‌ நிறுவியுள்ளது. திருவள்ளுவரின்‌ நினைவைப்‌ போற்றும்‌ வகையில்‌ வேலூரில்‌ திருவள்ளுவர்‌ பல்கலைக்கழகம்‌ அமைக்கப்பட்டுள்ளது.
பால்‌அதிகாரங்கள்‌இயல்கள்‌இயல்களின்‌ பெயர்கள்‌
அறம்‌384பாயிரவியல்‌ (04) இல்லறவியல்‌ (20) துறவறவியல்‌ (13) ஊழியல்‌ (01)
பொருள்‌703அரசியல்‌ (25) அமைச்சியல்‌ (32) ஒழிபியல்‌ (13)
இன்பம்‌252களவியல்‌ (07) கற்பியல்‌ (18)

9th Tamil Book

பாடம்‌ 3.5 திருக்குறள்‌.

நூல்‌ வெளி

  • உலகப்‌ பண்பாட்டிற்குத்‌ தமிழினத்தின்‌ பங்ளிப்பாக அமைந்த நூல்‌ திருக்குறள்‌.
  • இனம்‌, சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும்‌ முன்னிலைப்படுத்தாத உலகப்பொதுமறை நூல்‌ இந்நூல்‌.
  • முப்பால்‌, பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தெய்வநூல்‌, தமிழ்மறை, முதுமொழி, பொருளுறை போன்ற பல பெயர்களால்‌ அழைக்கப்படுகிறது.
  • தருமர்‌, மணக்குடவர்‌, தாமத்தர்‌, நச்சர்‌, பரிதி, பரிமேலழகர்‌, திருமலையர்‌, மல்லர்‌, பரிப்பெருமாள்‌, காளிங்கள்‌ ஆகிய பதின்மரால்‌ முற்காலத்தில்‌ உரை எழுதப்பட்டுள்ளது.
  • இவ்வுரைகளுள்‌ பரிமேலழகர்‌ உரையே சிறந்தது எனபர்‌.
  • இந்நூல்‌ பதினெண்கீழ்கணக்கு நூல்களுள்‌ ஒன்று.
  • இந்நூலை போற்றும்‌ பாடல்களின்‌ தொகுப்பே திருவள்ளுவ மாலை.
  • உலகின்‌ பல மொழிகளிலும்‌ பன்முறை மொழிபெயர்க்கப்பட்டதுடன்‌, இந்திய மொழிகளிலும்‌ தன்‌ ஆற்றல்‌ மிக்க அறக்‌ கருத்துகளால்‌ இடம்‌ பெற்றது திருக்குறள்‌
  • தமிழில்‌ எழுதப்பட்ட உலகப்‌ பனுவல்‌ இந்நூல்‌
  • பிற அறநூல்களைப்‌ போல்‌ அல்லாமல்‌ பொது அறம்‌ பேணும்‌ திருக்குறளை இயற்றிவர்‌ திருவள்ளூவர்‌
  • இவருக்கு நாயனார்‌, தேவர்‌, முதற்பாவலர்‌, தெய்வப்புலவர்‌, நான்முகனார்‌, மாதானுபங்கி, செந்நாப்பேதார்‌, பெருநாவலர்‌ போன்ற சிறப்பு பெயர்களும்‌ உண்டு.

8th Tamil Book

பாடம்‌ 2.6 திருக்குறள்‌

நூல்‌ வெளி

  • பெருநாவலர்‌, முதற்பாவலர்‌, நாயனார்‌ முதலிய சிறப்பு பெயர்களால்‌ குறிக்கப்படும்‌ திருவள்ளுவர்‌ இரண்டாயிரம்‌ ஆண்டுகளுக்கு முற்பட்டவர்‌.
  • திருக்குறள்‌ உலகில்‌ பல்வேறு மொழிகளில்‌ மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல்‌
  • அறம்‌, பொருள்‌, இன்பம்‌ என முப்பால்‌ பகுப்பகள்‌ கொண்டது
  • அறத்துபால்‌ பாயிரவியல்‌, இல்லறவியல்‌ துறவறவியல்‌, ஊழியல்‌ என நான்கு இயல்களை கொண்டது.
  • பொருட்பால்‌ அரசியல்‌, அமைச்சியல்‌ ஒழிபியல்‌ என மூன்று இயல்களை கொண்டது.
  • இன்பத்துப்பால்‌ களவியல்‌, கற்பியல்‌ என இரு இயல்களை கொண்டது.

7th Tamil Book

பாடம்‌ 2.6 திருக்குறள்‌

நூல்‌ வெளி

  • தமிழ்நூல்களில்‌ ‘திரு’ என்னும்‌ அடைமொழியோடு வருகின்ற முதல்‌ நூல்‌ திருக்குறள்‌ ஆகும்‌.
  • திருக்குறள்‌ அறத்துப்பால்‌, பொருட்பால்‌, இன்பத்துப்பால்‌ என்ற மூன்று பகுப்புகளைக்‌ கொண்டது.
  • இதில்‌ அறம்‌- 38, பொருள்‌-70, இன்பம்‌-25 என மொத்தம்‌ 133 அதிகாரங்கள்‌ உள்ளன. அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள்‌ வீதம்‌ 1330 குறட்பாக்கள்‌ உள்ளன.
  • இதற்கு முப்பால்‌, தெய்வநூல்‌, பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும்‌ உள்ளன.

பாடம்‌ 5.3 வாழ்விக்கும்‌ கல்வி

நூல்‌ வெளி

  • திருக்குறள்‌ வகுப்புகள்‌ நடத்தியும்‌ தொடர்‌ சொற்பொழிவுகள்‌ நிகழ்த்தியும்‌ திருக்குறளைப்‌ பரப்பும்‌ பணி செய்தவர்‌ திருக்குறளார்‌ வீ. முனிசாமி.
  • நகைச்சுவை ததும்பும்‌ தமது பேச்சால்‌ மக்களைக்‌ கவர்ந்தவர்‌ இவர்‌.
  • வள்ளுவர்‌ உள்ளம்‌, வள்ளுவர்‌ காட்டிய வழி, திருக்குறளில்‌ நகைச்சுவை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்‌.
  • உலகப்பொதுமறை திருக்குறள்‌ உரை விளக்கம்‌ என்னும்‌ இவரது நூல்‌ பெரும்‌ புகழ்‌ பெற்றது.
  • இக்கட்டுரை சிந்தனைக்‌ களஞ்சியம்‌ என்னும்‌ இவரது நூலிலிருந்து தொகுத்துத்‌ தரப்பட்டுள்ளது.

6th Tamil Book

நூல்‌ வெளி

இந்நூல்‌ மூன்று பிரிவுகளைக்‌ கொண்டது அவை :

1. அறத்துப்பால்‌ : இயல்‌-4 பாயிரவியல்‌, இல்லறவியல்‌, துறவறவியல்‌, ஊழியல்‌ 38 அதிகாரம்‌ – 380 குறள்பாக்கள்‌

2. பொருட்பால்‌ : இயல்‌ 3- அரசியல்‌, அங்கவியல்‌, ஒழிபியல்‌ 70 அதிகாரம்‌ – 700 குறட்பாக்கள்‌

3. இன்பத்துப்பால்‌ : இயல்‌ 2- களவியல்‌, கற்பியல்‌ 25 அதிகாரம்‌ – 250 குறள்‌

4.வேறுபெயர்கள்‌ : முப்பால்‌, உத்தரவேதம்‌, தெய்வநூல்‌, உலகப்பொதுமறை, வாயுறை வாழ்த்து.

6th Chapter 2.6 திருக்குறள்‌

  • மக்களுக்கு மகிழ்ச்சி தருவது? அறிவுடைய மக்கள்‌
  • ஒருவர்க்குச்‌ சிறந்த அணி? இன்சொல்‌
  • இனிய பப இன்னாத கூறல்‌ கனியிருப்பக்‌ பப கவர்ந்‌ தற்று? உளவாக, காய்
  • அன்பிலார்‌ பபபல தமக்குரியர்‌ அன்புடையார்‌ ………………. உரியர் பிறர்க்கு? எல்லாம் , என்பும்
  • செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார் .

இந்தக் குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக?

  1. மோனை சொற்கள் : செயற்கரிய செய்வார் , செயற்கரிய செய்கலா
  2. எதுகை சொற்கள் : செயற்கரிய செய்வார் , செயற்கரிய செய்கலா

இந்தக் குறளில் அடி மோனை, அடி எதுகை சொற்கள் வந்துள்ளது.

  • உயிருள்ள உடல் எது? அன்பு இருப்பது தான் உயிருள்ள உடல் , அன்பு இல்லாதவர்களின் உடல் வெறும் எலும்பும் தோலும்தான் என வள்ளுவர் கூறுகிறார் .
  • எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைவது எது? அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமையும் என வள்ளுவர் கூறுகிறார் . அன்பிலார் ,
  • அன்புடையார் செயல்கள் யாவை?

i. அன்பிலார் : அன்பு இல்லாதவர்கள் உலகில் உள்ள எல்லா பொருள்களும் தனக்கே

சொந்தம் எனக் கூறுவார்கள் .

ii. அன்புடையார் : அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே சொந்தமென கூறுவார்கள் .

6th Chapter 5.6 திருக்குறள்

  • விருந்தினரின் முகம் எப்போது வாடும் ? நம் முகம் மாறினால்
  • நிலையான செல்வம் ? ஊக்கம்
  • ஆராயும் அறிவு உடையவர்கள் பபப சொற்களைப் பேசமாட்டார் ? பயன்தராத
  • உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

இக்குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக?

i அடி எதுகை : உள்ளுவது — தள்ளினும்

ii . அடி மோனை : உள்ளுவது – உயர்வுள்ளல்

  • எப்படி உண்பது விரும்பத்தக்கது அன்று? உண்ணப்படும் பொருள் அமிழ்தமே ஆனாலும் தன்னை நோக்கி வந்த விருந்தினர் இருக்கும் போது தான் மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று.
  • எது தீமையானது என்று வள்ளுவர் கூறுகின்றார் ? பிறருடைய பொருளை அவர் அறியா வகையில் களவாடலாம் என உள்ளத்தால் நினைப்பதுகூடத் தீமையானது.
  • ஆக்கம் யாரிடம் வழிகேட்டுச் செல்லும் ? தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழி கேட்டுக் கொண்டு செல்லும் .
  • நாம் எத்தகைய சொற்களைப் பேச வேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார் ? நாம் பயனுடைய சொற்களை மட்டும் பேச வேண்டும் .
  • அனிச்சமலர் குறித்து வள்ளுவர் கூறுவது யாது? அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடும் . அதுபோல் நாம் முகம் மாறினால் விருந்தினர் உள்ளம் வாடிவிடும் .
  • பயன் தராத சொற்களைப் பேசாதவர் யார் ? நன்மை எது என ஆராயும் அறிவு உடையவர்கள் பயன் தராத சொற்களைப் பேசமாட்டார்கள் .
  • அழியும் செல்வம் எது? களவு மூலம் சேர்க்கப்படும் செல்வம் வளர்வது போலத் தோன்றினாலும் முடிவில் அழிந்து விடும் .
  • ஊக்கமுடைமை என்ற அதிகாரத்தின் மூலம் கூறப்பட்ட கருத்துகள் யாவை?

(i) ஊக்கமே நிலையான செல்வம் . மற்றவை எல்லாம் நிலைத்து நில்லாமல் அழிந்து விடும் .

(ii) தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழிகேட்டுக் கொண்டு செல்லும் .

(iii) தண்ணீ ரின் உயரத்துக்கு ஏற்ப நீர்ப் பூக்கள் வளரும் . ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப மனிதர்கள் உயர்வார்கள் .

(iv)எண்ணுவதை உயர்வாகவே எண்ணுக. எண்ணியதை அடையாவிட்டாலும் எண்ணமே மனநிறைவைத் தருக.

  • திருக்குறள் உலகப் பொதுமறை எனப்படுவது ஏன் ?
  • திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ‘தமிழுக்குக் கதி’ எனச் சிறப்பிக்கப்படுவது. (க-கம்பராமாயணம் , தி – திருக்குறள் நம் தாய்மொழியான தமிழ்மொழிக்கு மணிமகுடம் போன்றது. புகழ்பெற்ற இலக்கியமாகும் . திருக்குறள் நூலானது திருவள்ளுவரின் தற்சிந்தனை அடிப்படையில் தமிழ்மொழியில் இயற்றப்பட்ட நூலாகும் . மேலும் , திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகள் உலகின் பல்வேறு சமயங்கள் வலியுறுத்துபவையுடன் ஒப்பிடப்பட்டு, அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகப் பல்வேறு சமயத்தாராலும் கருதப்பட்டு வருகிறது.
  • இந்நூல் உலக மக்கள் அனைவருக்கும் , எந்தக் காலத்திற்கும் , பொருந்தும் வகையில் அமைந்துள்ளமையால் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது.

iii) உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் பெற்றுள்ளது. இதுவரை 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

7th Chapter 2.6 திருக்குறள்

  • வாய்மை எனப்படுவது? தீங்குதராத சொற்களைப் பேசுதல்
  • _______ செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும் ? பொறாமை உள்ளவன்
  • எப்போது தன்நெஞ்சே தன்னை வருத்தும் ? ஒருவர் தன் மனம் அறிய பொய்சொல்லக் கூடாது. அவ்வாறு கூறினால் அவர் மனமே அவரைச் சுடும் .
  • வாழும் நெறி யாது? ஒருவர் தன் மனத்தில் பொறாமை இல்லாது ஒழுக்க நெறியோடு வாழ வேண்டும் .
  • உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் யார் ? உள்ளத்தில் பொய்யில்லாமல் வாழ்பவர் , உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவர் .
  • முப்பால் , பொய்யா மொழி, தெய்வ நூல் போன்ற பிறபெயர்களில் அழைக்கப்படும் நூல் ?  திருக்குறள்
  • திருக்குறளில் அமைந்த மொத்த குறட்பாக்கள் ? 1330
  • திருக்குறள் பகுப்பு? மூன்று
  • தீங்கு தராத சொற்களைச் சொல்லுதல் ? வாய்மை
  • ஒருவர் பபப பொய் சொல்லக் கூடாது? நெஞ்சறிய
  • சிறந்த அரசின் செயல்கள் யாவை?

i. பொருள் வரும் வழிகளை அறிதல் .

ii. பொருள்களைச் சேர்த்தல் .

iii . சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்

iv. பொருளைப் பிரித்துச் செலவு செய்தல் . — ஆகியன சிறந்த அரசின் செயல்கள் ஆகும் .

  • அவ்விய நெஞ்சத்தான் பபபல செவ்வியான் ? ஆக்கமும்
  • தன் குற்றம் காண்பவருடைய வாழ்வில் பபப இல்லை? துன்பம்
  • சிறந்த செல்வம் பபப ? அருட்செல்வம்
  • தன்னெஞ்சு அறிவது பபபல ? பொய்யற்க
  • செவ்வியான் கேடு நினைக்கப்படும் எப்போது? பொறாமை கொண்டவருடைய செல்வம் , பொறாமை இல்லாதவருடைய வறுமை சான்றோரால் ஆராயப்படும் .
  • எப்போது வாழ்வில் துன்பம் இல்லை? பிறருடைய குற்றத்தைக் காண்பது போல தன் குற்றத்தைக் காண்பவருக்குவாழ்வில் துன்பம் இல்லை .
  • எப்போது புறங் கூறுதல் கூடாது? நேருக்கு நேர் நின்று கடுமையான சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம் . ஆனால் , அவர் இல்லாத போது புறங்கூறல் கூடாது.
  • அருட்செல்வம் , பொருட்செல்வம் குறித்து வள்ளுவர் கூறுவது?

i. செல்வங்களுள் சிறந்தது அருட்செல்வம்

ii . பொருட்செல்வம் இழிந்தவரிடத்திலும் உள்ளது.

7th Chapter 6.6 திருக்குறள்

  • …………… தீமை உண்டாக்கும் ? செய்யத் தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
  • தன் குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம் ………… இருக்கக் கூடாது? சோம்பல்
  • ‘நன்மை செய்வதிலும் தீமை உண்டாகும் ‘ எப்போது? நாம் ஒருவருடைய பண்பை அறிந்த அவருக்கு நன்மை செய்ய வேண்டும் . இல்லாவிட்டால் நன்மை செய்தாலும் தீமை வந்து சேரும் .
  • தீமை உண்டாக்கும் இரண்டு செயல்கள் யாவை? செய்யத்தகாத செயல்களைச் செய்வதாலும் செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதாலும் தீமை உண்டாகும் .
  • துன்பத்தில் துன்பம் உண்டாக்குபவர் யார் ? துன்பம் வந்த போது வருந்திக் கலங்காதவர் , அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனை வென்று விடுவர் .
  • எப்படிக் கற்று? எப்படி நடக்க வேண்டும் ? கற்க வேண்டியவற்றைப் பிழை இல்லாமல் கற்க வேண்டும் . கற்றபின் கற்ற வழியில் நடக்க வேண்டும் .
  • கண் போன்றவை எவை? எண்ணும் எழுத்தும் வாழும் மக்களுக்குக் கண்கள் போன்றவை.
  • மக்கள் அறிவு எனைப் போல வளரவேண்டும் ? தோண்டும் அளவிற்கு ஏற்ப மணற்கேணியில் நீர் ஊறும் . அதுபோல் கற்கும் அளவிற்கு ஏற்ப மக்களுக்கு அறிவு வளரும் .
  • அழிவில்லாத சிறந்த செல்வம் எது? ஏன் ? அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே. ஒருவருக்கு அதனைவிடச் சிறந்த செல்வம் வேறு இல்லை.
  • ஒரு செயலை எப்படி செய்யவேண்டும் ? எந்தச் செயலையும் நன்கு சிந்தித்த பின் தொடங்க வேண்டும் . தொடங்கிய பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும் .
  • யாரிடம் செல்வம் சேரும் ? காகம் தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தன் சுற்றத்தாரைக் கூவி அழைத்து உண்ணும் . அத்தகைய பண்பு உடையவர்களிடமே செல்வமும் சேரும் .

8th Chapter 5.6 திருக்குறள்

  • அரசரை அவரது பபபல காப்பாற்றும் ? குற்றமற்ற ஆட்சி
  • சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் பபப தகுதி அறிந்து பேச வேண்டும் ? அவையின்
  • நன்மையைத் தரும் செயலை ஒருவரிடம் ஒப்படைக்கும் வழி யாது? இச்செயலை இந்த வகையால் இவர் செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து அச்செயலை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் .
  • சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது? எதையும் நன்கு ஆராய்ந்து ஒரு பக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும் .
  • அரசன் தண்டிக்கும் முறை யாது? ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும் . இதுவே அரசன் தண்டிக்கும் முறை ஆகும் .
  • சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன? கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் . இயல்பாகும் .

8th Chapter 8.6 திருக்குறள்

  • ஆண்மையின் கூர்மை ……… ? பகைவருக்கு உதவுதல்
  • வறுமை வந்த காலத்தில் ….. குறையாமல் வாழ வேண்டும் ? ஊக்கம்
  • இன்பம் தருவது – பண்புடையவர் நட்பு
  • பணிவு கொள்ளும் காலம் – செல்வம் மிகுந்த காலம்
  • பயனின்றி அழிவது – நற்பண்பில்லாதவன் வெற்ற பெருஞ்செல்வம்
  • நட்பு என்பது – சிரித்து மகிழ மட்டுமன்று
  • பெருமையை அழிப்பது – குன்றிமணியளவு தவறு
  • எது பெருமையைத் தரும் ? காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும் .
  • நண்பர்களின் இயல்பை அளந்து காட்டும் அளவுகோல் எது? நமக்கு வரும் துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்து காட்டும் அளவுகோலாகும் .
  • இவ்வுலகம் யாரால் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது? இவ்வுலகம் பண்பு உடைய சான்றோரின் வழியில் நடப்பதால்தான் இயங்குகிறது.
  • நட்பு எதற்கு உரியது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் ? நட்பு சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டும் உரியதன்று. நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.

9th Chapter 3.5 திருக்குறள்

  • தீரா இடும்பை தருவது எது? ஆராயாமை, ஐயப்படுதல்
  • நிலம் போல யாரிடம் பொறுமை காக்கவேண்டும் ? தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை இகழ்பவரிடத்தும் பொறுமை காக்க வேண்டும் .
  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது
  • திருக்குறளில் இடம்பெறும் இருமலர்- அனிச்சம், குவளை
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
  • இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
  • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்
  • திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்
  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்
  • திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்
  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
  • திருக்குறள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது.

9th Chapter 6.6 திருக்குறள்

  • அடுக்கிய கோடி பெறினும் குன்றுவ செய்யாதவர் ? குடிப்பிறந்தார்
  • ஊழி பெயரினும் தான் பெயராதவர் ? சான்றாண்மையுடையவர்
  • “சாகும் வரை உள்ள நோய் ” – என்று வள்ளுவர் யாரைக் கூறுகிறார் ? புல்லறிவுடையாரை
  • காணாதான் காட்டுவான் – காணாதான் யார் ? அறிவில்லாதவன்
  • அறம் யாரை விட்டு விலகிப்போகும் ? பிறர் வெட்கப்படும் பழிக்குக் காரணமாய் இருந்தும் தான் வெட்கப்படவில்லை என்றால் , அறம் வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப் போகும் .
  • சிறந்த இன்பம் எப்போது பெறலாம் ? துன்பங்களில் மிகக் கொடிதான மனக்கசப்பு என்னும் பகையாகிய துன்பம் அழிந்து விட்டால் இன்பங்களில் சிறந்த இன்பத்தைப் பெறலாம் .

“இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின் ”

  • உழவே தலை – ஏன் ? உலகம் பல தொழில்களால் இயங்குகிறது. எனினும் உலகமானது ஏர்த்தொழிலாகிய உழவுத்தொழிலுக்குப் பின்னாலேயே போகும் . அதனால் வருந்தி உழைத்தாலும் உழவே சிறந்தது.
  • சான்றாண்மை குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகள் யாவை?

i. பிறரிடம் அன்பும் பழிக்கு நாணுதலும் அனைவரிடமும் இணக்கமும் இரக்கமும் உண்மையும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள் ! அணி – ஏகதேச உருவக அணி

ii . செயல் செய்பவரின் ஆற்றல் , பணிவுடன் நடத்தல் . அதுவே சான்றோர்க்குப் பகைவரையும் நட்பாக்கும் கருவி.

iii. ஊழிக்காலம் வந்தாலும் சான்றாண்மை என்னும் கடலுக்குக் கரை போன்றவர் நற்பண்புகளிலிருந்து மாறமாட்டார் !

  • உழவுத் தொழிலை வள்ளுவர் எவ்வாறு போற்றுகிறார் ?

i. உலகம் பல தொழில்களைச் செய்து இயங்கினாலும் (சுழன்று வந்தாலும் ), உலகமானது ஏர்த்தொழிலாகிய உழவுத்தொழிலை நம்பியே அதன் பின் நிற்கிறது. அதனால் எவ்வளவு துன்பத்திற்கு உள்ளானாலும் உழவுத்தொழிலே முதன்மையான சிறந்த தொழிலாகும் .

ii . பிற தொழில்கள் செய்யும் அனைவரையும் உழுபவரே தாங்கி நிற்பவர் ஆவார் . எனவே உழவர்களே உலகத்துக்கு அச்சாணி போன்றவர் ஆவார் .

  • சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள் யாவை?

i. அன்பு

ii . பழிக்கு அஞ்சுதல் (நாண் )

iii. ஒப்புரவு (இணக்கம் )

iv. கண்ணோட்டம்

V. வாய்மை – இவையே சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள் ஆகும் .

10th Chapter 3.6 திருக்குறள்

  • எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது? கூவிளம் தேமா மலர்
  • உயிரினும் மேலானது – ஒழுக்கம்
  • ஒழுக்கமுடையவர் – மேன்மை அடைவர்
  • உண்மைப் பொருளைக் காண்பது – அறிவு
  • அழிக்க வேண்டியவை – ஆசை, சினம் , அறியாமை
  • பெரியோரை துணையாக்கிக் கொள்ளுதல் – பெறும்பேறு
  • நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் – பிறர் நன்மையைக் கருதுபவர்
  • உயிரினும் மேலானதாகக் கருதிப் பாதுகாக்க வேண்டியது………… ? ஒழுக்கம்
  • “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ” என்பதில் அமைந்துள்ள நயம் ? எதுகை
  • “பெரியாரைப் பேணித் தமராக் கொளல் ” இதில் “தமர் ” என்பதன் பொருள் ? துணை
  • “முயற்றின்மை இன்மை புகுத்திவிடும் ” இதில் “இன்மை’ என்பதன் பொருள் ? வறுமை
  • ஒழுக்கமுடைமை – 14 வது அதிகாரம்
  • மெய் உணர்தல் – 36 வது அதிகாரம்
  • பெரியாரைத் துணைக்கோடல் – 45 வது அதிகாரம்
  • கொடுங்கோன்மை – 56வது அதிகாரம்
  • உயிரினும் ஓம்பப்படுவது எது? ஏன் ? உயிரினும் ஓம்பப்படுவது ஒழுக்கம் . ஏனெனில் ஒழுக்கமானது அனைத்துச் சிறப்புகளையும் தருகிறது.
  • ஒழுக்கத்தினால் கிடைப்பது எது? இழுக்கத்தினால் கிடைப்பது எது? ஒழுக்கத்தினால் கிடைப்பது மேன்மை. இழுக்கத்தினால் கிடைப்பது அடையக்கூடாத பழிகள் .
  • பல கற்றும் கல்லாதவராகக் கருதப்படுபவர் யார் ? உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் பல நூல்களைக் கற்றறிந்தாலும் கல்லாதவராகவே கருதப்படுவார் .
  • எப்பொருளைக் காண்பது அறிவு? எந்தப் பொருள் எந்த இயல்பினதாய்த் தோன்றினாலும் , அந்தப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பது அறிவு.
  • நாமம் கெடக்கெடும் நோய் பற்றி எழுதுக?

i. ஆசை, சினம் , அறியாமை என்ற மூன்றும் அழிதல் வேண்டும் .

ii. இம்மூன்றும் அழிந்தால் அவற்றால் வரும் துன்பங்களும் அழியும் .

  • பெரும்பேறு எது? பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதலே கிடைத்தற்கரிய பெரும்பேறாகும் .
  • கெடுப்பார் இலானும் கெடுபவர் யார் ? ஏன் ? குற்றம் கண்டபோது இடித்துத் திருத்தும் பெரியாரின் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளாத மன்னன் தன்னைக் கெடுக்க பகைவர் இல்லை எனினும் தானே கெட்டழிவான் .
  • நல்லார் தொடர்பை கைவிடல் எத்தன்மையது? தான் ஒருவனாக நின்று பலரோடு பகை மேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தரும் . ஆகவே நல்லார் நட்பைக் கைவிடல் கூடாது.
  • ஆட்சியதிகாரம் கொண்டுள்ள அரசன் குறித்துக் கூறப்பட்டுள்ள செய்தி யாது?
  • ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பான் .
  • அரசனது இச்செயலானது வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகராகும் .
  • ஆராயாது ஆட்சி செய்யும் மன்னனைக் குறித்து குறள் கூறும் செய்தி யாது? தன் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன் தன் நாட்டை நாள்தோறும் இழக்க நேரிடும் .
  • இரக்கம் இல்லா கண்கள் எதனைப் போன்று பயனற்றது? பாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை. அதைப் போல இரக்கம் இல்லாத கண்களாலும் பயனில்லை.
  • உலகமே உரிமையுடையதாகும் எப்போது? நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும் .
  • நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் யார் ? ஏன் ? விரும்பத்தக்க இரக்ககுணம் கொண்டவர்கள் நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் . ஏனெனில் பிறர் நன்மை கருதித் தமக்கு நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணுவர் .
  • ஒருவருக்கு பெருமை தருவது எது?

i. ஒரு செயலை முடிப்பதற்கு இயலாது என்று எண்ணிச் சோர்வடையக் கூடாது.

ii . அச்செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும் .

  • உயர்ந்த நிலையை எப்போது அடைய முடியும் ? விடாமுயற்சி என்னும் உயர்பண்பு கொள்ளுதல் , பிறருக்கு உதவுதல் . இவ்விரு பண்புகளால் உயர்ந்த நிலையை அடைய முடியும் .
  • 124.’ செல்வம் பெருகுதல் ‘ ‘வறுமை வருதல் ‘ எப்போது?

i. முயற்சி செய்வதால் செல்வம் பெருகும் .

ii . முயற்சி இல்லாவிட்டால் வறுமையே வந்து சேரும் .

  • இழிவற்றது இழிவானது எது?

i. ஐம்புலன்களில் ஏதேனும் குறையிருப்பின் அது இழிவன்று.

ii. அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாததே இழிவாகும் .

  • சோர்விலாது முயற்சி செய்வோர் குறித்துக் கூறு? சோர்விலாது முயற்சி செய்வோர் செய்கின்ற செயலுக்கு இடையூறாய் வரும் முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடையவர் .
  • பல கோடி பெறினும் பயனில்லை எப்போது? பிறருக்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவர் பல கோடிப் பொருள்களைப் பெற்றிருந்தாலும் அதனால் பயன் இல்லை.
  • விரும்பப்படாதவர் செல்வம் எதனைப் போன்றது? பிறருக்கு உதவாமல் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம் , ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றதாகும் .
  • “பொறியின்மை யார்க்கும் பழியன்று” – இவ்வடிகளில் “பொறி” என்பது எதனைக் குறிக்கும் ? பொறி என்பது மெய் , வாய் , கண் , மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளைக் குறிக்கும் .
  • “முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும் .”- இக்குறட்பாவில் அமைந்த முரண்சொற்கள் எவை?

i. முயற்சி- முயற்றின்மை

ii . திருவினை (செல்வம் ) – இன்மை (வறுமை)

  • “அடுக்கிய கோடி உண்டாயினும் இல் ” ஏன் ? பிறருக்கும் கொடுக்காமல் , தானும் அனுபவிக்காமல் இருப்பவர் அடுக்கிய பல கோடி பெரினும் பயன் இல்லை.
  • ‘உரிமை உடைத்து இவ்வுலகு” – யாருக்கு? நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு, உலகமே உரிமை உடையதாகும் .
  • நாள்தோறும் நாடு கெடும் – என்று வள்ளுவர் கூறக் காரணம் யாது? தன் நாட்டில் நடக்கும் நன்மை தீமைகளை ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன் நாடு நாள்தோறும் கெடும் .
  • கற்றும் கல்லாதார் அறிவிலாதார் – யார் ? உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதார் , பலநூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர் .
  • பாடலோடு பொருந்தா இசையால் பயனில்லை என்னும் உவமையைக் கொண்ட திருக்குறளை எழுதுக? பண் என்னாம் பாடற் இயைபின்றேல் ; கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் .
  • முயற்சி இல்லாதவருக்கு வறுமையே கிட்டும் என்பதற்குச் சான்றாக விளங்கும் திருக்குறளை எழுதுக. (அ) முயற்சி செய்பவருக்கு செல்வம் பெருகும் என்பதற்குச் சான்றாக விளங்கும் திருக்குறளை எழுதுக? முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் .
  • ஒரு செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும் என்பதை வலியுறுத்தும் குறட்பாவினை எழுதுக? அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் .
  • நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுவது பலமடங்கு தீமையைத் தரும் என்பதைக் குறிப்பிடும் திருக்குறளை எழுதுக? பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் .
  • எந்தப் பொருளாயினும் அதன் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவு என்பதை விளக்கும் குறட்பாவினை எழுதுக? எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.
  • ஒழுக்கமுடைமை குறித்து வள்ளுவர் கூறிய செய்தி யாது?

i. உயிரினும் மேலானது: ஒழுக்கம் எல்லாருக்கும் அனைத்துச் சிறப்புகளையும் தருவதால் அதை உயிரினும் மேலானதாகக் கருதிக் காத்தல் வேண்டும் .

ii . மேன்மை – பழி: ஒழுக்கத்தினால் கிடைப்பது மேன்மை. இழுக்கத்தினால் கிடைப்பது அடையக் கூடாத பழி.

iii. பல கற்றும் அறிவிலார் : உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் பல நூல்களைக் கற்றவராயினும் அறிவு இல்லாதவராகவே கருதப்படுவார் .

  • மெய்யுணர்தல் குறித்து எழுதுக.

i உண்மைப் பொருளைக் காணல் : எந்தப் பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும் அந்தப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பது அறிவு.

ii . துன்பம் அழிதல் : ஆசை, சினம் , அறியாமை என்ற மூன்றையும் அழித்தால் அதனால் வரும் துன்பமும் அழியும்

  • பெரியாரைத் துணைக்கோடல் குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகளை எழுதுக.

i. பெரும்பேறு: பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதலே பெரும்பேறாகும் .

ii . பாதுகாப்பற்ற மன்னன் : குற்றம் கண்ட இடத்து இடித்துத் திருத்தும் பெரியாரின் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளாத மன்னன் தன்னைக் கெடுக்கப் பகைவர்கள் இல்லையெனினும் தானே கெட்டழிவான் .

iii. பெரியோர் நட்பைக் கைவிடல் : நற்பண்புடைய பெரியோரின் நட்பைக் கைவிடுவதானது, தனியொருவனாக நின்று பகைவர் பலரைப் பகைத்துக் கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தரும் .

  • கொடுங்கோன்மை பற்றிய செய்தியைக் கூறு.

i ஆட்சியதிகாரம் : தன் ஆட்சியதிகாரத்தைக் கொண்டு வரி விதிக்கும் மன்னனது செயலானது, வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிபறி செய்பவனின் செயலுக்கு ஒப்பானது.

ii . தன் நாட்டை இழத்தல் : தன் நாட்டின் நன்மை, தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன் தன் நாட்டை இழக்க நேரிடும் .

  • கண்ணோட்டம் குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகளை எழுது.

i. இரக்கம் இல்லாத கண்கள் : பாடலோடு பொருந்தாத இசையால் பயன் ஒன்றுமில்லை.அதுபோல, இரக்கமில்லாக் கண்களால் பயன் ஒன்றுமில்லை

ii . நடுநிலை: நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும் .

iii . நஞ்சை உண்ணும் பண்பாளர் : விரும்பத் தகுந்த இரக்க இயல்பைக் கொண்டவர்கள் , பிறரது நன்மைக்காக தனக்கு நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் ஆவார் .

  1. ஒருவனது செல்வம் பயனற்றதாய்ப் போவது எப்போது?

i பல கோடிப் பொருள்கள் : பிறருக்கும் கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் இருப்பவர் பல கோடிப் பொருள்கள் பெற்றிருந்தாலும் அதனால் பயன் இல்லை.

ii . நச்சுமரம் பழுத்தது: பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம் ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றதாகும் .

10th Chapter 6.7 திருக்குறள்

  • சிறந்த அமைச்சருக்குரிய குண நலன்கள் ? 51
  • விடாமுயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி? உயர்ந்து விளங்கும்
  • எத்தகைய அரிய செயலைச் செய்பவர் அமைச்சர் ஆவார் ? தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம் , செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவர் அமைச்சர் ஆவார் .
  • அமைச்சருக்குரிய ஐந்து சிறப்புகள் யாவை? மனவலிமை, குடிகளைக் காத்தல் , விடா முயற்சி, ஆட்சி முறைகளைக் கற்றல் , நூல்களைக் கற்றல் .
  • எத்தகைய அமைச்சர்களுக்கு முன் சூழ்ச்சியும் நிற்க இயலாது? இயற்கையான நுண்ணறிவு, நூலறிவு இவற்றையுடைய அமைச்சர்களுக்கு முன் சூழ்ச்சிகள் நிற்க இயலாது.
  • ஓர் அமைச்சன் எவற்றை அறிந்து செயல்பட வேண்டும் ? ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும் .
  • அறத்தையும் இன்பத்தையும் தருவது எது? முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்ந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் தரும் இன்பத்தையும் தரும் .
  • எத்தகையப் பொருளை ஏற்காமல் நீக்கிவிட வேண்டும் ? மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும் .
  • பொருளல்லவரைப் பொருளாகச் செய்வது எது? ஏன் ? ஒரு பொருட்டாக மதிக்கத்தகாதவரையும் பிறர் மதிக்கும்படி செய்வது செல்வம் . ஏனெனில் அதைவிட சிறந்த பொருள் உலகில் வேறு எதுவும் இல்லை.
  • ஒருவன் தன் கைப்பொருளைக் கொண்டு செய்யும் செயல் எதற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது? ஒருவன் தன் கைப்பொருளைக் கொண்டு செய்யும் செயலானது, குன்றின் மேல் பாதுகாப்பாக நின்று கொண்டு யானைப் போரைக் காண்பது போன்றது.
  • கூடா நட்பு குறித்து வள்ளுவர் கூறும் செய்தி யாது?

i. கொலைக் கருவி: பகைவரின் தொழுது நிற்கும் கையின் உள்ளேயும் கொலைக் கருவி மறைந்து இருக்கும் .

ii . வஞ்சகம் : பகைவரின் அழுத கண்ணீர் உள்ளும் வஞ்சகம் மறைந்து இருக்கும் .

  • யாரால் பகைவரின் வலிமையை எதிர்கொள்ள முடியாது?

i. சுற்றத்தாரிடம் அன்பு இன்மை

ii. பொருந்திய துணை இன்மை

iii. வலிமையின்மை – இவற்றையுடையவன் பகைவரின் வலிமையை எதிர்கொள்ள முடியாது.

  • ஒருவன் எளிதில் பகைக்கு ஆட்பட நேரிடுவது எப்போது?

i. மனதில் துணிவு இல்லாமை

ii . அறியவேண்டியவற்றை அறியாமை

iii. பொருந்தும் பண்பு இல்லாமை

iv. பிறருக்குக் கொடுத்து உதவாமை- மேற்கண்ட செயல்களை உடையவர் எளிதில் பகைக்கு ஆட்பட நேரும் .

  • ஒருவனது குடி எப்போது சிறந்து விளங்கும் ? விடாமுயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி சிறந்து விளங்கும் .
  • உலகத்தார் யாரை உறவாகக் கொண்டு போற்றுவார் ? குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச் செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக் கொண்டு போற்றுவர் .
  • வறுமையின் கொடுமை முழுவதும் கெடும் எப்போது? தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லாரைக் கண்டால் வறுமையின் கொடுமை முழுவதும் கெடும் .
  • யாருடைய உள்ளத்தில் மகிழ்ச்சிப் பொங்கும் எப்போது? இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும் .
  • மக்கள் , கயவர் குறித்து வள்ளுவர் கூறிய செய்தி யாது? கயவர் மக்களைப் போலவே இருப்பர் , கயவர்க்கும் மக்களுக்கும் உள்ள ஒப்புமை தோற்றம் மட்டுமே வேறெந்த ஒப்புமையும் கிடையாது.
  • தேவர் கயவர் குறித்து வள்ளுவர் கூறியது யாது? தேவரும் கயவரும் ஒரே தன்மையர் , தேவர்களைப் போலவே கயவர்களும் தாம் விரும்புவனவற்றைச் செய்து வாழ்வர் .
  • சான்றோர் கயவர் குறித்து வள்ளுவர் கூறுவது யாது? ஒருவர் தம் குறையை சொல்வதைக் கேட்டவுடன் உதவி செய்பவர் சான்றோர் . கரும்பைப் பிழிவது போல நெருக்கிப் பிழிந்தால்தான் பயன்படுபவர் கயவர் .
  • ஒரு செயலைச் செய்வதற்கு உலகியல் நடைமுறைகளும் அவசியம் என்பதை வலியுறுத்தும் திருக்குறளை எழுதுக? செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்தியற்கை அறிந்து செயல் .
  • ஒரு பொருளாக மதிக்கத்தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம் என்பதை எடுத்துரைக்கும் திருக்குறளை எழுதுக? பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் .
  • மலைமேல் நின்றுகொண்டு யானைப் போரைக் காண்பதனை உவமையாகக் குறிப்பிடும் திருக்குறளை எழுதுக? குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத் தொன்றுண்டாகச் செய்வான் வினை.
  • குற்றமற்றுக் குடிப்பெருமையுடன் வாழ்பவரை உலகத்தார் போற்றுவர் என்பதற்குச் சான்றாக விளங்கும் திருக்குறளை எழுதுக? குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்சுற்றமாச் சுற்றும் உலகு.
  • வறுமையைப் போன்று துன்பம் தருவது வறுமையே என்று குறிப்பிடும் குறட்பாவினை எழுதுக? இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னாதது.
  • ‘குடிச்செயல் வகை என்னும் அதிகாரத்தில் குடி உயர்வு குறித்து வள்ளுவர் கூறும் கருத்து யாது?

i. இடைவிடாமல் பின்பற்றுதல் : விடா முயற்சி, சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்கும் .

ii . குற்றம் இன்மை : குற்றம் இல்லாமல் தன் குடிப்பெருமையை உயரச் செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக் கொண்டு போற்றுவர் .

  • ‘கயமை’ என்னும் அதிகாரத்தில் கயவர் குறித்து வள்ளுவர் குறிப்பிடும் செய்தி யாது?

i.தோற்ற ஒப்புமை: கயவருக்கும் மக்களுக்கும் உள்ள ஒப்புமை தோற்றம் மட்டுமே. வேறெதிலும் ஒப்புமை இல்லை.

ii . தேவரும் கயவரும் : தேவரும் கயவரும் ஒரே தன்மையர் , தேவர்களைப் போலவே கயவர்களும் தீயவற்றைச் செய்து ஒழுகுவார்கள்

iii. சான்றோர் -கயவர் : ஒருவர் தம் குறையைச் சொல்வதைக் கேட்ட உடனேயே உதவி செய்பவர் சான்றோர் . கரும்பைப் பிழிவது போல நெருக்கிப் பிழிந்தால்தான் பயன்படுவர் கயவர் .

  • பொருள் செயல்வகை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் வளமார்ந்த கருத்துக்களைக் கூறுக.

i. சிறந்த பொருள் : ஒரு பொருட்டாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம் . செல்வத்தை அல்லாமல் சிறந்த பொருள் உலகில் வேறு எதுவும் இல்லை.

ii. அறம் , இன்பம் : முறையறிந்து தீமையற்ற வழியில் ஒருவர் சேர்த்த செல்வம் அவருக்கு அறத்தையும் தரும் , இன்பத்தையும் தரும்

iii. நீக்கவேண்டிய பொருள் : மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக்கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும் .

iv. தன் கைப்பொருள் : தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவன் செய்யும் செயலானது, குன்றின் மேலே பாதுகாப்பாக நின்று கொண்டு யானைப் போரைக் காண்பதற்குச் சமமாகும் .

V. கூர்மையான ஆயுதம் : பொருளை ஈட்ட வேண்டும் . பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் பொருளைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

11th Chapter 3.7 திருக்குறள்

  • தீயினால் சுட்டதைப் ‘புண் ‘ என்றும் நாவினால் சுட்டதை ‘வடு’ என்றும் வள்ளுவம் கூறுவது ஏன் ?

i. தியினால் சுட்டது உடலில் வடுவாக இருந்தாலும் , உள்ளத்தில் ஆறிவிடும் .

ii . நாவினால் சுட்டது மனத்தில் என்றும் ஆறாத வடுவாக நிலைத்துவிடும் .

iii.எனவே, தீயினால் சுட்டதைப் ‘புண் ‘ என்றும் , நாவினால் சுட்டதை ‘வடு’ என்றும் வள்ளுவம் கூறுகிறது.

  • மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் . – இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக?

i. மருந்தாகித் தப்பா மரம் , தன் எல்லா உறுப்புகளாலும் மருந்தாகப் பயன்படும் மரம் என்பது உவமை.

ii . செல்வம் , பிறருக்குப் பயன்படும்வகையில் வாழும் பெருந்தகையானுக்கு உவமையாகக் கூறப்பட்டது.

iii. மரம் – உவமானம் ; பெருந்தகையான் — உவமேயம் ; பயன்படல் – பொதுத்தன்மை | ‘அற்று’ – உவமை உருபு.

  • எதற்குமுன் நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது? நாக்கு அடைத்து, விக்கல் வந்து உயிர்க்கு இறுதி வருமுன் , நல்ல செயல்களை விரைந்து செய்யவேண்டும் என்று, திருக்குறள் கூறுகிறது.
  • சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை? செயலின் வலிமை, தன்னின் வலிமை, பகைவனின் வலிமை, துணையானவரின் வலிமை
  • மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார் ? மருந்து மரமாக இருப்பவர் : பெருந்தகையாளர் மருந்து : செல்வம்
  • மலையினும் மாணப்பெரியது எது? தனக்குரிய நேர்வழியில் மாறாது, அடக்கமாக இருப்பவனின் உயரிய தோற்றமானது, மலைப்பின் மாண்பைக் காட்டிலும் பெரியதாகும் .
  • நாவை ஏன் காக்க வேண்டும் ? எதனை அடக்கிக் காக்காவிட்டாலும் , நாவை மட்டுமாவது அடக்கிக் காக்க வேண்டும் . அவ்வாறு நாவைக் காக்காவிட்டால் , சொல்குற்றம் ஏற்பட்டுத் துன்பப்படுவர் .
  • தாளாற்றிப் பொருளீட்டுவது எதற்காக எனக் குறள் கூறுகிறது? விடாமுயற்சி செய்து பொருளீட்டுவது, தகுதியானவருக்கு உதவி செய்வதற்கேயாகும் எனக் குறள் கூறுகிறது.
  • உயிர் வாழ்வார் , செத்தார் – எவர் எவர் ? உலக நடைமுறையோடு பொருந்தி ஒத்து வாழ்பவரே உயிர் வாழ்பவராவார் . அவ்வாறு வாழாதவர் செத்தவராவர் .
  • உலகில் நிலைத்து நிற்பதாகக் குறள் கூறுவது யாது? இணையற்ற, உயர்ந்த புகழே அல்லாமல் , இந்த உலகத்தில் ஒப்பற்று உயர்ந்து நிலைத்து நிற்பது, வேறு எதுவுமில்லை எனக் குறள் கூறுகிறது.
  • ‘நன்று’ என வள்ளுவர்‌ எதனைக்‌ கூறுகிறார்‌? தோன்றினால்‌, புகழ்தரும்பண்புகளுடன்தோன்ற வேண்டும்‌. இல்லையெனில்‌, தோன்றாமல்இருப்பதே நன்று என, வள்ளுவர்கூறுகிறார்‌.
  • வாழ்வார்‌, வாழாதவர்‌ எவர்‌ எவர்‌ என வள்ளுவர்‌ கூறுகிறார்‌? பழி இல்லாமல்வாழ்பவரே வாழ்பவராவார்‌; புகழ்இல்லாமல்வாழ்பவர்‌, வாழாதவராவார்என, வள்ளுவர்கூறுகிறார்‌.
  • செய்தவம்‌ ஈண்டு முயலப்படுவது ஏன்‌? விரும்பியதை விரும்பியவாறே பெற முடியும்என்பதனால்‌, செய்ய முடிந்த தவம்‌, இங்கேயே முயன்று பார்க்கப்படுகிறது என, வள்ளுவர்கூறியுள்ளார்‌.
  • தவமிருப்பார்‌ மேலும்‌ பயன்‌ யாது? பொன்னை நெருப்பில்புடம்இட்டுச்சுடும்போது, மாசு நீங்கி ஒளிவிடும்‌. அதுவால்‌, தவம்இருந்து, துன்பத்தில்தம்மை வருத்திக்கொள்பவருக்கு, ஞானம்ஒளி பெற்று வளம்.
  • இவ்வலகு எத்தகைய பெருமையை உடையது? நேற்று உயிருடன்இருந்தவன்‌, இன்று இல்லை என்னும்நிலையாமைப்பெருமையை உடையது இவ்வுலகம்‌.
  • கோடியும்‌ அல்ல பல – கருதுபவர்‌ எவர்‌? வாழ்வின்தன்மையை ஒரு வேளையாயினும்சிந்திக்காதவர்‌, ஒரு கோடியினும்அதிகமாக எண்ணுவர்‌.
  • நோதல்‌ இலன்‌ – எவன்‌? பொருள்களிடமிருந்து பற்றுதலை நீக்கியவனாக எவனொருவன்இருக்கிறானோ, அவன்அந்தப்பொருள்களால்துன்பம்அடைவது இல்லை.
  • பற்றை விட என்ன செய்ய வேண்டும்‌? பற்றை விட்டு அகல்வதற்குப்பற்று இல்லாத (இறை) வனைப்பற்றி நிற்க வேண்டும்‌.
  • இன்பம்‌ எப்பொழுது இடைவிடாது பெருகும்‌? பேராசை என்னும்பெருந்துன்பம்தொலைந்துபோனால்‌, இன்பம்என்பது இடைவிடாது பெருகும்‌.
  • பேரா இயற்கை பெற வழியாது? எக்காலத்திலும்நிறைவு செய்யமுடியாத இயல்புடைய ஆசை என்பதனை விட்டொழித்தால்‌, நிலையான இன்பத்தைப்பெற முடியும்‌.
  • விரைந்து கெடுபவன்‌ யார்‌? மற்றவருடன்ஒத்துப்போகாதவனும்‌, தன்வலிமையை அறியாதவனும்‌, தன்னைப்பெரிதாக நினைப்பவனும்விரைந்துக்கெடுபவனாவான்‌.
  • இல்லாகித்‌ தோன்றாக்‌ கெடுபவன்‌ யார்‌? தன்னிடம்உள்ள பொருள்முதலானவற்றின்அளவை அறிந்து வாழாதவன்‌, வாழ்க்கையில்எல்லா வளமும்பெற்றிருப்பதுபோல்காட்சி தந்து, தோற்றம்இல்லாமல்கெட்டு அழிவான.
  • எவருக்கு அருவினை என்பது இல்லையாம்‌? உரிய கருவிகளுடன்‌, தக்க காலம்அறிந்து செயலைச்செய்பவனுக்கு, செய்தற்கு அரிய செயல்என்று எதுவும்இல்லையாம்‌.
  • எவரால்‌ ஞாலத்தையும்‌ பெறமுடியும்‌? உரிய காலத்தில்‌, பொருத்தமான இடத்தில்செயலைச்செய்யும்ஆற்றலைப்பெற்றவனால்‌, ஞாலத்தையும்பெறமுடியும்‌.
  • காலம்‌ கருதி இருப்பவர்‌ — எவர்‌? உலகத்தை வெல்லக்கருதுபவர்‌, மனம்கலங்காமல்அதற்கு உரிய காலத்திற்காகக்காத்திருப்பர்‌.
  • அரிய செயலை எப்போது செய்து முடிக்கவேண்டும்‌? கிடைப்பதற்கு அரிய காலம்வாய்த்தால்‌, படிப்பதற்கு அரிய செயலை, அப்போதே செய்து முடிக்க வேண்டும்.
  • திருக்குறளுக்கு வழங்கும்‌ வேறு பெயர்கள்‌ பாவை? உலகப்பொதுமறை, பொய்யாமொழி வாயுறை வாழ்த்து, முப்பால்‌, உத்தரவேதம்‌, தெய்வநூல்எனப்பல பெயர்கள்‌, திருக்குறளுக்கு ழங்கப்பெறுகின்றன.
  • மருத்துவத்தின்‌ பிரிவுகளாகக்‌ குறள்‌ கூறுவன யாவை? நோயாளி, மருத்துவர்பாத்து, மருந்தாளுநர்‌.
  • திருக்குறளுக்குள்ள உரைகள்‌ பற்றி எழுதுக?

i.பரிமேலழகர்‌, மணக்குடவர்‌, காலிங்கர்‌, பரிதி, பரிப்பெருமாள்‌, தருமர்‌, தாமத்தர்‌, நச்சர்‌, திருமலையர்‌, மல்லர்என்னும்பத்துப்பேருடைய பழைய உரைகள்உள்ளன.

ii.இன்றளவும்‌, காலத்திற்கு ஏற்பப்பலர்உரை எழுதி வருகின்றனர்‌. உலகமொழிகள்பலவற்றில்மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளின்சிறப்பை விளக்கிப்பலர்பாடிய பாடல்களின்தொகுப்பு, ‘திருவள்ளுவமாலைஎன வழங்கப்பெறுகிறது.

  • திருவள்ளுவர்‌ குறித்து அறிவன யாவை? திருக்குறளை இயற்றியவர்குறித்த வரலாற்றுச்செய்திகள்எதுவும்தெளிவாகக்கிடைக்கவில்லை. எனினும்‌, தேவர்‌, நாயனார்‌, தெய்வப்புலவர்‌, செந்நாப்போதார்‌, பெருநாவலர்‌, பொய்யாமொழிப்புலவர்‌, மாதானுபங்கி, முதற்பாவலர்என்னும்சிறப்புப்பெயர்களால்அழைக்கப்பெறுகிறார்‌.
  • திருக்குறள்‌ அதிகாரங்கள்‌, இயல்கள்‌ குறித்து எழுதுக.
  • திருக்குறள்அறத்துப்பால்‌ (38 அதிகாரங்கள்‌), பொருட்பால்‌ (70 அதிகாரங்கள்‌), இன்பத்துப்பால்‌ (25 அதிகாரங்கள்‌) என்னும்முப்பிரிவுகளையும்‌, 133 அதிகாரங்களையும்கொண்டது.
  • அறத்துப்பால்‌ – பாயிரவியல்‌ (4), இல்லறவியல்‌ (20), துறவறவியல்‌ (13), ஊழியல்‌ (1) என்னும்நான்கு இயல்களைக்கொண்டுள்ளது
  • பொருட்பால்‌ – அரசியல்‌ (25), அமைச்சியல்‌ (32), ஒழிபியல்‌ (13) என்னும்மூன்று இயல்களைக்கொண்டுள்ளது.
  • இன்பத்துப்பால்‌: களவியல்‌ (7), கற்பியல்‌ (18) என்னும்இரண்டு இயல்களைக்கொண்டுள்ளது
  • மருந்து, மருத்துவர்‌, மருத்துவம்‌ ஆகியன பற்றித்‌ திருக்குறள்‌ கூறுவன யாவை? 

மருந்து : முன்னர்உண்டது செரித்ததை அறிந்து உண்டால்‌, மருந்து என ஒன்று உடலுக்குத்தேவையில்லை.

மருத்துவர்‌: நோயையும்அதன்காரணத்தையும்அதை நீக்கும்வழியையும்ஆராய்ந்து, நோயாளியன்வயதையும்நோயின்அளவையும்மருத்துவம்செய்தற்குரிய காலத்தையும்ஆராய்ந்து, மருத்துவர்செயல்பட வேண்டும்‌.

மருத்துவம்‌ ; நோயாளி, மருத்துவர்‌, மருந்து, மருந்தாளுநர்என்னும்நான்கு வகைகள்அடங்கும்‌.

  • கொடையில்‌ சிறந்து விளங்க வள்ளுவம்‌ கூறும்‌ வழிகளை ஒப்புரவறிதல்‌ அதிகாரம்வழி நிறுவுக.
  • உலகியல்பு அறிந்து, கைம்மாறு கருதாமல்‌, கண்ணோட்டத்துடன்‌ பிறர்க்கு உதவி வாழ்தலே ஒப்புரவறிதலாகும்‌.
  • ஒப்புரவு அறிந்தவர்‌, தம்‌ கைப்பொருளைப்‌ பிறர்‌ நலனுக்குத்‌ தேவையுள்ளபோது செலவழிப்பவராக இருப்பர்‌. விடாமுயற்சி செய்து பொருள்‌ ஈட்டும்‌ செயல்களாம்‌, தகுதியானவர்க்குக்‌ கொடுத்து உதவுவதற்கே ஆகும்‌.
  • உலகநடை அறிந்து, உயர்ந்தவர்‌ அனைவரோடும்‌ ஒத்துப்போகிறவனே உயிர்‌ வாழ்பவனாவான்‌.
  • பொருட்செல்வமானது, பெருந்தன்மை பொருந்தி வனிடம்‌ சென்று சேருமானால்‌, அது தன்‌ உறுப்புகளால்‌ மருந்தாகப்‌ பயன்படும்‌ மரம்‌, ஊர்‌ நடுவில்‌ பழுத்து உள்ளதற்குச்‌ சமமாகும்‌ என, வள்ளுவர்‌ கூறுகிறார்‌.
  • இவற்றால்‌ ஒப்புரவு அறிந்தவரே, கொடையால்‌ சிறந்து விளங்க முடியும்‌ என்பதனைத்‌ தெளியலாம்‌.
  • அடக்கமுடைமை ஒருவரை வாழ்வினில்‌ உயர்த்தும்‌ – இக்கூற்றை முப்பால்வழி விளக்குக.
  • ஒருவர்‌ மனம்‌, மொழி, செயல்களால்‌ அடங்கி இருப்பதே அடக்கமாகும்‌. அந்த அடக்கமுடைமை ஒருவனை வாழ்வில்‌ எவ்வெவ்‌ வாறு உயர்த்தும்‌ என்பதை முப்பால்வழிக்‌ காண்போம்‌.
  • தன்‌ தகுதிக்கென ஆன்‌ தேன்‌ கூறிய நேர்வழி மாறாது, ஒருவன்‌ அடக்கமாக இருப்பானாயின்‌, அவன்‌ உயர்வானது, மலையின்‌ மாண்பைக்‌ காட்டிலும்‌ பெரிதாக விளங்கும்‌. அடக்கம்‌ என்பதில்‌ புலன்‌
  • அடக்கம்‌ முக்கியம்‌. அவ்வகையில்‌ எதனை அடக்கிக்‌ காக்கவில்லையானாலும்‌, நாவை மட்டுமாவது அடக்கிக்‌ காக்க வேண்டும்‌.
  • அப்படி நாவை அடக்கிக்‌ காக்கவில்லையானால்‌, பேசும்‌ சொற்களில்‌ குற்றம்‌ ஏற்பட்டு, சிக்கலுக்கு உள்ளாகித்‌ துன்பப்படுவர்‌.
  • நாவைன்‌ அடக்க வேண்டும்‌? தீயினால்‌ சுட்ட புண்‌, உடலில்‌ வடுவாகக்‌ கிடந்தாலும்‌, உள்ளத்துள்‌ ஆடும்‌. நாவினால்‌ கூறும்‌ சுடுசொல்‌ புண்ணாகும்‌ வகையில்‌ சுடாது. ஆனால்‌, வடுவாகவே உள்ளத்தில்‌ நிலைத்திருந்து ஊறு செய்யும்‌. எனவே, ஒருவர்‌ வாழ்வில்‌ பழிபாவமின்றி உயர்வு பெற, அடக்கம்‌ இன்றியமையாதது என்பதை முப்பால்‌ தெளிவுபடுத்துகிறது.
  • சொல்லிழுக்குப்‌ படுபவர்‌? நாவைக்‌ காக்காதவர்‌

11th Chapter 5.6 திருக்குறள்‌

  • மருத்துவத்தின்‌ பிரிவுகளாகக்‌ குறள்‌ கூறுவன யாவை? நோயாளி, மருத்துவர்‌, மருந்து, மருந்தாளுநர்‌ என்னும்‌ நான்கு பிரிவுகளை உடையது மருத்துவம்‌ எனக்‌ குறள்‌ கூறுகிறது.
  • படைக்குப்‌ பாதுகாப்பாக இருப்பவை எவை? வீரம்‌, மானம்‌, முன்னோர்வழி நடத்தல்‌, நம்பிக்கைக்கு உரியவராதல்‌ என்னும்‌ நான்கும்‌ படைக்குப்‌ பாதுகாப்பாக இருப்பவை ஆகும்‌.
  • பகைவர்‌ வலிமையற்று இருக்கும்போதே வென்றுவிடவேண்டும்‌ என்னும்‌ குறட்பாவைக்‌ கூறுக? இளைதாக முள்மரம்‌ கொல்க களையுநர்‌ கைகொல்லும்‌ காழ்த்த இடத்து.
  • 212.. எப்போது மருந்து தேவையில்லை என்று திருவள்ளுவர்‌ கூறுகிறார்‌? முன்‌ உண்டது செரித்ததை அறிந்து, அடுத்து உண்டால்‌, மருந்து என ஒன்று தேவையில்லை” என்று, திருவள்ளுவர்‌ கூறுகிறார்‌.
  • இகழ்ச்சியில்‌ கெட்டாரை எப்போது நினைத்தல்‌ வேண்டும்‌? மகிழ்ச்சியில்‌ தங்கள்‌ கடமையை மறக்கும்‌ போது, மறதியால்‌ கெட்டவர்களை நினைத்துப்‌ பார்த்தல்‌ வேண்டும்‌.
  • எண்ணியதை அடைதல்‌ எப்போது எளிதாகும்‌? எண்ணியதை எப்போதும்‌ எண்ணிக்‌ கொண்டிருந்தால்‌, எண்ணியதை அடைதல்‌ என்பது எளிதாகும்‌.
  • எதைக்‌ கொடுத்து யாரைத்‌ துணையாகக்‌ கொள்ள வேண்டும்‌? முகக்‌ குறிப்பா அகக்‌ குறிப்பை அறிபவரை, எதையேனும்‌ கொடுத்தாவது துணையாக்கிக்‌ கொள்ள வேண்டும்‌.
  • கண்‌ உரைப்பவை எவை? பகைமையையும்‌, நட்பையும்‌ கண்‌ உரைத்துவிடும்‌.
  • நகையையும்‌ வேண்டற்‌ பாற்று அன்று – எது? கை என்னும்‌ பண்பற்றதை, விளையாட்டிற்குக்‌ கூட ஒருவன்‌ விரும்பக்கூடாது.
  • திருவள்ளுவர்‌ எவர்‌ பகையைக்‌ கொள்ளற்க என்கிறார்‌? திருவள்ளுவர்‌, வில்லேர்‌ உழவரின்‌ பகையைக்‌ கொண்டாலும்‌, சொல்லேர்‌ உழவரின்‌ பகையைக்‌ கொள்ளல்‌ கூடாது என்கிறார்‌.
  • உலகியற்றியான்‌ எவ்வாறு கெடல்‌ வேண்டும்‌ எனத்‌ திருவள்ளுவர்‌ கூறுகிறார்‌? பிறரிடம்‌ யாசித்து உயிர்‌ வாழும்‌ நிலை இருக்குமானால்‌, அப்படிப்பட்ட உயிர்‌ வாழ்க்கையைப்‌ படைத்தவன்‌, இவ்வுலகில்‌ அலைந்து கெடட்டும்‌ என்கிறார்‌ திருவள்ளுவர்‌.
  • ஏமாப்பில்‌ தோணி எது? அது எப்போது பக்குவிடும்‌? பிறரை எதிர்பார்த்து யாசித்து வாழ்தல்‌ என்பது, பாதுகாப்பு இல்லாத படகு ஆகும்‌. ஈயாமை என்னும்‌ பாறை மோதினால்‌, அது உடைந்துவிடும்‌.
  • ‘குறிப்பறிதல்‌’ வாயிலாகத்‌ திருவள்ளுவர்‌ கூறும்‌ செய்திகளை எழுதுக.

முகக்குறிப்பினால்‌ அகக்குறிப்பை அறிந்துகொள்ளும்‌ ஆற்றலுடையவருக்கு, எப்பொருளையாவது கொடுத்து நமக்குத்‌ துணையாக்கிக்‌ கொள்ளல்‌ வேண்டும்‌. தொனன்றால்‌, கண்ணின்‌ குறிப்புகளை உணர்ந்து அறிபவரைப்‌ பெற்றால்‌, அவரது கண்ணே கைமை யையும்‌ நட்பையும்‌ அறிந்து உணர்த்தும்‌ எனக்‌ குறிப்பறிதல்‌சிறப்பைத்‌ திருவள்ளுவர்‌ கூறுகிறார்‌.       

  • பகைத்திறம்‌ தெளிதல்‌ குறித்துத்‌ திருவள்ளுவர்‌ கூறுவனவற்றை விளக்குக.

i. *பகைமைஎன்பது பண்பற்ற செயல்‌. அதனை ஒருவன்‌ விளையாட்டுக்குக்கூட விரும்பக்கூடாது.

ii. வில்லைக்‌ கருவியாக உடைய வீரனின்‌ பகைமையைத்‌ தேடிக்‌ கொண்டாலும்‌, சொல்லைக்‌ கருவியாகக்‌ கொண்ட அறிஞரின்‌ பகையை உருவாக்கிக்‌ கொள்ளல்‌ கூடாது.

iii. முள்மரத்தை முதிர்ந்தபின்‌ வெட்டுபவனின்‌ கைகளை அது வருத்தும்‌. அதனால்‌ பகைமையை ஆராய்ந்து அறிந்து, வலிமை பெறும்‌ முன்பே களைய வேண்டும்‌ என்பதைத்‌ திருவள்ளுவர்‌ வலியுறுத்துகிறார்‌.

  • முகக்குறிப்பால்‌ அகக்‌ குறயை அறிபவரை துணை ஆக்கிக்கொள்ள வேண்டும்.
  • பகைமை என்னும்‌ பண்பை விளையாட்டாக கூட ஒருவன்‌ விரும்பக்‌ கூடாது?
  • எவருடைய பகையைக்‌ கொள்ளக்கூடாது? சொல்லேர்‌ உழவர்‌
  • பாதுகாப்பற்ற படகு போன்றது? இரந்து வாழ்தல்.
  • மகிழ்ச்சியின்‌ மைந்துறும்போது .பபபபபப உள்ளுக? பகை என்னும்‌ பண்பில்‌ அதனை.
  • கொடுத்தும்‌ கொளல்‌ வேண்டும்‌ – எவரை? குறிப்பில்‌ குறிப்புணர்வாரை
  • இளைதாக முள்மரம்‌’ எனத்‌ தொடங்கும்‌ குறளில்‌ ஈற்றடி ஈற்றுச்சீர்‌, என்னும்‌ வாப்பாட்டால்‌ முடிந்துள்ளது? பிறப்பு

12th  Chapter 3.6 திருக்குறள்‌

  • கடலின்‌ பெரியது? பயன்‌ ஆராயாமல்‌ ஒருவன்‌ செய்த உதவி
  • வையகமும்‌ வானகமும்‌ ஆற்றலரிது – எதற்கு? செய்யாமல்‌ செய்த உதவி
  • பகையும்‌ உளவோ பிற? பொருள்‌ கூறுக? முகமலர்ச்சியையும்‌ அகமகிழ்ச்சியையும்‌ கொல்லுகின்ற சினத்தை விட வேறுபகை இல்லை.
  • முயல்வாருள்‌ எல்லாம்‌ தலை என வள்ளுவர்‌ யாரைச்‌ சுட்டுகிறார்‌? அறத்தின்‌ வழியாக இல்லற வாழ்க்கை வாழ்பவர்‌ முயல்வருள்‌ எல்லாம்‌ தலையானவர்‌.
  • ஞாலத்தின்‌ பெரியது எது? ஒருவர்‌ நமக்கு உரிய காலத்தில்‌ செய்த உதவியானது அளவில்‌ சிறியதாக இருந்தாலும்‌, அஃது உலகைவிடப்‌ பெரியதாகும்‌.
  • மறக்கக்‌ கூடாதது, மறக்கக்‌ கூடியது எவற்றை?

i.  ஒருவர்‌ நமக்குச்‌ செய்த நன்மையை ஒருநாளும்‌ மறக்கக்கூடாது.

ii. ஒருவர்‌ நமக்குச்‌ செய்த தீமையை அப்பொழுதே மறந்து விட வேண்டும்‌.

iii. மறக்க கூடாதது – நன்மை; மறக்கக்கூடியது – தீமை.

  • செல்வம்‌ இருப்பதற்கான வழியாக வள்ளுவம்‌ உரைப்பன யாவை? ஒருவரிடம்‌ இருக்கும்‌ செல்வம்‌ குறையாமலிருக்க வேண்டுமென்றால்‌, அவர்‌ பிறருடைய கைப்பொருளை விரும்பாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌.
  • சினத்தை ஏன்‌ காக்க வேண்டும்‌? சினமானது தன்னைக்கொண்டவனையே அழித்து விடும்எனவே தன்னைக்காத்துக்கொள்ள விரும்புகிறவன்சினத்தைக்காக்க வேண்டும்‌.
  • இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின்‌ முக்கியத்துவத்தை வள்ளுவர்‌ வழிநின்று விளக்குக.

 i. ஒருவன்எல்லா உயிர்களிடத்தும்அன்பு காட்டியும்‌, அறச்செயல்கள்செய்தும்வாழும்இல்லற வாழ்வைப்பெறுவான்என்றால்‌, அவன்இல்வாழ்க்கை அன்பினால்உருவான நல்ல பண்பையும்‌, அறச்செயலினால்உருவாகின்ற நல்ல புகழாகிய பயனையும்அடைவான்‌.

ii. அறத்தின்இயல்போடு இல்லற வாழ்க்கையை வாழ்பவன்முயற்சி செய்து புகழடைய விரும்பும்எல்லாரை விடவும்தலைசிறந்தவன்ஆவான்‌.

iii. உலகத்தில்வாழவேண்டிய அறநெறியில்நின்று வாழ வேண்டும்‌. அவ்வாறு வாழ்ந்தால்வானுலகத்தில்உள்ள தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்படுவார்‌.

  • எவற்றையெல்லாம்‌ விட நன்றி உயர்ந்தது? குறள்‌ வழி விளக்குக.

 i. இந்நில உலகம்‌, வானகம்‌, கடல்‌, பனை இவைகளை விடவும்நன்றி உயர்ந்தது.

ii. நாம்பிறருக்கு எந்த ஒரு உதவியும்செய்யாமலிருக்கும்நிலையில்பிறர்நமக்குச்செய்த உதவியை நினைத்துப்பார்த்தால்விண்ணுலகத்தையும்மண்ணுலகத்தையும்கொடுத்தாலும்ஈடாகாது.

iii. ஒருவர்நமக்கு உரிய காலத்தில்செய்த உதவியானது அளவில்சிறியதாக இருந்தாலும்‌, அது உலகை விடப்பெரியதாகும்‌. மறுபலனை எதிர்பார்க்காமல்

iv.‌ ஒருவர்நமக்குச்செய்த உதவியின்அளவை ஆராய்ந்து பார்த்தால்‌, அதன்நன்மை கடலை விடப்பெரியதாகும்‌.

v. ஒருவர்தினையளவு உதவியைச்செய்தாலும்அதன்பயனை அனுபவித்து அறிந்தவர்கள்அவ்வுதவியை பனையளவாகக்கொள்வர்‌.

  • சினத்தால்‌ வரும்‌ கேட்டினைக்‌ கூறுக.

i. நமக்கு ஏற்படும்தீமையான விளைவுகள்அனைத்தும்நாம்கொள்ளும்சினத்தால்வரும்‌. அதனால்‌, நாம்யாரிடமும்சினம்கொள்ளாமல்அதை மறந்து விட வேண்டும்‌.

ii.  சினம்என்னும்பகை, முகத்தில்அழகு கூட்டுகின்ற சிரிப்பையும்‌, உள்ளத்தில்அருளைக்கூட்டுகின்ற மகிழ்ச்சியையும்கொள்ளும்‌.

iii. சினமானது தன்னைக்கொண்டவனையே அழித்து விடும்‌. எனவே தன்னைக்காத்துக்கொள்ள விரும்புகிறவன்சினத்தைக்காக்க வேண்டும்‌.

iv. சினமானது, தன்னைச்சேர்ந்தவரையும்அழிக்கும்நெருப்பாகும்‌. அஃது ஒருவருடைய சுற்றம்என்கின்ற பாதுகாப்புத்தெப்பத்தையும்சுட்டழித்து விடும்‌.

  • திருக்குறள்‌ என்பது? அடையடுத்த கருவியாகுபெயர்
  • திருக்குறளை இலத்தீன்‌ மொழியில்‌ மொழிபெயர்த்தவர்‌? வீரமாமுனிவர்.
  • ஏட்டுச்சுவடியிலிருந்து திருக்குறள்‌ முதன்முதலில்‌ அச்சிடப்பட்ட ஆண்டு? 1812.
  • அறத்துப்பாலில்‌ உள்ள குறட்பாக்களின்‌ எண்ணிக்கை? 380
  • இன்பத்துப்பாலில்‌ உள்ள இயல்கள்‌? 2
  • திருக்குறளில்‌ உள்ள மொத்த இயல்கள்‌? 9
  • அரசு இயல்‌, அமைச்சு இயல்‌, ஒழிபு இயல்‌ அமைந்துள்ள பிரிவு? பொருள்பால்.
  • .இல்லறவியலில்‌ அமைந்துள்ள குறட்பாக்களின்‌ எண்ணிக்கை? 200
  • கற்பியல்‌, களவியல்‌ உள்ள அதிகாரங்களின்‌ எண்ணிக்கை? 07, 18
  • ஊழியலில்‌ அமைந்துள்ள அதிகாரங்களின்‌ எண்ணிக்கை? 01
  • ‘நன்றல்லது’ இச்சொல்லிற்கு உரிய சரியான புணர்ச்சி விதிகள்‌? உயிர்வரின்உக்குறள்மெய்விட்டோடும்‌, உடல்மேல்உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
  • ‘இயல்பினும்‌ விதியினும்‌ நின்ற உயிர்முன்‌ கசதபமிகும்‌’ என்ற விதிப்படி அமைந்த சொல்‌? பனைத்துணை
  • கூற்று 1 : ஒருவர்‌ நமக்குச்‌ செய்த நன்மையை மறப்பது நல்லது. கூற்று 2 : ஒருவர்‌ செய்த உதவியை மறந்தவர்க்கு உய்வு இல்லை.

கூற்று 1 தவறு 2 சரி

  • கூற்று : சினத்தை விட நமக்கு வேறு பகை இல்லை. காரணம்‌ : அது நம்‌ முகமலர்ச்சியையும்‌ அகமலர்ச்சியையும்‌ கொன்றுவிடும்‌.

கூற்று சரி காரணம்சரி

  • கூற்று 1 : மெலியவரிடத்தில்‌ சினம்‌ கொள்ளாமல்‌ காப்பவரே சினம்‌ காப்பவர்‌.

கூற்று 2 : புலால்‌ உண்ணவில்லை என்றால்‌ வருவாயின்‌ பொருட்டு ஊன்‌ விற்பவர்‌ யாரும்‌ இருக்கமாட்டார்‌.

கூற்று இரண்டும்சரி

  • கூற்று 1 : ஒருவர்‌ செய்த தீமையை அப்பொழுது மறந்துவிடுவது நல்லதன்று.

கூற்று 2 : உரிய காலத்தில்‌ செய்யும்‌ சிறிய உதவி உலகத்தைவிடப்‌ பெரியது.

கூற்று 1 தவறு 2 சரி

  • கூற்று : ஒருவன்‌ தன்னைக்‌ காக்க சினம்‌ வராமல்‌ காத்துக்‌ கொள்ள வேண்டாம்‌. காரணம்‌ : சினம்‌ காக்கவிட்டால்‌ தன்னையே அழித்துவிடும்‌. கூற்று தவறு, காரணம்சரி.
  • வெஃகாமை – 18-ஆம்அதிகாரம்
  • துறவறவியல்‌ – 13 அதிகாரம்
  • ஒருவர்‌ செய்த உதவியை மறந்தவர்க்கு உய்வே இல்லை.
  • ஒருவர்‌ நமக்குச்‌ செய்த நன்மையை மறந்துவிடுவது நல்லது அன்று.
  • அறத்தின்‌ இயல்புடன்‌ வாழ்பவர்‌ முயற்சி உடையவரை விட மேம்பட்டவர்‌.
  • அரசவியல்‌ – 25 அதிகாரம்
  • இல்லறவியல்‌ – 20 அதிகாரம்
  • ஒழிபியல்‌ – 13 அதிகாரம்
  • கற்பியல்‌ – 18 அதிகாரம்
  • 11-ஆம்‌ அதிகாரம்‌ – செய்ந்நன்றி அறிதல்
  • 31-ஆம்‌ அதிகாரம்‌ – வெகுளாமை
  • 18-ஆம்‌ அதிகாரம்‌ – வெஃகாமை
  • 26-ஆம்‌ அதிகாரம்‌ – புலால்மறுத்தல்
  • அறத்துப்பால்‌ – 38
  • பொருட்பால்‌ – 70
  • இன்பத்துப்பால்‌ – 38
  • அறத்துப்பால்‌ – 4 இயல்கள்
  • பொருட்பால்‌ – 3 இயல்கள்
  • இன்பத்துப்பால்‌ – 2 இயல்கள்
  • அறத்துப்பாலில்‌ இயலைக்‌ கண்டறிக? பாயிரவியல்‌, இல்லறவியல்‌, துறவறவியல்
  • பொருட்பாலில்‌ இயலைக்‌ கண்டறிக? அரசு இயல்‌, அமைச்சு இயல்‌, ஒழிபியல்
  • ‌ 279. இன்பத்துப்பாலில்‌ இடம்பெறும்‌ இயல்களைக்‌ கண்டறிக? களவியல்‌, கற்பியல்
  • பாயிரவியல்‌ – 4 அதிகாரங்கள்
  • இல்லறவியல்‌ – 20 அதிகாரங்கள்
  • துறவறவியல்‌ – 13 அதிகாரங்கள்
  • ஊழியல்‌ – 1 அதிகாரம்
  • அரசியல்‌ – 25 அதிகாரங்கள்
  • அமைச்சியல்‌ — 32 அதிகாரங்கள்
  • ஒழிபியல்‌ – 13 அதிகாரங்கள்
  • கற்பியல்‌ – 18 அதிகாரங்கள்
  • திருக்குறளின்‌ களவியலில்‌ உள்ள அதிகாரங்கள்‌? 07
  • திருக்குறள்‌ திருக்குறள்‌ பபப ஆன நூல்‌? குறள்வெண்பாக்களால்
  • திருக்குறள் நூல்களுள்‌ ஒன்று? பதினெண்கீழ்க்கணக்கு
  • திருக்குறள்‌ என்பது பபபல ஆகும்‌? அடையடுத்த ஆகுபெயர்
  • திருக்குறள்‌ என்பது? இரண்டடி வெண்பா.
  • உலகப்‌ பொதுமறை, அறவிலக்கியம்‌, தமிழர்‌ திருமறை உள்ளிட்ட சிறப்புப்‌ பெயர்களுக்குரிய நூல்‌? திருக்குறள்.
  • ‌ மனித நாகரிகம்‌ பிற நாடுகளில்‌ தோன்றும்‌ முன்னரே மனித வாழ்வின்‌ மேன்மைகளையும்‌ வாழ்வியல்‌ நெறிகளையும்‌ வகுத்துக்காட்டிய நூல்‌? திருக்குறள்.
  • நாலும்‌ இரண்டும்‌ சொல்லுக்குறுதி – இவற்றால்‌ ‘நாலும்‌’ என்பது படட என்பது பவட குறிக்கும்‌? நாலடியார்‌, திருக்குறள்
  • இரண்டு’ திருக்குறளுக்கு உரை எழுதியவர்களாகப்‌ பழம்பாடலால்‌ குறிப்பிடப்படுபவர்கள்‌? பதின்மர்
  • திருக்குறளுக்கு உரை எழுதாதவரைக்‌ கண்டறிக? அடியார்க்கு நல்லார்
  • வள்ளுவன்‌ தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்‌ கொண்ட தமிழ்நாடு – எனப்‌ பாடியவர்‌? பாரதியார்
  • வள்ளுவனைப்‌ பெற்றதால்‌ பெற்றதே புகழ்‌ வையகமே — எனப்‌ பாடியவர்‌? பாரதிதாசன்
  • தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர்‌ சிலையினை நிறுவியுள்ள இடம்‌? கன்னியாகுமரி
  • திருவள்ளுவர்‌ பல்கலைக்கழகம்‌ அமைந்துள்ள இடம்‌? வேலூர்
  • வானுலகத்‌ தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்படுபவர்‌ யார்‌? உலகத்தில்வாழவேண்டிய அறநெறியின்படி வாழ்கின்றவர்கள்வானுலகத்தெய்வத்திற்கு இணையானவர்கள்.
  • வையகமும்‌ வானகமும்‌ ஆற்றலரிது – எதற்கு? நாம்பிறருக்கு எந்த ஒரு உதவியும்செய்யாமலிருக்கும்நிலையில்பிறர்நமக்குச்செய்த உதவியை நினைத்துப்பார்த்தால்விண்ணுலகத்தையும்மண்ணுலகத்தையும்கொடுத்தாலும்ஈடாகாது.
  • கடலின்‌ பெரிது எது என்று வள்ளுவர்‌ கூறுகிறார்‌? எந்தப்பயனையும்எதிர்பார்க்காமல்ஒருவர்நமக்குச்செய்த உதவியின்அளவை ஆராய்ந்து பார்த்தால்‌, அதன்நன்மை கடலைவிடப்பெரியதாகும்‌.
  • யார்‌ தப்பிப்பிழைக்கும்‌ வாய்ப்பில்லாதவர்‌ என்று குறள்‌ கூறுகின்றார்‌? எந்த அறத்தை அழித்தாலும்தப்பிப்பிழைக்கலாம்‌. ஆனால்‌, ஒருவர்செய்த உதவியை மறந்தவருக்குத்‌ : தப்பிப்பிழைக்க வழியே கிடையாது.
  • பிறர்‌ பொருளைக்‌ கவரும்‌ பழியான செயலைச்‌ செய்யாதவர்‌ யார்‌? நீதி இல்லாதவற்றைக்கண்டு வெட்கம்அடைந்து ஒதுங்கும்பண்பாளர்கள்பெரும்பயன்கிடைப்பினும் பிறர்பொருள்மேல்ஆசைப்படும்பழியான செயலைச்செய்யமாட்டார்கள்‌.
  • உண்மையிலே சினத்தைக்‌ காப்பவர்‌ யாரென்று குறள்‌ கூறுகிறது? தன்சினம்செல்லுபடியாகும்‌, தன்னை விடவும்மெலியாரிடத்தில்சினம்கொள்ளாமல்சினத்தைக்காத்துக்கொள்பவனே உண்மையில்சினத்தைக்காப்பவனாகும்.
  • திருக்குறளுக்கு வழங்கும்‌ வேறு பெயர்களில்‌ ஏதேனும்‌ நான்கினை எழுதுக? உலகப்பொதுமறை, தமிழர்திருமறை, வாயுறைவாழ்த்து, முப்பால்‌.
  • திருக்குறளின்‌ பெருமையை விளக்கும்‌ பழமொழிகள்‌ யாவை? 

i. ஆலும்வேலும்பல்லுக்குறுதி, நாலும்இரண்டும்சொல்லுக்குறுதி.

ii. பழகு தமிழ்ச்சொல்லருமை நாலிரண்டில்‌.

  • பழம்பாடல்பாடித்‌ திருக்குறளுக்கு உரை செய்தவர்களை கூறுக? தருமர்‌, மணக்குடவர்‌, தாமத்தர்‌, நச்சர்‌, பரிதி, பரிமேலழகர்‌, திருமலையார்‌, மல்லர்‌, பரிப்பெருமாள்காளிங்கர்‌.
  • பாரதியார்‌ வள்ளுவரை எவ்வாறு புகழ்கின்றார்‌? வள்ளுவன்தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்கொண்ட தமிழ்நாடு” – எனப்புகழ்கின்றார்‌.
  • வள்ளுவரைப்‌ பாரதிதாசன்‌ புகழ்ந்து கூறும்‌ கூற்று யாது? வள்ளுவனைப்பெற்றதால்பெற்றதே புகழ்வையகமேஎனப்புகழ்ந்து கூறுகின்றார்‌.
  • திருவள்ளுவரைப்‌ புகழும்‌ விதமாகத்‌ தமிழக அரசு செய்துள்ளவை யாவை?

கன்னியாகுமரியில்கி.பி.2000-இல்‌ 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர்சிலையினை நிறுவியுள்ளது.

வேலூரில்திருவள்ளுவர்பல்கலைக்கழகத்தை அமைத்துள்ளது.

  • பொருட்பாலில்‌ உள்ள இயல்கள்‌ எத்தனை? அவையாவை? பொருட்பாலில்உள்ள இயல்கள்மூன்று ஆகும்‌. அவை, அரசியல்‌, அமைச்சியல்‌, ஒழிபியல்என்பதாகும்‌.
  • சினம்‌ என்னும்‌ பகை நம்மிடமிருந்து எவற்றையெல்லாம்‌ கொல்லும்‌ என்று திருவள்ளுவர்‌ கூறுகிறார்‌? சினம்என்னும்பகை, முகத்தில்அழகு கூட்டுகின்ற மகிழ்ச்சியையும்கொல்லும்‌.
  • உலக இயல்பின்‌ இருவேறு ஊழ்‌ நிலையாகக்‌ குறள்‌ கூறுவது யாது?

i. உலக இயல்பு இருவேறு வகைப்படும்‌.

ii. செல்வம்உடையார்அறிவுடையராக இருப்பதில்லை.

iii. தெளிந்த அறிவுடையோர்செல்வமுடையவராக இருப்பதில்லை.

  • புலால்‌ மறுத்தல்‌ சாத்தியமாகும்‌ என்பதைக்‌ குறள்‌ வழி நிறுவுக.

 i. புலால்உணவை உண்ணுகிறவர்கள்இன்று உலகில்வாழ்கின்றனர்‌.

ii. புலால்உணவைத்தின்னும்பொருட்டாக உயிர்களை உலகத்தவர்கள்கொல்லாதிருத்தல்வேண்டும்‌.

iii. புலால்உண்பவர்கள்தங்கள்உணவிற்காகப்பிற உயிர்களைக்கொல்வதால்தான்‌, அதனை விலைக்கு விற்பனை செய்யும்பொருட்டு ஊன்விற்பவர்கள்பிற உயிர்களைக்கொல்கின்றனர்‌.

iv, புலால்மறுத்தலை உலகில்வாழும்நபர்கள்கடைபிடித்தால்எந்த ஒரு உயினமும்உணவிற்காகவும்‌, வருவாய்க்காவும்கொல்லப்படாமல்உயிர்வாழும்‌.

V. இதனையே வள்ளுவர்பிற உயிர்களை உணவிற்காகக்கொல்லாதாதிருந்தாலே புலால்உணவை நிறுத்திவிடலாம்என்கிறார்‌.

12th Chapter 6.7 திருக்குறள்

  • கள்‌ உண்பவர்‌ பட உண்ப வர்‌ என்கிறார்‌ வள்ளுவர்‌? நஞ்சு
  • அல்லல்‌ படுப்பதூம்‌ இல்‌ — எவரோடு பழகினால்‌? தீயினத்தார்
  • திண்ணியர்‌ என்பதன்‌ பொருள்‌ தருக? மன உறுதியுடையவர்
  • ஆராய்ந்து சொல்கிறவர்‌? தூதுவர்
  • பாம்போடு உடன்‌ உறைந்தற்று – உடன்பாடு இல்லாதவர்
  • செத்தார்‌ – கள்உண்ப வர்
  • வறுமை தருவது – சீர்அழிக்கும்சூது
  • இகல்‌ வேந்தர்‌ சேர்ந்து ஒழுகுவார்‌ – தீக்காய்வார்
  • நடுங்கும்படியான துன்பம்‌ யாருக்கில்லை? வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக்கொள்ள கூடியவர்
  • எளியது, அரியது எது? தீயினத்தின்‌ துணை — நல்லினத்தின்துணை
  • ஊட மனத்தை அதன்‌ போக்கில்‌ செல்லவிடக்கூடாது என்று வள்ளுவம்‌ கூறுவது ஏன்‌?
  • *சென்ற இடத்தால்செலவிடா தீது ஒரீஇ
  • மனத்தை, அது போகும்போக்கில்செல்லவிடக்கூடாது. மேலும்மனத்தினைத்தீமை வழியிலிருந்து விலக்கி நல்ல வழியில்செலுத்துவது அறிவாகும்
  • மன உறுதியின்‌ தேவை பற்றித்‌ திருக்குறள்‌ யாது கூறுகிறது? வினைத்திட்பம்என்பது ஒருவன்மனத்திட்பம்‌” நல்ல செயல்பாட்டிற்கு மன உறுதியே வேண்டும்‌. மற்றவை எல்லாம்பயன்படாது.
  • நஞ்சுண்பவர்‌ என வள்ளுவர்‌ யாரை இடித்துரைக்கிறார்‌? நஞ்சு உண்பார்கள்உண்பவர்‌” கள்உண்பவர்நஞ்சு உண்பவரே என வள்ளுவர்கள்ளுண்பவரை இடித்துரைக்கிறார்‌.
  • அரசரோடு நட்புப்‌ பாராட்டினாலும்‌ செய்யத்ததாதன யாவை? பழையம்எனக்கருதி பண்பு அல்ல செய்யும்‌” நான்அரசருடன்பழமையான நட்பு உடைவராய்உள்ளேன்‌. இத்தகைய எண்ணத்துடன்தகுதி அல்லாதவற்றைச்செய்தால்அந்த உரிமையானது துன்பத்தைத்‌ (289) தரும்‌.
  • வறுமையும்‌ சிறுமையும்‌ தருவது எது? ஒருவருக்கு துன்பம்பல உண்டாக்கி அவருடைய புகழையும்கெடுக்கின்ற சூதுதான்வறுமையும்சிறுமையும்ஆகும்‌.
  • உலகத்தில்‌ சிறந்த துணையாகவும்‌, பகையாகவும்‌ வள்ளுவர்‌ எவற்றைக்‌ குறிப்பிடுகிறார்‌?

i. நல்ல இனத்தைவிடச்சிறந்த துணை உலகத்தில்இல்லை.

ii. தீய இனத்தைவிடத்துன்பத்தைத்தரும்பகையும்இல்லை.

திருக்குறள் [TNPSC Group 2/2A 2013 to 2018]

Q1: கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை (2013 G2)

a. நச்சர்

b. திருமலையர்

c. அடியார்க்கு நல்லார்

d. தாமத்தர்

Q2: “நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன் றிருள் ” -இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது? (2013 G2)

a. இல்லறவியல்

b. துறவறவியல்

c. ஊழியல்

d. பாயிரவியல்

Q3: “திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றிராவிட்டால் , தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக

உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது” எனக்கூறியவர் (2013 G2)

a. கி.வா.ஜ

b. கி.ஆ.பெ.வி

6. திரு.வி.க.

d. உ.வே.சா.

Q4: “சோவியத்து அறிஞர்தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க

விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன் ” – எனக் கூறியவர் . (2013 G2)

a. பேரறிஞர் அண்ணா

b. பண்டித ஜவஹர்லால் நேரு

c. காந்தியடிகள்

d. ஜி.யு.போப்

Q5: பொருந்தாத இணையினைக் காண்க (2015 G2)

a. “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” – பாரதிதாசன்

b. “யாதும் ஊரே யாவரும் கேளிர் ” – கணியன் பூங்குன்றனார் .

c. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் ” – இளங்கோவடிகள்

d. “அழுது அடியடைந்த அன்பர் “-திருமூலர் .

Q6: திருக்குறள் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எவை சரியானவை (2015 G2)

i திருர்குறன் -திருக்குறள் மேன்மை பொருந்திய குரல் வெண்பாக்களினால் ஆகிய நூல் ஆதலின்

“திருக்குறள் ” எனப் பெயர் பெற்றது

ii. நான்மரை, ஐம்பால் , சதுர்வேதம் என்றும் திருக்குறளைக் கூறுவர்

iii திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன

iv. திருவள்ளுவரது காலம் கிமு 32 என்றும் கூறுவர் இந்த ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது

a. II, IV சரியானவை

b. I, III சியானவை

c. III, IV சரியானவை

d. II, III சரியானவை

Q7: விடை தேர்க: (2016 G2)

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் . – இக் குறட்பாவில்

பயின்றுவரும் அணி

a. சொற்பொருள் பின்வருநிலையணி

b. பொருள் பின்வருநிலையணி

c. உவமையணி

d. சொற் பின்வருநிலையணி.

Q8: திருக்குறள் – பொருட்பாலின் இயல்கள் (2016 G2)

a. பாயிரவியல் , துறவறவியல் ,ஒழிபியல்

b. அரசியல் , அங்கவியல் , ஒழிபியல்

c. அரசியல் , இல்லறவியல் , களவியல்

d. பாயிரவியல் , அங்கவியல் , கற்பியல்

Q9: “நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி”

என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் (2016 G2)

a. நாலாயிர திவ்வியபிரபந்தம் , இருபா இருபஃது

b. இன்னா நாற்பது, இனியவை நாற்பது

c. நாலடியார் , திருக்குறள் .

d. அகநானூறு, புறநானூறு

Q10: கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டுக (2016 G2)

a. பாரதிதாசன் திருக்குறளுக்கு உரை எழுதியவர்

b. பாரதிதாசன் சாகித்திய அகாடெமி பரிசு பெற்றவர்

c. பாரதிதாசன் பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றவர்

d. பாரதிதாசன் பெண்ணடிமைத்தனத்தைப் போற்றியவர்

Q11: திருக்குறளின் அறத்துப்பால் , பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்த

மொழி (2016 62)

a. ஆங்கில மொழி

b. இலத்தீன் மொழி

c. வாட மொழி

d. பிரெஞ்சு மொழி

Q12: “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” – எனப் பாடியவர் (2017 62)

a. பாரதியார் .

b. பாரதிதாசன்

C. சுரதா

d. திருவள்ளுவர்

Q13: அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைத்து, திருக்குறளைப் பாதுகாக்கும் நாடு எது? (2017 G2)

a. இங்கிலாந்து

b. சீனா

c. உருசிய நாடு

d. அமெரிக்கா

Q14: அடையடுத்த ஆகு பெயர் ”என்ற இலக்கணக் குறிப்பிற்குப் பொருத்தமான நூல் எது? (2018 G2)

a. நாலடியார்

b. சீவக சிந்தாமணி

c. திருக்குறள்

d. சிறுபஞ்சமூலம்

Q15: ‘செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்

மன்புலவன் வள்ளுவன்வாய் சொல் ”- என்ற செய்யுள் தொடர் அமைந்துள்ள நூல் எது? (2018 G2)

a. திருமந்திரம்

b. ஏலாதி

c. திருவள்ளுவமாலை

d. தேவாரம்

Q16: ‘உலகப் பொதுமறை” எனப் போற்றப்படும் நூல் எது? (2018 G2)

a. திரிகடுகம்

b. திருவள்ளுவமாலை

c. திருக்குறள்

d. திருவிளையாடற்புராணம்

Q17: திருக்குறளுக்கும் என்னும் எண்ணுக்கும் பெரிதும் தொடர்புள்ளது. (2018 G2)

a. மூன்று

b. எட்டு

c. ஏழு

d. ஐந்து

Q18: பல கற்றும் கல்லாதவராக கருதப்படுவர் யார் ? (2018 G2)

a. அறிவுள்ளவர்

b. அறிவில்லாதார்

c. கற்காதவர்

d. உயர்ந்தாரோடு பொருந்தி வாழும் கல்வியைக் கல்லாதவர்

Q19: திருக்குறளின் அறத்துப்பால் , பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் யார் ? (2018 G2)

a. ஜி.யு. போப்

b. வீரமாமுனிவர்

c. பவணந்தி முனிவர் :

d. கால்டுவெல்

திருக்குறள் [TNPSC 2019]

“தமிழுக்குக் கதி’ – என்று பெரியோர்களால் போற்றப்பட்ட நூல்கள் (09-01-2019)

(A) கம்பராமாயணம் , திருக்குறள் :

(b) திருக்குறள் , திரிகடுகம்

(c) திருக்குறள் . திருவள்ளுவமாலை

(d) சிலப்பதிகாரம் , சீவகசிந்தாமணி

திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் எவை? (09-01-2019)

(A) மா, பலா

(B) தென்னை, வாழை

(C) பனை மூங்கில்

(D) தேக்கு, சந்தனம்

பொருட்பாவில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை. (09-01-2019)

(A) 70

(B) 23

(C) 38

(D) 30

அடக்கமாய் இருப்பவனின் உயர்வு எதனைக் காட்டிலும் பெரியது (09-01-2019)

(A) வானம்

(B) கடல்

(C) மலை

(D) உலகம்

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தோ லான் . – இக்குறட்பாவில் இடம் பெற்ற அணியைச் சுட்டுக. (30-01-2019)

(A) வஞ்சப்புகழ்ச்சி அணி

(B) தற்குறிப்பேற்ற அணி

(C) இரட்டுற மொழிதல் அணி

(D) பின்வருநிலையணி

திருக்குறள் அறத்துப்பாவில் உள்ள அதிகாரங்களின் மொத்த எண்ணிக்கை (30-01-2019)

(A) 38

(B) 70

(C) 99

(D) 10

தமிழக அரசு எந்நாளைத் திருவள்ளுவர் நாளாக அறிவித்துள்ளது?. (30-01-2019)

(A) சித்திரை 1

(B)ஆடி 18

(C) தை 2

(D) புரட்டாசி 3

“…….புரை தீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்

செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில் ” – எனத் திருக்குறளைப் போற்றியவர் (30-01-2019)

(A) பாரதியார் .

(B) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

(C) பாரதிதாசன்

(D) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கப் பிள்ளை

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – என்ற தொடரை எழுதியவர் யார் ? (2019 EO3)

(A) பாரதியார் .

(B) பாரதிதாசன்

(C) கவிமணி

(D) சுரதா

வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழி மொழிபெயர்த்தார் ? (2019 EO3)

(A) ஆங்கிலம்

(B) பிரெஞ்சு

(C) கனடா

(D) இலத்தின்

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தல் பொருட்டு – இக்குறட்பாவில் ‘வேளாண்மை’ என்றச் சொல்லின் பொருள் (2019 EO3)

(A) பயிர்த்தொழில்

(B) உதவி செய்தல்

(C) முயற்சி செய்தல்

(D) பயிற்சி அளித்தல்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அள்புடையார் .

என்பும் உரியர் பிறர்க்கு – எனும் குறளில் ‘என்பு’ – என்பது எதைக் குறிக்கிறது? (2019 EO3)

(A) கண்கள்

(B) இருகைகள்

(C) ஐம்பொறிகள்

(D) எலும்பு

திருக்குறளில் உடைமை’ என்னும் பெயரில் திருவள்ளுவர் எழுதாத அதிகாரம் எது? (2019 EO4)

(A) அன்புடைமை

(B) ஆள்வினையுடைமை

(C) ஒடுக்கமுடைமை

(D) ஒழுக்கமுடைமை

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு – இதில் வேளாண்மை என்னும் சொல் தரும் பொருள் (2019 £04)

(A) உழவு செய்தல்

(B) விளைவித்தல்

(C) பயிர் செய்தல்

(D) உதவி செய்தல்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து – இக்குறட்பாவில் பயின்று வரும் அணி

யாது? (2019 EO4)

(A) எடுத்துக்காட்டு உவமையணி

(B) உவமையணி

(C) பிறிது மொழிதலணி

(D) பொருள் பின்வருநிலையணி

முதலிலார்க் (கு) ஊதிய மில்லை, மதலையாம்

சார்பிலார்க் கில்லை நிலை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியாது? (2019 EO4)

(A) ஏகதேச உருவக அணி

(B) உவமையணி

(C) எடுத்துக்காட்டு உவமையணி

(D) பிறிதுமொழிதல் அணி

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை- இவ்வடிகளில் கைத்தொன்று – பொருள் யாது? (2019 G4)

A. படை கவசம்

B. படை கருவிகள்

C. கைப்பொருள்

D. வலிமையான ஆயுதம்

கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள__ ஆகும் . (2019 G4)

A. நற்பண்பு

B. நற்குணம்

C. புகழ்

D. நல்லெண்ணங்கள்

பொருட்பாலின் இயல்கள் (2019 G4)

A. பாயிரம் , இல்லறவியல் , துறவறவியல் , ஊழியல்

B. அரசியல் , அங்கவியல் , ஒழிபியல்

C. களவியல் , கற்பியல்

D. பாயிரவியல் , அரசியல் , களவியல்

திருக்குறளின் அழியாத் தன்மையைப் பறை சாற்றும் செய்யுள் நூல் எது? (26-12-2019)

(A) நாலடியார்

(B) திருவள்ளுவமாலை

(C) பழமொழி

(D) தரிகடுகம்

தமிழுக்குக் ‘கதி’ எனப் போற்றப்படும் இரு நூல்கள் (26-12-2019)

(A) திருக்குறளும் , நாலடியாரும் .

(B) திருக்குறளும் , திருவாசகமும்

(C) திருக்குறளும் , கம்பராமாயணமும் .

(D) சிலப்பதிகாரமும் , மணிமேகலையும்

“நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் ” – இக்கூற்றில் ‘நடலை’ என்னும் சொல்லின் பொருள் அறிக? (26-12-2019)

(A) நோய்

(B) பாதுகாப்பு

(C) எமன்

(D) துன்பம்


📝 பயன் பெறும் முறை

  1. Class-wise PDF download செய்து தினமும் 2–3 செய்யுள் படிக்கவும்
  2. செய்யுள் + விளக்கம் + கேள்வி-விடைகள் note செய்து revision செய்யவும்
  3. TNPSC/TRB repeated questions-ஐ highlight செய்து பயிற்சி செய்யவும்

🔔 மேலும் வேலைவாய்ப்பு & தேர்வு அப்டேட்களுக்கு Join பண்ணுங்க:
👉 Whatsapp – Join here
👉 Telegram – Join here
👉 Instagram – Follow here

❤️ நன்கொடை வழங்க:
📌 நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால், நன்கொடை வழங்க இந்த லிங்கை பயன்படுத்துங்கள் –
👉 Donate here

Online Printing - 50 paise per page
Online Printing – 50 paise per page
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular