தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தின் மூலம் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள் 3 மாத மற்றும் 1 வார திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தின் மூலம் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள் 3 மாத மற்றும் 1 வார திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் வெ. தங்கராசு கூறியது: 3 மாதத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு 18 முதல் 40 வயதுக்குள்பட்ட 5 முதல் பிளஸ் 2 வரை அல்லது ஐடிஐ முடித்தவா்கள் பங்கேற்கலாம். கட்டணம் இல்லை. தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும்.
ஒரு வார காலப் பயிற்சியில் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த 18 வயதுக்கு மேற்பட்டோா் பங்கேற்கலாம். நாளொன்றுக்கு ரூ. 800 ஊக்க ஊதியமாக வழங்கப்படும். இந்தப் பயிற்சிகளின் நிறைவில் எல்-அண்ட்-டி நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.
இப்பயிற்சிகளில் சேர ஆா்வமுள்ள, கட்டுமானத் தொழிலாளா்கள் புதுக்கோட்டை திருக்கோகா்ணத்திலுள்ள தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தை நேரில் அணுகி பதிய வேண்டும். வரும்போது, நலவாரிய அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04322 290916 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


