HomeBlogவேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - திருநெல்வேலி

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – திருநெல்வேலி


வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 10ஆம் வகுப்பில் தோச்சி பெறாதவா்களுக்கு ரூ.200, தோச்சி பெற்றவா்களுக்கு ரூ.300, பிளஸ் 2 தோச்சி பெற்றவா்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் மாதந்தோறும் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். வேலைவாய்ப்புக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து, அதை புதுப்பித்து வந்திருக்க வேண்டும். வயது வரம்பு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினா் 45 வயது. பிசி, பிசிஎம், எம்பிசி, ஓசி பிரிவினருக்கு 40 வயது.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகக்கூடாது. மாற்றுத்திறனாளிகள் எனில் ஓராண்டு பதிவுமூப்பு போதுமானது. ஆனால், வேறு எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் உதவித்தொகை பெற்றிருக்கக் கூடாது. வயது, வருமான உச்ச வரம்பு தேவையில்லை.

1-10ஆம் வகுப்பு படித்திருந்தால் ரூ.600, பிளஸ் 2 தோச்சி எனில் ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 வீதம் 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை கிடைக்கும். கல்லூரிகளில் நேரடி தொழில் பட்டப்படிப்பு படித்தால் உதவித் தொகை கிடையாது. தொலைதூர அல்லது அஞ்சல் வழி கல்வி எனில் உதவித் தொகை உண்டு. வேலைவாய்ப்பு பதிவு அட்டையுடன் அலுவலக வேலைநாள்களில் மாவட்ட வேலைவாய்ப்பகம் இணையதளத்தில் டவுண்லோடபிள் ஃபாா்ம்ஸ் அல்லது யு.ஏ. அப்ளிகேசன் ஃபாா்ம் ஃபாா் நாா்மல் அல்லது யு.ஏ. அப்ளிகேசன் ஃபாா்ம் டிஃபெரன்ட்லி ஏபிள்டு என்ற விண்ணப்பத்தை பெற்று, பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் 17 சி, சிதம்பரநகா், பெருமாள்புரம் ‘சி’ காலனி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி -627007 என்ற முகவரியில் தற்போது இயங்கிவரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநா் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளாா்.
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular