19.7 C
Innichen
Thursday, July 31, 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு
தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்களுடைய தியாகம், போராட்டங்கள், மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட பங்களிப்பு இன்று நம்முடைய வரலாற்றில் மறக்க முடியாத இடத்தை பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் தங்கள் இரும்பு நுணுக்கம், உணர்வு மற்றும் பொதுஅரசு போராட்டங்களில் கலந்துகொண்டு மிகுந்த மாற்றங்களை ஏற்படுத்தினர்.

வேலுநாச்சியார் (1730 – 1796):

  • சிவகங்கையின்‌ ராணி – வேலூநாச்சியார்.
  • ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த முதல்‌ இந்திய பெண்ணரசி – வேலூநாச்சியார்.

சிறப்பு பெயர்கள்‌:

  1. வீரமங்கை
  2. தென்னிந்தியாவின் ஜான்சிராணி
  • இராமநாதபுரம்‌ அரசர்‌ – செல்லமுத்து சேதுபதி.
  • செல்லமுத்து சேதுபதியின்‌ ஒரே மகள்‌ – வேலுநாச்சியார்‌
  • பிறந்த வருடம்‌ : 1730

கற்ற தற்காப்பு கலைகள்‌:

  1. வளரி
  2. சிலம்பம்‌
  3. போர்க்‌ கருவிகளை கையாளுதல்‌
  • குதிரையேற்றம்‌
  • வில்வித்தை

கற்றறிந்த மொழிகள்‌:

  1. ஆங்கிலம்‌
  2. பிரெஞ்சு
  3. உருது
பதினாறு வயதில்‌ திருமணம்‌ செய்து கொண்டார்‌.
கணவர்‌ : சிவகங்கை மன்னர்‌ முத்துவடுகநாதர்‌. மகள்‌ : வெள்ளச்சி நாச்சியார்‌.
அமைச்சர்‌ : தாண்டவராய பிள்ளை.
டச்சுக்காரர்களுக்கு வர்த்தக வசதிகள்‌ செய்து கொடுத்தார்‌.
  • 1772-இல்‌ காளையார் கோவில்‌ (சிவகங்கை) போரில்‌ முத்துவடுநாதர்‌ ஆங்கிலேயரால்‌ கொல்லப்பட்டார்‌.
  • ஆற்காட்டு நவாப்‌ மற்றும்‌ கர்னல்‌ பான்ஜோர்‌ ஆகியோருடன்‌ ஏற்பட்ட போரில்‌ முத்துவடுகநாதர் 1772-ஒல்‌ இறந்தார்‌.
  • வேலுநாச்சியார்‌ திண்டுக்கல்‌ அருகே விருட்பாட்சியில்‌ கோபால நாயக்கர்‌ பாதுகாப்பில்‌ 8 ஆண்டுகள்‌ வாழ்ந்தார்‌.
  • இக்காலத்தில்‌ வேலுநாச்சியார்‌ ஒரு படைப்பிரிவை உருவாக்கினார்‌.
  • ஹைதர்‌ அலி மற்றும்‌ கோபாலநாயக்கருடன் கூட்டணியை ஏற்படுத்தினார்‌.
  • மருது சகோதரர்கள்‌ உதவியுடன்‌ வேலுநாச்சியார்‌ சிவகங்கை கைப்பற்றி அரசியாக முடிசூட்டில் கொண்டார்.
  • குயிலி என்பவரை தற்கொலை தாக்கலுக்கு ஏற்பாடு செய்தார்‌ 1780).
  • வேலுநாச்சியார்‌ 1796-இல்‌ நோயுற்று மரணமடைந்தார்‌.

தில்லையாடி வள்ளியம்மை:

பிறப்பு : பிப்ரவர்‌ 22, 1898
இடம்‌ : ஜோகன்னஸ்பர்க்‌ (தென்னாப்பிரிக்கா)
பெற்றோர்‌ : முனுசாமி - ஜானகி
பூர்வீகம்‌ : தில்லையாடி (தஞ்சாவூர்‌ அருகில்‌ உள்ள கிராமம்‌)
  • இனவெறியை எதிர்த்து காந்தியடிகளின்‌ அறப்போராட்டத்தில்‌ கலந்துக்கொண்டார்‌.
  • கைது செய்யப்பட்டு 8 மாதம்‌ சிறை தண்டனை பெற்றார்‌.
  • சிறையில்‌ நோய்வாய்ப்பட்டிருந்த வள்ளியம்மையைப்‌ விடுதலையாகும்போது எலும்பும்‌ தோலுமாய்‌ இருந்தார்‌.
  • அப்போது ஒருவர்‌, நீங்கள்‌ இந்தியராக இருந்து கஷ்டப்படுவதை விட ஏன்‌ தென்னாப்பிரிக்கராக உங்களை பதிவு செய்யக்‌ கூடாது? தேசியக்கொடி கூட இல்லாத இந்தியாவுக்காக போராடி என்ன செய்யப்‌ போகிறீர்கள்‌? என்று கேட்டதற்கு, வள்ளியம்மை தனது காவி – வெள்ளை – பச்சை நிற சேலையை கிழித்து, “இதோ எங்கன்‌ கொடி! எங்கள் தாய்நாடு! – என்று முழங்கினார்‌.
  • வள்ளியம்மை வழங்கிய வடிவிலேயே காந்தியடிகள்‌ தேசியக்கொடியை வடிவமைத்தார்‌.
  • நோய்வாய்ப்பட்ட நிலையில்‌ விடுதலையான தில்லையாடி வள்ளியம்மை இறந்தார்‌.
  • பிப்ரவரி 14, 1914இல்‌ .தணது 16வது வயதில்‌ இறந்தார்‌.
  • 1971ல்‌ இந்திய அரசு இவரது நினைவாக நாகப்பட்டினம்‌ மாவட்டத்தில்‌ தில்லையாடி கிராமத்தில்‌ (தற்போது) பொதுநூலகத்துடன்‌ கூடிய தில்லையாடி வன்னியம்மை நினைவு அரங்கை அமைத்து.
  • டிசம்பர் 31, 2008-ல்‌ நினைவு அஞ்சல்‌ தலை வெளியிடப்பட்டது.

பத்மாசனி அம்மாள்:

பிறப்பு : 1897
இடம்‌ : சோழவந்தான்‌ (மதுரை)
கணவர்‌ : சீனிவாச வரதன்‌ (பாரதியாரின்‌ நெருங்கிய நண்பர்‌)
  • பாரதியார்‌ பாடல்களை பாடி தேசிய உணர்ச்சியை ஏற்படுத்தினார்‌.
  • பெண்களும்‌ விடுதலை போரில்‌ ஈடுபட வேண்டும்‌ என்றார்‌.
  • 1922-இல்‌ சென்னையில்‌ கர்னல் நீல்‌ சிலை அகற்றும்‌ அறப்போராட்டத்தில்‌ கலந்துக்‌ கொண்டார்‌.
  • 1930-இல்‌ மூன்று மாத கர்பிணியாக இருந்த பத்மாசனி மதுரை ஜான்சிராணி பூங்கா முன்‌ பேசிய பொதுக்கூட்டத்திற்காக கைதுசெய்யப்பட்டு 6 மாதம்‌ சிறை தண்டனை பெற்றார்‌.
  • ஜணவரி 14, 1936-இல்‌ மறைந்தார்‌.

கேப்டன் இலட்சுமி:

பிறப்பு : அக்டோபர்‌ 24, 1914
இடம்‌ : சென்னை
தந்தை : சுவாமிநாதன்‌ வழக்கறிஞர்‌
தாய்‌ : எ.வி.அம்முக்குட்டி அல்லது அம்மு சுவாமிநாதன்‌ (சமூக சேவகி)
  • 1938-இல்‌ மருத்துவம்‌ பட்டம்‌ பெற்றார்‌ (சென்னை மருத்துவ கல்லூரி)
  • 1940-இல்‌ சிங்கப்பூர்‌ சென்று அங்குள்ள இந்திய தொழிலாளர்கள்‌ மற்றும்‌ ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்தார்‌.
  • 1942-இல்‌ இந்திய தேசிய இராணுவம்‌ (INA) உருவாக்கப்பட்டது.
  • 1943-இல்‌ பெண்கள்‌ படை உருவாக்கப்பட்டது.
  • “ஜான்சிராணி பெண்கள்” படைப்பிரிவில்‌ தலைவராக நியமிக்கப்பட்டார்‌.
  • நேதாஜியின்‌ தற்காலிக அரசாங்கத்தில்‌ (ஆசாத்‌ ஹிந்த்‌) மகளிர்‌ அமைப்புக்கான அமைச்சராக இருந்தார்‌.
  • INA-இல் பணியாற்றிய பிரேம்குமார்‌ ஷெகலை மணந்தார்‌ (1947 மார்ச்)
  • கான்பூரில்‌ வாழ்ந்து வந்தார்‌.
  • 1971-இல்‌ இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்‌) கட்சியில்‌ சேர்ந்தார்‌.
  • 1998-இல்‌ “பத்ம விபூஷண்” விருது வழங்கப்பட்டது.
  • 2002-இல்‌ ஜணாதிபதி தேர்தலில்‌ அப்தூல்கலாமை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்‌.
  • ஜுலை 23, 2012-ல்‌ மறைந்தார்‌.

டி.எஸ்‌.சௌந்திரம்:

பிறப்பு : ஆகஸ்ட்‌ 18, 1904.
இடம்‌ : திருநெல்வேலி, 12 வயதில்‌ விதவையானார்‌.
பெற்றோர்‌ : சுந்தரம்‌ (டிவிஎஸ்‌) - இலட்சுமி.
கணவர்‌ : சுந்தரராஜன்‌.
மருத்துவர்‌ பட்டம்‌ : 1936-இல்‌ பட்டம்‌ பெற்றார்‌.
இரண்டாவது கணவர்‌ : ஜி.ராமச்சந்திரன்‌.
மதுரையில்‌ மருத்துவப்பணி புரிந்தார்‌.
  • காந்தியடிகளின்‌ “அரிஜன்‌” இயக்கத்தில்‌ இணைந்தார்‌.
  • காந்தியடிகள்‌ இவரை கஸ்தூரிபாய் காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின்‌ தென்னிந்திய பிரதிநிதியாக நியமித்தார்‌.
  • திண்டுக்கல்‌ சின்னாளப்பட்டியில்‌ இவர்‌ தொடங்கிய காந்திகிராம அறக்கட்டளை 1976-இல்‌ காந்தி கிராம பல்கலைக்கழகமானது.
  • 1952-ல்‌ (திண்டுக்கல்‌) ஆத்தூர்‌ தொகுதியில்‌ வெற்றி பெற்றார்‌.
  • பெண்களின்‌ திருமண வயதை 18 ஆக உயர்த்தும்‌ சட்ட முன்வடிவை கொண்டு வந்து நிறைவேற்றினார்‌.
  • 1962-இல்‌ பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்‌. நேரு அமைச்சரவையில்‌ துணை கல்வி அமைச்சராக பணியாற்றினார்‌.
  • 1962-இல்‌ பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
  • 2005-இல்‌ மத்திய அரசு இவரது அஞ்சல்‌ தலையை வெளியிட்டது.
  • அக்யோபற்‌ 21, 1984-இல்‌ இறந்தார்‌.

ருக்மணி லட்சுமிபதி:

பிறப்பு : டிசம்பர்‌ 06, 1892.
இடம்‌ : சென்னை (திருவல்லிக்கேணி).
பெற்றோர்‌ : சீனிவாச ராவ்‌ - சூடாமணி.
கணவர்‌ : ஆசந்தா லட்சுமிபதி.
படிப்பு : சென்னை மகளிர்‌ கிருஸ்துவக்‌ கல்லூரியில்‌ பட்டப்படிப்பு.
  • “ஆசந்தா லட்சுமிபதி” என்ற மருத்துவரை மணந்துக்கொண்டார்‌ (1911)
  • 1923-இல்‌ இந்திய தேசிய காங்கிரசின்‌ உறுப்பினராக பணியாற்றினார்‌.
  • 1926-இல்‌ அகில உலக பெண்கள்‌ மாநாட்டில்‌ (10வது மாநாடு : பாரீஸ்‌) இந்தியாவின்‌ பிரதிநிதியாக கலந்து கொண்டார்‌.
  • 1927-இல்‌ மகளிர்‌ காங்கிரஸ்‌ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்‌.
  • 1929-இல்‌ சைமன்‌ குழு எதிர்ப்பு போராட்டத்தில்‌ தீவிரமாக பங்கேற்றார்‌.
  • 1929-இல்‌ நேரு தலைமையில்‌ லாகூரில்‌ நடந்த INC மாநாட்டில்‌ ருக்மணி, சத்தியமூர்த்தி மற்றும்‌ இராஜாஜி ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.
  • காந்தியின்‌ கதர் பிராச்சாரத்தால்‌ கவரப்பட்டார்‌.
  • திருவல்லிக்கேணியில்‌ ஒரு கதர் கடையை திறந்து வைத்தார்‌.
  • பாரத மகளிர் மகா மண்டலியின் சென்னைக்‌ கிளையைத்‌ தொடங்கினார்‌.
  • ஏப்ரல் 13, 1930-இல்‌ இராஜாஜி தலைமையில்‌ உப்பு சத்தியாகிரக போராட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்‌ (98) பேர்.
  • மே 14, 1930-இல்‌ உப்பு சத்தியாகிரக போராட்டத்திற்காக ஓராண்டு காலம்‌ சிறை தண்டனை பெற்றார்‌.
  • உப்பு சத்தியாகிரக போராட்டத்தில்‌ பங்கேற்ற சிறை சென்ற முதல்‌ பெண்மணி – ருக்மணி லட்சுமிபதி.
  • சென்னை சைனாபஜாரில்‌ நடந்த அன்னிய துணி புறக்கணிப்பு போராட்டத்தில்‌ கலந்துக்‌ கொண்டமைக்கான 6 மாத சிறை தண்டணை, 100 ரூபாய்‌ அபராதம்‌ விதிக்கப்பட்டது.
  • காந்தியின்‌ “அரிசன சேவைக்காக” தான்‌ அணிந்திருந்த நகைகளை கழற்றி காந்தியிடம்‌ கொடுத்தார்‌.
  • 1934-இல்‌ சென்னை மாகாண மேல்சபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்‌.
  • மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்‌ சட்டமன்ற பெண்‌ உறுப்பினர்‌ – ருக்மணி லட்சுமிபதி.
  • மாநில சட்டசபையின்‌ துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்‌ பெண்‌ உறுப்பினர்‌ – ருக்மணி லட்சுமிபதி – 1937 (இராஜாஜி அமைச்சரவை)
  • சென்னை மாநகராட்சியின்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக 5 ஆண்டுகள்‌ பணியாற்றினார்‌ (1936 – 1941)
  • ஒரே நேரத்தில்‌ தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும்‌, சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும்‌ பதவி வகித்த முதல்‌ பெண்‌ – ருக்மணி லட்சுமிபதி.
  • 1940-இல்‌ தனிநபர்‌ சத்யாகிரக போராட்டத்தில்‌ பங்கேற்றதால்‌ இவரின்‌ அனைத்து பதவிகளும்‌ பறிபோயின.
  • வேலூரில்‌ ஓர்‌ ஆண்டுகால சிறைதண்டனை பெற்றார்‌.
  • 1946-இல்‌ சென்னை ௪ட்டமன்றத்‌ தேர்தலில் நகர மகளிருக்கான பொதுத்‌ தொகுதியில்‌ இருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்‌.
  • டி. பிரகாசம் அமைச்சரவையில்‌ சுகாதார அமைச்சராக பொறுப்பு வகித்தவர்‌ – ருக்மணி லட்சுமிபதி.
  • தமிழக சட்டமன்ற வரலாற்றில்‌ அமைச்சராக பொறுப்பேற்ற முதல்‌ பெண்மணி – ருக்மணி லட்சுமிபதி.
  • இவர்‌ கற்றறிந்த மொழிகள்‌ : ஆங்கிலம்‌, பிரெஞ்சு, இலத்தீன்‌, உருது மற்றும்‌ ஹிந்தியில்‌ பேச எழுக ஷரியும்‌.
  • இவர்‌ மறைந்த வருடம்‌ – ஆகஸ்ட் 06, 1951
  • இவரது நினைவைப்‌ போற்றும்‌ வகையில்‌ எழும்பூர்‌ மார்ஷல்‌ சாலை, ருக்மணி லட்சுமிபதி சாலை என பெயர்‌ மாற்றம்‌ செய்யப்பட்டது – 1991
  • ருக்மணி லட்சுமிபதி பெயரில்‌ அஞ்சல்‌ தலை வெளியிட்ட வருடம்‌ – 1997

இவரது சிறப்புகள்‌:.

  • இந்திய விடுதலை போராட்டத்தில்‌ பங்கேற்று சிறை சென்ற முதல் பெண் போராளி.
  • சென்னை சட்டமன்ற துணை சயாநாயகறாகத்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்‌ பெண்மணி.
  • தற்கால தமிழ்நாட்டு வரலாற்றில்‌ அமைச்சரான முதல்‌ வபண்‌ இவரே ஆவார்‌.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்:

பிறப்பு : 1883.
பிறந்த இடம்‌ : பாலூர்‌, திருவாரூர்‌ மாவட்டம்‌.
வளர்ந்த இடம்‌ : மூவலூர்‌ (மயிலாடுதுறை).
  • இசை வேளாளர் குலத்தை சேர்ந்தவர்‌.
  • இசை வேளாளர்‌ குடும்பத்தைச்‌ சேர்ந்த பெண்கள்‌ இறைப்பணி மற்றும் களப்பணிக்காக அர்பணிக்கப்பட்டனர்.
  • இச்சமூகம்‌ காலமாற்றத்தில்‌ சிக்கி சீரழிந்து, பிரபுக்கள்‌ மற்றும்‌ ஜமீன்தாரர்களால்‌ அவமானப்படுத்தப்பட்டனர்‌.
  • இவர்களின்‌ விடுதலைக்காக தனது வாழ்வை அர்பணித்தார்‌.
  • காங்கிரஸ்‌ கட்சியில்‌ தன்னை இணைத்துக்‌ கொண்டார்‌.
  • 1925-இல் மயிலாடுதுறையில் இசைவேளாளர் மாநாட்டைக்‌ கூட்டினார்‌.
  • 1925-இல்‌ இசை வேளாளர்‌ மாநாட்டில்‌ கலந்துக்‌ கொண்டவர்கள்‌: திரு.வி.க. , பெரியார்‌, மயூரமணி சின்னையாபிள்ளை, எஸ்‌.இராமநாதன்‌
  • இவர்கள்‌ அனைவரும்‌ தேவதாசி முறைக்கு எதிராக குரலெழுப்பினர்‌.
  • இந்த மாநாடு தேவதாசி முறை ஒழிப்புச்‌ சட்டம்‌ கொண்டுவர ஆணிவேராய்‌ அமைந்தது.
  • தந்தை பெரியார், இராஜாஜி, திரு.வி.க. இவர்கள்‌ உறுதுணையால்‌ தேவதாசி முறைக்கு எதிராகவும்‌ சமூக பணிகளிலும்‌ சிறப்பாக செயலாற்றினார்‌.
  • இவரது தியாகத்தையும்‌ உழைப்பையும்‌ போற்றும்‌ வகையில்‌ தமிழக அரசு, ஏழைப்‌ பெண்களுக்கு திருமண நிதி உதவி அளிக்கும்‌ ஒரு சமூகத்‌ திட்டம்‌ ஏற்படுத்தி, அதற்கு
  • “மூவலூர்‌ இராமாமிர்தம் அம்மாள் நிணைவு திருமண உதவித்‌ திட்டம்‌” என பெயரிட்டு இவரை கவுரவித்தது.
  • இராமாமிர்தம்‌ அம்மையாரின்‌ சுயசரிதப்‌ புதினம்‌ தாசிகளின் மோசவலை (அல்லது)
  • மதிபெற்ற மைனர் ஆகும்‌.
  • இந்த நூல்‌ தாசிகளின்‌ அவலநிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
  • தேவதாசி முறைக்கு எதிரான இவரது போராட்டம்‌, தமிழகப்‌ பெண்களை மட்டுமல்லாது தேசிய அளவிலும்‌ பெண்களை விழிப்படையைச்‌ செய்தது.
  • இவர்‌ மறைந்த வருடம்‌ – ஜூன் 27, 1962.

முத்துலட்சுமி ரெட்டி:

பிறப்பு : ஜுலை 30, 1886
இடம்‌ : புதுக்கோட்டை
பெற்றோர்‌ : நாராயணசாமி - சந்திரம்மாள்‌
கணவர்‌ : சுந்தர ரெட்டி

சிறப்புகள்‌:

  • இந்தியாவின்‌ முதல்‌ பெண் மருத்துவர்.
  • முதல்‌ சட்டமன்ற நியமன பெண் உறுப்பினர்.
  • முதல்‌ சட்டமன்றத் துணைத்‌ தலைவர்‌.
  • புதுக்கோட்டை கல்லூரியில்‌ இண்டர் மீடியட் வகுப்பில்‌ படித்து தேர்ச்சி பெற்றார்‌.
  • 1907-இல் சென்னை மருத்துவக்‌ கல்லூரியில்‌ சேர்ந்தார்‌.
  • 1912-இல் டாக்டர் பட்டம் பெற்றார்‌.
  • 1913-இல் மருத்தூவ பயிற்சி முடித்தார்‌.
  • 1914-இல்‌ திருமணம்‌ (சுந்தர ரெட்டியை மணந்தார்).
  • 1923-இல்‌ இவரது தங்கை (சுந்தரம்மாள்) புற்றுநோயால்‌ பாதிக்கப்பட்டு இறந்தார்‌.
  • புற்றுநோயை ஒழிக்க சபதம்‌ மேற்கொண்டார்‌.
  • 1926-இல்‌ பாரிஸ் நகரில்‌ நடைபெற்ற உலக பெண்கள்‌ மாநாட்டில்‌ பங்கேற்றார்‌.
  • சட்டமன்ற துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்‌.
  • தேவதாசி முறை ஒழிப்பில்‌ ஆர்வம்‌ கொண்டிருந்ததால்‌ மகாத்மா காந்தி இவரது சமூகப்பணியை பாராட்டினார்‌.
  • 1927-இல்‌ காந்தி தமிழகம்‌ வந்தபோது அவரை சந்தித்தார்‌.
  • தேவதாசி முறை ஒழிப்பில்‌ இவர்‌ கொண்டிருந்த ஈடுபாட்டின்‌ காரணமாக 1929-இல்‌ தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம்‌ செய்யப்பட்டார்‌.
  • 1929-இல்‌ பெண்கள்‌ திருமணம்‌ செய்ய குறைந்தபட்ச வயது 14 என அறிவிக்கும்‌ “சாரதா சட்டம்‌” நிறைவேற்றப்பட்டது.
  • 1930 ஆம்‌ ஆண்டு பூனாவில் அனைத்திந்திய பெண்கள்‌ மாநாட்டை நடத்தினார்‌.
  • 1933 முதல்‌ 1947 வரை இடையில்‌ இரு வருடங்கள்‌ தவிர தொடர்ந்து இந்திய மாதர்‌ சங்க தலைவியாக பதவி வகித்தார்‌.
  • 1930-ல்‌ “அவ்வை இல்லம்‌” என்ற அமைப்பை சாந்தோமில்‌ தொடங்கினார்‌.
  • அவ்வை இல்லம்‌ ஆதரவற்றவர்களுக்கு மறுவாழ்வு தரும்‌ பொருட்டு அடைக்கல நிலையமாக உருவாக்கினார்‌.
  • 1949-இல்‌ புற்றுநோய்‌ நிவாரண மருத்துவமனையை அடையாற்றில்‌ தொடங்கினார்‌.
  • முத்துலட்சுமி ரெட்டியின்‌ தீவிர முயற்சியால்‌ அக்டோபரில்‌ 1952-ல்‌ “ஜவஹர்லால் நேருவால்‌ புற்றுநோய்‌ ஆராய்ச்சி நிறுவனம்” தோற்றுவிக்கப்பட்டது.
  • இந்த மருத்துவமனைக்கு அடிக்கல்‌ நாட்டியவர்‌ – ஜவஹர்லால் நேரு (பிரதமர்) 1952 (1 லட்சம்‌ நன்கொடை)
  • இவர்‌ சட்டமன்றப்‌ பதவியை மே 08, 1930-இல்‌ இராஜினாமா செய்தார்‌. (உப்பு சத்தியாகிரக போராட்டத்தின்‌ போது காந்தி கைது செய்யப்பட்டதை எதிர்த்து)
  • 1937-இல்‌ சென்னை மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினரானார்‌.
  • இவர்‌ “ஸ்திரி தர்மம்‌” பத்திரிகை நடத்தினார்‌.
  • இவர்‌ மறைந்த வருடம்‌ – ஜுலை 22, 1968 (வயது 82)
Tamil Mixer Education
Tamil Mixer Education

Important Notes

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

Logical Reasoning Notes – TN govt PDF

Logical Reasoning Notes - TN Govt PDF TNPSC, RRB, SSC,...

500+ கலைச்‌ சொற்கள்‌ – ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌

500+ கலைச் சொற்கள் - ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல் TNPSC...

TNPSC GROUP 2/2(A) Prelims – WHERE TO STUDY TAMIL & ENGLISH (TAF IAS ACADEMY)

TNPSC GROUP 2/2(A) Prelims - WHERE TO STUDY TAMIL & ENGLISH (TAF IAS ACADEMY)

TNPSC GROUP 2 / 2A PRELIMS 2025 NEW SYLLABUS PDF Download

TNPSC GROUP 2 / 2A PRELIMS 2025 NEW SYLLABUS PDF Download

Topics

🔥 தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 1639+ காலியிடங்கள்!

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள பல மாவட்ட நலவாழ்வு சங்கங்களில் பல்வேறு பதவிகளுக்கான...

திருச்சி DHS வேலைவாய்ப்பு 2025 – 13 காலியிடங்கள் அறிவிப்பு! 💼 உடனே விண்ணப்பிக்குங்க!

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையில் ஆப்டோமெட்ரிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ANM, மருந்தாளுநர் உள்ளிட்ட 13 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. 31.07.2025 க்குள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்கள் இங்கே!

🎯 திருப்பூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 108 பதவிகள் அறிவிப்பு!

திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) சார்பில் 2025-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம், மாவட்டத்திற்குள் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் பணியாற்ற 108 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், பிசியோதெரபிஸ்ட், OT டெக்னீசியன் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

🏥 வேலூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 22 அரசு ஒப்பந்த வேலைகள் (Nurse, Pharmacist, Lab Technician, MPHW & Others)

வேலூர் மாவட்ட சுகாதாரத்துறையில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், தொழில்நுட்ப வல்லுநர்கள், MPHW உள்ளிட்ட 22 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 11.08.2025.

🏥 திருவள்ளூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 8 அரசு ஒப்பந்த வேலைகள் (Pharmacist, Nurse, Lab Technician, MPHW)

திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறையில் மருந்தாளுநர், பணியாளர் செவிலியர், ஆய்வக வல்லுநர், மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 11.08.2025 மாலை 5 மணி.

🏥 திருநெல்வேலி DHS வேலைவாய்ப்பு 2025 – 45 NUHM பணியிடங்கள்: நர்ஸ், மருந்தாளுநர், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர் மற்றும் பல!

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் 45 ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள்: Staff Nurse, Pharmacist, Lab Technician, Health Inspector, ANM, MPHW. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

🏥 நாகப்பட்டினம் DHS வேலைவாய்ப்பு 2025 – மருந்தாளுநர், நர்ஸ், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியிடங்கள்!

நாகப்பட்டினம் மாவட்ட சுகாதாரத் துறையில் 08+ வேலைவாய்ப்புகள்: மருந்தாளுநர், நர்ஸ், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

🏥 தர்மபுரி DHS வேலைவாய்ப்பு 2025 – 107 மருத்துவ மற்றும் தொழில்நுட்ப பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

தர்மபுரி மாவட்ட சுகாதாரத் துறையில் 107 வேலைவாய்ப்பு அறிவிப்பு! நர்ஸ், மருந்தாளுநர், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர், பல் அறுவை நிபுணர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.08.2025.

Related Articles

Popular Categories