
தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – TNPSC Notes PDF
தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் பற்றிய TNPSC Notes இப்போது பதிவிறக்கம் செய்யவும்! இந்த PDF, TNPSC Group 1, Group 2, மற்றும் Group 4 தேர்வுகளுக்கு முக்கியமான பண்டைய நகரங்கள் மற்றும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தை உள்ளடக்கியது.
பண்டைய தமிழ்நாடு நகரங்களின் அரசியல், சமூக, மற்றும் வர்த்தக வளர்ச்சி பற்றிய விரிவான வினா விடைகள் உங்களுக்கு உதவும். இது பொதுவான அறிவு மற்றும் வரலாறு பிரிவுகளில் முக்கியமான தலைப்பாக இருக்கும்.
இந்த PDF இன் சிறப்பம்சங்கள்:
- 📚 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்களின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்
- 📝 பண்டைய தமிழகம் மற்றும் வர்த்தக நெறிகள்
- 🎯 TNPSC தேர்வுகளுக்கு உதவும் வினா விடைகள்
- 💡 பண்டைய நகரங்களின் சமூக அமைப்புகள் பற்றிய விளக்கங்கள்
- 🗂️ படங்கள் மற்றும் வரைபடங்கள் மூலம் எளிமையாக கற்றுக்கொள்ளவும்
- உலகின் மிக தொன்மையான நாகரிகம் மெசபடோமியா நாகரிகம்
- மெசபடோமியா நாகரிகம் 6500 ஆண்டுகளுக்கு முற்பட்டது
- ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ ஆகிய இரு நகரங்கள் இந்தியாவில் திட்டமிட்டு கட்டப்பட்ட முதல் நகரங்களாகும்
- பூம்புகார், மதுரை,காஞ்சி ஆகியன தமிழகத்தின் மிகு தொன்மையான
நகரங்கள் ஆகும் - பூம்புகார் துறைமுகம் வங்காள விரிகுடா கடலின் கரையில்
அமைந்துள்ளது - காவிரியாறு கடலோடு கலக்கும் இடத்தில் பூம்புகார் துறைமுகம்
அமைந்துள்ளது - புகார்,காவிரிப்பூம்பட்டினம் – பூம்புகாரின் வேறு பெயர்கள்
- பட்டினப்பாலை,சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில்
பூம்புகார் துறைமுகத்தில் சீரும் சிறப்புமாக நடந்த வணிகம் குறித்து
குறிப்பிடப்பட்டுள்ளது - சோழ அரசனின் துறைமுகம் பூம்புகார்
- சிலப்பதிகாரம் பூம்புகாரின் சிறப்பினைப் பற்றி பேசுகிறது
- மாநாய்கன் என்றால் பெருங்கடல் வணிகன் என்று பொருள்
- மாசாத்துவான் என்றால் பெருவணிகன் என்று பொருள்
- கிரேக்கம், ரோம் போன்ற வெளிநாட்டவர் பூம்புகார் துறைமுகத்திற்கு வணிகம் செய்ய வந்தனர்
- பட்டினப்பாலை நூலில் “பூம்புகார் நகரத்து வணிகர்கள் கூடுதலான விலைக்கு பொருளை விற்பது தவறான செயல் என்று அவர்கள்
- கருதினர்” என்று குறிப்பிடப்பட்டூள்ளது
- பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- பூம்புகார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டவை
- கடல்வழியாக – குதிரைகள்
- தரை வழி தடங்கள் – கருமிளகு
- வட மலையில் இருந்து – தங்கம்
- மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து – சந்தனம்
- தென்கடல் பகுதியில் இருந்து – முத்து
- கிழக்கு பகுதியிலிருந்து – பவளம்
- ஈழத்திலிருந்து – உணவுப்பொருட்கள்
- பொது ஆண்டு 200 வரை சிறப்புற்று திகழ்ந்த புகார் நகரம் கடல்கோள்கள் அல்லது கடல் சீற்றங்களால் அழிந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது
- பாண்டியர்கள்,சோழர்கள்,களப்பிரர்கள் – பண்டைய காலத்தில் மதுரையை ஆட்சி செய்தனர்
- பிற்கால சோழர்கள்,பிற்கால பாண்டியர்கள் – சங்க காலத்தில் மதுரையை ஆட்சி செய்தனர்
- 49 தமிழ் பணி செய்த புலவர்கள் கடை சங்க காலத்தில் வாழ்ந்தனர்
- கிழக்கு கடற்கரையில் அமைந்திருந்த தொண்டியில் இருந்து மதுரைக்கு அகில்,சந்தனம் போன்ற நறுமணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டன
- கொற்கைக்கு அருகில் உள்ள உவரி எனும் இடத்திலிருந்து இஸ்ரேல் அரசர் சாலமோன் முத்துக்களை இறக்குமதி செய்தார்
- மதுரையில் ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தன
- நாளங்காடி, அல்லங்காடி என்ற இருவகை அங்காடிகள் மதுரையில் செயல்பட்டு இருந்தன
- கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிஸ் குறிப்புகளில் மதுரையை பற்றி தகவல்கள் இடம் பெற்றிருந்தன
- மெளரிய வம்ச அரசரான சந்திரகுப்தரின் அமைச்சரான சாணக்கியர் மதுரை பற்றி தனது அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்
- மதுரை நகரை சுற்றிலும் இருந்த அகழிகள் யானைகள் கூட செல்லுமளவுக்கு அகலமான சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன
- கல்வி நகரம், கோயில்களின் நகரம், ஏரிகளின் மாவட்டம் என்று காஞ்சி அழைக்கப்படுகிறது
- நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் கூடுதல் படிப்புக்காக காஞ்சியில் இருந்த கடிகைக்கு
- வந்தார்
- நகரங்களில் சிறந்தது காஞ்சி – காளிதாசர்
- கல்வியில் கரையிலாத காஞ்சி – திருநாவுக்கரசர்
- புத்தகயா,சாஞ்சி போன்ற ஏழு இந்திய புனிதத் தலங்களில் காஞ்சிபுரமும் ஒன்று என்று யுவான்சுவாங் குறிப்பிட்டார்
- ராஜசிம்மன்/இரண்டாம் நரசிம்மவர்மன் – கைலாசநாதர் கோவிலை கட்டிய பிற்காலப் பல்லவ மன்னன்
- காஞ்சியில் பெளத்த துறவியான மணிமேகலை தனது இறுதி காலத்தை கழித்தார்
- துறைமுக நகரம் – புகார்
- வணிக நகரம் – மதுரை
- கல்வி நகரம் – காஞ்சி
- சோழ நாடு – சோறுடைத்து
- பாண்டி நாடு – முத்துடைத்து
- சேர நாடு – வேழமுடைத்து
- தொண்டை நாடு – சான்றோருடைத்து
- கல்லணை மற்றும் காஞ்சிபுரம் ஏரிகள் தமிழர்களின் நீர் மேலாண்மை பற்றி விளக்குகிறது
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 PDF Collections:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – TNPSC Notes PDF – பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!