
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 5
TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான 100 தமிழ் முக்கிய கேள்விகள் இங்கே! இந்த தொகுப்பில் 6 முதல் 10 வரை உள்ள 100 முக்கிய தமிழ் கேள்விகள் உள்ளன, இது TNPSC தேர்வுகளில் உங்கள் தேர்வு தயாரிப்பை மேலும் சிறப்பாக செய்ய உதவும்.
இந்த Part 5 இல் உள்ள கேள்விகள் தமிழ் இலக்கணம் மற்றும் பொது அறிவு பற்றிய முக்கியமான பகுதியைக் கவர்ந்துள்ளன. இவை TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 4
விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கீழ கமெண்டில் தெரிவிக்கவும்
1. பொருந்துக: வார்த்தைகளும் அவை இடம் பெற்றுள்ள நுhல்களும்:
பார் -அ) குறுந்தொகை
அரசு – ஆ) தொல்காப்பியம்
புகழ் -இ)பெரும்பாணாற்றுப் படை
செய் – ஈ)திருக்குறள்
அ) இஈஆஅ ஆ) இஈஆஅ இ) ஈஆஅஇ ஈ)இஆஅஈ
விடை: அ) இஈஆஅ
2. திரவப் பொருட்களை எவ்வளவு அழுத்தினாலம் அவற்றின் அளவை சுருக்க முடியாது? என்ற கருத்தைப் பாடியவர் யார்?
அ) ஔவையார் ஆ) கபிலர் இ) ஆண்டாள் ஈ) வள்ளுவர்
விடை: அ) ஔவையார்
3. தமிழ் வழியல் பயினற அறிவியல அறிஞர்கள் யார் யார்?
அ)அப்துல் கலாம் ஆ) மயில் சாமி அண்ணாதுரை இ)இஸ்ரோ சிவன் ஈ)இவர்கள் அனைவரும்
விடை: ஈ)இவர்கள் அனைவரும்
4. “தொலைவில் உள்ள பொருளை அருகில் தோன்ற செய்ய முடியும்” என்ற கருத்ததை பாடியவரும் ஆது இடமபெற்ற நூலும் முறையே
அ) ஔவையார் வாயுதாரணை ஆ)கபிலர் , திருவள்ளுவமாலை இ)திருமுலர் திருமந்திரம் ஈ)சேக்கிழார் பெரியபுராணம்
விடை: ஆ)கபிலர் , திருவள்ளுவமாலை
5. மண் உரிமைக்காகவும், பெண் உரிமைக்காகவும் பாடியவர் யார்?
அ) நாமக்கல் கவிஞர் ஆ)கவிமணி இ)பாரதிதாசன் ஈ)பாரதியார்
விடை: ஈ)பாரதியார்
6. பறவைகள் வலசை போகும் திசை எது?
அ) வடக்கிலிருந்து தெற்கு ஆ)மேற்கிலிருந்த கிழக்கு இ) அ,ஆ இரண்டும் ஈ)இரண்டும் இல்லை
விடை: இ) அ,ஆ இரண்டும்
7. துறைமுக நகரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
அ)பட்டினம் பாக்கம் ஆ)பெருநகரம் இ)வணிக நகரம் ஈ)மாநகர்
விடை: அ)பட்டினம் பாக்கம்
8. “பொன்னோடு வ்நது கறியொடு பெயரும்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
அ) பதிற்றுப்பத்து ஆ) கலித்தொகை இ) புறநானூறு ஈ)அகநானூறு
விடை: ஈ)அகநானூறு
9. பொருந்துக: உவமைகளும் அதற்கு கூறப்பட்டுள்ள பொருள்களும்
நீச்சல் – அ)போர்வை
பனிமூட்டம் – ஆ) யோகம்
மின்னல்வரி – இ)பெருவானம்
தொழும் தலைவன் – ஈ)அரிச்சுவடி
அ) இஆஅஈ ஆ) அஈஇஆ இ) ஆஅஇஈ ஈ)ஆஅஈஇ
விடை: ஈ)ஆஅஈஇ
10. திராவிட நாட்டின் வானம்பாடி என்று போற்றப்பட்டவர் யார்?
அ) கவிப்பேரரசு ஆ) கவியரசர் இ)முடியரசன் ஈ)எத்திராசலு
விடை: இ)முடியரசன்
11. மயங்கொலி எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
அ) 2 ஆ)8 இ) 4 ஈ)5
விடை: ஆ)8
12. குஜராத், ராஜஸ்த்தான், மாநிலங்களில் பொங்கல் விழா எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?
அ)லோரி ஆ)மகரசங்ராந்தி இ) உத்தராயன் ஈ)பொங்கல்
விடை: இ) உத்தராயன்
13. அண்ணா நுற்றாணடு நூலகத்தில் 6ஆம் தளத்தில் உள்ள நூல்கள் எவை?
அ) பிரெய்லி குழந்தைப்பருவ நூல்கள் ஆ)பொறியியல்,வேளாண்மைஈ திரைப்படம் இ)கல்வி போட்டித்தேர்வுகள் ஈ)வரலாறு ஒலைச்சுவடிகள்
விடை: ஆ)பொறியியல்,வேளாண்மைஈ திரைப்படம்
14. குழந்தைகளுக்காக கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்
அ) பிரம்ம சமாஜம் ஆ)ஆர்ய சமாஜம் இ) சத்ய சமாஜம் ஈ)குழந்தைகளைப் பாதுகாப்போம்
விடை: ஈ)குழந்தைகளைப் பாதுகாப்போம்
15. எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நூல் எது?
அ) உபபாண்டவம் ஆ) கதாவிலாசம் இ)தேசாந்திரி, கால்முளைத்தக் கதைகள் ஈ)இவை அனைத்தும்
விடை: ஈ)இவை அனைத்தும்
16. பொய்கை நீரின் மேல் அமுதசுரபி தோன்றும் நாள் எந்த நாள்?
அ)வைகாசி திங்கள் முழுநிலவு நாள் ஆ)அமாவாசை இ) அஷ்டமி ஈ)நவமி
விடை: அ)வைகாசி திங்கள் முழுநிலவு நாள்
17. உயிர் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்னால் பயன்படுத்தப்பட வேண்டிய வார்த்தை எது?
அ) ஓர் ஆ)ஒரு இ) ஒன்று ஈ)அனைத்தும்
விடை: ஆ)ஒரு
18. பெயர்ச்சொல், வினைச்சொல், ஆகியவற்றின் தன்மையை மிகுதிபடுத்த வருவது
அ) பெயர்ச்சொல் ஆ) வினைச்சொல் இ) உரிச்சொல் ஈ)இடைச்சொல்
விடை: இ) உரிச்சொல்
19. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு
அ) 1960 ஆ) 1985 இ)1780 ஈ)1820
விடை: இ)1780
20. காந்தியடிகளிடம் உடையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்?
அ)கோவை ஆ)மதுரை இ) சென்னை ஈ)ஈரோடு
விடை: ஆ)மதுரை
21. பொருந்துக:
பந்தர் – அ)முதற்போலி
மைஞ்சு -ஆ) கடைபோலி
அஞ்சு -இ)அரையர்
குழுஉக்குறி -ஈ)முற்றுபோலி
இடைபோலி உ) காரை,பறி
அ) ஆஅஈஉஇ ஆ) அஈஉஇஆ இ) அஆஈஉஇ ஈ) உஆஅஈஇ
விடை: அ) ஆஅஈஉஇ
22. பொருந்துக
மருஉ – அ)கால் கழுவி வந்தான்
இடக்கரடக்கல் – ஆ) கோவை
மங்கலம் – இ) காரை பறி
குழுஉக்குறி -ஈ)துஞ்சினார்
அ) ஆஅஈஅ ஆ) அஈஇஆ இ) அஆஈஇ ஈ) ஆஅஈஇ
விடை: அ) ஆஅஈஅ
23. முத்துராமலிங்க தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம்
அ)கோவை ஆ)சாயல்குடி இ) சென்னை ஈ)ஈரோடு
விடை: ஆ)சாயல்குடி
24. பொருந்துக
பொக்கிஷம் – அ)மிகுதி
சாஸ்தி – ஆ)செல்வம்
விஸ்தாரம் – இ)அழகு
சிங்காரம் – ஈ)பெரும்பரப்பு
அ) ஆஅஈஉ ஆ) ஆஅஈஅ இ) அஆஈஇ ஈ) ஆஅஈஇ
விடை: ஆ) ஆஅஈஅ
25. ………… செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்?
அ) பொறாமை இல்லாதவன் செல்வம் ஆ)பொறாமை உள்ளவன் செல்வம் இ) உழைப்பவன் செல்வம ஈ)உழiக்காதவன் செல்வம்
விடை: ஆ)பொறாமை உள்ளவன் செல்வம்
26. ஜாதவ் பயேங் பத்மஸ்ரீ விருது பெற்ற ஆண்டு
அ) 2010 ஆ)2015 இ) 2020 ஈ)1990
விடை: ஆ)2015
27. கடலில் துறை அறியாமல் கலங்குவன
அ) மரக்கலங்கள் ஆ) மீன்கள் இ) தூண்கள் ஈ)மாடங்கள்
விடை: அ) மரக்கலங்கள்
28. பூம்புகார் சிற்பக் கலைக்கூடத்தில் கண்ணகியின் வரலாற்றை விளக்கும் சிற்பத் தொகுதிகள் எத்தனை?
அ) 50 ஆ) 49 இ) 120 ஈ)180
விடை: ஆ) 49
29. வண்கீரை – பிரித்து எழுதுக?
அ) வண் + கீரை ஆ)வன்மை + கீரை இ) வலிமை + கீரை ஈ) வன் + கீரை
விடை: ஆ)வன்மை + கீரை
30. தேனரசன் எழுதிய நூல் எது?
அ) மண்வாசல் ஆ)வெள்ளை ரோஜா இ) பெய்து பழகிய மேகம் ஈ)இவை அனைத்தும்
விடை: ஈ)இவை அனைத்தும்
31. ‘பை’ ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் என்ன?
அ) முதுமை ஆ)இளமை இ) தபெருமை ஈ)சிறுமை
விடை: ஆ)இளமை
32. “பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரததேசமென்று தோள்கொட்டுவோம்- என்று பாடியவர் யார்?
அ) மு.மேத்தா ஆ) பாரதியார் இ)தமிழன்பன் ஈ)பாவேந்தர்
விடை: ஆ) பாரதியார்
33. பொருந்துக
கழனி -அ)சமம்
நிகர் – ஆ)வயல்
பரிதி – இ) மேகம்
முகில் – ஈ)கதிரவன்
அ) அஈஇஆ ஆ) ஆஅஈஇ இ) இஆஅஈ ஈ) ஈஆஅஇ
விடை: ஆ) ஆஅஈஇ
34. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி எது?
அ)இந்தி ஆ) தோடா இ)கோண்டி ஈ)சமஸ்கிருதம்
விடை: ஈ)சமஸ்கிருதம்
35. காயிதே மில்லத் என்ற அரபுசொல்லுக்கு பொருள் என்ன?
அ)தூய துறவி ஆ)சமுதாய வழிகாட்டி இ) ஒழுக்கவாதி ஈ)இறையியல் வாதி
விடை: ஆ)சமுதாய வழிகாட்டி
36. ‘கவியரசு’ என்னும் சிறப்புபெயரால் அழைக்கப்படுபவர் யார்?
அ)வாணிதாசன் ஆ)கண்ணதாசன் இ)பாரதிதாசன் ஈ)காளிதாசன்
விடை: ஆ)கண்ணதாசன்
37. …………….. ஒரு நாட்டுக்கு அரணல்ல
அ) நிலம் ஆ) தெளிந்த நீர் இ) காடு ஈ)வயல்
விடை: ஈ)வயல்
38. ஜென் என்னும் ஜப்பானிய மொழிச்சொல்லுக்கு பொருள் என்ன?
அ) குரு ஆ)சீடன் இ) தலைவன் ஈ)தியானம் செய்
விடை: ஈ)தியானம் செய்
39. ஓருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவம் என்பது ………… நெறி
அ)திராவிட ஆ) ஆர்ய இ)பொதுவுடைமை ஈ)தனியுடைமை
விடை: இ)பொதுவுடைமை
40. பொருந்துக
விளைநிலம் – அ)ஈகை
விதை – ஆ) இனியசொல்
களை – இ) உண்மை
உரம் – ஈ) வன்சொல்
அ) அஈஇஆ ஆ) ஆஅஈஇ இ) இஆஅஈ ஈ) ஈஆஅஇ
விடை: ஆ) ஆஅஈஇ
41. கவிமணி எழுதாத நூல் எது?
அ) ஆசியா ஜோதி ஆ)மருமக்கள் வாழிமான்மியம் இ) தேர்பிறந்த கதை ஈ) என்கதை
விடை: ஈ) என்கதை
42. நீலகேசி கூறும் நோயின் வகைகள் எத்தனை?
அ) 4 ஆ) 3 இ) 5 ஈ) 8
விடை: ஆ) 3
43. ‘வல்லுருவம்’ பிரித்து எழுதுக?
அ) வன்+ உருவம் ஆ) வன்மை+ உருவம் இ) வலிமை+ உருவம் ஈ) வண்மை+ உருவம்
விடை: ஆ) வன்மை+ உருவம்
44. கரிகாலன் கல்லணையை கட்டினான்’ இது எவ்வகைத் தொடர்?
அ) தன்வினைத் தொடர் ஆ)பிறவினைத்தொடர் இ)உணர்ச்சித்தொடர் ஈ)வினாத்தொடர்
விடை: அ) தன்வினைத் தொடர்
45. ‘தமிழகப் பழங்கடிகள்’ என்னும் நூலை எழுதியவர் யார்?
அ) சுப்ரபாரதிமணியன் ஆ) கந்தர்வன் இ) பகவத்சல பாரதி ஈ)கமலாலயன்
விடை: இ) பகவத்சல பாரதி
46. “இன்னோசை” பிரித்து எழுதுக
அ) இனிமை+ ஓசை ஆ)இன்+ ஓசை இ)இனி+ மைஓசை ஈ)இன்மை+ ஓசை
விடை: அ) இனிமை+ ஓசை
47. பொருந்துக
மட்பாண்டம் – அ) கெடுதல்
மரவேர் – ஆ) திரிதல
மணிமுடி -இ) தோன்றல்
கடைத்தெரு -ஈ) இ)இயல்பு பணர்ச்சி
அ) ஆஅஈஇ ஆ) இஆஅஈ இ) ஆஅஈஇ ஈ) ஆஅஇஈ
விடை: அ) ஆஅஈஇ
48. பொருந்துக
ஆயிரம் காலத்து பயிர் – அ) இயலாத செயல்
கானல் நீர் -ஆ) நீண்டகாலம் இருப்பது
கல்லில் நார் உரித்தல் -இ) ஆராய்ந்து பாராமை
கண்ணை மூடிக்கொண்டு -ஈ) விரைந்து வெளியேறு
கம்பிநீட்டு -உ) இருப்பது போல தோன்றும் ஆனால் இருக்காது
அ) ஆஉஅஇஈ ஆ) ஆஉஅஇஈ இ) ஆஉஅஇஈ ஈ) ஆஉஅஇஈ
விடை: அ) ஆஉஅஇஈ
49. வண்புகழ் மூவர் கண்பொழில் வரைப்பு? இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நால் எது
அ) நன்னூல் ஆ)தொல்காப்பியம் இ) வீரசோழியம் ஈ)பிங்கள நிகண்டு
விடை: ஆ)தொல்காப்பியம்
50. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் நூல் எது?
அ) நர்மதா ஆ) வைகை இ)அமராவதி ஈ)காவிரி
விடை: இ)அமராவதி
51. தமிழ்நாட்டின் ஹாலந் எனறழைக்கப்படும் இடம் எது?
அ) மதுரை ஆ) திண்டுக்கல் இ)கோவை ஈ)திருநெல்வேலி
விடை: ஆ) திண்டுக்கல்
52. பரப்பளவில் தமிழ்நாட்டின் இரண்டாவது ஆவது பெரியநகரம் எது?
அ) கீருஷ்ணகிரி ஆ)தருமபுரி இ) காஞ்சி ஈ)ஈரோடு
விடை: ஈ)ஈரோடு
53. பின்னலாடை நகரம் எனப்படும் நகரம் எது?
அ)கோவை ஆ) ஈரோடு இ) நீலகிரி ஈ)திருப்பூர்
விடை: ஈ)திருப்பூர்
54. இரண்டு பொருள்களுக்கு இடையே யுள்ள ஒற்றுமையைக் கூறி பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்தி காட்டுவது வேறறுமை அணி
அ) சிலேடை அணி ஆ) வேற்றுமைஅணி இ) தன்மை நவிற்சி அணி ஈ)வஞ்சப்புகழ்சி அணி
விடை: ஆ) வேற்றுமைஅணி
55. “அன்னை பூமி” என்ற புதினத்திற்காக தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றவர் யார்?
அ) ராஜம் கிருஷணன் ஆ) திலகவதி இ) கோமகள் ஈ)லீனா மணிமேகலை
விடை: இ) கோமகள்
56. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்
அ) நேரு ஆ) சரோஜினி நாயுடு இ)ராதாகிருஷ்ணன் ஈ)அம்பேத்கார்
விடை: ஈ)அம்பேத்கார்
57. பூனா ஒப்பந்தம் ………. மாற்ற ஏற்படுத்தப்பட்டது?
அ)எழுத்துரிமை ஆ) பேச்சுரிமை இ)இரட்டை வாக்குரிமை ஈ)சமய உரிமை
விடை: இ)இரட்டை வாக்குரிமை
58. சமத்துவ சமுதாயம் அமைய அம்பேத்கார் ஏற்படுத்திய இயக்கம் எது?
அ)ஆர்ய சமாஜம் ஆ)பிரம்ம சமாஜம் இ) பிராத்தனை சமாஜம் ஈ)சமாத சமாஜ் சங்கம்
விடை: ஈ)சமாத சமாஜ் சங்கம்
59. மு.மேத்தா எழுதிய நூல் எது?
அ)கண்ணிர்ப் பூக்கள், ஊர்வலம், ஆ)சோழநிலா, இ) மகுடநிலா ஈ)இவை அனைத்தும்
விடை: ஈ)இவை அனைத்தும்
60. திருப்பாவை என்னும் நூலைத்தழுவி “கன்னிப்பாவை” என்னும் நூலை எழுதியவர் யார்?
அ) கிP.ராஜநாராயணன் ஆ)சோ.தர்மன் இ)சே.சேசுராஜா ஈ)ப.ஜெயபிரகாசம்
விடை: இ)சே.சேசுராஜா
61. மால்தோ,தோடா, கோண்டி, முதலிய மொழிகளோடு தென்னிந்திய மொழிகளையும் சேர்த்து தமிழியன் என்று பெயரிட்டவர் யார்?
அ)கால்டுவெல் ஆ)பிரான்சிஸ் எல்லிஸ் இ) ஹோக்கன் ஈ)மாக்ஸ் முல்லர்
விடை: இ) ஹோக்கன்
62. திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுளளன?
அ) 8 ஆ)3 இ) 4 ஈ)6
விடை: ஆ)3
63. திணை,பால்,எண்,இடம், -இவற்றை காட்டாத முதன்மை மொழி?
அ) தமிழ் ஆ) தெலுஙகு இ) கன்னடம் ஈ)மலையாளம்
விடை: ஈ)மலையாளம்
64. “இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்” என்று கூறும் நூல் எது?
அ) தொல்காப்பியம் ஆ) பிங்கள நிகண்டு இ) நன்னூல் ஈ)சேந்தன் திவாகரம்
விடை: ஆ) பிங்கள நிகண்டு
65. பொருந்துக
கால்வீசம் – அ)
அரைவீசம் – ஆ)
முக்கால் வீசம -இ)
ஆரைமா -ஈ)
அ) ஆஅஈஇ ஆ) இஆஅஈ இ) ஆஅஈஇ ஈ) ஆஅஇஈ
விடை: அ) ஆஅஈஇ
66. அவர்கள் ந்னறாகப் படித்தனர் – இது எவ்வகை வாக்கியம்?
அ)செய்தி வாக்கியம் ஆ)உணர்ச்சி வாக்கியம் இ)கட்டளைவ வாக்கியம் ஈ)வினா வாக்கியம்
விடை: அ)செய்தி வாக்கியம்
67. ‘ஆடுங்கிளை’ இலக்கணக் குறிப்பு தருக?
அ) வினையெச்சம் ஆ)பெயரெச்சம் இ) தொழிற்பெயர் ஈ)வினைத்தொகை
விடை: ஆ)பெயரெச்சம்
68. பொருந்துக
சுந்தரர் – அ) திருத்தொண்டர் திருவந்தாதி
நம்பியாண்டார் நம்பி -ஆ) திருத்தொண்டர் தோகை
சேக்கிழார் – இ)திருவிளையாடல் புராணம
பரஞ்சோதி முனிவர் – ஈ)பெரியபுராணம்
அ) அஆஇஈ ஆ) ஆஅஇஈ இ)இஅஆஈ ஈ)ஆஅஈஇ
விடை: ஈ)ஆஅஈஇ
69. “மழைக்காலமும் குயிலோசையும்” என்ற நூலை எழுதியவர் யார்?
அ)மா.கிருஷ்ணன் ஆ) அகிலன் இ) புதுமைப் பித்தன் ஈ)புலமைப்பித்தன்
விடை: அ)மா.கிருஷ்ணன்
70. “பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை : எட்டினோடு இரண்டும் அறியேனையே” என்று கூறும் நூல் எது?
அ) மணிமேகலை ஆ) சிலம்பதிகாரம் இ) திருவாசகம் ஈ)கம்பராமயணம்
விடை: இ) திருவாசகம்
71. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் எது?
அ) குறிப்பறிதல் ஆ) தகை அணங்குறுத்தல் இ) உறுப்புநலனழிதல் ஈ)கற்பியல
விடை: அ) குறிப்பறிதல்
72. இணையவழி வணிகத்தை கண்டறிந்தவர் யார்?
அ) ஜான் ஷெப்பர்ட் ஆ) காரல் கபெக் இ)மைக்கல் ஆல்ட்ரிச் ஈ)செஸ்டர் கார்சன்
விடை: இ)மைக்கல் ஆல்ட்ரிச்
73. “இணையத்தில் இது இல்லை என்றால் அது உலகத்தில் நடைபெறவில்லை” என்று கூறியவர் யார்?
அ) காரல் மார்க்ஸ் ஆ)வால்டேர் இ)ரூஸே ஈ)டிம் பெர்னெஸ் லீ
விடை: ஈ)டிம் பெர்னெஸ் லீ
74. 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வு எது?
அ)தேசிய திறனறித் தேர்வு ஆ) மாநிலத் திறனறித் தேர்வு இ) ஊரகத் திறனறித் தேர்வு ஈ)எதுவுமில்லை
விடை: இ) ஊரகத் திறனறித் தேர்வு
75. “சித்தாரா” என்ற செயலியை உருவாக்கியவர் யார்?
அ) அப்துல் கலாம் ஆ) விக்ரம் சாராபாய் இ) இஸ்ரோ சிவன் ஈ)சதிஷ் தவான்
விடை: இ) இஸ்ரோ சிவன்
76. “இந்திய ஏவுகணையின் நாயகன்” என்றுஅழைக்கப்படுபவர் யார்?
அ)அப்துல் கலாம் ஆ)சிவன் இ)மயில்சாமி அண்ணாதுரை ஈ) விக்ரம சாராபாய்
விடை: அ)அப்துல் கலாம்
77. மீனவர்களுக்கு உதவும் செயலியின் பெயர் என்ன?
அ)இலா ஆ)வேர்டு ஸ்மித் இ)நேவிக் ஈ) சித்தாரா
விடை: இ)நேவிக்
78. இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் யார்?
அ)அப்துல் கலாம் ஆ)சிவன் இ)மயில்சாமி அண்ணாதுரை ஈ) விக்ரம சாராபாய்
விடை: இ)மயில்சாமி அண்ணாதுரை
79. அடையாற்றில் ஔவை இல்லம் மற்றும் புற்றுநோய் மருத்துவமனை நிறுவியவர் யார்?
அ)அஞ்சலையம்மாள் ஆ)ராமாமிர்தம் இ) முத்துலெட்சுமி ஈ)அன்னிபெசன்ட்
விடை: இ) முத்துலெட்சுமி
80. “வில்வாள்” இலக்கணக் குறிப்பு தருக?
அ)உம்மைத்தொகை ஆ)உருவகம் இ)எண்ணும்மை ஈ)முற்றும்மை
விடை: அ)உம்மைத்தொகை
81. மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர் யார்?
அ) தாராபாரதி ஆ)பாவாணர் இ) கவிமணி ஈ)இரா.இளங்குமரன்
விடை: ஆ)பாவாணர்
82. “தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே” என்னும் பாடலை எழுதியவர் யார்?
அ) பாரதியார் ஆ)பாவேந்தர் இ)கவிமணி தேசிய விநாயகனார் ஈ)க.நமச்சிவாயர்
விடை: ஈ)க.நமச்சிவாயர்
83. “இவள் தலையில எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்”-ஸ்ரீ இஇத்தொடரில் கற்காலம் என்பது எது?
அ) தலையெழுத்து ஆ)பழையகாலம் இ) கற்காலம் ஈ) தலையில் கல் சுமப்பது
விடை: ஈ) தலையில் கல் சுமப்பது
84. “பூக்கையை குவித்த பூவே புரிவோடு காக்க” என்று ……………., , …………. வேண்டினார்
அ) எலிசபெத் கருணையனுக்காக ஆ) கருணனையன் கடவுளுக்காக இ) கருணையன் எலிசபெத்துக்காக ஈ)கடவுள் கருணையனுக்காக
விடை: இ) கருணையன் எலிசபெத்துக்காக
85. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கூறுவது எதனை?
அ) சுதந்திர போராட்டம் ஆ) பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது இ)பொருளாதார வளர்ச்சி ஈ)அறிவியல் வளர்ச்சி
விடை: ஆ) பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பது
86. “வாய்மையே மழைநீராகும்” இத்தொடரில் வெளிப்படும் அணி?
அ)உவமைஅணி ஆ) உருவக அணி இ)சிலேடை அணி ஈ)தீவகஅணி
விடை: அ)உவமைஅணி
87. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து இதை எழுதுகிறேன்-இதிலிருந்து நாம் புரிந்துக்கொள்வது என்ன?
அ) பணம்சம்பாதிக்க எழுதினார் ஆ) சமுகப்பாவையோடு கலைப்பணி புரியவே எழுதினார் இ) சீர்த்திருத்தத்திற்காக எழுதினர் ஈ) இலக்கிய வளர்ச்சிக்காக எழுதினார்
விடை: ஆ) சமுகப்பாவையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
88. “எண்ணங்கள்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
அ) உதயமூர்த்தி ஆ)கிருஷ்ணமூர்த்தி இ)ராசமாணிக்கனார் ஈ)மா.நன்னன்
விடை: அ) உதயமூர்த்தி
89. மேன்மை தரும் அறம் என்பது எது? கைமாறு கருதாமல் அறம் செய்வது
அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது ஆ) பிரதிபலன் பார்த்து உதவி செய்தல் இ)உள்நோக்கத்தோடு உதவி செய்தல் ஈ)எதுவமில்லை
விடை: அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது
90. “இகழ்ந்தால் என்மனம் இறந்துவிட்டது” என்று கூறும் நூல் எது?
அ)இது எங்கள் கிழக்கு ஆ) வைகறை மேகங்கள் இ) காலக்கணிதம் ஈ)இயேசு காவியம்
விடை: இ) காலக்கணிதம்
91. மணிமேகலையிலும் அமைந்த பாவினம் எது?
அ) அகவற்பா ஆ) வெண்பா இ) கலிப்பா ஈ)வஞ்சிப்பா
விடை: அ) அகவற்பா
92. மாலவன் குன்றம் போனலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் – இதில் மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும், முறையே
அ) குமரி, சித்தூர் ஆ) சித்தூர் குமரி இ)திருத்தணிஈ திருப்பதி ஈ)திருப்பதி திருத்தணி
விடை: ஈ)திருப்பதி திருத்தணி
93. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மா.பொ.சி கருதியது எது?
அ) சிலம்பதிகாரம் ஆ)மணிமேகலை இ) சீவகசிந்தாமணி ஈ)வளையாபதி
விடை: அ) சிலம்பதிகாரம்
94. “மாபாரதம் தமிழ்ப்படுத்துதும் மதுராபுரி சங்கம் வைத்தும்”- சின்னமனுர் செப்பேடு கூறும் செய்தி
அ)சங்கம் இருந்தது பற்றி ஆ)சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது இ)மதுரை நகர்பற்றி ஈ)மகாபாரதம் பற்றி
விடை: ஆ)சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
95. அருந்துணை- பிரித்து எழுதுக
அ)அருமை + துணை ஆ) அரு + துணை இ) அருந் + துணை ஈ) அரும் + துணை
விடை: அ)அருமை + துணை
96. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை” – இவ்வடிகள் எதைக் குறிக்கிறது?
அ) வீரம் ஆ)செல்வம் இ)கல்வி ஈ)கொடை
விடை: இ)கல்வி
97. இடைக்காடர் பாடலை இகழ்ந்தவர் ………. இடைக்காடரை மதித்தவர் ………….
அ) அமைச்சர், மக்கள் ஆ) மன்னன், புலவர் இ)மன்னன்,,இறைவன் ஈ)இறைவன் மன்னன்
விடை: இ)மன்னன்,,இறைவன்
98. காசிக் கண்டம் என்பது
அ)வடஇந்திய கலாச்சார பெருமை பாடும் நூல் ஆ)காசி நகரத்தின் பெருமை பற்றிக் கூறுகிறது இ)காசிவிஸ்வநாதரைப் பாடுகிறது ஈ)இவை அனைத்தும்
விடை: ஆ)காசி நகரத்தின் பெருமை பற்றிக் கூறுகிறது
99. “சிலம்பு அடைத்திருந்த பாக்கம் எய்தி” இத்ததொடரில் பாக்கம் என்பது
அ) பேருர் ஆ) மூதூர் இ) சிற்றூர் ஈ)அரண்மனை
விடை: இ) சிற்றூர்
100. ”ஆறாம் திணை” என்ற நூலை எழுதியவர் யார்?
அ)மா.நன்னன் ஆ)அபி இ)கல்யாண்ஜி ஈ)மருத்துவர்.கு.சிவராமன்
விடை: ஈ)மருத்துவர்.கு.சிவராமன்
இந்த 100 தமிழ் முக்கிய கேள்விகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும். இந்த Part 4 கேள்விகளுடன் உங்கள் தமிழ் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 பி.டி.எப் தொகுப்புகள்:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3 க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!