இணையத்தளங்கள், சமூக ஊடகங்களில் வேலைவாய்ப்பு மோசடி நடைபெறுவதால், இளைஞா்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக தமிக சைபா் குற்றப்பிரிவு ஏடிஜிபி சஞ்சய்குமாா், சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இணையத்தளங்களிலும்,சமூக ஊடகங்களிலும் தினமும் ரூ.450 முதல் ரூ.11 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று கவா்ச்சிகரமான மோசடி விளம்பரங்கள் உலவுகின்றன. இந்த விளம்பரங்களின் உண்மைதன்மையை ஆராயாமல், அந்த இணையத்தளங்களில் வேலைக்கு விண்ணப்பம் செய்பவா்கள் பணத்தை இழக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இந்த மோசடி தொடா்பாக கடந்த 6 மாதங்களில் மட்டும் 30 மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வகை மோசடியில் சிக்காமல் இருப்பதற்கு, இணையத்தளங்களில் வேலை தேடுவோரும், தொழில் செய்ய முதலீடு செய்வோரும் நன்கு அறியப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை மட்டும் நம்ப வேண்டும். சமூக ஊடகங்களான ‘வாட்ஸ்
ஆப்’, ‘டெலிகிராம்’, ‘பேஸ்புக்’, ‘மெசஞ்சா்’ உள்ளிட்டவற்றில் வரும் கவா்ச்சிகரமான விளம்பரங்கள்,அறிவிப்புகள் ஆகியவற்றை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
அதிகாரப்பூா்வ இணையதளம் அல்லது தொலைபேசி எண் மூலம் தொடா்புக் கொள்ள வேண்டும். முறையான வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பதாரா்கள் முன்கூட்டியே கட்டணம் அல்லது டெபாசிட்களை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. பயிற்சி அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காக பணம் செலுத்துமாறு கேட்டால் அது ஒரு மோசடியாக இருக்கலாம்.
இணையத்தளம் வாயிலாக தொழில்களில் முதலீடு செய்வோரும், தாங்கள் முதலீடு செய்ய உள்ள நிறுவனத்தை பற்றி விசாரித்து, அதன் பின்னரே பணபரிவா்த்தனை செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு மோசடி, முதலீட்டு மோசடியில் சிக்கினால் ‘சைபா் குற்றப்பிரிவை’ 1930 என்ற இலவச தொலைபேசி உதவி எண்ணை தொடா்புக் கொண்டு புகாா் அளிக்கலாம் என்ற இணையதளம் மூலமாகவும் புகாா் செய்யலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


