இந்த ஆண்டு, &’ஜி – 20&’ அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டை, இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. இதையடுத்து, குறும்பட போட்டியை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.இதன்படி, நாட்டில் உள்ள எந்தக் கல்லுாரி மற்றும் பல்கலை மாணவ – மாணவியரும், இந்த போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
ஜி – 20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துவது குறித்தும், அதில், சுகாதாரம், கல்வி, எரிசக்தி, சுற்றுச்சூழல், தட்ப வெப்பநிலை மாற்றம், பெண்களுக்கான அதிகாரம், ஊழல் ஒழிப்பு, வேலைவாய்ப்பு, நிதி, வாழ்வியல், வேளாண்மை உள்ளிட்ட தலைப்புகளில், ஏதாவது ஒன்று குறித்தும், குறும்படங்கள் இடம் பெற வேண்டும் என, பல்கலையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.குறும்பட & வீடியோக்களை, வரும், 28ம் தேதிக்குள் &’ஆன்லைன்&’ வழியே, பல்கலைக்கு அனுப்ப வேண்டும். இதற்கான ஆன்லைன் இணைப்பு முகவரி, அண்ணா பல்கலையின், www.annauniv.edu என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


