விழுப்புரம் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், வல்லம் ஒன்றியம், நெகனுார் புதுார் ஊராட்சியில் இன்று, சுகாதார விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.
நாளை 15ம் தேதி வல்லம் ஒன்றியம் கண்டமநல்லுார் ஊராட்சி மற்றும் மரக்காணம் ஒன்றியம் சிங்கனுார், வண்டிப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் நடக்கிறது.செஞ்சி ஒன்றியம் வேலந்தாங்கல் ஊராட்சி, காணை ஒன்றியம் டி.கொசப்பாளையம் ஊராட்சியில் 16ம் தேதியும், திருவெண்ணெய் நல்லுார் ஒன்றியம் துலுக்கம்பாளையம் ஊராட்சியில் 17ம் தேதியும், கோலியனுார் ஒன்றியம் சுந்தரிப்பாளையம் ஊராட்சியில் 18ம் தேதியும், சிறப்பு கால்நடை சுகாதார முகாம் நடக்கிறது.
முகாமில், கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், தாது உப்பு கலவை வழங்குதல், மலடு நீக்க சிகிச்சை, கால்நடை பராமரிப்பு, நோய்கள் மற்றும் திட்டப் பணிகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.