முதல் முறையாக கடந்த ஆண்டு சென்னை மற்றும் மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது. 2008ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் ஐபிஎல் தொடரின், கடந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது.
இந்நிலையில் இந்த 16வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதன் முதல் போட்டி அகமதாபாத்தில் மார்ச் 31ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இறுதி போட்டியானது மே 21 ஆம் தேதி நடக்கவுள்ளது.

⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
மொத்தம் 70 போட்டிகள், 12 மைதானங்களில் நடக்கவுள்ளது. கடந்த 3 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக எந்த அணியும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாடவில்லை. ஆனால், இந்த ஆண்டு ஒவ்வொரு அணியும் தங்கள் சொந்த மாநில மைதானத்தில் 7 போட்டிகளும், மற்ற மைதானங்களில் 7 போட்டிகளும் ஆடவுள்ளன.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google



