
மத்திய அரசின் பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம் (PMIS) – விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசு Prime Minister’s Internship Scheme (PMIS) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, இத்திட்டம் 21 முதல் 24 வயது உட்பட்ட இளைஞர்களுக்கு சிறந்த 500 நிறுவனங்களில் ஒராண்டு (12 மாத) இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்?
வயது: 21 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, அல்லது இளங்கலை பட்டதாரிகள்.
பயிற்சி காலம்: 12 மாதங்கள்.
பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் நன்மைகள்
✅ மாதாந்திர உதவித்தொகை: ₹5000
✅ தற்செயலான செலவுகளுக்கான மானியம்: ஒருமுறை மட்டும் ₹6000
✅ விண்ணப்பிக்க இணையதளம்: pminternship.mca.gov.in
முக்கிய குறிப்புகள்
📌 இத்திட்டத்தில் பயிற்சி பெறும் அனைவரும் National Apprenticeship Promotion Scheme (NAPS) மூலம் தொழிற்பயிற்சி பெற்றிருக்கக்கூடாது.
📌 முழுநேர கல்வி அல்லது வேலைவாய்ப்பில் இருப்பவர்களும் இந்த திட்டத்தில் சேர அனுமதிக்கப்படமாட்டார்கள்.
நேரடி முகாம் – அழைக்கின்றோம்!
இந்த இன்டர்ன்ஷிப் பயிற்சியில் சேர விரும்புவர்களுக்காக, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முகாம் நடைபெற உள்ளது.
📅 நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.
📍 இடம்: நாமக்கல், மோகனூர் சாலை.
இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்! 🚀
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

