கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான உதவித்தொகை 20 ஆயிரத்தில் இருந்து ரூ 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் ,திருமண உதவித் தொகை திட்டமானது ஏழை எளிய மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் திருமணம் மண்டபத்தில் நடந்திருந்தால் தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் வழங்கப்படும். அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ 25 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படுகின்றது. குறிப்பாக மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் உள்ளது. அதில் குறிப்பாக ஐந்து முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் என ஐந்து வகையான திருமண நிதி உதவி திட்டங்கள் செயல்படுதப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டு கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான இலவசமாக வழங்கப்படும் உதவித்தொகை 20 ஆயிரத்தில் இருந்து ரூ 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி தம்பதிகளுக்கு 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, 20 பேருக்கு உணவு, மாலை, புஷ்பம்,பீரோ,மெத்தை,கட்டில், தலையணை, கை கடிகாரம், மிக்ஸி, பூஜைப் பொருட்கள், பாய், பாத்திரங்கள் போன்ற பொருட்களின் செலவினை அறநிலையத் துறையே ஏற்கும் என்று கூறப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


