திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் ஏற்பாட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம் மார்ச் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்த முகாமில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் மட்டுமல்லாது, டிப்ளமோ, டிகிரி மற்றும் ஐடிஐ படிப்பு முடித்த நபர்களும் கலந்து கொண்டு தங்களுக்கேற்ப வேலை வாய்ப்புகளை பெற முடியும். வேலை தேடும் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
வேலைவாய்ப்பு தேடுநர்கள் தங்களது தேவையான ஆவணங்களுடன் நேரில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை நிரூபிக்கலாம். இந்த தகவலை அதிகமானோர் அறிந்து பயனடையும்படி பகிர்வதற்கும் ஊக்குவிக்கப்படுகிறது.