மத்திய அரசின் எஸ்.எஸ்.சி. போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு, உடுமலையில் துவங்க உள்ளது. மத்திய அரசின் எஸ்.எஸ்.சி. போட்டித்தேர்வு ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது.
இத்தேர்வுக்கான பயிற்சி, திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு துறையின் சார்பில் வழங்கப்பட உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் சார்பில், உடுமலை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில், ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தொடர்ச்சியாக தற்போது எஸ்.எஸ்.சி தேர்வுக்கான இலவச பயிற்சியும் துவக்கப்பட உள்ளது.
வாரத்தில் மூன்று நாட்கள் இப்பள்ளியில், கருத்தாளர்கள் வாயிலாக, பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. பயிற்சி பெற விரும்பும் உடுமலை சுற்றுப்பகுதி தேர்வர்கள் 0421- 2999152, 9499055944 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது.